தமிழ் மருத்துவம் மற்றும் இயற்கை காப்போம்

  • Home
  • India
  • Erode
  • தமிழ் மருத்துவம் மற்றும் இயற்கை காப்போம்

தமிழ் மருத்துவம் மற்றும் இயற்கை காப்போம் Siddha Medicine ("சித்த மருத்துவம்" in Tamil) is one of the oldest medical systems known to mankind.We help you to keep you healthy with home made medicine

வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கொஞ்சம பார்ப்போம்...i) எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும்...
17/11/2024

வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கொஞ்சம பார்ப்போம்...

i) எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும்.

ii) வீட்டிலுள்ள வீணாய் போயுள்ள, பழைய சுவிட்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும். தரமான சுவிட்ச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.

iii) தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிட்ச் போர்ட், வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.

iv) எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு, வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும், இதயம் இடது புறத்தில் உள்ளதால்.

v)பாத்ரூம் சுவிட்ச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு, அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.

vi) மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதன் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மும்பையில், ஒரு நடிகை ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம். தண்ணீர் இல்லாததால், ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து அந்த நடிகை இறந்து போயிருக்கிறார்.
ஹீட்டருக்கு கொடுக்க கூடிய இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது. எதிலும் கண்ட்ரோல் வால்வ் வைத்துவிடக் கூடாது.
அவுட்லெட் , ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னரே,
ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும். ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும். ஹீட்டர் சுவிட்சை டவல்/துடைக்கும் துண்டை வைத்து ஆஃப் செய்தால் ஈரக்கையோடு சுவிட்சை தொடுவதிலிருந்து தப்பித்து விடலாம்.

vii) பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள். அதற்குப் பதிலாக எம்சிபி வைத்தால், ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும். எப்போதும், சுடு நீர் தயார் பண்ணிவிட்டு, MCB ஐ ட்ரிப் பண்ணிவிட்டு குளிக்கப்போவதே நல்லது. இதே போல,வெட் கிரைண்டருக்கும் எம்சிபி பொருத்திக்கொள்வதே நல்லது.

viii) ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது, சுவிட்ச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ, மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.

ix) இவ்வளவு கவனமாக இருந்தும்,
ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால், நேர்ந்து விட்டால்,
அருகிலுள்ளவர் ஒரு கம்பால் அல்லது துடைப்பக் கட்டையால்
பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவரை நேரடியாக தொடவே கூடாது.

கிரைண்டரில் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாற்ற அவர்களை தொட்டு இழுத்து , இறந்து போன மாமியாரையும், பல வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலி அருகே, இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு கீழே வீழ்ந்து கிடந்த டிவி ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்றப் போன கணவன் தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது. இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல், அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும். செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல். அதனால், அடித்துக் கூட காப்பாற்றலாம்.

வீடென்றால் தொடப்பக்கட்டை.. வெளியே என்றால் செருப்பு..

எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான், வேறொன்றுமில்லை
(ஷாக் அடித்தால் தான்.. சும்மா இருக்கும் போது அடித்து வம்பிழுக்க வேண்டாம்). தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாதல்லவா?

x) கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது. குழந்தைகளுக்கு எட்டும்படியாக சுவிட்ச் பாக்ஸ் வைக்கக் கூடாது.

xi) சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர், இரு முனை அயன்கிளாட் சுவிச்சும், 3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்ச்சும் வைத்திருக்க வேண்டும்.
நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்; ஃப்யூஸ் போடக் கூடாது.
நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

xii) நமது வீட்டில் பொருத்தியுள்ள UPSக்கு மின்வாரிய நியூட்ரலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம். மின்சாரம் இல்லாத போது நமது UPS மூலம் நமது மின் சாதனங்கள் இயங்கும்போது, அவையேதும் ஃபால்ட்டானால், நியூட்ரல்/ எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து சில மின் ஊழியர்கள் இறந்துள்ளனர். ஆகவே நாம் UPS ல் உள்ள நியூட்ரலை பயன்படுத்திக் கொண்டால் மின்கம்பத்திற்கு மின்சாரம் வராமல் அல்லது மின்சாரம் இல்லாத போது மெயின் சுவிட்சை ஆஃப் செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவி உயிர் பலியினை தடுப்பது நமது கடமை.

UPS சப்ளைக்கு காமன் நியூட்ரலை பயன்படுத்துவது தான் பொதுவாகப் புழக்கத்தில் இருக்கிறது. UPS சப்ளைக்கு தனி நியூட்ரலை பயன்படுத்த வேண்டுமாயின், UPS ஃபீடிங் சர்கூட்டின் நியூட்ரலையும்,
பேஸ் மாதிரியே தனியாகப் பிரித்து, UPS இன் பேஸ், நியூட்ரலுக்குமாகத் தனியாக ஒரு காண்டேக்டர் மூலமாக UPS சர்கூட்டின் சப்ளையை பராமரிப்போமானால், சர்கூட்டின் ஃபேனோ, லைட்டோ பழுதடைந்தால், UPSஇன் பேஸ், வாரியத்தின் நியூட்ரலுக்கு ரிட்டர்ன் சப்ளை போகாது. இது எளிதான காரியமல்ல.
அதற்குப்பதில், RCCB இணைத்தோமானால், யுபிஎஸ் சப்ளை, வாரியத்தின் லைனுக்கு பேக் ஃபீடாகி விபத்து நேர்வதை தடுக்கலாம். இதை கொஞ்சம் மெனக்கெட்டு செய்யனும்.

xiii)முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன், ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள்.

வீட்டின் அனைத்துச் சுவர்களும் ஓதம் காக்கும். குறிப்பாக, மெயின் சுவிட்ச் போர்ட் இருக்குமிடம் சொதசொதன்னு இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஈரம் மின்சாரத்திற்கு நண்பன்.. எனவே, நாம்தான், இந்த கடும் மழைக் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நாம் மறந்த உணவுகள்👍👍👍👍👍👍👍👍👍👍சங்ககால சமையல்🔘 அரிசிப் புட்டு 🔘 மிளகு மாதுளை 🔘 இனிப்புப் பால் பருப்பு🔘 சிவப்பரிசி! 🔘 சிறுகீ...
09/11/2024

நாம் மறந்த உணவுகள்
👍👍👍👍👍👍👍👍👍👍

சங்ககால சமையல்

🔘 அரிசிப் புட்டு

🔘 மிளகு மாதுளை

🔘 இனிப்புப் பால் பருப்பு

🔘 சிவப்பரிசி!

🔘 சிறுகீரைக் கடைசல்

🔘 கரும்புப்பால் அவல்

🔘 கோதுமை அப்பம்

🔘 அக்கார அடிசில்

🔘 வடுமா ஊறுகாய்

🔘 மோர்க் குழம்பு

நம் சங்க கால இலக்கிய நூல்களான, பெரும்பாணற்றுப்படை, நாலாயிர திவ்யபிரபந்தம், பெரியபுராணம் துவங்கி பல நூல்களில், அந்தக்கால சமையல் முறைகளை பாடல்கள் மூலமாக விளக்கியிருக்கிறார்கள். அப்படி விளக்கப்பட்ட உணவு வகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த காலத்துக்கு ஏற்ப அவற்றை சமைத்துக் காட்டியிருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த பிரியா பாஸ்கர். இவர் கேட்டரிங் துறையில் புரொஃபசராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிட்டுக்கு மண் சுமந்த ஈசன்!
பிட்டு இடுவேன் உனக்கு என்றான்
-திருவிளையாடல் புராணம்

⭕️ அரிசிப் புட்டு

தேவையானவை:

புழுங்கல் அரிசி மாவு - 100 கிராம்
சூடான பால் - 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 5 (பொடியாக நறுக்கவும்)
கிஸ்மிஸ் (திராட்சை) - ஒரு டீஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசி மாவில் சிறிது சிறிதாகப் பாலை சேர்த்து பொல பொலப்பாகப் பிசையவும். மாவு சலிக்கும் சல்லடையில் பிசைந்து வைத்த மாவை சலிக்கவும். இனி சலித்த மாவை இட்லிப் பானைத் தட்டில் வைத்து, சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வாணலியில் நெய் சேர்த்து, பொடியாய் நறுக்கிய முந்திரி, கிஸ்மிஸ் (திராட்சை), தேங்காய்த் துருவல் சேர்க்கவும். இதை ஆவியில் வேகவைத்து எடுத்த புட்டுடன் சேர்த்துக் கலக்கவும். இதில் நாட்டுச்சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துத் தூவிப் பரிமாறவும்.

மாதுளத் துருப்புறு பசுங்காய்ப் பொழொடு கறிகலந்து...
- (பெரும்பாணாற்றுப்படை 306, 308)

⭕️ மிளகு மாதுளை

தேவையானவை:

மாதுளை முத்துக்கள் - 100 கிராம்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் மிளகுத்தூள், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, மாதுளை முத்துகளைச் சேர்த்து லேசாகப் புரட்டி எடுத்து, பரிமாறவும்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்.
-ஔவையாரின் நல்வழிப் பாடல்

⭕️ இனிப்புப் பால் பருப்பு

தேவையானவை:

பாசிப்பருப்பு - 50 கிராம்
பால் - 50 மில்லி
தேன் - ஒரு டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - ஒரு டீஸ்பூன் (பொடித்தது)

செய்முறை:

நன்கு ஊறவைத்த பாசிப்பருப்பைப் பாலுடன் சேர்த்து வேகவைக்கவும். இத்துடன் பொடித்த நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சூடு ஆறியவுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.

‘‘செந்நென் முளை யமுதுமனை யலக்கா வாக்கிச் சிறுபயிரின் கதறியமுது திருந்தச் செய்து...
-பெரியபுராணம்

⭕️ சிவப்பரிசி!

தேவையானவை:

சிவப்பு அரிசி - 50 கிராம்
தண்ணீர் - 150 மில்லி

செய்முறை:

சிவப்பு அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் சுத்தம் செய்த சிவப்பு அரிசியை குக்கரில் சேர்த்து ஒன்றுக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு 5 விசில் விட்டு வேக விடவும். பிறகு திறந்தால் சிவப்பரிசி மென்மையாக வெந்திருக்கும்.

குறிப்பு:
சிவப்பரிசியைப் பொறுத்தவரை ஊற வைக்காவிட்டால், அரிசி வேக நீண்ட நேரம் பிடிக்கும்.

⭕️ சிறுகீரைக் கடைசல்

தேவையானவை:

சிறுகீரை - ஒரு கட்டு
பச்சைமிளகாய் - தேவையான அளவு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மல்லி (தனியா) - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 30 கிராம்

செய்முறை:

சுத்தம் செய்த கீரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் கைகளால் நன்கு தேய்த்துத் திரித்த மல்லி (தனியா) மற்றும் சீரகத்தைச் சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, வேக வைத்த கீரையைச் சேர்த்து சிறுது நேரம் வேகவிடவும். வெந்ததும் மத்தால் கீரையை நன்கு மசித்து, கடையவும். சிவப்பரிசி சாதத்துடன் சேர்த்துப் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

தீங்கரும்போ டவல் விருந்தோர்
-பொருணாற்றுப்படை பாடல்

⭕️ கரும்புப்பால் அவல்

தேவையானவை:

அவல் - 50 கிராம்
கரும்புச் சாறு (இஞ்சிச் சாறு கலந்தது) - 100 மில்லி

செய்முறை:

அவலை நன்கு சுத்தம் செய்யவும். ஊற வைக்கத் தேவையில்லை. அவலுடன் கரும்புச் சாற்றைச் சேர்த்து 5-10 நிமிடங்கள் கழித்து சுவைத்துச் சாப்பிடவும்.

குறிப்பு:
விருப்பத்துக்கேற்ப தேங்காய்த்துருவல் மற்றும் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம்.

‘‘அப்பம் கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலிற் கலந்து
-நாலாயிர திவ்யபிரபந்தம்

⭕️ கோதுமை அப்பம்

தேவையானவை:

கோதுமை மாவு - 250 கிராம்
நாட்டுச்சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 5
தேங்காய்த்துருவல் - ஒரு மூடி
தண்ணீர் - 100 மில்லி
எண்ணெய் - 250 மில்லி

செய்முறை:

கோதுமை மாவுடன் பொடித்த நாட்டுச் சர்க்கரையைச் சேர்க்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும். போதுமான தண்ணீர் சேர்த்து, நன்கு கரைக்கவும். அந்த மாவை சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் சேர்த்துப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:
* அப்பத்துக்குரிய மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் தண்ணீராகவோ இருக்கக் கூடாது. அடைமாவு பதத்தில் இருக்க வேண்டும்.

* விரும்பினால் சோடா உப்பு சேர்த்து, அப்ப மாவை ஊற வைக்கலாம்.

நூறு தடா நிறைந்த, அக்கார அடிசில் சொன்னேன்
-திருப்பாவை

⭕️ அக்கார அடிசில்

தேவையானவை:

பச்சரிசி - 250 கிராம்
பால் - முக்கால் லிட்டர்
நாட்டுச்சர்க்கரை - 400 கிராம்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 200 கிராம்
முந்திரி (பொடித்தது) - 5
கிஸ்மிஸ் (திராட்சை) - சிறிதளவு
ஏலக்காய்ப்பொடி - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

நன்கு சுத்தம் செய்த பச்சரிசியை பாலில் வேக வைக்கவும் (பாலுடன் சிறிது தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம்). அரிசி வெந்தவுடன் பாசிப்பருப்பைச் சேர்த்து மீண்டும் குழைய வேகவைக்கவும். பொடித்த நாட்டுச்சர்க்கரையை இத்துடன் சேர்த்து நன்கு கிளறவும். வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, கிஸ்மிஸ் (திராட்சை), ஏலக்காய்ப்பொடியை வதக்கி, அதை வேக வைத்த அரிசியில் சேர்த்துக் கிளறவும். அகார அடிசிலை ருசித்துப் புசிக்கவும்.

நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
தகைமான் காடியின் வகைபடப் பெறுகுவிர்
-பெரும்பாணாற்றுப்படை

⭕️ வடுமா ஊறுகாய்

தேவையானவை:

வடுமாங்காய் - 15
உப்பு - 150 கிராம்
நல்லெண்ணெய் - 100 மில்லி
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு

செய்முறை:

மாங்காயை நான்கு பக்கமும் கீறி, உப்பில் போட்டு புரட்டி, இரண்டு நாட்கள் ஊறவைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். உப்பில் ஊறிய மாங்காயைச் சேர்த்து வதக்கவும். காரம் தேவைப்படும் அளவுக்கு மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்பு இறக்கி, ஆற வைக்கவும். பிறகு பாட்டிலில் சேகரித்து வைத்துப் பயன்படுத்தவும்.

குறிப்பு:
ஊறுகாயைத் தாளிக்கும்போது தண்ணீர் சேர்க்கக் கூடாது.

தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்...
-குறுந்தொகை

⭕️ மோர்க் குழம்பு

தேவையானவை:

மோர் - 200 மில்லி
தேங்காய் - 30 கிராம்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 50 கிராம் (இரண்டாக நறுக்கவும்)
வெள்ளைப் பூசணி - 50 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஊறவைத்த கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்புடன், மல்லி (தனியா), தேங்காய், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாயைச் சேர்த்து நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், வெள்ளைப் பூசணி சேர்த்து வதக்கவும். இத்துடன் சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அரைத்த கலவையைச் சேர்த்து வதக்கி பச்சைவாசனை போன பிறகு, மோர் சேர்த்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.✍🏼🌹

 #நிலக்கடலை_மருத்துவப்பயன்கள்;  #கடலைமிட்டாய்:சாப்பிடும்அரைமணி நேரம் முன்னரும் சாப்பிட்டு அரைமணி நேரம் பிறகும் கடலைமிட்ட...
15/01/2024

#நிலக்கடலை_மருத்துவப்பயன்கள்;

#கடலைமிட்டாய்:

சாப்பிடும்அரைமணி நேரம் முன்னரும் சாப்பிட்டு அரைமணி நேரம் பிறகும் கடலைமிட்டாய் சாப்பிட்டால் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.

எது சிறந்த ஸ்நாக்ஸ் தெரியுமா?.

இன்று ஸ்னாக்ஸ் என்ற பெயரில் எதை எதையோ வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் அது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை!

அதுமட்டுமல்ல முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றில்தான் சத்து அதிகம் என்றும் நினைக்கின்றோம். உண்மையில் உடலுக்கு அனைத்து நன்மைகளையும் அள்ளி தரும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய எளிய விலை குறைவான ஸ்னாக்ஸ் ஒன்று உள்ளது. அது நம்ம கடலைமிட்டாய் தான்.

இதில் கடலையும் வெல்லமும் சேர்ந்து ஒரு அருமையான சுவையான மற்றும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கிறது. தொடர்ந்து இறுதிவரை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும் பொழுது கடலை கூறிய பித்த சேர்க்கையை சீர் செய்துவிடும். அதுமட்டுமல்ல கடலையும் வெல்லமும் சேர்ந்து புரதம் இரும்பு செலினியம் மற்றும் பல சத்துக்களை கொண்ட ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உருப்பெறுகிறது.

பொதுவாக கடலை மிட்டாயில் சேர்க்கப்படும் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல கொழுப்பு

* புரோட்டீன்
* வைட்டமின்கள்
* இரும்புச்சத்து
* கால்சியம்
* துத்தநாகம்
* மாங்கனீஸ்
* பாஸ்பரஸ்
* பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்கு தேவையான ️அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் ️நிறைந்துள்ளன.

அதேபோன்று வெல்லத்தில் பல்வேறு சத்துக்களும் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது.

மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது.

மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இதிலுள்ள விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.

எனவே கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

அதேபோன்று நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால்

️இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட் போலிக் அமிலம் போன்றவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.

அந்தவகையில் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது இந்த நன்மைகளை இயல்பாகவே கிடைத்துவிடும். அதுமட்டுமல்ல

️நிலக்கடலையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் தான் உள்ளது.

மேலும் வெல்லத்துடன் சேர்ந்து இதன் மருத்துவ நன்மைகள் மேலும் அதிகரிக்கிறது.

அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது.

இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.

இந்த செரட்டோன் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. எனவே இந்த கடலை மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அவசியம் சாப்பிட வேண்டும்.

அதேபோன்று நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம்.

அடுத்து நிலக்கடலையில் உள்ள பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நோய்வருவதை தடுப்பதுடன்.

இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.

️குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

முக்கியமாக நிலக்கடலையில் உள்ள சக்திகள் ஆண்கள் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது. அந்த வகையில் இந்த கடலை மிட்டாய் அனைவருக்குமே மிகவும் சிறந்தது.

அதேபோல் நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை.

செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் சீராகிறது.

மேலும் இது மிகுந்த நார்சத்து உள்ளது என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. பொதுவாக பாதாம் பிஸ்தா முந்திரிப்பருப்புகளில்
தான் சத்துக்களை விட நிலக்கடலையில் சத்துக்கள் மிக அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இதனுடன் வெல்லம் சேருவதால் நன்மைகள் நமக்குக் இரட்டிப்பாக கிடைக்கிறது.

எனவே கெட்ட கொழுப்பில்லாத கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் அனைவருமே தினமும் சாப்பிட்டு வந்தால் பல உடல்நல நன்மைகள் எளிதாகப் பெற்றுவிட முடியும். எனவே நமது பாரம்பரிய உணவான கடலை மிட்டாயை இனி அடிக்கடி சாப்பிடுங்கள் நோய் இல்லாத வாழ்வை பெறுங்கள்...

கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்.:தேவையான பொருட்கள்.:கற்பூரம் - 5 எண்ணிக்கை,மஞ்சள் தூள் - சிறிதளவு,மருதாணி இலை - ஒரு கைப...
15/01/2024

கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்.:

தேவையான பொருட்கள்.:
கற்பூரம் - 5 எண்ணிக்கை,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
மருதாணி இலை - ஒரு கைப்புடி அளவு,
கற்றாழை உட்பகுதி - ஒரு தேக்கரண்டி,
வசம்பு பொடி - ஒரு தேக்கரண்டி.

செய்முறை.:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.

பிறகு மருதாணி இலையை நன்கு மை போல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

மேலும் இதனுடன் இடித்த கற்பூரம்,மஞ்சள் தூள்,கற்றாழை உட்பகுதி மற்றும் வசம்பு பொடி ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.

இதை கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி துணியால் நன்கு இறுக்கமாக கட்டவும்.

இதை இரண்டு முறை செய்து வந்தால் போதும் கால் ஆணி முற்றிலுமாக குணமாகும்.

இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத நன்கு பயனளிக்க கூடிய மருத்துவம் ஆகும்.

அல்சர் பிரச்சனையை போக்க உதவும் அற்புதமான மருத்துவ குறிப்புகள்.:பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில...
15/01/2024

அல்சர் பிரச்சனையை போக்க உதவும் அற்புதமான மருத்துவ குறிப்புகள்.:

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதே இதற்கு காரணமாகும்.

சரியான நேரத்தில் சாப்பிடாத போது, இரைப்பையில் அமிலம் சுரந்து புண்களை உண்டாக்குகிறது. இதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.

இப்பிரச்சனையை மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம். தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.

பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும். வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப் புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.

புகைப்பழக்கத்தைவிட வேண்டுமா..?!தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் ...
08/09/2023

புகைப்பழக்கத்தைவிட வேண்டுமா..?!

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டுச் சுவையுங்கள் .

மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது. புகைப் பிடிப்பவர்களைத்தடுக்கும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சைக் கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவைக் கட்டுப்படுத்துகிறது, இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லிப் புகைப்பழக்கத்தை ஒழிக்கச் சிறந்த வழி.

Address

Erode

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் மருத்துவம் மற்றும் இயற்கை காப்போம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share