22/06/2023
பல்லுறுப்பு விபத்துக் காயம் : நலம் பெறலாம்
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நிரந்தர உடல் ஊனம் ஏராளம் . சமீபத்திய அரசு தரவுகளின் படி இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சாலை விபத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் மூன்றரை லட்சம் பேர் உடல் ஊனத்தால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது .இது சார்ந்தோரின் குடும்பத்தை மனவேதனைக்கும் பொருளாதார பின்னடைவிற்கும் இட்டுச்செல்கிறது . பெருகி வரும் மோட்டார் வாகனங்களின் தேவைகளை கணக்கில் கொண்டு ,சாலைகளின் கட்டமைப்பு சட்ட திட்டம் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு போன்றவை விபத்துகளை தவிர்க்க உதவும் !
Poluytrauma எனப்படும் பல்லுறுப்பு விபத்து காயம் என்றால் என்ன !?
அதிவேக விபத்துகளால் உடலின் பல உறுப்பு மண்டலங்களின் காயத்தால் ஏற்படும் மோசமான உடல் இயக்க சமன்பாடுகளின் மாற்றம் மற்றும் அதன் பின்விளைவுகள் polytrauma எண்டழைக்கப்படுகிறது .
சாதாரண விபத்துகளை விட இந்த பல்லுறுப்பு காயத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மோசமானது என்பதாலும் இதற்கான சிகிச்சை முறைகளும் பொதுவான விபத்து சிகிச்சையிலிருந்து சற்று மாறுபட்டது என்பதாலும் இதற்கான முக்கியத்துவம் அதிகரிக்கிறது !
கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று இருக்குமாயின் அது பல்லுறுப்பு விபத்து காயம் என்றழைக்கப்படும்
(1 ) நரம்புமண்டலம் , சுவாச மண்டலம் , இரையக குடல்பாதை மண்டலம் , இதயம் மற்றும் ரத்தக்குழாய் போன்ற ஏதேனும் இரு உறுப்பு மண்டலம் மற்றும் ஒரு கால் அல்லது கையில் ஏற்பாடு எலும்பு முறிவு காயம் .
(2 ) ஏதேனும் ஒரு உறுப்பு மண்டலம் மற்றும் இரு கால்கள் அல்லது கைகளில் ஏற்படும் எலும்பு முறிவு காயம்.
(3 ) ஏதேனும் ஒரு உறுப்பு மண்டலம் மற்றும் ஒரு கை அல்லது காலில் ஏற்படும் பெரிய புண்ணுடன் ஏற்படும் எலும்பு முறிவு .
(4 ) உறுதியற்ற இடுப்பு குருத்தெலும்பு முறிவு மற்றும் உள்ளுறுப்பு சேதம் .
Polytrauma விளைவுகளின் மூண்டு முக்கிய கட்டங்கள் :
(1 ) முதலாவது விபத்து நடந்த சில நிமிடங்கள்.
இது மிகவும் ஆபத்தான கட்டம் , மோசமா விபத்தினால் முக்கிய உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் . சாலை விதிகளை கடைபிடித்தால் , சீட் பெல்ட் அணிவது , ஏர் பாக் உள்ள வாகனம் , ஹெல்மெட் அணிவது போன்றவை இதன் பாதிப்பை குறைக்கும் .
(2 ) இரண்டாவது கட்டமான golden hours : இது விபத்து நடந்து சில மணிநேரங்கள் ஆகும் . இந்த கட்டத்திலேயே மருத்தவ துறை வல்லுனர்களின் பங்களிப்பு இன்றியமையாதது . முறையான முதல் உதவி , ஆய்வக சோதனைகள் , மருந்துகள் மற்றும் முக்கிய உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் இந்த கட்டத்தில் தேவை படலாம் .
(3 ) மூன்றாவது கட்டம் ஆரம்ப உயிர்காக்கும் சிகிச்சைகளுக்கு பின் சில தினங்கள் முதல் வாரங்கள் வரை நீடிக்கும். இந்த கட்டத்தில் கிருமி தோற்று , உறுப்பு செயலிழப்பு , நுரையீரல் தொற்று , சிறுநீரக பாதிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் .
