Ardhaa

Ardhaa Happiness is enough for all the people of the world and will be helped to realize it

17/02/2023
29/01/2023
19/01/2023
  vibes
03/01/2023

vibes

27/12/2022
ஈரோடு, காசிபலயம் மலை கோவில், Near  சூரம்பட்டி வலசு
25/12/2022

ஈரோடு, காசிபலயம் மலை கோவில், Near சூரம்பட்டி வலசு

கருட காயத்திரி மந்திரத்தை ஒருவர் தொடர்ந்து உச்சரித்து வழிபட்டால் நினைத்த காரியம் நினைத்த படி நடக்கும், எதையும் சாதிக்கும...
27/05/2022

கருட காயத்திரி மந்திரத்தை ஒருவர் தொடர்ந்து உச்சரித்து வழிபட்டால் நினைத்த காரியம் நினைத்த படி நடக்கும்,

எதையும் சாதிக்கும் துணிச்சல்வரும், நீண்டநாள் தடைபட்ட நல்ல காரியங்கள் விரைவில் நிறைவேறும், தத்துவ அறிவு ஜொலிக்கும், விஷ ஜந்துக்களால் எந்த தீங்கும் வராது, பகைவர்கள் நம்மை நெருங்கவே அஞ்சுவார்கள்,

பயணங்களின்போது எந்த தடையும், விபத்தும் வரத்து, குடும்பத்தில் நம் சொல்லுக்கு மரியாதை கிடைக்கும்

இந்த மந்திரத்தை ஒருவர் சொன்ன உடனேயே அளவற்ற நேர்மறை சக்தி அவரை சூழ்ந்து கொள்வதால், எப்பேற்பட்ட காரியத்தையும் செய்து முடிக்கும் துணிச்சல் வரும்,

கருடனின் இந்த மந்திரத்தை தினமும் 6 மதம் கூறி வந்தால் கருடன் தனது அளவற்ற சக்திகளில் ஒரு துளியை தன உபாசகனுக்கு வழங்குவதாக ஐதீகம்

கருடனுக்கு படையலாக மிக எளிமையான தேங்காய் துருவல், சர்க்கரையும் சேர்த்து நிவேதனம் செய்யலாம், நமது வேண்டுதல்களை விரைந்து பெருமாளிடம் எடுத்து சென்று கருடன் சேர்ப்பதால், கருடனை துதிப்பதும் அந்த பெருமலையே துதிப்பதும் ஒன்று தான்

அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யணும்.., சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை – ஆனால் ...
18/05/2022

அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யணும்.., சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!

மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை – ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!

இருபது வருடங்கள் முன்னாடி... அவர் மனைவி இறந்த பிறகு, சாப்பிட்டாயா..!! என்று யாரும் கேட்காத நேரத்தில்.. அவர் இறந்திருந்தார், யாருமே கவனிக்கவில்லை...!!

பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே.. – என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!!

தாய்க்குப் பின் தாரம்.. தாரத்துக்குப் பின்.. வீட்டின் ஓரம் ...!!! என்று வாழ்ந்த போது – அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை ..!!!

காசு இங்கே மரத்திலேயா காய்க்குது.. - என்று மகன் அமிலவார்த்தையை வீசிய போது..!!! அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!!

என்னங்க...!!! ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க...!!! என்று காதிலே விழுந்த போதும் அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை...!!!

உனக்கென்னப்பா...!!!பொண்டாட்டி தொல்லை இல்லை.. என்று வாழ்த்துவது போல கிண்டலடிக்கப் பட்ட போது அவர் இறந்திருந்தார்..!!!அப்போதும் யாருமே கவனிக்க வில்லை.

இப்போதுதான் இறந்தாராம்!* என்கிறார்கள்..!
எப்படி நான் நம்புவது..???

நீங்கள் செல்லும் வழியில்இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்...
ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்..!!!

இல்லையேல்...!
உங்கள் அருகிலேயே இறந்து கொண்டிருப்பார்கள் புரிந்து கொள்ளுங்கள்..

வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல..!!!
வாழவைப்பதும் தான் ..!!!!*

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது. இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து விஞ்ஞானத்தோடு உறவு வளர்ந்து வருகிறது. இன்றைய உலகில் மனிதர்களுக்கு உறவுகள் தேவையில்லை... மாறாக திறன்பேசி (SMART PHONE) இருந்தால் போதும் என்ற மன நிலையில் வாழ்ந்து வருகிறோம்... ஆக!, மனித உறவுகள் இன்று ஊதாசினப்படுத்தப் பட்டு வருகின்றன என்பதே உண்மை...

Address

Erode

Telephone

+919092276060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ardhaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ardhaa:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram