25/02/2017
உடனடி வேலைவாய்ப்பை பெற்று தரும் மெடிக்கல் கோடிங் பயிற்சி
இந்தியாவில் தற்போது அமெரிக்க மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்கள் (Healthcare Business process outsourcing) நல்ல வளர்ச்சி பெற்று வருகின்றன.
அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் சார்பாக நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை தொடர்பான விபரங்களை அதற்குரிய காப்பீட்டு படிவத்தில் ஏற்றி காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பும் பணி மெடிக்கல் பில்லிங் எனப்படுகிறது.
மெடிக்கல் பில்லிங்க்கில் முக்கியமான பிரிவு “மெடிக்கல் கோடிங்”.இப்பணிகளை இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்க மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் அளிக்கின்றனர்.
எனவே நம் நாட்டில் மெடிக்கல் கோடிங் துறை கடந்த பத்து ஆண்டுகளாக பலருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுடன்,ஏறக்குறைய மற்ற மென்பொருள் நிறுவனங்களின் சம்பளத்துக்கு இணையான நிறைவான வருமானத்தை அளித்து வருகிறது.
இத்தகைய மெடிக்கல் கோடிங் பணிகளுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகளை கடலூர் செம்மண்டலத்தில் அமைந்துள்ள “பிகம்-எ-கோடர்” (Become-A-Coder) நிறுவனம் நடத்த உள்ளது.
அமெரிக்காவில் தேவையில்லாமல் மருத்துவ பில்லை அதிகரிக்கும் நோக்கில் எந்த ஸ்கேனோ,டெஸ்டோ எடுத்து விடமுடியாது.அதற்கான மருத்துவ தேவை இருந்தால் மட்டுமே,நோயாளியின் காப்பீட்டு நிறுவனம் மருத்துவருக்கு பணம் கொடுக்கும்.இதை மெடிக்கல் கோடர்கள் LCD வழிகாட்டுதல் (Local Coverage Determinations guidelines) மூலம் கண்டறிவர்,
மருத்துவர் செய்யும் சிகிச்சைகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் முக்கியமான பணி தான்,”மெடிக்கல் கோடிங்”.
இப்பணியில் சேர உயிரியல் பின்னணியுடன் கூடிய பட்டப்படிப்பு ஏதேனும் போதுமானது.(B.E/B.TECH in biotech,biomedical,bioengineering,pharmaceutical technology,Bio-informatics,B.Sc or M.sc.,(Biotechnology,plant,animal biotechnology,nursing,biochemistry,microbiology,zoology),B.pharm/M.pharm,BPT/MPT,
BDS,DMLT, and any other allied lifescience based degree ).
கடலூரில் முதன்முறையாக,“பிகம்-எ-கோடர்” (Become-A-Coder) நிறுவனம் மெடிக்கல் கோடிங் பயிற்சியினை நம் மாவட்டத்தில் அறிமுகபடுத்துகின்றது.
அரசு பதிவுபெற்ற இந்நிறுவனத்தில் இத்துறையில் சுமார் ஐந்து வருடம் மெடிக்கல் கோடிங் துறையில் முன்னணி நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமும்,அமெரிக்கன் அசோசியேஷன் ஆப் ப்ரோபேஷ்ஷநல் கோடிங் (AAPC-American association of professional coding) அமைப்பின்,CPC (Certified professional coder) சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர் இடம்பெற்றுள்ளார்.
இதன் மூலம் சிறப்பான முறையில் பயிற்சி வழங்கி பயிற்சி இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
மேலும், இத்துறையில் சென்னை,போன்ற பெருநகரங்களில் அமைந்துள்ள தலைசிறந்த மருத்துவ பன்னாட்டு நிறுவனங்களில் (Healthcare MNCs) நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பைப் பெற இந்நிறுவனம் உதவி செய்யும்.(Job reference and assistance).
“கடலூர் மாவட்டத்தில் மெடிக்கல் கோடிங் துறையைப் பற்றியும் இதில் உள்ள எண்ணற்ற வேலை வாய்ப்புகள் பற்றியும் விழிப்புணர்ச்சி மிகவும் குறைவு.எனவே நம் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நாங்கள் இந்நிறுவனத்தை தொடங்கி உள்ளோம்.
பயிற்சி முடிவில் சான்றிதழ் அளிப்பதுடன்,மாணவர்களுக்கு பெருநகரங்களில் உள்ள தலைசிறந்த நிறுவனங்களில் (மற்ற மென்பொருள் நிறுவனங்களின் சம்பளத்துக்கு இணையான நிறைவான) நல்ல சம்பளத்தில்,வேலை பெற்று தர,உதவி(Job assistance/reference) செய்யப்படும்.
இதன் மூலம்,கணினி,மென்பொருள் சார்ந்த படிப்புகள் அல்லாது உயிரியல் சார்ந்த படிப்புகள் பயின்ற இளைஞர்களுக்கு ஒரு பெருநிறுவன வாழ்க்கைமுறையை (corporate lifestyle) ஏற்படுத்தி தர முடியும் என நம்புகிறோம்” என்று “பிகம்-எ-கோடர்” (Become-A-Coder) நிறுவனம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
“பிகம்-எ-கோடர்” (Become-A-Coder) நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
178,குறிஞ்சி நகர்,(முதல் தளம்),
குண்டுசாலை,
செம்மண்டலம்,(கடலூர்-பாண்டி ரோடு)
கடலூர் - 1
தொலைபேசி எண்: 9688268505, 9688268767
இணையதள முகவரி: www.becomeacoder.in
மின்னஞ்சல்: becomeacoder9977@gmail.com