19/04/2026
ஒரே தலைவன் MKS!
மொழிக்கும், பண்பாட்டுக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும், உரிமைக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே தலைவராக இன்றைக்கு நம் முன்னே நிற்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்.
தமிழ்நாட்டு மக்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து நிற்க ஒற்றைக் காரணமாக இருப்பவரும் ஸ்டாலினே.
கலைஞர் மகளிர் உதவித்தொகை, புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவது, விடியல் பயணத்திட்டம் எனப் பெண்கள் சுயச்சார்பு அடையவும், அதிகாரமிக்கவர்களாக உருவெடுக்கவும் கடந்த 5 ஆண்டுகளாக இரவு, பகலாக உழைத்தவர்.
அதன் பயனைப் பெண்கள் இன்று அனுபவித்து வருகிறார்கள்...மனதார வாழ்த்துகிறார்கள்.
35 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்கிறார்.
காலை உணவுத்திட்டத்தால் பள்ளிக் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள்.
பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை தந்தையாக, அண்ணனாக ஸ்டாலின் இருப்பதையே, அவரது திட்டங்கள் அடைந்த வெற்றி காட்டுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 'திராவிட மாடல்' அரசு, கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் 90%-க்கும் அதிகமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
சரித்திரம் போற்றும் சாதனைகள்" என வகைப்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள், "நாள்தோறும் நலத்திட்டங்கள்" என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்தன.
மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டுக்கு நுழையவிடாமல் தடுத்து, தாய்மொழியாம் தமிழைக் காத்தவர்.
தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு, தமிழரின் பண்டைய பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகுக்குப் பறைசாற்றியவர்.
தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டுக்கு நிகழ்த்தப்பட இருந்த துரோகத்தைத் தகர்த்தெறிந்தவர்.
தமிழ் மக்களுக்கான தலைவர் ஸ்டாலின் வேண்டுமா? அடிமையை வைத்து டெல்லியிலிருந்து ஆட்சி செய்ய நினைப்பவர்கள் வேண்டுமா?
மக்கள் முன் இருக்கும் இந்தக் கேள்விகளுக்கான விடையில் தான், தமிழ்நாட்டின் எதிர்காலமும், வளர்ச்சியும், மாநில உரிமையும், மொழிப் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது.