Hari Bakthi

Hari Bakthi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hari Bakthi, Health & Wellness Website, Kangeyam Road, Erode.

அனைவரும் இறைவனுக்கு மிக உயர்ந்ததை சமர்ப்பிக்க தொடங்கப்பட்ட ஒரு முயற்சி..
முதல் தர மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கும் மூலிகை தசாங்க பொடி.
100% Hebal Ingredients
0% Artificial Ingredients

பதிவு புடிச்சிருந்தா ஷேர் செய்யுங்க.அப்பனோ,அம்மாவோ கொழந்த பொறக்குறதுக்கு முன்னயோ , பின்னயோ செஞ்ச, செய்ற பாவத்துக்கு அந்த...
24/04/2025

பதிவு புடிச்சிருந்தா ஷேர் செய்யுங்க.

அப்பனோ,அம்மாவோ கொழந்த பொறக்குறதுக்கு முன்னயோ , பின்னயோ செஞ்ச, செய்ற பாவத்துக்கு அந்த கொழந்த தான் அனுபவிக்கும்.

உங்க சொத்து உங்க பையனுக்கு பிரிஞ்சாலும், பிரியலனாலும் நீங்க செஞ்ச தப்புக்கு உங்க பையன், பொண்ணு மட்டும் இல்ல நீங்களும் தண்டனை அனுபவிப்பீங்க.

ஏழரை , அஷ்டம,அர்த்தாஷ்டம சனி மட்டும் இல்ல ஆகாத தசா புத்தியும் உங்க பசங்கள நல்லா வெச்சி செய்யும். இது தான் கர்ம (மா) விதி. இத புரிஞ்சிட்டவன் அடுத்தவங்களுக்கு தொந்தரவு பண்ண யோசிச்சு அமைதியா போயிடுறான். புரியாதவன் ஆடி பசங்களுக்கு பாவத்தை மூட்டையா சேத்து வெச்சிட்டு போறான்.

நல்லது மட்டுமே பண்றவனுக்கே பிரச்சினைகள் அதிகம் வருது .கெட்டது பண்றவனுக்கு எவ்ளோ பிரச்சினை வரும்?.

அடுத்தவன் காச தின்னா ஹாஸ்பிட்டல்ல தான் விரயம் ஆகும்.

கிரகங்கள் checkpoint inhibitors. Periodical checking ல சிக்கி தான் ஆகனும்.

கண்ணு முன்னால பசங்க #நாசம் ஆகுறத பாத்து அழுதா? மாறிடுமா?

சொத்து இருக்கும் ஆனா அத விரயம் பண்ண குடிகாரனாவும் , #கூத்தியாகள்ளனாவும் தான் பையன் அமையுவான்.

அற்ப ஆயுளும் அப்படி தான். அங்க ஒன்னு போயிருக்கும் இங்க ஒன்னு போனா தான் tally?

#கத்தி எடுத்து அடுத்தவன #கொன்ன ரவுடிக்கு ஏது நல்ல சாவு? #பிரம்மஹத்தி விடுமா?

நல்ல கர்மாவை சேத்து வெச்சிட்டு போங்க. வர தலைமுறைமாச்சும் நல்லா வாழட்டும். இன்னும் கிறுக்குவேன்.

#கர்மா #தண்டனை #துலாம் #தராசு

#ஜெய்வாராஹி

Aanandha Varman

ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆச்சார்ய சம்பந்தம் மிக முக்கியமாக கொள்ளப்படுகிறது.. இது எவ்வளவு முக்கியம் என்பதற்கு வடுக நம்பியே உதாரண...
15/04/2025

ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆச்சார்ய சம்பந்தம் மிக முக்கியமாக கொள்ளப்படுகிறது.. இது எவ்வளவு முக்கியம் என்பதற்கு வடுக நம்பியே உதாரணம்..

வடுக நம்பி ராமானுஜரின் மிக விருப்பமான சிஷ்யர்..ராமனுஜருக்கு அமுது செய்து வைப்பவரும் அவரே..

ஒரு முறை பெருமாள் திருவீதி உலா வருகிறான், உடையவர் மற்றும் ஏனையோர் வெளியில் சென்று பெருமாளை சேவிக்கின்றனர்.. வடுக நம்பி வரவில்லை, உடையவர் அழைத்து பார்க்கிறார் ஆனால் நம்பி வந்தபாடில்லை.

பின்னர் உடையவர் வடுக நம்பியை காரணம் கேட்கிறார், அதற்கு வடுக நம்பி நான் உங்கள் பெருமாளை பார்க்க வந்தால் என் பெருமாள் பசியாக இருக்க நேரும் அதனால் வரவில்லை என்கிறார்..

இன்னொரு முறை , உடையவர் சஞ்சாரம் செய்ய கிளம்பும் போது அவருடைய பூஜா பொருட்களை ஒரு பெட்டியில் வைக்கிறார் நம்பி, கூடவே இன்னொரு பையையும் வைக்கிறார் உடையவர் அது என்னவென்று கேட்க, அது தங்கள் பாதணி என்கிறார்.. உடையவர் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்க, உமக்கு உம் பெருமாள் பெரிது அது போல என் பெருமாளின் பாத ரக்ஷை எனக்கு பெரிது என்கிறார்..

அவருக்கு உடையவர் தான் பெருமாள்

சதீஷ் விட்டல்
Sathish Vittal

இவர்கள் கைது நடவடிக்கை சரியான தீர்வா ?  இதை விட முக்கியம்  திருமலா திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள்..அவர்களையும் கைது செய்ய...
10/02/2025

இவர்கள் கைது நடவடிக்கை சரியான தீர்வா ? இதை விட முக்கியம் திருமலா
திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள்..
அவர்களையும் கைது செய்ய வேண்டும்.

பக்தர்கள் நம்பிக்கையில் நெருப்பை கொட்டிய கயவர்கள்.

இதை இத்துடன் விடாமல் அனைத்து கோவில்களில் இப்படியான கலப்பட நெய்யில் ஒரு அகல் விளக்கு 10ரூபாய் என்று விற்பதை தடை செய்ய வேண்டும்.
ஓமதுக்கு நெய் என்று விற்பனைக்கு வரும் அனைத்தும் இது போன்ற கலப்பட நெய்யில் வருவதே . அதை பொது மக்கள் பகிஷ்கரி்க்க வேண்டும்.

Balaji Venkatraman

திருவண்ணாமலையில் திருப்பதி அளவுக்கு கூட்டம்...ஸ்ரீரங்கத்தில் மைல் கணக்கில் நீளும் கியூ...திருச்செந்தூரில் தரிசனம் செய்ய ...
22/01/2025

திருவண்ணாமலையில் திருப்பதி அளவுக்கு கூட்டம்...

ஸ்ரீரங்கத்தில் மைல் கணக்கில் நீளும் கியூ...

திருச்செந்தூரில் தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்கும் அளவுக்கு கூட்டம்...

பழனி தைப்பூச யாத்திரைக்கு பல லட்சம் பேர் பயணம்...

இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு...ஆனா சாமி கும்பிடும்போது பெரிய லிஸ்ட் ஒன்னு போடுவீங்களே , அதுக்கூட சேர்த்து ஓட்டுப்போடும்போது எங்களுக்கு மண்டையில் குருவி அளவுக்காவது மூளை இருக்கனும் ஆண்டவாங்கிறதையும் சேர்த்துக்கங்க...

ஏன்னா , அடுத்த தடவை நீங்க கும்பிட கோயில் அங்கே இருக்கனும்...அது முக்கியம் ..

Saravana Kumar.
#திருப்பரங்குன்றம்

அரசர்கள் அந்த காலத்தில் பெரிய பெரிய மாட மாளிகை அரண்மனை கட்டி வாழ்ந்தார்கள்,,,அவர்கள் நிறைய ஆலயங்கள் கட்டி இருந்தார்கள்,,...
06/12/2024

அரசர்கள் அந்த காலத்தில் பெரிய பெரிய மாட மாளிகை அரண்மனை கட்டி வாழ்ந்தார்கள்,,,

அவர்கள் நிறைய ஆலயங்கள் கட்டி இருந்தார்கள்,,,

அந்த ஆலயங்களுக்கு தான் இப்போவும் நாம் சென்று வழிபட்டு கொண்டு இருக்கிறோம்,,,

அரசர்கள் கட்டிய கோவில்கள் இன்னும் இருக்கின்றன,,,

ஆனால் அரசர்கள் வாழ்ந்த அரண்மனை கள் இப்போது இல்லை,,,அதன் தடம் கூட அழிந்து வருகிறது,,,

சொத்துக்கள் குவிப்பது தற்காலிக வாழ்க்கையில் பேர் புகழ் மண்டைக்கனத்துடன் இருக்கத்தான் ஒழிய அவை நம் கூடவே வருவது இல்லை,,,

இறைவன் மட்டுமே நிலையானவன்,,,

மற்றவை எல்லாம் நிலையற்றது,,,

பதஞ்சலி சித்தம்

ஓம் நமசிவாய

ஓம் நமோ நாராயணய

சதிஸ்குமார்

05/11/2024
30/10/2024

தீப ஒளி அல்ல, தீபாவளி.

தீவாளி எனும் கொச்சையான இந்தி சொல்லும் அல்ல. அது 'தீபாவளி'.

ராமர் அயோத்திக்கு திரும்பி வந்த தினத்திற்காக அல்ல, சத்யபாமா கிருஷ்ணரின் நரகாசூர வதம் எனும் நரக சதுர்தசிக்காக.

நரகாசூரன் விஷ்ணுவின் மகன். தன் மகனே ஆனாலும் தவறு இழைப்பவர்களை அழிப்பேன் என்பதை தீபாவளி அன்று உணர்த்துகிறார் கிருஷ்ண பகவான்.

நம் பாரம்பரியப்படி விடிகாலை எழுந்து, எண்ணை ஸ்நானம் செய்து, பூஜையும், புத்தாடையும் பட்டாசுமாக தீபாவளியை கொண்டாடுவோம். நாளை விடியும் முன் தான் தீபாவளி. லட்சுமி தேவி நல்லெண்ணையிலும், கங்கா தேவி நீரிலும் நாளை விடிகாலையில் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
நம் மூதாதையர்கள் 'பித்ரு பக்‌ஷம்' எனும் புரட்டாசி மாதத்தில் பூமிக்கு வந்து, தீபாவளி திருநாளின் போது பித்ரு லோகம் திரும்புகிறார்கள். அதற்காகவே வானில் பட்டாசுகள் வெடிக்கபட்டு ஒளியேற்றப் படுகின்றன.

இருள் எனும் தீமை அகன்று, ஒளி எனும் நன்மை பரவ தீபாவளியை கொண்டாடுவோம்.

தீபாவளி திருநாளை இயன்றவரை நியமப்படி கொண்டாடுவோர் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். இருள் விலகும்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Prakash P

Address

Kangeyam Road
Erode
638005

Telephone

+917904589065

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hari Bakthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hari Bakthi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram