20/02/2025
வருகின்ற 21.02.2025, 22.02.2025 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கள ஆய்விற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களுக்கு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அது சமயம் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் , பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்,
திரு MRK.பன்னீர்செல்வம் அவர்கள் அழைப்பு.
அன்புடையீர் வணக்கம்,
பிப்ரவரி 21.02.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் "கடலூர் மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு அரசு நலத்திட்ட பணிகள் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள்" வழங்கும் விழாவிற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் அவர்களுக்கு கீழ்கண்ட இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகள்: கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட், கடலூர் மணிக்கூண்டு, டவுன் ஹால், மஞ்சக்குப்பம் மைதானம், உட்லான்ஸ் ஹோட்டல், நியூ சினிமா, அண்ணா மேம்பாலம், உழவர் சந்தை, TPTC டெப்போ, KV டெக்ஸ்டைல்ஸ், மங்கை மஹால், கடலூர்OT மணிக்கூண்டு, பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு, கண்ணாரபேட்டை,சேடப்பாளையம், குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் சந்திப்பு, வடலூர் பேருந்து நிலையம், வடலூர் ரயில்வே கேட், வடலூர் கண்ணு தோப்பு பாலம் வரையும், மறுநாள் கடலூர் மாவட்டம்,வேப்பூர் திருப்பெயரில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் மண்டல மாநாட்டிற்கு செல்லும் வழியில் 22.02.2025 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நெய்வேலி மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம், ஊமங்கலம், அரசக்குழி, வி.சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதுசமயம் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சம்பந்தப்பட்ட கடலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் கிளை வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாநகர மேயர், மண்டல குழு தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்கள், முன்னாள் மாவட்டக்குழு, ஒன்றியக்குழு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள், மாவட்ட, மாநரக, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, தொண்டரணி, தொழிலாளர் அணி, மீனவரணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் தொழிலாளர் முன்னேற்றச்சங்கம் ஆகிய அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் (BLA2), பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLC), கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி! வணக்கம்..
அன்புடன்...
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,
வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்,
கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்,
செயலாளர், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க