பல்லுறுப்பு சேதமுற்ற நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய சிகிச்சைகள் :
விபத்து நடந்த இடத்தில நோயாளிகளை முதலில் சந்திக்கும் 108 மற்றும் இதர அவசர ஊர்தி மருத்தவ பணியாளர்களின் பங்களிப்பு அவசியமாகும். தகுந்த உபகரபங்கள் பயன்படுத்தி நோயாளிகளுக்கு தண்டுவடம் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் காயம் ஏற்படாத வண்ணம் தூக்குவது , அதிக ரத்தப்போக்கை தற்காலிகமாக குறைப்பது உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகள் தொடங்கப்படும்.
மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் நோயாளியின் சுவாசம் , ரத்த அழுத்தம் போன்றவற்றை சீர் செய்யும் சிகிச்சைகள் தொடங்கி பிறகு தண்டுவட மற்றும் கை கால்களில் எலும்பு முறிவுகளை நிலைப்படுத்தும் சிகிச்சைகள் வழங்கப்படும். தேவையான அளவு ரத்தம் கிடைக்க ரத்த வாங்கி மருத்துவமனையிலியேயே இருப்பது முக்கியம் .
அவசர சிகிச்சை மருத்துவர்கள் , பொது அறுவை சிகிச்சை நிபுணர் , எழும்பியல் நிபுணர் , மூளை அறுவை சிகிச்சை நிபுணர் , ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் போன்றோரின் பங்கு இன்றியமையாததாகும் .
Damage control Orthopaedics எனப்படும் உயிர் மற்றும் கை கால்களை ஆபத்திலிருந்து காக்கும் முக்கிய அறுவை சிகிச்சைகள் முதற்கட்டமாக செய்யப்பட்டு , நோயாளியின் உடல் நிலை சீரான பின்பு சில தினங்களுக்கு பிறகு மற்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்படும்.
நம் திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனைக்கு விபத்து காயத்தால் கழுத்து , நெஞ்சு , தோள்பட்டை போன்ற இடங்களில் ஆழமான வெட்டுக்காயம் மற்றும் கால்களில் பெரிய புண்ணுடன் மூட்டு எலும்புகள் நொறுங்கிய நிலையில் , இடது நுரையீரலில் சுருங்கிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அழைத்து வரப்பட்டார் , உடனடியாக தேவையான மருத்தவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள்
அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி , உயிர்காக்கும் முன் சிகிச்சைகள் வழங்கி பின்பு அறுவை சிகிச்சை அரங்கில் நுரையீரல் விரிவைடைய நெஞ்சில் குழாய் பொருத்தி , காயங்கள் தையலிடப்பட்டு , கால் எலும்பு முறிவுகளுக்கு வெளியிலிருந்து கம்பிகள் பொருத்தி முன்கட்ட சிகிச்சை அளித்து , சில தினங்களுக்கு பின் பிளேட் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .
தற்போது நல்ல முறையில் உடல் நலம் தேறி நடக்கவும் தொடங்கியிருக்கிறார் . நம் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட சில நோயாளிகளின் கதிரியக்க படங்கள் இணைத்துள்ளேன்.
இந்த பல்லுறுப்பு விபத்து காயத்தை தடுப்பது எப்படி :
தரமான சாலைகள் , பாதுகாப்பான பயணங்கள் , அதிவேக பயணத்தை தவிர்ப்பது , இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது , தலைக்கவசம் அணிவது , சீட் பெல்ட் அணிவது , அவசர ஊர்தி சேவைகளை துரிதப் படுத்துவது, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது போன்றவை விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவும் .
டாக்டர்.மு.சதாம் உசேன் MBBS , MS( ORTHO )
எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்
வடமலையான் மருத்துவமனை , திண்டுக்கல்.