Venn oli

Venn oli Welcome to VENN OLI Nala Mayyam. Our center extends Homeopathic health care to the public.

https://store.pothi.com/book/pandurangan-k-uyir-aatrai-vol-1/
07/10/2024

https://store.pothi.com/book/pandurangan-k-uyir-aatrai-vol-1/

Buy Uyir-Aatrai-vol-1: Energy for the Life by Pandurangan.K in India. This volume is a collection of articles that appeared over 12 months (from June-2021 to May-2022) in a Tamil Monthly, Uyir Aatral, called Vital Energy in English. உயிர் ஆற்றல் மாத இதழ் ஓமி...

28/07/2024

*உள் காயம்* ... 1

ஒரு விபத்தில் காயம் ஏற்படும் போது வெளிக் காயத்தை சுத்தம் செய்து மருந்து போடுகிறோம். உள் காயத்துக்கு என்ன செய்வது?

அங்கு பல விஷயங்கள் நடக்கின்றன. நமக்கு சொல்லப்படுவது என்ன செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு சிலர் ஐஸ் வைக்க சொல்லுவார்கள். ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று சொல்வார்கள். டெட்டனஸ் ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள்.
ஒரு சிலர் அந்த இடத்தில் சூடு செய்ய நன்றாக தேய்த்து விடுங்கள் என சொல்லுவார்கள். எண்ணை போட்டு தடவி விட சொல்லுவார்கள்.

காயத்தைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டால் சில பிரச்சனைகளை நாமே சரி செய்து கொள்ளலாம்.

நாம் ஐஸ் வைப்பதை பார்ப்போம்.

*ஒரு இடத்தில் அடிபடும் போது அந்த இடத்தில் உள்ள திசுக்களுக்கான ரத்த ஓட்டம் குறைகிறது. ரத்த ஓட்டம் என்பது திசுக்களுக்கு செல்லப்படும் உணவு. அதாவது போக்குவரத்து தடைபடுகிறது* .

ரத்தம் சரியாக ஓடாவிட்டால் தடைபட்டால் ரத்தம் உறைந்து கட்டிக் கொள்ளும்.

பிறகு வலி அதிகமாகும்.
*அடிபட்ட இடத்தில் வலி என்பது அங்குள்ள திசுக்கள் தங்கள் தேவைக்கான உணவுக்காக அழுவதுதான் உணவுக்காக ஒரு குழந்தை அழுவது போன்று.*

அதனால் முதலில் அடிபட்ட இடத்தில் ஐஸ் வைக்கும் பொழுது ரத்த ஓட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறோம். ரத்த ஓட்டம் நிறுத்தப்பட்ட பிறகு நாம் விட்டு விட்டாலே ரத்த ஓட்டம் துவங்கும். அதற்காகத்தான் ஐஸ் வைக்க சொல்லுவது.

18/07/2024

சிலர் சொல்வார்கள். திராட்சை விதையிலிருந்து புற்று நோய்க்கான மருந்து எடுக்கப்படுகிறது என்று.

திராட்சை விதை வேறு. திராட்சை விதையிலிருந்து எடுக்கக்கூடிய செர்வெட்டால் என்ற ரசாயன பொருள் வேறு.

திராட்சை விதை இயற்கையானது. அதிலிருந்து வேதிய முறையில் எடுக்கக்கூடிய பொருள் செயற்கையானது.

உப்பு இயற்கையானது. உப்பிலிருந்து எடுக்கக்கூடிய சோடியமோ குளோரினோ செயற்கையானது. இரண்டுக்கும் உள்ள தன்மைகள் தனிமங்கள் என்ற முறையில் ஒத்து இருந்தாலும் உபயோகத்தில் வெவ்வேறு.

இருவர் தனியாக இருக்கும்போது அவர்களுடைய குணாதிசயம் வேறு. இருவர்கள் சேர்ந்தால் குணம் வேறு.

சித்த மருத்துவதுக்கும் ஆங்கில மருத்துவத்துக்கும் பல வேறுபாடுகள் உண்டு. அதில் முக்கிய வேறுபாடு இயற்கை- செயற்கை என்பதுதான் என்பதை சித்த மருத்துவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

14/11/2023

*சர்க்கரை வியாதி தொடர்*

1.சர்க்கரை வியாதி. அறிமுகம்.
2. சர்க்கரை வியாதி என்பது என்ன?
3. சர்க்கரை வியாதி வகைகள்
4. இன்சுலினை செல்கள் ஏன் எதிர்க்கின்றன
5. அதிக குளுக்கோசால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன

6. ரத்தத்தில் உள்ள அதிக குளுக்கோஸ் ஏன் குறைக்கப் படுகிறது
7. குளுக்கோசைக் குறைப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன
8. உடலில் செரிமானம் எப்படி?
9. உணவு என்பது என்ன
10. உணவில் இயற்கை செயற்கை என்பது என்ன?

11. உண்ணுதல் என்பது என்ன
12. உணவுத் தொழிற்சாலை? உற்பத்தி, விநியோகம், நுகர்வு.
13. செல் என்றால் என்ன
14.நுகர்வோரும். உடல் செல்களும்
15.கலோரிகள் (starch, Protein and fat)

16. உணவு ஆற்றலாக மாறுதல்- வினைத்திறன் (efficiency)
17. சர்க்கரை வியாதியால் உடலில் என்ன நடக்கிறது
18. கோமா_செல்கள் எப்படி துவங்கி அதிகரிக்கின்றன?
19. செல்களை கோமா நிலைக்குக் கொண்டு செல்லும் உணவு எது
20. வெள்ளை சர்க்கரையும் சர்க்கரை வியாதியான கோமா செல்களும்

21. வெள்ளை சர்க்கரையின் வரலாறும் புவியியலும்
22.சர்க்கரை வியாதிக்கான தீர்வுகள் என்ன?
23.உணவு, மூலிகை, மருந்து. இவைகளுக்குள் உள்ள வேறுபாடுகள் என்ன?
24.இயற்கை மருந்துகளும் செயற்கை மருந்துகளும்
25.சர்க்கரை வியாதிக்கான செயற்கை தீர்வு

26.ரசாயன, வேதிய, மருந்துகள்
27.செயற்கை மருந்துகளால் பக்க விளைவுகள்
28.சர்க்கரை வியாதிக்கான இயற்கைத் தீர்வுகள்
29 இயற்கை மருந்துகள்.
30. சர்க்கரை வியாதிக்கான மூலிகைகள்.

