Fitness A-LAB studios

Fitness A-LAB studios Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fitness A-LAB studios, Weight Loss Center, Erode.

Fitness is the condition of being physically fit and healthy and involves attributes that include, but are not limited to mental acuity, cardiorespiratory endurance, muscular strength, muscular endurance, body composition, and flexibility.

27/04/2023

Intermittent fasting : இன்டர்மிட்டண்ட் டயட் யாரெல்லாம் பின்பற்றக் கூடாது... அது உடலில் எப்படி வேலை செய்யும்...

உடல் எடையை குறைப்பதற்கு இந்த இன்டர்மிட்டண்ட் டயட் அதிகமாக பரிந்துரை செய்யப்படுகிறது. இன்டர்மிட்டண்ட டயட்டில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. ஆனால் அதேசமயம் கண்ணைமூடிக் கொண்டு எல்லோரும் அதை பயன்படுத்த முடியாது. பயன்படுத்தவும் கூடாது. அப்படி இன்டர்மிட்டண்ட் டயட்டை யார் பின்பற்றக் கூடாது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இன்டர்மிட்டண்ட் டயட்டிலும் பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை நம்முடைய உடல் வாகுக்கும் உடலில் உள்ள பிரச்சினைக்கும் தகுந்தபடி மாற்றம் செய்து கொண்டு பின்பற்றுவது நல்லது. அதற்கு முன்பு நல்ல ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்றோ அல்லது அவரிடமே டயட் அட்டவணையை பெற்றோ பின்பற்றுங்கள்.


​உணவை தவிர்க்கலாமா​
இன்டர்மிட்டண்ட் டயட் என்றாலே காலை உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. நீங்கள் எடுத்துக் கொள்ளும் விரத நேரத்தைப் பொருத்து தான் அது தீர்மானமாகும். நீங்கள் காலை 6 மணிக்கே கூட விரத நேரத்தை தொடங்கி மாலை 6 மணிக்கோ அல்லது 4 மணிக்கோ விரத நேரத்தை முடிக்கலாம்.

எந்த டயட்டும் நம்முடைய உடலை வற்புறுத்தி பட்டினி கிடப்பதை அறிவுறுத்தாது என்பதையும் இந்த டயட் எப்படி நம்முடைய உடலில் வேலை செய்கிறது என்பதையும் புரிந்து கொண்டு பின்பற்றுவது நல்லது..

எடை வேகமாக குறையுமா?​

மற்ற எல்லா வகை டயட்டையும் விட இன்டர்மிட்டண்ட் டயட் உடல் எடையைக் குறைப்பதற்கு மிகச்சிறந்ததாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதிரடியாக வேகமாக எடையைக் குறைக்கும் என்று சொல்ல முடியாது. மிதமாக ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கு நல்ல வழி.

அதோடு அளவுக்கு அதிகமாக எடையைக் குறைப்பதைக் காட்டிலும் தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைக்கும்.

வகைகள் எத்தனை​
இன்டர்மிட்டண்ட் டயட் என்பது மற்ற டயட்டுகளைப் போல ஒரு கறாரான டயட் முறையோ ஒரே ஒரு முறை மட்டும் கொண்டதோ அல்ல. அதில் பல வகைகள் உண்டு. அதேபோல உணவு இடைவெளிகளும் அவரவர் நேரத்தைப் பொருத்து நாமே முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் தினமும் வெவ்வேறு கால இடைவெளியை பின்பற்றக் கூடாது.

மொத்தம் 16 மணி நேரம் விரதம் இருக்க வேண்டும். மீதமுள்ள 8 மணி நேரத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீர் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிலர் 14 : 10 இடைவெளியும் கூட பின்பற்றுவதுண்டு. அதேபோல உணவும் இதுமட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது. எதை சாப்பிட்டாலும் சத்தாக சாப்பிட வேண்டும் அவ்வளவு தான்.

உடல் பலவீனம்​
இன்டர்மிட்டண்ட் விரதம் (intermittent fasting) எல்லோருக்கும் ஏற்ற டயட் முறை என்றும் அதனால் வெறும் நன்மைகள் மட்டுமே இருக்கின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உண்டு. நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி குறிப்பிட்ட நேரத்துக்குள் உடலுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் உணவு முறை எல்லோருக்கும் பொருந்தாது. குறிப்பாக ரத்தசோகை என்னும் அனீமியா பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள், உடல் பலவீனமாக இருப்பவர்கள், மிகக் குறைந்த எடை கொண்டவர்கள், உணவுக் கோளாறுகள் இருப்பவர்கள் இந்த டயட்டை பின்பற்றுவது வேறு சில உடல் உபாதைகளைக் கொடுக்கும்.​

நேரத்தை கடைபிடிப்பது எப்படி?​
குறிப்பிட்ட நேரத்திற்குள் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது ஓரளவுக்கு உண்டை தான் என்றாலும் நம்முடைய உடலுக்குத் தேவையான அளவு கலோரிகளும் போதிய ஊட்டச்சத்துக்களும் கொண்டதாக இருக்க வேண்டும். அவற்றை பிரித்து எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இன்டர்மிட்டண்ட் டயட்டில் இருக்கும்போது நீங்கள் வழக்கமாக பின்பற்றும் உணவு இடைவெளி நேரம் (food window time) 16 - 8 என்கிற நேர இடைவெளி என்று வைத்துக் கொண்டால் அந்த 8 மணி நேரத்துக்குள் அன்றைய நாளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உடலுக்கு கொடுக்க வேண்டும்.

அந்த இடைவெளி என்பது உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்கு முழுமையாகக் கிடைக்கவும் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி ஜீரண மண்டலத்தை சீராக வைத்திருக்கவும் உதவி செய்யும்.


யார் இன்டர்மிட்டண்ட் டயட்டை பின்பற்ற கூடாது?​
இன்டர்மிட்டண்ட் டயட் நிறைய பலன் தரக்கூடியது, பாதுகாப்பானது தான். ஆனாலும் அது எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலனை தான் கொடுக்கும் என்றும் சொல்ல முடியாது.