31. சர்க்கரை வியாதிக்கான உண்ணாமை.
32. சர்க்கரை வியாதியை உண்டாக்கும் உணவுகள்.
33. சர்க்கரை வியாதியை அதிகப்படுத்தும் உணவுகள்.
34.உண்ணக்கூடாதது அல்லது குறைக்கப்பட வேண்டியது எது?
35. உண்ணும் முறைகள்

36. நாம் உண்ண வேண்டிய உணவு எது?
37. மனமும் உடலும்
38. மனதின் முக்கியம்
39. சர்க்கரை வியாதியின் வருங்காலம்
40. முடிவுரை
உசாத்துணை (References)

https://m.facebook.com/story.php?story_fbid=733699785443436&id=100064102628074&mibextid=Nif5oz
🙏

*சர்க்கரை வியாதி தொடர்* தேவைப்படுவோருக்கு உதவியாக*உசாத்துணை (References)*1. நீரிழிவு வியாதியும் அது பற்றிய சில அனுபவக் க...
13/11/2023

*சர்க்கரை வியாதி தொடர்*

தேவைப்படுவோருக்கு உதவியாக
*உசாத்துணை (References)*

1. நீரிழிவு வியாதியும் அது பற்றிய சில அனுபவக் குறிப்புகளும்- ஆசிரியர் மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத்-- வெளியீடு மருதூர் வெளியீட்டுப் பண்ணை, கல்முனை ஸ்ரீலங்க்கா

2.சர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம்--- ஆசிரியர் சித்த மருத்துவச் செம்மல் கா சின்னசாமி
மணிவாசகர் பதிப்பகம் சென்னை

3.சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை -- அக்கு ஹீைர்- உமர் பாரூக், மோகன்ராஜ், வினித்- https://telegram.me/OurBodyItselfaDoctor, https://telegram.me/LetUsThinkPositive

4.நீரிழிவு நோய்-- ஆசிரியர் டாக்டர் ஐ சிவசுப்பிரமணிய ஜெயசேகர் MBBS-- வெளியீடு அனன்யா தஞ்சாவூர்

5.நீரிழிவு இதய நோய்களுக்கு எளிய மூலிகை வைத்தியம்-- ஆசிரியர் மரபுவழி சித்தர் அனுப்பபட்டி சு மணியன் - வெளியீடு ஞானச் சூழல்.

6. நீரிழிவுக்கு நிகரற்ற வைத்தியம் -ஆசிரியர் Dr.துர்க்காதாஸ் எஸ் கே சுவாமி RIMP
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் சென்னை

7.நீரிழிவுடன் நலமே வாழுங்கள் - ஆசிரியர் டாக்டர் எம் கே முருகானந்தன், கொழும்பு ஸ்ரீலங்க்கா

8. Pure, White and Deadly: How Sugar Is Killing Us and What We Can Do to Stop
by John Yudkin- Publisher .. Penguin –This was the first publication by a scientist to anticipate the adverse health effects, especially in relation to obesity and heart disease, of the public's increased sugar consumption.

9.Brown Sugar and Health by I. I. Brekhman and I. F. Nesterenko -Pergamon Press (1983)

10.Processed Sugar Causes Diabetes and most diseases - publisher - IMUNE- by Desiree. Romania.

11. Salt Sugar Fat_ How the Food Giants Hooked us - by Michael Moss-Michael Moss

12.Sugar Refined, Power in a Global Regime, International Political Economy- by Ben Richardson

13.Development of crystallized palm syrup sugar as a natural sweetener by Suwansri.S, Ratanatriwung.P, Thanasukarn.P, International Symposium “GoOrganic2009”, Bangkok,

14.Sugar Industry Criminally Tried to Bias Heart Research By Ashley P. Taylor, Med Expose’ | September, 2016

15. Religion, Politics, and Sugar-The Mormon Church, the Federal Government, and the Utah - by Matthew Godfrey

16.Handbook of Diabetes by Rudy Bilous MD, FRCP – publisher- Wiley-Blackwell

13/11/2023

*சர்க்கரை வியாதி தொடர்* 40

கடைசி பகுதி
*முடிவுரை*

*நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்* குறள் 948

_நோயை அறிந்து நோயின் அடிப்படைத் தன்மையை அறிந்து அந்த நோயை நீக்குவதற்கான வழிமுறைகளை அறிந்து பிழையாகாமல் செயல்படுத்துவதே சிறந்தது_ .

சர்க்கரை வியாதி பற்றி என்னுடைய அனுபவத்தில் இருந்தும் ஆராய்ச்சியில் இருந்தும் எழுதப்பட்டவை. விளைவுகளைக் களைவதை விட வேரைக் களைவது சிறந்தது என்ற அடிப்படையில் எழுதப்பட்டது. இன்னும் நன்றாக ஆழமாக அறிந்து கொள்ள தங்களுடைய கருத்துக்கள் உதவக்கூடும்.

இந்தத் தொடரை ஒரு சிலர் முழுமையாக படித்திருக்கலாம். ஒரு சிலர் அங்காங்கே படித்திருக்கலாம். *2-ஆம் வகை சர்க்கரை வியாதி* கட்டுரை பற்றிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன (தங்கள் கருத்துக்கள் பெயருடன் வெளியிடப்படலாம் என்ற அனுமதியோடு)
🙏🙏🙏

Facebook- ஃபேஸ்புக்கில்- இங்கே,

Email. இமெயில்
nala.mayyam@gmail.com

வாட்ஸ் அப்பில் 9786134186.

09/11/2023
09/11/2023

*சர்க்கரை வியாதி தொடர்*- 39

சர்க்கரை வியாதியின் வருங்காலம் வளமாக இருந்தால் மனித வளம் குறைந்து விடும்

*சர்க்கரை வியாதியின் வருங்காலம்*

சர்க்கரை வியாதிக்கு வருங்காலம் என்று ஒன்று இருக்கக் கூடாது. ஆனால் அதற்கு தொடர்ந்து நல்ல வருங்காலம் இருப்பதாகத்தான் தெரிகிறது.

2021 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்தில் ஒருவருக்கு அதாவது 54 கோடி பேருக்கு சர்க்கரை வியாதி இருந்தது. 2030-ல் 54 என்பது 64 கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.
வியாதி கண்டுபிடிக்கப் படாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இங்கு சர்க்கரை வியாதி என்பது ரத்தத்தில் உள்ள குளுக்கோசை அடிப்படையாகக் கொண்ட கணக்கு.
முதலில் வயதானவர்களுக்கு வந்த சர்க்கரை வியாதி தற்பொழுது குழந்தை நிலையிலேயே ஆரம்பிக்கிறது.

ஒரு காலத்தில் வியாதிக்கு மருந்து எடுத்துக் கொண்டால் அது சரியானது. சரியாகி விடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் மருத்துவம் முன்னேறிவிட்டது என்று கூறப்பட்டாலும் தற்பொழுது சாதாரண வியாதிக்குக் கூட ஆயுள் முழுவதும் மருந்து எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலை வந்து விட்டது. வருங்காலத்தில் பல வியாதிகளுக்கு இதே நிலைமை வரக்கூடும்.

நாம் இதுவரை பார்த்த வியாதிகளில் அம்மை போன்ற சில வியாதிகள்தான் திரும்ப வரவில்லை. ஆனால் பல வியாதிகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன. புதிய புதிய வியாதிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வருகின்றன. வந்து தங்கி விடுகின்றன.

அப்படி இருக்கும் பொழுது சர்க்கரை வியாதி தொடர்ந்து இருக்கும். போகப் போக உலகில் உள்ள மக்கள் யாவரும் சர்க்கரை வியாதியால்
பாதிக்கப்படக்கூடும்நிலை உள்ளது.

மற்ற வியாதிகளில் இருந்து சர்க்கரை வியாதி முற்றிலும் மாறுபட்டது. திரும்பவும் அந்த காரணத்தை இங்கே சொல்லுவது மிக பயனுள்ளதாக இருக்கும்.
உடலின் அடிப்படையான செல்லை மற்ற வியாதிகள் தாக்கும். ஆனால் அந்த செல்லே வியாதியாக இருந்தால் என்ன நடக்கும். *செல்லே வியாதியாக இருப்பது தான் சர்க்கரை வியாதி.*

சர்க்கரை வியாதி ஒரு *தொற்று நோய் அல்ல.*
*ஒரு கிருமி அல்ல.* *ஒரு வைரசும் அல்ல.*
சர்க்கரை வியாதி மற்ற வியாதிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

இந்த அறிவியல் உலகில் பொருள்தான் முக்கியமானதாகப் படுவதால் அந்த அறிவுலக மருந்துகளைக் கொண்டு நம் வாழ்க்கையை நடத்துகிறோம். இயற்கையில் இருந்த மருந்துகளை நாம் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை விட தொலைத்து விட்டோம் என்பதுதான் உண்மை. ஏனெனில் நம்முடைய தாத்தா, பாட்டிகளுக்கு தெரிந்த ஒரு மூலிகை கூட நமக்கு தெரியவில்லை. சாதாரண இருமலுக்கும் சளிக்கும் நாம் மருத்துவமனையை நோக்கி ஓடுகிறோம். அதறகான மூலிகைகள் நம்மைச் சுற்றி இருந்தாலும் அதைப் பயன்படுத்தத் தெரிவதுமில்லை. தெரிந்தாலும் பயன்படுத்த விரும்புவதில்லை. ஏனெனில் ஆங்கில மருந்துகளின் மீது இருக்கும் மோகம் மூலிகைகளின் மீது இல்லை.

நம்முடைய இயற்கை முறைகளை முழுவதுமாக மறந்து செயற்கை உலகிற்கு சென்று விட்டோம்.

நம்மை சுற்றியுள்ள மருத்துவர்கள் இந்த வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டு ஆராய்ச்சிகளையும் அங்கு கண்டுபிடிக்கும் மருந்துகளையும் நம்பி மருத்துவர்களின் வாழ்க்கையும் அவர்களை நம்பி நம் வாழ்க்கையும் ஓடுகிறது.

மக்களாக அறிந்து புரிந்து பழைய மருந்துகளை பற்றி சிறிது கவலைப்பட்டு ஓரளவு இயற்கை உணவுக்கும் இயற்கை மருந்துக்கும் இயற்கை வாழ்வுக்கும் மாறினால் தவிர முன்னேற்றம் அடைவது என்பது கடினம்?

*வெள்ளை சர்க்கரையையும் இது போன்ற மற்ற செயற்கை முறை ரசாயன உணவுகளையும் முழுவதுமாக நிறுத்தினாலே சர்க்கரை வியாதி குறையத் தொடங்கும்.* உடல் நலனை விட தொழிலில் லாபமே முக்கியம் என்று இருக்கும் இந்த உலகில் இது நடக்குமா?

நம்மைச் சுற்றியுள்ளது செயற்கையான உலக வாழ்க்கை என்றாலும் அடிப்படையான இயற்கை உணவு, இயற்கை காற்று இயற்கையாக நடப்பது போன்று மற்ற இயற்கை முறைகளை ஓரளவுக்கு பின்பற்றினால் .....

இயற்கையில் உருவான நம் உடலுக்கு நலம் தரக்கூடியது இயற்கை உணவும் இயற்கை காற்றும் இயற்கையில் உண்டாகும் மருந்துகளுமே என்பது நம் உணர்வுக்கு வரும் வரை நாம் செயற்கை உலகில் தான் சிக்கிக் கொண்டிருப்போம்.

அதுவரை இந்த சர்க்கரை நோய்க்கு வருங்காலம் நன்றாக இருக்கும்.

அடுத்தது....
*முடிவுரை*

*சர்க்கரை வியாதி தொடர்*- 38எண்ணம் தான் வாழ்க்கை.*வியாதியில் மனதின் முக்கியம்*நம் உடலுக்கு வரும்  பிரச்சினை மற்றும்  வியா...
05/11/2023

*சர்க்கரை வியாதி தொடர்*- 38

எண்ணம் தான் வாழ்க்கை.

*வியாதியில் மனதின் முக்கியம்*

நம் உடலுக்கு வரும் பிரச்சினை மற்றும் வியாதிக்கான தீர்வுக்கு முடிவு எடுப்பது இந்த மனமே.

இந்த மனம் முடிவெடுப்பதைப் பொறுத்து தான் தீர்வு அமைகிறது. என்ன பிரச்சனை என்பதை இந்த மனம் உணர்கிறது, பார்க்கிறது, கலந்தாலோசிக்கிறது, தீர்மானிக்கிறது.

மருத்துவத்துக்கு எங்கு செல்லலாம் என்று முடிவு எடுக்கிறது. யாரோ ஒருவர் சொன்னதை நம்பி அந்த டாக்டரிடம் போலாமா? அந்த மருத்துவமனைக்கு போலாமா? அந்த ஊருக்கு போலாமா? என்று அந்த மனம் தான் முடிவு எடுக்கிறது. அதே சமயத்தில் மருத்துவத்திற்கு என்ன செலவாகும்? எப்படி சமாளிக்கலாம் என்று அந்த மனம் தான் முடிவு எடுக்கிறது.

உடலைப் பற்றிய, நிலைமைகளை புரிந்து அதற்கான தீர்வுகளைப் பற்றிய எல்லா முடிவுகளையும் எடுப்பது மனம். இதை நினைத்துப் பார்த்தால் மனதிற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பது புலப்படும்.

முடிவு எடுக்கும் நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் தவறு நடந்தாலும் நல்லதோ கெட்டதோ ஆனாலும் அது நமக்கு அனுபவமாகி விடுகிறது. அடுத்த செயலுக்கு இது உதவுகிறது. தற்போது எடுக்கும் முடிவுகள் அனுபவத்தின் அடிப்படையிலும் எதிர்காலத்தை நோக்கியும் எடுக்கப்படுகின்றன. அதனால் தான் உடல் நலனை விட மனதின் நலன் முக்கியமானது.
செயல்கள் நல்ல யோசனையுடன் திடமாக இருந்தால் முடிவுகள் நன்முறையில் அமையும்.

வியாதியைப் பற்றி டாக்டர் கூறுவதை எப்படி எடுத்துக் கொள்கிறோம்? ஒரு சில டாக்டர்கள் சிறிய பிரச்சனையைப் பெரிதாக்கி விடுவார்கள். அதை உணராமல் நாமும் அதைக் கண்டு பயப்பட்டு விடுவோம். சில டாக்டர்கள் வியாதியை சரியாக கவனிக்காமல் கணிக்காவிட்டால் அதை சிறியதாக நினைப்போம். ஆனால் அது பெரிய வியாதியாக இருக்கலாம். எது உண்மை எது பொய் என்று புரியாத நிலையில் நாம் ஏதோ ஒரு முடிவுக்கு சென்று விடுவோம்.

பெரிய வியாதிகள்
நோயாளிக்குத் தெரிய வேண்டாம் என்ற காலம் இருந்தது. ஆனால் மேலைநாட்டின் மருத்துவப் பழக்கத்தால் நோயாளிக்கு நோய் தெரிவிக்கப்பட வேண்டும் என்று நம்மூர் மருத்துவர்களும் நேரடியாகவே நோயாளியிடம் சொல்லிவிடுகிறார்கள்.

இவ்வாறாக மற்றவர்கள் செல்வதைக் கேட்டு முடிவு செய்வதும் இந்த மனமே.

பயந்தவருக்கு சிறிய பிரச்சினையும் பெரிதாகி விடுகிறது. பயப்படாதவருக்கு பெரிய பிரச்சினையும் சிறியதே.

ஒரு சிலர் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். *அவனுக்கு என்னப்பா. கவலை இல்லாதவன். ஜாலியாக இருக்கிறான்* என்று. ஏன்?

ஊர் சுற்றிக் கொண்டிருப்பவன், பிச்சைக்காரன் இவர்களுக்கு என்ன நோய் வருகிறது? ஏன்?

ஒரு பிரச்சினையை விட அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்ற கவலைதான் முக்கியமாகி விடுகிறது.

சர்க்கரை வியாதியை துச்சம் என முழுவதுமாக அதிலிருந்து வெளிவந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நாம் நடக்க வேண்டும் என்று முடிவு செய்தால் நடக்கிறோம். வலி கூடினாலும் நடப்பதால் தான் நாளாக ஆக வலி குறைகிறது பின்பு அதிகம் நடக்க முடிகிறது. சிறிது சோம்பேறித்தனம் எனறாலும் வலி என கூறி நடக்காமல் இருந்தால் நாளாக ஆக அதிகமாகிறது. நடக்க முடியாத நிலைக்கு சென்று விடுகிறோம்.

நடப்பது போன்று தான் உண்பதும் உறங்குவதும் எந்த ஒரு செயல்பாடும் எந்த ஒரு முடிவும்.

*எண்ணித் துணிக கருமம்*

தொடர்வது....
*சர்க்கரை வியாதியின் வருங்காலம்*

03/11/2023

*சர்க்கரை வியாதி தொடர்* 37

மனம் இல்லாத போது உடலில் செயல் இல்லை. உடல் இல்லை என்றால் மனமும் அங்கு இல்லை.

*மனமும் உடலும்*

சர்க்கரை வியாதி பற்றி ஓரளவுக்கு நாம் தெரிந்து கொண்டோம். அதில் மனதுக்கு எங்கே இடம் இருக்கிறது என்பதை நாம் பேசவில்லை. மனது எவ்வளவு முக்கியம் என்பது பற்றி நாம் நினைப்பதில்லை. ஏனென்றால் அதை நினைப்பதும் மனமே.

மனதுக்கும் உடலுக்கும் உள்ள இணைப்பையும் அதற்கு இடையே உள்ள செயல்பாடுகளையும் நாம் ஓரளவுக்கு தெரிந்து கொள்வது நல்லது.

நாம் அன்றாடம் செய்யும் செயல்களை உடல், தானே செய்கிறதா அல்லது மனதுக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை நினைத்துப் பார்த்தால் நிறைய விஷயங்கள் நம் மனதுக்குள் அலைபாயும். பொதுவாக நாம் கண்ணால் பார்க்கிறோம். பார்க்கும்போது மனதில் எண்ணங்கள் ஓடுகின்றன. இதற்கு முன்பே பார்த்ததற்கும் தற்போது பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை நினைக்கிறோம். ஒப்பிடுகிறோம். அதேபோல் ஒரு விஷயத்தை கேட்கிறோம். முடிவெடுக்கிறோம். தொடுகிறோம். உணர்கிறோம். சில பொருட்களை பார்க்க ஆசைப்படுகிறோம். உண்ண விரும்புகிறோம். உண்கிறோம். இவைகள் எல்லாம் நம் மனதின் செயல்பாடுகளால் நடக்கின்றன.

நடக்க வேண்டும் என்று நினைத்தால் தான் நாம் நடக்கிறோம். உடல் தானாக நகர்வதில்லை. உடலை ஒரு விஷயம் இயக்குகிறது. அது மூளை தான். மூளையை இயக்குவது?

அந்த மூளைக்கான கட்டுப்பாடுகளை அதன் செயல்பாட்டுக்கான உணர்வுகளை கொண்டு வருவது மனம் தான். ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஏதோ ஒரு காரணம் நம் மனதுக்குள் ஏற்படும் போது நாம் செல்லுகிறோம். விரும்பாவிட்டால் நாம் எதையும் செய்வதில்லை.

அது சரி. நாம் தூங்கும் போது என்ன நடக்கிறது. தூங்கும்போது செயல்படுத்துவது எந்த மனம். ?

நம் தினசரி வாழ்க்கையில் விழிப்புடன் செயல்படுவது, செயல்படுத்துவது *அறிவு மனம்*. அறிவு மனம் ஓய்வில் இருக்கும் போது செயல்படுவது *ஆழ்மனம்* .

நமக்குள் பல மனங்கள் இருந்தாலும் ஆழ்மனத்தையும் அறிவு மனத்தையும் நாம் தெரிந்து கொண்டால் போதும். ஒரு செயலை செய்துவிட்டு நான் ஏன் செய்தேன் என்று எண்ணுவது அறிவு மனம். செய்த செயலை ஆழ்மனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நடப்பது அது. ஆழ்மனத்திலிருந்து வரக்கூடியது.

ஆழ்மனம் எதைப் பார்க்கிறதோ எதைக் கேட்கிறதோ அதை அப்படியே வைத்துக் கொள்ளும். அதை வைத்து அறிவு மனம் செயல்படும். அறிவு மனம் தனக்குத் தகுந்த மாதிரி செயல்படும். ஆழ்மனம் ஒரு ஃபோட்டோ- புகைப்படம் போன்றது. ஃபோட்டோவை ஆய்வது அறிவு மனம்.

ஆழ்மனம் சொல்வதுபோல் அறிவுமனம் செயல்பட வேண்டும் என்பது அல்ல. அது ஒவ்வொருவருடைய தன்மையைப் பொறுத்து செயல்படும்.

ஆழ்மனதுக்கும் அறிவு மனத்திற்கும் வேறுபாடு ஏற்படும் போது முரண்பாடு ஏற்படும் போது அங்கு ஒரு கஷ்டம் உண்டாகும். மனசாட்சி உறுத்துகிறது என்பது இந்த வேறுபாட்டினால் தான்.

நம் உடலை எது இயக்குகிறது? அவை தான் அந்த உடலுக்கும் தீர்வாக அமையும்.

உடலில் உள்ள பிரச்சனைகளை ஒருவரிடம் சொல்வதும் மனம் தான். எந்த டாக்டரிடம் செல்ல வேண்டும் என்று முடிவு எடுப்பதும் மனம் தான். எப்போது செல்ல செல்ல வேண்டும் என்று முடிவெடுப்பதும் மனம் தான். அதனால் நம் உடலின் செயல்பாட்டில் மனதின் செயல்பாடு முக்கியம். வியாதியின் போது எந்த உணவு சாப்பிட வேண்டும் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்பட்டாலும் அதை முடிவெடுப்பது மனம் தான்.

எந்த செயலையும் சரியா-தவறா? இன்று போகலாமா- நாளை போகலாமா? அவர் சொல்வதை கேட்கலாமா- இவர் சொல்வதை கேட்கலாமா? இவ்வாறான *இதுவா/அதுவா* என்ற மனதின் முடிவுகள் நம் வாழ்க்கையின் பாதையை நிர்ணயிக்கின்றன. வாழ்க்கை என்பது திரும்பி செல்ல முடியாத ஒரு ஒற்றை வழிப்பாதை. அந்த பாதைதான் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவாக அமைகிறது. இதில் உடல் ஒரு சிறிய பகுதி மட்டுமே.

உடலுக்கு ஒரு சிறு தொல்லை வந்தாலும் அதுவே வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. அதையும் இந்த மனம் தான் எது பெரிய விஷயம் எது சிறிய விஷயம் என்று முடிவு செய்கிறது.

மனம் ஒரு மனிதனை மாற்றுகிறது என்றால் அதில் உடலும் சேர்ந்தது. உடலை மாற்றுகிறது என்றால் உடலில் உள்ள வியாதிகளையும் மாற்றும்.

தொடர்வது....
*வியாதியில் மனதின் முக்கியத்துவம்*

02/11/2023

*சர்க்கரை வியாதி தொடர்* 36

*எதை உண்ணலாம்*

*உடலுக்கும்*
*மனதுக்கும்*
*ஒத்துக்கொள்ளக்* கூடிய
*இயற்கையில் விளைந்த இயற்கை முறையில் சமைக்கப்பட்ட* எல்லா உணவையும் உண்ணலாம்.

இதைப் பிரித்தறிவது தான் மிக முக்கியமானது.

இரண்டாம் வகை சர்க்கரை வியாதி இந்த உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் உண்டு கொண்டிருந்ததை தொடர்ந்து உண்ணலாம்.

உலகில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வெவ்வேறு உணவுகளை அவர்கள் பகுதிகளில் கிடைக்கக்கூடியதை உண்ணுவதை பார்க்கலாம். மனித உடல் இவை எல்லாவற்றுக்கும் தயாராக ஆக்கப்பட்டுள்ளது. அவை எல்லாம் மனிதனுக்கு ஏற்றவை என்பதால் தான் அவைகள் உண்ணப்படுகின்றன.
அது சைவமானாலும் சரி அசைவமானாலும் சரி. ஆனால் உணவு விஷயத்தில் மனமும் முக்கியமானது என்பதை மறந்து விடக்கூடாது. பொதுவாக நாம் உணவு என்றால் உடலை பற்றி மட்டும் தான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனதுக்கு தான் முதல் அதிகாரம். இரண்டாவதுதான் உடல். மனதுக்குப் பிடித்தால்தான் உடம்புக்கு பிடிக்கும். நாளாக ஆக உடம்புக்குப் பிடிக்காவிட்டால் மனதுக்கும் பிடிக்காது.

நம்முடைய உணவு முன்னோர்கள் அனுபவத்தின் வழியாக அமைகிறது. அதுவே நமக்கு ஒத்துக் கொள்கிறது. பின்னாளில் நம்முடைய வாழ்க்கை வசதிக்கு தகுந்தவாறு நம் உணவு மாறுகிறது.

நாம் குழந்தைகளைப் பார்க்கிறோம். குழந்தைகள் எதை எடுத்தாலும் வாயில் வைத்து பார்க்கும். சுவைத்துப் பார்க்கும். கடித்து உண்ண பார்க்கும். குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகிறோம். அந்த உணவு விரும்பி எடுத்துக் கொள்ளும் பொழுது நல்லபடியாக ஜீரணம் ஆகிறது. ஒரு சில குழந்தைகள் தனக்கு ஒத்துக் கொள்ளாததால் அதை வேண்டாம் என்கிறது.
கட்டாயப்படுத்தும் உணவை வாந்தியாக வெளிததள்ளுகிறது. ஆர்வமாக எடுத்துக் கொள்ளும் உணவை ஆனந்தமாக உண்கிறது.

உணவைப் பற்றிய அறிவு உடலுக்கு வரும் வரை எந்த உணவை எப்படி மாற்ற வேண்டும் எது ஒத்துவரும் என்று தெரியும் வரை மற்றவர்கள் கொடுக்கும் உணவை எடுத்துக் கொள்கிறோம். பிறகு உணவை தானே முடிவு செய்யும் நிலைக்கு வந்து விடுகிறோம்.

செரிமானத்துக்கு ஏற்ற உணவை நம் உடல் உணர்ந்து கொள்கிறது. வருங்காலத்தில் அந்த உணவு நன்றாக செரிக்கப்படும்.

நாம் வளர்ந்த நிலையில் என்ன உண்ண வேண்டும் என்று உடலுக்குத் தெரியும். உடலுக்கு பசி வரும் போது உணவு தேவைப்படும்போது நம்முடைய மனதில் அதை உணர்த்துகிறது. அந்த மனம் அந்த உடலை வைத்துக் கொண்டு உணவுக்காக தேடி அலைகிறது. கிடைத்தால் உண்கிறது. உணவு சமைப்பதற்கான அதற்கான பொருள்களைக் கொண்டு சுட்டோ, வேக வைத்தோ, சமைத்தோ உண்கிறது.

விரும்பி உண்ணப்படும் சில உணவுகள் வயிற்றுக்குள் சென்றபின் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். உண்மையில் அது தேவைப்படுகிறது. ஆனால் உடல் எடுக்க மறுக்கிறது. இது ஒவ்வாமை பற்றிய விஷயம்.
( _இது ஒரு தனிக் கதை. எப்படி நெருங்கிய நண்பனே விரோதி ஆவது போல்_ )

நமக்கு முன்னே உள்ள எல்லா உணவுகளும் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுப் போயிருக்கும் ஒரு அனுபவம் தான்.

இருக்கும் உணவைத்தான் தற்கால அறிவியல் ஆராய்ச்சி செய்கிறதே ஒழிய எந்த உணவையும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. ஆராய்ச்சியை விட்டுவிட்டு பொதுவாக இயற்கை நிலையை மட்டும் நாம் பார்த்தால் எதை உண்ண வேணடும்
எப்பொழுது உண்ண வேண்டும்
எப்படி உண்ண வேண்டும்
என்பதை நம் அனுபவமே சொல்லும்.

இந்த உணவு விஷயத்தில் மற்றவர்களுடைய அனுபவங்கள் உதவியாக இருந்தாலும் தன்னுடைய சொந்த அனுபவம் தான் முக்கியமானது. ஏனெனில் தனக்குத் தேவையானதை உடல் சுட்டிக்காட்டுகிறது.
உடலின் தேவை மனதுக்குத் தெரிகிறது. அதைத் தேட மனம் யோசனை செய்கிறது. தேடி கொண்டு வந்து உண்கிறது

உணவு பற்றி கூறும் மற்றவர்களின் அறிவுரையை அப்படியே பின்பற்றுவதை விட்டுவிட்டு அதை ஒரு யோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றாக புரிந்து கொள்ளவும். பொதுவாக இந்த அறிவு சார்ந்த உலகம் வளர்ந்து விட்டதால் மற்றவர்களுக்கு அறிவு அதிகம் என்ற எண்ணத்தில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். உணவுக்காக நாம் தினமும் உழைத்தாலும் உழைப்பில் இருக்கும் அக்கறை உணவில் இருக்க வேண்டும் என்பதை நாம் மறந்து கொண்டிருக்கிறோம். மற்றவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் மன உடல் தேவைகளுக்கு கொடுக்கத் தவறுகிறோம்.

நாம் உண்ணும் உணவு முழுவதும் சக்தியாக மாற்றப்படுவதில்லை. உணவில் வினைத்திறன் 100% இல்லாமல் இருக்கலாம். ஆனால் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவு நம்முடைய உடலின் செல்களுக்கு உணவாக அமைகிறது.

ஒரு உணவுத் தொழிற்சாலையில தொழிலாளிகள் அங்கு உணவை தயாரிக்கிறார்கள். அவர்கள் செய்யும் உணவை அவர்களே உண்கிறார்கள்.
உண்டு விட்டு அதே தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். அதேபோன்றுதான் செல்கள் தயாரிக்கும் உணவை செல்கள் உண்ணுகின்றன. நல்ல உணவை உண்டு வேலை செய்தால் உணவின் தரம் உயரும்.

அதற்காக நமது உடலின் ஒவ்வொரு பாகமும் தத்தம் பணியை காலா காலத்தில் செவ்வனே கொண்டிருக்கிறது.

சக்தியுள்ள உணவு உண்ணப்பட்டு சரியாகச் செரிக்கப்பட்டால் நோயற்ற வாழ்வும் நிம்மதியான வாழ்வும்.

நம் மனம்.
நம் தேவை.
நம் உணவு.
நம் உடல்.
நம் செரிமானம்.
நம் ஆற்றல்.

தொடர்வது....
*மனமும் உடலும்*

30/10/2023

*சர்க்கரை வியாதி தொடர் 35.*

*உண்ணும் முறைகள்*

எந்த நேரத்தில்?
என்ன உணவை?
எபபடி உண்ண வேண்டும்?
என்ற ஆராய்ச்சி நம்முடைய படிப்பு அறிவு வளர வளர ஆராயத் தொடங்கி விட்டோம்.

ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
இது சாப்பிடுவதுக்கு முன் அதை சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்ட பின் அதை சாப்பிடக்கூடாது. இரவு ஆறு மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. மதியம் இதை சாப்பிடக்கூடாது காலையில் அதை சாப்பிடக்கூடாது. இவ்வாறு வரும் எல்லா விஷயங்களையும் கடைப்பிடித்தால் ஒருவன் உண்ண முடியுமா? பொதுவாக ஒருவருக்கு வரக்கூடிய அனுபவம் அவருடைய உண்ணும் உணவை பொறுத்தது. அவர் உடல் செரிக்கும் தன்மையைப் கொடுத்தது.

தனக்குப் பிடிக்காதது மற்றவர்களுக்கும் கூடாது. தனக்கு ஒத்துவரக் கூடியது மற்றவர்களுக்கும் ஒத்துவரும் என்று விளம்பரப்படுத்துவது அதிகமாகி விட்டது. இம்மாதிரி விஷயங்களை பின்பற்றுவது மிகவும் தவறானது. தன்னுடைய தேவை என்ன. அதை தன் உடல் எப்படி பயன்படுத்துகிறது என்பது முக்கியம்.

ஒவ்வொரு மனிதனின் மனமும் உடலும் வேறுபட்டது. அது மற்றவர்களுக்கு ஒத்து வராது என்பதை யாரும் நினைக்காமல் தான் சாப்பிடுவது போல் தான் மற்றவர்கள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய விஷயங்கள் வெளி வருகின்றன. கட்டாயப்படுத்தப்படுகின்றன. ஒருவருக்கு எந்த உணவு செரிமானம் ஆகும் என்பது தெரியாமல் அவருக்கான உணவும் கலோரிகளும் மருத்துவமனைகளில் முடிவெடுக்கப்படுகின்றன.

*நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.*

*பசி எடுத்தால் உண்ண வேண்டும்.*

*தண்ணீர் தாகம் எடுத்தால் குடிக்க வேண்டும். தேவைப்படும் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.*

*ஒத்து வராததை உண்ணக்கூடாது.*

*வயிறு நிரம்பியது என்ற எண்ணம் வந்தபின் சாப்பிடக்கூடாது.*

*தனக்குப் பிடித்த ஜீரணமாகக் கூடிய எல்லா உணவையும் உண்ணலாம்.*

இதைத் தவிர உண்ணும் முறைகளைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.

ஒரு சில உணவுகள் ஒரு சிலருக்கு பிடிக்காதது அல்லது சில உணவுகள் சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை என்பது வேறு விஷயம்.

ஆனால் ஆரம்ப கால மனிதன் எவ்வாறு உண்டு இயற்கை வளத்தோடு இருந்தான் என்பதை யோசிக்கும் போது நமக்கு இது ஆச்சரியமாக தோன்றும்.

இயற்கையாக உண்டு கொண்டிருந்த நாம் மற்ற புத்தகங்களில் இருந்து சமூக வலைதளங்களில் இருந்து மற்றவர்களுடைய சொற்களில் இருந்து நாம் கேட்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம். எப்படி சாப்பிட வேண்டும் என்பது தெரியாமல் மற்றவர்கள் அதை நமக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு வந்து விட்டோம்.

ஒரு குழந்தை தனக்கு முன் உள்ள தட்டிலிருந்து அந்த உணவை எப்படி உண்கிறது? அதற்கு தண்ணீர் வேண்டும் போது என்ன செய்கிறது? எப்படி தண்ணீர் குடிக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் நாம் முட்டாள்களாக இருப்பதாக தோன்றும். அதுதான் குழந்தையின் இயற்கை தன்மை.

நம் சுற்றுச்சூழலும், வாழ்க்கை முறையும்
பல ஆண்டுகளாக மாறிக்கொண்டே வருவதால் நாம் மற்றவர்களை நம்பி இருக்கிறோம். அவர்கள் கேள்விப்பட்டதை எல்லாம் நம் மேல் திணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைவிட நம் அறிவை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை பலர் நம் மேல் திணிக்கும் விக்ஷயமும் அவர்களுடையது அல்ல. அவர்கள் எங்கோ யாரிடமோ கேட்டதோ படித்ததோ கேள்விப்பட்டதோ இருக்கலாம். அதனால் அதனுடைய உண்மை தன்மை அவர்களுக்கும் தெரியாது. உண்மை அனுபவஸ்தர்களின் அறிவு இவைகளுக்குள் மறைந்து விடுகிறது. எது உண்மை எது பொய் என்று தெறியாத நிலையில் நாம் முடிவெடுக்கிறோம்.

வாழ்க்கை நிறையவே மாறிவிட்டது. நிறைய பேர் பற்பல வேலைகளுக்குச் செல்கின்றனர். இரவு ஷிப்ட் முதல் நேரம் காலம் மாறி பல பணிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை. சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் போகும் நிலை. எந்த உணவு எந்த நேரத்தில் உண்ண வேண்டும் என்ற கவலை.

உண்ணும் உணவு நன்றாக செரிமானம் ஆகிறது என்றால் எந்த உணவையும் எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால்....
நாம் ஓய்வில் இருக்கும் போது இரைப்பைக்கு நம் உடம்பு செலவிடும் சக்தி நன்றாக கிடைக்கிறது. அதனால் நன்றாக செரிமானம் ஆகிறது. தூக்கம் செரிமானத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர வேண்டும். தூக்கத்தில் எண்ணங்கள் குறைகிறது. மூளையின் வேலை குறைகிறது. மூளைக்கு நாம் செலவிடும் சக்தி இரைப்பையின் வேலைக்குப் பயன்படுகிறது.

பசி என்பது வயிறு காலியாக இருப்பதால் நடப்பது அல்ல. தனக்கு உணவை தேவை என்று சில மணி நேரங்களுக்கு முன்பே சொல்லப்படும் ஒரு அறிகுறி.

உணவை உண்பதற்கு மணிக் கணக்கைப் பின்பற்றுவது தவறல்ல.
நம்முடைய உடல் இயக்கம் இரவு பகலைப் பொறுத்து உள்ளது. அதனால் நாம் மணி தவறாது உண்ணுவது என்பதை விட தேவைக்கு என்று உண்ணுவது முக்கியம். ஆனால் அது உணவு செரிமான பிரச்சனையில் வந்து நிற்கக்கூடாது.

உணவு அருந்துவதற்குச் சரியான நேரத்தைக் குறிக்கும் வகையில் உடலில் நமக்குச் சில அறிகுறிகள் தோன்றும். இவற்றில் முக்கியமான அறிகுறி பசி. வயிற்றில் பசி தோன்றும் நேரத்தில் அதற்குத் தீவனம் போட வேண்டியது அவசியம்.

உண்ட உணவு வயிற்றில் ஜீரணமாகி விட்டதா என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே உண்ட உணவு செரிக்கும் முன் வேறு உணவை உட்கொள்ளும் போது இரைப்பையின் வேலை அதிகமாகிவிடும். இதை தவிர்க்க வேண்டும்.

இந்த நிலப்பரப்பின் எங்கோ ஒரு மூலையில் எந்த செய்தி தொடர்பும் சமூக வலைதளங்களும் பத்திரிக்கை செய்திகளும் இல்லாமல் பலர் தங்களுக்குக் கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறனர். முன்னேறிய நாகரிகத்தில் பல உணவுகளை உண்டும் பெரிய மருத்துவமனைகளில் பல நோய்களில் அடிபட்டு நாம் வாழ்கிறோம். அவர்களிடத்தில் கிடைக்கும் குறைந்த வசதிகைளைக் கொண்டே அவர்கள் வாழ்கிறார்கள். இதை நினைக்கும் போது நாம் நம்முடைய உணவு முறைகளில் குழம்பி விட்டோம். மற்றவர்களை அதிகமாக நம்பிக் கொண்டிருக்கிறோம் என்பதே பொருள்.

தொடர்வது.......
உண்ணக்கூடியது?
உண்ண வேண்டியது?

*எதை உண்ணலாம்*

Address

Karuthampatti (SH-18), Tamilnadu
Dharmapuri
636902

Alerts

Be the first to know and let us send you an email when Venn oli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Venn oli:

Share