அதேபோல எல்லோருக்கும் இந்த டயட் ஏற்றதும் அல்ல. இதிலும் சில பக்க விளைவுகள் இருக்கும். அதனால் யாரெல்லாம் இந்த இன்டர்மிட்டண்ட் டயட்டை பின்பற்றக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள்,
சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளவர்கள்,
இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்சினைகள்,
அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள்,
நீரிழிவு நோய்,
உணவுக் கோளாறுகள்,
குறைவாக எடை உடையவர்கள்,
உடல் பலவீனமாக இருப்பவர்கள்
ஆகியோர் இந்த டயட்டை பின்பற்றுவதற்கு முன் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

26/01/2023
26/11/2022

weight loss drink : 7 நாள் 7 பானம்... தினம் ஒன்னு குடிங்க.. உடம்பு கடகடனு குறைய ஆரம்பிக்கும்..


உடல் எடையைக் குறைப்பது என்பது வெறுமனே தசைகளைக் குறைப்பதோ உடலில் உள்ள கொலஸ்டிராலின் அளவைக் குறைப்பது மட்டுமல்ல. உடலில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் டீடாக்ஸ் முறையும் சேர்த்தே அடங்கும். அப்படி உடல் எடையையும் உடலில் உள்ள கழிவுகளையும் ஒரே நேரத்தில் குறைக்க நம்முடைய வீட்டிலுள்ள சில இயற்கை பொருள்களை பானமாகத் தயாரித்து குடிக்கலாம்.

உடலில் கொழுப்பு மற்றும் பிற கழிவுகள் தேங்கியிருந்தாலும் உடல் பருமன் பிரச்சினை அதிகரிக்கும். அதனால் உணவுகளின் மூலம் இயற்கையான பானங்களின் மூலமாகவும் அந்த கழிவுகளை வெளியேற்றுவது சிறந்தது. அப்படி வெளியேற்றும்போது உடல் சுத்தமடைவதோடு எடையும் வெகுவாகக் குறையும்.

​எடை குறைய கொத்தமல்லி நீர்

தேவையான பொருள்கள்

கொத்தமல்லி விதைகள் - 2 ஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

செய்முறை

தண்ணீரில் கொத்தமல்லி விதைகளைப் போட்டு நன்கு கொதிக்க விட்டு தண்ணீர் ஒரு கப் ஆகும் வரை சுண்ட விடுங்கள்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு, நீரை வடிகட்டி வெதுவெதுப்பான நிறையில் குடிக்க வேண்டும்.

இது உடலுக்கு உடனடி எனர்ஜியைக் கொடுப்பதுடன் உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்கச் செய்கிறது.

இந்த கொத்தமல்லி விதையில் வைட்டமின் ஏ, கே மற்றும் சி, ஃபோலிக் அமிலம் ஆகியவை நிறைந்திருக்கின்றன.

​எடையை குறைக்க வெந்தய நீர்
தேவையான பொருள்கள்

வெந்தயம் - 1 ஸ்பூன்

தண்ணீர் - 1 டம்ளர்

குடிக்கும் முறை

தண்ணீரில் இரவு முழுவதும் வெந்தயத்தைச் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும். வெந்தயத்தை சாப்பிட முடிந்தால் சாப்பிடலாம். கசப்பாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் தண்ணீரை மட்டும் குடித்து வரலாம். இது உடலில் உள்ள கொலஸ்டிராலைக் குறைப்பதோடு கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றையும் டீடாக்ஸ் செய்கிறது.

​எடையை குறைக்கும் இலவங்கப்பட்டை - தேன்
தேவையான பொருள்கள்

தண்ணீர் - 2 டம்ளர்

இலவங்கப்பட்டை - 2 இன்ச் அளவு

தேன் - சுவைக்கேற்ப

பயன்படுத்தும் முறை

நிறைய பேருக்கு டீடாக்ஸ் பானம் என்றாலே முகத்தை சுளிப்பார்கள். அதில் சுவையே இருக்காது என்று. உங்களுக்காக தான் இந்த இனிப்பான பானம்.

இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டி -- ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையையும் சிறுநீரகப் பாதை தொற்று ஏற்படாமலும் தடுக்கும். உடலில் உள்ள கொலஸ்டிராலின் அளவையும் கட்டுக்குள் வைக்கச் செய்கிறது.

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் இலவங்கப்பட்டையை இடித்து சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

இலவங்கப்பட்டையை பொடியாகவும் சேர்க்கலாம். நன்கு கொதித்ததும் வடிகட்டி அதனுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.


​எடையை குறைக்கும் சீரக - எலுமிச்சை நீர்
தேவையான பொருள்கள்

தண்ணீர் - 2 கிளாஸ்

சீரகம் - 2 ஸ்பூன்

எலுமிச்சை - அரை

பயன்படுத்தும் முறை

2 கப் தண்ணீரில் நீரகத்தைச் சேர்த்து இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும்.

அடுத்த நாள் காலையில் எழுந்ததும் சீரகத்துடன் சேர்த்து அந்த நீரை அப்படியே கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு 10 நிமிடங்கள் கொதித்த பிறகு, அந்த நீரை வடிகட்டி ஆற விடுங்கள்.

நீர் குடிக்கும் சூடு அளவுக்கு வந்ததும் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். சுவைக்காக எதுவும் சேர்க்கத் தேவையில்லை.

​எடையை குறைக்கும் ஓமம் தண்ணீர்
ஓமம் வயிற்றில் மற்றும் சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை டீடாக்ஸ் செய்யும்.

தேவையான பொருள்கள்

தண்ணீர் - 4 கப்

ஓமம் - 4 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

4 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அதில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுப்பை மிதமாக தீயில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். கிட்டதட்ட 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இந்த நீரை வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் காலையில் வெறும் வயிற்றில ஒரு கப் குடிக்க வேண்டும். அதேபோல இரவு உணவுக்குப் பிறகு படுக்கப் போகும்முன் ஒரு கப் குடியுங்கள். இது உடலை டீடாக்ஸ் செய்து எடையைக் குறைக்கச் செய்கிறது.

​எடையை குறைக்கும் வெட்டிவேர் பானம்

தேவையான பொருள்கள்

வெட்டி வேர் - 2 கிராம் அளவு

சுத்தமான தண்ணீர் - 1 கிளாஸ்

குடிக்கும் முறை

வெட்டி வேரை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்த வெட்டி வேரை ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் போட்டு ஊற விடுங்கள். வெட்டிவேரின் சாரம் நீருக்குள் இறங்கியதும் அதை வடிகட்டிக் கொள்ளலாம்.

இந்த நீரை அப்படியே குடிக்கலாம். காலை வெறும் வயிற்றில் மட்டுமல்லாது, நாள் முழுக்க தண்ணீருக்கு பதிலாக இந்த தண்ணீரை குடிக்கலாம்.


வெதுவெதுப்பான லெமன் வாட்டர்

தேவையான பொருள்கள்

வெந்நீர் - 1 கிளாஸ்

எலுமிச்சை - பாதி அளவு

தேன் - அரை ஸ்பூன்

குடிக்கும் முறை

வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தின் சாறினைப் பிழிந்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்.

இதை அப்படியே காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சுவைக்கு தேவைப்பட்டால் தேன் சேர்த்து குடிக்கலாம்.

தேன் இல்லாமல் அப்படியே குடிப்பது இன்னும் சிறந்தது. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை டீடாக்ஸ் செய்யும்.

அதனால் உடல் எடையும் வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

With Bharath raj Actor and Mens physique
14/11/2022

With Bharath raj Actor and Mens physique

06/10/2022

walking : தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடைப்பயிற்சி செய்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன... என்ன பலன் கிடைக்கும்...

ஒரு நாளைக்கு 10,000 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரை நடப்பதும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் தொலைவு நடப்பது நல்லதா, கெட்டதா, அப்படி நடக்கும்போது உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன, அதன் பயன்கள் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நடைப்பயிற்சி என்பது நம்முடைய தினசரி வாழ்க்கையில் எல்லோரும் கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்று. உடல் எடையை குறைப்பதற்காக தான் நடைப்பயிற்சி என்ற கருத்துகள் மாறி, உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிற புரிதலுக்கு வந்துவிட்டோம். இப்போது எவ்வளவு தூரம் நடக்க வேண்டும், எவ்வளவு நேரம் நடக்க வேண்டும், வேகமாக நடக்க வேண்டுமா, மெதுவாக நடக்க வேண்டுமா போன்ற பல சந்தேகங்கள் நடைப்பயிற்சி குறித்து இருக்கின்றன.

​10,000 ஸ்டெப்ஸ் நடைப்பயிற்சி
10000-
ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் தூரம் நடைப்பயிற்சி செய்வது நிறைய ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக சமீபத்தில் நிறைய ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்கவும் கட்டுப்பாட்டிலும் வைக்க நினைப்பவர்கள் 10,000 ஸ்டெப்ஸ் தொலைவு நடப்பது நல்லது என்று கூறப்படுகிறது. அப்படி நடக்கும்போது நம்முடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும்.
​மனதை உற்சாகப்படுத்தும்

ஆரம்ப நாட்களில் தினமும் 10000 ஸ்டெப்ஸ் தூரம் நடப்பது கொஞ்சம் சிரமமானதாக தோன்றலாம். ஆனால் நடக்கத் தொடங்கிவிட்டால் அதுவே நம்முடைய மனதுக்கு உத்வேகத்தைக் கொடுத்தும்.

அந்த உற்சாகத்திலேயே அடுத்தடுத்த நாட்கள் இன்னும் விரைவாக நடக்கத் தொடங்கலாம். ஒருநாள் நீங்கள் சோர்வாக உணர்ந்தாலும் உங்களுடைய மனசே உங்களை நடப்பதற்கு உசுப்பி விடும்.
​இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

தினசரி உடற்பயிற்சிக்ள செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் போது நம்முடைய ரத்தத்தில் ஆக்சிஜனேற்றப் பண்புகள் அதிகரிக்கச் செய்யும். தசைகளுக்கும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகச் செல்லும்.

இதயத்திற்கு ஆக்சிஜனும் ரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும். அதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
​நுரையீரலை வலுப்படுத்தும்

தினமும் 10,000 ஸ்டெப்ஸ் தூரம் நடைப்பயிற்சி செய்வது நம்முடைய நுரையீரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்த உதவும்.

நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவும் அடர்த்தியும் அதிகரிக்கும். இதனால் நீங்கள் சுவாசிப்பது எளிதாகும். இதனால் இயல்பாகவே உடலின் இயல்திறன்கள் அதிகரிக்கும்.
​கவனச் சிதறலை குறைக்கும்

நம்முடைய உடல் செயல்பாடுகள் அதிகரிக்கும் போது, உடல் சுறுசுறுப்படையும். கவனச் சிதறல் பிரச்சினை உள்ளவர்களுக்கு அந்த பிரச்சினையும் சரியாக ஆரம்பிக்கும்.

10 ஆயிரம் ஸ்டெப்ஸ் தூரம் வரை நடக்கும்போது நம்முடைய மூளைக்கு செல்லும் நரம்புகள் சுறுசுறுப்படையும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். இது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைத்து நினைவுத் திறனை மேம்படுத்த உதவும். மூளை ஆக்டிவ்வாக செயல்படும்.
​எலும்புகளை உறுதியாக்கும்

தினசரி உடற்பயிற்சி குறிப்பாக நடைப்பயிற்சி, ஜாகிங் உள்ளிட்டவை நம்முடைய எலும்புகளுக்கு கூடுதலாக ஒருவித அழுத்தம் கொடுக்கும். அப்படி கொடுப்பதன் மூலம் எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும்.

தினசரி 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் தொலைவு நடைப்பயிற்சி மேற்கொண்டால் எலும்புகள் உறுதியாகி ஆஸ்டிரியோபொராசிஸ் போன்ற பிரச்சினைகள் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கும்.
​நீரிழிவை கட்டுப்படுத்தும்

நம்முடைய உடல் சுறுசுறுப்பாக இருக்கும்போது, உடற்பயிற்சிகளை செய்யும்போது தசைகளுக்கு அதிகப்படியான அளவு குளுக்கோஸ் தேவைப்படும்.

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸை உறிஞ்சி தசைகளுக்கு ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவை வராமல் தடுக்கவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் செய்யும்.
​ரத்த அழுத்தத்தை குறைக்கும்

தினசரி உடற்பயிற்சி செய்வதின் மூலம் நம்முடைய உடல் இலகுவாக இருக்கும். இதனால் கார்டிசோல் ஹர்மோன் உற்பத்தி குறைந்து மன அழுத்தம் வராமல் தடுக்க முடியும்.

குறிப்பாக 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரைக்கும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்முடைய உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.
​உடல் எடையை குறைக்கும்

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். நிறைய பேர் நடைப்பயிற்சி செய்தும் எடை குறையவில்லை. என்று கூறுவார்கள். அதற்கு காரணம் எவ்வளவு வேகத்தில் நடக்கிறோம், எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதை பொறுத்தது.

நீண்ட தூரம் நடக்கும்போது தான் அதிகப்படியான கலோரிகளை எரிக்க முடியும். அதனால் வேகமாக உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க விரும்பினால் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

12/09/2022

muscle healthy food : வலிமையான தசைகளை பெற செய்ய வேண்டிய 5 விஷயங்கள்...

சராசரி நபர் ஒருவர் 25 வயதில் தசையின் ஆரோக்கியத்தை இழக்கத் தொடங்குகிறார். இந்த இழப்பு 40 முதல் 70 வயது வரை சராசரியாக எட்டு சதவிகிதமும், அதன் பின்னர் 70 வயதுக்கு மேல் 15% ஆகவும் அதிகரிக்கிறது. மேலும் நீங்கள் தசை இழப்பால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் உங்கள் உடலும் உள்ளார்ந்த சிக்கல்களை சந்திக்க நேரிடும். தசை வலிமையை மேம்படுத்துவது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.

நம் அனைவருக்குமே உடலை வலிமையாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அதற்கேற்றாற்போல் சினிமா, டிவி விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் வரும் ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே வலிமையான உடல் இருப்பதை பார்க்கும் போது நமக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவதே.

அதே நேரம் இத்தகைய அமைப்பைப் பெற ஜிம்முக்கு செல்வதும் உண்டு. அதிலும் சிலர் நேரம் காலம் பார்க்காமல் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் வலிமையான உடல் வேண்டுமென்றால் தசைகள் மேம்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம். அதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்பதை தான் இப்போது தெரிந்துகொள்ள போகிறோம்.
​தசை ஆரோக்கியம்

தசைகள் எலும்புகளோடு இரு முனையில் இணைந்திருக்கும். ஒரு நபருக்கு தொடர்ந்து வயதாகும்போது எலும்புகள் அடர்த்தியை இழக்கக்கூடும். இதனால் தசைகளும் வலுவிழக்கும். எனவே நாம் இதன் முக்கியத்துவத்தை எந்த காலத்திலும் குறைத்து மதிப்பிடக்கூடாது. உடலானது கொழுப்பைக் குறைத்து கலோரிகளை எரிப்பதால் தசைகள் வலுப்பெறுகிறது.

இத்தகைய தசையில் கிழிவு, காயம், பலவீனம், இறுக்கம் என பாதிப்புகள் எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆக நம்முடைய தசைகள் உறுதியாக இருக்க, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உடற்பயிற்சி மட்டுமல்லாமல் நாம் சில ஸ்டெராய்டு மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் இயற்கையான வழிமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.

நாம் இக்கட்டுரையில் 5 விதமான முறைகளை பயன்படுத்தி தசை மற்றும் எலும்புகளில் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த என்ன செய்யலாம் என பார்க்கலாம்.

புரதச்சத்து உணவை எடுங்கள்


புரதம் என்பது ஒரு நமக்கு அதிக அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ஆகும். இது அமினோ அமிலங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. சருமம், முடி நகம் மற்றும் செல்களின் அமைப்பு என எல்லாவற்றிலும் புரதம் நிறைந்துள்ளது. எனவே வலிமையான தசையை உருவாக்கி உடல் சிதைவதை தடுக்க தசையானது அதிக புரதத்தை ஒருங்கிணைக்க வேண்டும். அதேசமயம் எலும்புகள் அதன் அடர்த்தியின் பெரும்பகுதியை 25 வயதிற்குள் அடைந்து விடுகிறது.

அதன் பிறகு முட்டை, இறைச்சி, பட்டாணி, பாதாம், சோயா பீன் மற்றும் கொண்டைக்கடலை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளால் தசைகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை விட, எந்த நேரத்தில் எவ்வளவு எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெவ்வேறு புரதங்கள் வெவ்வேறு நேரங்களில் செரிக்கப்பட்டு உறிஞ்சப்படுவதால் தொடர்ச்சியாக அதன் பலனை உடலை பெற வைக்கும். தாவர வகை உணவுகளில் இருந்து மட்டும் கூட நம்மால் உடலுக்கு தேவையான புரதங்களைப் பெறலாம்.

​கால்சியம் நிறைந்த உணவுகள்

உடல் எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் உதவுகிறது. இது தசைச் சுருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 700 மில்லி கிராம் முதல் 1000 மில்லி கிராம் வரை கால்சியம் தேவைப்படுகிறது. வயது காரணமாக இது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

வைட்டமின் டி, வைட்டமின் கே, கால்சியம் மற்றும் வைட்டமின் சி அடங்கிய உணவுப் பொருட்கள் தசை மற்றும் எலும்புகளின் அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். தினசரி ஏற்படும் எலும்பு இழப்பை சரிசெய்ய கால்சியம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும்.

இந்த எலும்பு இழப்பு இரத்தத்தில் மீண்டும் கால்சியத்தை வெளியிடுகிறது. இது அயனியாக்கம் செய்யப்பட்ட கால்சியம் என்று அழைக்கப்படுகிறது. இதய தசை உட்பட பெரும்பாலான தசைகளுக்கு இந்த வகை கால்சியம் அவசியமாகும்.

​தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

தசைகளின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் உடற்பயிற்சியும் ஒன்று. நாம் சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வது வலுவான எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

இதற்காக நீங்கள் அதிக எடைக் கொண்ட உபகரணங்களுடன் தசையை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என அவசியமில்லை. அதேசமயம் கலவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே தசைகளின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

​குறைந்த கலோரி உணவை தவிர்க்கவும்

ஆரோக்கியமான உடலுக்கு நாம் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் கலோரிகளாக கணக்கிடப்படுவதால், ஒருநாளை நம் உணவுக்கு சராசரியாக 1500 கலோரிகள் தேவைப்படுகிறது. ஆனால் ஆயிரம் கலோரிகளுக்கு குறைவாக நாம் உட்கொள்ளும் போது எலும்பு மற்றும் தசை ஆரோக்கியமானது பாதிக்கப்படுகிறது.

மேலும் குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்ளும் பருமனான பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதியில் எலும்பு இழப்பு ஏற்படுகிறது.இது கீழ் மூட்டுகளில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.எனவே குறைந்த கலோரி கொண்ட உணவை தவிருங்கள்.

மது மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்கவும்

பலருக்கும் வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மது மற்றும் புகைப்பழக்கம் ஏற்படுகிறது.


அதிகமாக மது அருந்துவது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கிறது. அதேபோல் புகைபிடிப்பது முதுகெலும்பு பிரச்சனைகளுடன் நேரடியாக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் அதிக சர்க்கரை கொண்ட பானங்களும் இதற்கு சமமாக தீங்கை விளைவிக்கும் என்பதால் அதற்கு பதிலாக சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடியுங்கள்

05/09/2022

மூட்டுபாதிப்பில் இருந்து மூளை பாதிப்பு வரை தடுக்கும் தாமிரச்சத்து நன்மைகள் .. தினசரி தேவை எவ்ளோன்னும் தெரிஞ்சுக்கங்க!

நம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்தில் தாமிரமும் ஒன்று. இந்த சத்து பற்றாக்குறையால் மூட்டு பாதிப்பு முதல் மூளை பாதிப்பு வரை ஏற்படலாம். இந்த தாமிரம் உடலுக்கு செய்யும் நன்மைகள், குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

தாமிரம் பல முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இது பல வித நரம்பியல் நோய்களையும் திறம்பட எதிர்த்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது. உடலில் இரத்த சிவப்ப ணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.
தாமிரம் எலும்புகள் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது இரும்பு உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது. இப்படி தாமிரம் அளிக்கும் பலவித நன்மைகளை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

தாமிரம் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

மூளையின் நரம்பியக்கடத்திகளை செயல்படுத்தும் என்சைம்களின் ஒரு முக்கிய மூலப்பொருள் தாமிரம் ஆகும். எனவே மூளை ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தாமிரம் அவசியம்.

monsoon diet : நாவல்பழம், சுரைக்காய், தயிர் ... மழைக்காலத்தில் சாப்பிடலாமா? நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடணும்!

நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 20 சதவீதத்தை மூளை எடுத்துக்கொள்கிறது. பெரியவர்களில் ஏற்படும் நியூரோடிஜெனரேஷன் பெரும்பாலும் தாமிர இழப்பால் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

தாமிரச்சத்து மூட்டு மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

தாமிரம் எலும்பின் அடர்த்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த தனிமத்தின் பற்றாக்குறை ஆஸ்டியோபொராசிஸ்க்கு வழி வகுக்கிறது. இது கொலாஜன் ஆரோக்கியத்திலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

உடலின் கட்டமைப்புக்கும் உதவுகிறது. தாமிரம் பற்றாக்குறை கொலாஜன் குறைவுக்கு வழி வகுக்கிறது.தாமிரத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதத்தின் வலியை குறைக்கிறது.
​தாமிரச்சத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இரும்புச்சத்துடன் தாமிரம் சேர்ந்து சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் நம் நோயெதிர்ப்பு சக்தி பலப்படுகிறது. தாமிரத்தின் குறைபாடு நியூட்ரோபீனியாவுக்கு வழிவகுக்கும்.

இது குறைந்த அளவிலான வெள்ளை இரத்த அணுக்களுக்கு காரணமாகிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி பலவீனம் அடைந்து அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடுகிறது.
​தாமிரச்சத்து வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

தாமிரச்சத்து நம் உடலில் தினசரி 50 க்கும் மேற்பட்ட நொதி எதிர்வினைகளில் பங்காற்றுகிறது. இதனால் ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் ஏற்படுகிறது. ஏடிபி அல்லது அடினோசின் ட்ரைபாஸ்பேட்டின் வினைபுரிதலிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. தாமிரத்தின் குறைபாடு வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழி வகுக்கும்.
​தாமிரச்சத்து சரியான வளர்ச்சிக்கு உதவுகிறது

தாமிரம் குறைபாடு குழந்தைகளில் காணப்படும் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். தாமிரக் குறைபாடு மூட்டு மற்றும் எலும்பு வளர்ச்சி மற்றும் மூளையின் வளர்ச்சியை கூட பாதிக்கும். சிவப்பு இரத்த அணுக்களின் ஆக்ஸினேற்ற தேவைக்கும் தாமிரம் அவசியம் ஆகிறது. தாமிரம் குறைபாடு குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
​தாமிரச்சத்து தைராய்டு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

தாமிரம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் துத்தநாகம் இவற்றுடன் சேர்ந்து தைராய்டு செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டிசத்தை தடுக்க உதவுகிறது.


தாமிரச்சத்து வயதாகுவதை தாமதப்படுத்துகிறது
ரெட்டினோல் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்களைப் போலவே தாமிரமும் முதுமையைத் தடுப்பதில் முக்கியமானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தாமிர பெப்டைடுகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது சருமத்தை இளமையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.

தாமிரம் கொலாஜனை உருவாக்க உதவுகிறது. தாமிரம் சரும சுருக்கங்களை போக்குகிறது. தாமிரம் சரும புரதங்களை உறுதிப்படுத்துகிறது. ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சருமத்தை புற ஊதாக் கதிர் வீச்சில் இருந்து பாதுகாக்கிறது. மெலனின் உற்பத்திக்கு உதவுகிறது.

தாமிரச்சத்து தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

தாமிர பெப்டைடுகள் மயிர்க்கால்களின் அளவை அதிகரிக்கவும் முடிகள் மெலிந்து போவதை நிறுத்தவும் உதவுகிறது. தாமிரம் மெலனின் உற்பத்திக்கு உதவுவதால் முன்கூட்டியே நரைப்பது தடுக்கப்படுகிறது.

​தாமிரச் சத்து அடங்கிய உணவுகள்

பெரியவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஒரு நாளைக்கு 900 மைக்ரோகிராம் அளவிற்கு தாமிரம் தேவைப்படுகிறது.

மாட்டின் கல்லீரல், காளான்கள், முந்திரி பருப்பு, கீரைகள், கோக்கோ பவுடர், பாதாம் பருப்பு, அவகேடா போன்றவற்றில் தாமிரச் சத்து காணப்படுகிறது.

​அதிக தாமிரச் சத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவு தாமிரச் சத்து எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது கிடையாது.

vitamin b12 : வைட்டமின் பி12 உடம்புல வர்ற முக்கியமான வியாதிகளை தடுக்குமாம்.. ஆய்வு சொல்றதை கேளுங்க!

உடம்பில் உள்ள அதிகப்படியான தாமிர அளவு நச்சுத்தன்மைக்கு வழி வகுக்கும். இது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளை பாதிக்கிறது.

தலைவலி, தலைச்சுற்றல், பலவீனம், கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படலாம்.

27/08/2022

weight loss tips: ஒரே வாரத்துல நீங்க நினைச்சபடி எடை குறைக்கணுமா? ஏழு நாள் இத மட்டும் சாப்பிடுங்க...

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியான உணவைச் சாப்பிடத் தொடங்குவதுதான். வழக்கமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ளது. இவைதான் பெரும்பாலும் உடல் பருமனுக்கான காரணமாக இருக்கிறது. இவற்றை சரிசெய்து எப்படி உடல் எடையைக் குறைக்கலாம், அதற்கான டயட் அட்டவணை இதோ... ஒரு உணவு மட்டும் உடலுக்குத் தேவையான அனைத்து கலோரிகளையும் ஊட்டச்சத்துக்களையும் தருவதில்லை. அதனால்தான் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களுடன் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு போன்ற மேக்ரோ நியூட்ரியண்ட்கள் அடங்கிய உணவை பேலன்ஸ்டு டயட் என்கிறோம். இந்த பேலன்ஸ்டு டயட்டை கொண்ட உணவுகளை ஒரு நாளைக்கு 1200 கலோரிகள் அளவில் எடுத்துக் கொண்டாலே எடையை வேகமாகக் குறைக்க முடியும்.

எடை குறைய டயட் அட்டவணை - நாள் 1

6 மணிக்கு - காலை எழுந்ததும் முதல் நாள் இரவே வெதுவெதுப்பான நீரில் வெள்ளரிக்காயை நறுக்கி சேர்த்து ஊற வைத்த டீடாக்ஸ் வாட்டரை ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

8 மணிக்கு - பால் சேர்த்து செய்யப்பட்ட ஓட்ஸ் கஞ்சி, ஒரு கைப்பிடியளவு நட்ஸ்

12 மணி - மதிய உணவுக்கு முன்பாக 12 மணியளவில் ஸ்கிம்டு மில்க்கில் செய்த பனீர் 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

2 மணி - வெஜிடபிள் சாலட், ஒரு கப் பருப்பு, கேரட் பட்டாணி கூட்டு, ஒரு ரொட்டி

4 மணிக்கு - பழங்கள், ஒரு கிளாஸ் மோர்

5.30 மணி - இனிப்பு சேர்க்காத டீ

8.30 மணிக்கு - பருப்பு அரை கப், சுரைக்காய் கூட்டு அரை கப், 1 ரொட்டி

​எடை குறைய டயட் அட்டவணை - நாள் 2

6 மணிக்கு - காலை எழுந்ததும் முதல் நாள் இரவே வெதுவெதுப்பான நீரில் வெள்ளரிக்காயை நறுக்கி சேர்த்து ஊற வைத்த டீடாக்ஸ் வாட்டரை ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

8 மணிக்கு - காய்கறிகள் சேர்த்த ரொட்டி 2, ஒரு கப் தயிர்

12 மணிக்கு - மதிய உணவுக்கு முன்பாக 12 மணியளவில் ஸ்கிம்டு மில்க்கில் செய்த பனீர் 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

2 மணிக்கு - வெந்தய சாதம், பயறு சேர்த்த கூட்டு சிறிய கப்,

4 மணிக்கு - 1 ஆப்பிள், ஒரு கிளாஸ் மோர்

5.30 மணிக்கு - இனிப்பு சேர்க்காத பால்,

8 மணிக்கு - வெஜிடபிள் சாலட். பனீர் மற்றும் காய்கறிகள் சேர்த்த கிரேவி, 1 ரொட்டி, மல்லி துவையல் சிறிது


எடை குறைய டயட் அட்டவணை - நாள் 3

6 மணிக்கு - காலை எழுந்ததும் முதல் நாள் இரவே வெதுவெதுப்பான நீரில் வெள்ளரிக்காயை நறுக்கி சேர்த்து ஊற வைத்த டீடாக்ஸ் வாட்டரை ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

8 மணிக்கு - மல்டி கிரெய்ன் பிரட் 2 டோஸ்ட் செய்தது, ஒரு கப் யோகர்ட்

12 மணி - மதிய உணவுக்கு முன்பாக 12 மணியளவில் ஸ்கிம்டு மில்க்கில் செய்த பனீர் 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

2 மணிக்கு - பனீருடன் சேர்த்து வதக்கிய காய்கறிகள், ஒரு ரொட்டி, கொத்தமல்லி சட்னி

4 மணிக்கு - 1 மீடியம் சைஸ் வாழைப்பழம், 1 டம்ளர் மோர்

5.30 மணிக்கு - சர்க்கரை சேர்க்காத டீ

8 மணிக்கு - காய்கறி சாலட், பயறு வகைகள் தாளித்தது, வெந்தய கீரை சாதம்,


எடை குறைய டயட் அட்டவணை - நாள் 4

6 மணிக்கு - காலை எழுந்ததும் முதல் நாள் இரவே வெதுவெதுப்பான நீரில் வெள்ளரிக்காயை நறுக்கி சேர்த்து ஊற வைத்த டீடாக்ஸ் வாட்டரை ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

8 மணிக்கு - பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றுடன் யோகர்ட் சேர்த்த ஸ்மூத்தி

12 மணி - மதிய உணவுக்கு முன்பாக 12 மணியளவில் ஸ்கிம்டு மில்க்கில் செய்த பனீர் 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

2 மணிக்கு - காய்கறிகள் சாலட், 1 ரொட்டி, வெண்டைக்காய் குழம்பு, பாசிப்பயறு வேகவைத்து கடைந்தது

4 மணிக்கு - 1 ஆரஞ்சு பழம், 1 கிளாஸ் மோர்,

5.30 மணி - ஒரு கிளாஸ் டீ அல்லது காபி (சர்க்கரை சேர்க்காதது)

8 மணிக்கு - காய்கறிகள் சாலட், பாலக் கீரை கொண்டைக்கடலை சேர்த்த கூட்டு, அரை கப் சாதம்

எடை குறைய டயட் அட்டவணை - நாள் 5

6 மணிக்கு - காலை எழுந்ததும் முதல் நாள் இரவே வெதுவெதுப்பான நீரில் வெள்ளரிக்காயை நறுக்கி சேர்த்து ஊற வைத்த டீடாக்ஸ் வாட்டரை ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

காலை 8 மணி - 1 டம்ளர் பால், பச்சை பட்டாணி சேர்த்த அவல் உப்புமா ஒரு கப்

12 மணி - மதிய உணவுக்கு முன்பாக 12 மணியளவில் ஸ்கிம்டு மில்க்கில் செய்த பனீர் 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

2 மணி - வெஜிடபிள் சாலட், ஒரு ரொட்டி, பனீர் கிரேவி

4 மணிக்கு - அரை கப் பப்பாளி, ஒரு கிளாஸ் மோர்

5.30 மணிக்கு - சர்க்கரை சேர்க்காத டீ

8.30 மணிக்கு - வெஜிடபிள் சாலட், ஒரு கப் தயிர், ஒரு ரொட்டி, தக்காளி கத்தரிக்காய் கூட்டு

எடை குறைய டயட் அட்டவணை - நாள் 6

6 மணிக்கு - காலை எழுந்ததும் முதல் நாள் இரவே வெதுவெதுப்பான நீரில் வெள்ளரிக்காயை நறுக்கி சேர்த்து ஊற வைத்த டீடாக்ஸ் வாட்டரை ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

8 மணி - 2 இட்லி, ஒரு பௌல் சாம்பார்

12 மணி - - மதிய உணவுக்கு முன்பாக 12 மணியளவில் ஸ்கிம்டு மில்க்கில் செய்த பனீர் 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

2 மணி - ஒரு கப் தயிர், வெஜிடபிள் சாலட், ஒரு ரொட்டி, தக்காளி கூட்டு

4 மணி - ஒரு கப் பழங்கள், ஒரு கிளாஸ் மோர்

5.30 மணிக்கு - காபி (சர்க்கரை சேர்க்காமல்)

8.30 மணிக்கு - வெஜிடபிள் சாலட், ஒரு கப் பாசிப்பயறு வேகவைத்தது, ஒரு ரொட்டி, வெண்டைக்காய் மசாலா

எடை குறைய டயட் அட்டவணை - நாள் 7

6 மணிக்கு - காலை எழுந்ததும் முதல் நாள் இரவே வெதுவெதுப்பான நீரில் வெள்ளரிக்காயை நறுக்கி சேர்த்து ஊற வைத்த டீடாக்ஸ் வாட்டரை ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

8 மணிக்கு - காலை உணவுக்கு கடலைமாவில் செய்த ரொட்டி 2, கொத்தமல்லி - புதினா - பூண்டு சேர்த்த சட்னி

12 மணிக்கு - மதிய உணவுக்கு முன்பாக 12 மணியளவில் ஸ்கிம்டு மில்க்கில் செய்த பனீர் 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

2 மணி - மதிய உணவுக்கு மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட் சிறிய கப், அரை கப் சாதம், ஒரு கப் கொண்டைக்கடலையுடன் கீரை சேர்த்த கூட்டு

4 மணி - ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளும் ஒரு டம்ளர் மோரும் எடுத்துக் கொள்ளுங்கள்.

5.30 மணிக்கு - ஒரு கப் சர்க்கரை சேர்க்காத டீ

8.45 மணி - கோதுமை மாவு, கடலை மாவு, வெங்காயம் சேர்த்த ரொட்டி 3. வெஜிடபிள் சாலட், பனீர் கிரேவி

20/07/2022

weight loss: எடையை வேகமா குறைக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய 5 வெள்ளை நிற உணவுகள் என்னென்ன...

உடல் எடையைக் குறைக்க (weight loss diet) டயட்டில் இருப்பவர்கள் அடிப்படையில் சின்ன சின்ன தவறுகளை செய்வதால் எடை குறையாமலேயே இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று தான் வெள்ளை நிற உணவுகளை எடுத்துக் கொள்வது. வெள்ளை நிறம் பார்க்க பளிச்சென்று நம்மை எளிதாக கவரும். ஆனால் வெள்ளை நிறத்தில் உள்ள சில உணவுகள் தான் நம்முடைய உடல் எடை அதிகரிக்கவும் கொலஸ்டிரால் அதிகமாகவும் காரணமாக இருக்கிறது. அவை என்னென்ன, அவற்றை தவிர்ததால் அதற்கு பதிலாக வேறு என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
உடல் பருமனை (obesity) எப்படியாவது குறைத்து, உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள தான் எல்லோரும் விரும்புகிறோம். அதற்கான எல்லா வகையான டயட்டுகளையும் முயற்சித்துப் பார்க்கிறோம். ஆனால் அப்படி டயட் இருக்கும்போது நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளால் எடை இழப்பு சாத்தியமில்லாமல் போகிறது. அந்த தவறுகள் என்ன என்று புரிந்து கொண்டு அதற்கு மாற்றாக செய்ய வேண்டிய விஷயங்களை செய்தாலே அதிகப்படியான கலோரிகள் குறைந்து எடையைக் குறைத்துவிட முடியும்.
​உடல் எடையை குறைக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்

பிரட்:

பெரும்பாலும் டயட்டில் இருப்பவர்களின் காலை நேர உணவாக இருப்பது பிரெட் தான். ஆனால் அதில் ஒயிட் பிரட் தான் நிறைய பேர் சாப்பிடுகிறார்கள். அதனால் எடை கூடுமே தவிர குறையாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் வெள்ளை பிரட் மைதா மாவினால் தயார் செய்யப்படுகிறது. இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள் என எந்த ஊட்டச்சத்துமே கிடையாது. ஆனால் அதிக கலோரிகள் கொண்டது.

இதன் காரணமாக முக்கிய ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து மற்றும் புரதம் இல்லை. வெள்ளை ரொட்டி சாப்பிடுவது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
​ஒயிட் பிரட்டுக்கு பதிலான என்ன சாப்பிடலாம்?

முழு தானிய ரொட்டி:

ஒயிட் பிரட்டுக்கு பதிலாக பிரௌன் பிரட் எடுத்துக் கொள்ளலாம். முழு தானியங்களால் ஆன பிரட்டை எடுத்துக் கொள்ளும்போது, அதில் நமக்கு தேவையான நார்ச்சத்துக்களும் பிற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. அதோடு கலோரி அளவும் குறைவும். இதனால் எடை இழப்பை அதிகரிக்க இது உதவியாக இருக்கும்.

முழு தானியங்கள் பொதுவாக பசியைக் கட்டுப்படுத்தி அதிக நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும்.

​வெள்ளை அரிசி:

அரிசியும் தானிய வகை தான் என்றாலும் அது சுத்திகரிக்கப்பட்ட (refined and polished) தானியமாக மாறிவிடுகிறது. அதிலுள்ள நார்ச்சத்துக்கள் முழுமையான வெளியேற்றப்பட்டு வெறும் கார்போஹைட்ரேட் மட்டும் அதிகமாக இருப்பதாக மாறிவிடுகிறது.

வெள்ளை அரிசி ஆரோக்கியமற்றது என முழுமையாகப் புறந்த்ளிவிடவோ குற்றம் சாட்டவோ முடியாது. ஆனால் ஊட்டச்சத்து மதிப்பின் அடிப்படையில் இதில் நம்முடைய உடலுக்குத் தேவையான அதிக ஊட்டச்சத்துக்கள் இதிலிருந்து நமக்குக் கிடைப்பதில்லை.

​வெள்ளை அரிசிக்கு பதிலாக என்ன சாப்பிடலாம்?

வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் ரைஸ் எனப்படுகிற பழுப்பு நிற அரிசியை சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் இருப்பதால், வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் ரைஸ் எடுத்துக் கொள்வது நீரிழிவைக் கட்டுப்படுத்துவதோடு உடல் எடையைக் குறைப்பதிலும் உதவியாக இருக்கும்.

​வெள்ளை சர்க்கரை :

உங்கள் எடை இழப்பு பயணத்தை வேகப்படுத்த நினைத்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது வெள்ளை சர்க்கரை, பழுப்பு சர்க்கரை, தேன் மற்றும் மேப்பிள் சிரப் உட்பட அனைத்து நிறங்கள் மற்றும் வடிவங்களிலும் உள்ள இனிப்பை (சர்க்கரை) தவிர்க்கவும். சர்க்கரை அதிக கலோரிகள் நிரம்பிய உணவுகளில் ஒன்று. அதோடு எடையைக் குறைய விடாமல் அதிகரிக்கவும் செய்கிற ஆபத்தான உணவுகளில் ஒன்று என்றும் இதை சொல்லலாம்.
​சர்க்கரைக்கு மாற்றாக என்ன சேர்க்கலாம்
சிலருக்கு சுது்தமான இனிப்பு மற்றும் வெள்ளை சர்க்கரையைத் தவிர்க்கும் போது ஏதாவது இனிப்பாக சாப்பிட வேண்டும் என்றும் தோன்றும். அப்படி இனிப்பாக ஏதாவது சாப்பிட வே்ணடும் என்று தோன்றும்போது, ஃபிரஷ்ஷான பழங்களை சாப்பிடலாம்.

அதிலும் குறிப்பாக, இனிப்பு அதிகமுள்ள வாழைப்பழம் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியிருக்கிற, நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்களைச் சாப்பிடலாம்.

இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கும். எடை இழப்பையும் வேகப்படுத்தும்.

​உப்பு ஏன் அதிகம் சேர்க்கக் கூடாது?

உப்பு நம்முடைய ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக நீரிழிவு, கொலஸ்டிரால், ரத்த அழுத்தம் உள்ளிட்ட வளர்சிதை மாற்றப் பிரச்சினை உள்ளவர்கள் உப்பை மிகக் குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதோடு நாம் நேரடியாக உப்பு சேர்த்துக் கொள்வதைக் காட்டிலும் இயற்கையாக நாம் எடுத்துக் கொள்ளும் கீரை, சில காய்கறிகள் ஆகியவற்றில் உப்பு இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி அதிக உப்பும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அப்பளம், ஊறுகாய் போன்ற உணவுகளில் அதிகமாக உப்பு சேர்க்கப்படுகிறது.

இவற்றை நாம் சாப்பிடும்போது தான் நிறைய ஆரோக்கியப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றைக் குறைத்தாலே எடையை குறைக்கும் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற முடியும்.

​உப்புக்கு பதிலாக மூலிகைகள்

நீங்கள் உங்கள் உணவில் மூலிகைகள் மற்றும் ஆரோக்கியமான இலவங்கப்பட்டை, சோம்பு, சீரகம், கிராம்பு, சீரகம் உள்ளிட்ட மசாலாப் பொருள்களைச் சேர்க்கும்போது அந்த உணவின் சுவை கூடும். இதனால் உப்பு குறைக்கலாம். அவற்றில் மெல்லிய இனிப்பு, உப்பு ஆகியவையும் இருக்கும்.

குறிப்பாக உங்கள் உணவில் பிரிஞ்சி இலையைப் போலவே ஆர்கனோ, துளசி, உலர்ந்த தைம் மற்றும் ரோஸ்மேரி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
​வெள்ளை உருளைக்கிழங்கு

வெள்ளை உருளைக்கிழங்கு ஆரோக்கியமற்றது அல்ல, அவை பொட்டாசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை.

ஆனால் அவை எடை அதிகரிப்புக்கு பங்களிக்கின்றன, ஏனெனில் அவை பெரும்பாலும் வறுத்தெடுக்கப்படுகின்றன.

​உருளைக்கிழங்கு மாற்றாக என்ன சாப்பிடலாம்?

ஸ்டார்ச் நிறைந்த உருளைக்கிழங்கை தவிர்த்துவிட்டு அதற்கு மாற்றாக வண்ணமயமான காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். அவை ஆரோக்கியமான மாற்று உணவு மட்டுமல்ல, உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டி, நாள்பட்ட நோய்கள் என்று கூறப்படுகிற உயர் ரத்த அழுத்தம் (high blood pressure), நீரிழிவு (diabetes) உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராட உதவும்.

Address

Erode
638001

Opening Hours

Monday 5:30am - 8pm
Tuesday 5:30am - 8pm
Wednesday 5:30am - 8pm
Thursday 5:30am - 8pm
Friday 5:30am - 8pm
Saturday 5:30am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fitness A-LAB studios posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fitness A-LAB studios:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram