Siddha marunthugal

Siddha marunthugal Arinthukollungal Ariyaathathai......
Aruviyugal Arinthathai....

24/09/2020
சிறியாநங்கை கசப்புத்தன்மை கொண்ட ஒரு மூலிகை. நீர் பாங்கான இடங்களிலும், வயல்வெளிகளிலும் செழுமையாக வளரக்கூடியது இந்த மூலிகை...
23/09/2020

சிறியாநங்கை கசப்புத்தன்மை கொண்ட ஒரு மூலிகை. நீர் பாங்கான இடங்களிலும், வயல்வெளிகளிலும் செழுமையாக வளரக்கூடியது இந்த மூலிகை. இந்த சிறியாநங்கையானது விஷத்தை முறிக்கும் தன்மையைக் கொண்டது. அந்த காலத்தில் வேடர்கள் வேட்டையாடச் செல்லும் போது, சிறியாநங்கை செடியின் வடக்கு பக்கம் உள்ள வேர்ப்பகுதியை அவர்களின் வாயின் கடவா பல்லில் கடித்துக் கொண்டுதான் வேட்டையாடவே செல்வார்கள். காட்டிற்குள் இருக்கும் சிறிய பூச்சிகள் அவர்களை கடித்தால் அந்த விஷமானது அவர்களை பாதிக்காது.



ஆனால் இந்த காலத்தில் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே விஷத்தன்மை கலந்துள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள் அனைத்தும் இயற்கையாகவே நமக்கு கிடைக்க படுவதில்லை. ரசாயன பொருட்கள் கலந்த உணவினை நாம் உண்ணும் போது நம் ரத்தத்திலும் அந்த ரசாயனமானது கலக்கப்படுகிறது. நம் உடலுக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இப்படிப்பட்ட பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சிறியாநங்கை ஒரு தீர்வாக உள்ளது.

விஷக்கடிக்கு மருந்து

பாம்பு கடி, தேள் கடி இப்படி விஷமுள்ள பூச்சிகள் கடித்தால் சிறியாநங்கை இலை அரைத்து உருண்டையாக்கி விழுங்க வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள விஷத்தன்மை நீக்கப்படும். வீட்டின் வாசல் பகுதியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்புகள் வராமல் இருக்கும். சிறியாநங்கை இலை மீது பட்டு வரும் காற்று, பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்புகளால் ஓட முடியாமல் போய்விடும்.
சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அக்காலத்தில், வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வேரை, கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள். அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் அவர்களை தாக்காது.



தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோய்க்கும், அலர்ஜிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்துகிறார்கள்.



மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. மலேரியா, மற்றும் விஷ காய்ச்சலுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.



சிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை

07/06/2020

முற்றுபுள்ளி..தடமும் போகும்.. தூக்கிவீசும் வாழைப்பழத் தோலுக்கு இவ்வளவு சக்தியா?

பொதுவாக தினசரி வாழைப்பழம் சாப்பிடுவது நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். அதிலும், மலச்சிக்கல் போக வாழைப்பழம் அருமருந்து. பெரும்பாலானவர்களின் உணவுக் கலாச்சாரத்தில் வாழைப்பழத்துக்கு முக்கிய இடம் உண்டு.

நாம் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்னையை போக்கலாம். வாழைப் பழத்தோல் சருமப் பிரச்னையையும் தீர்க்கிறது. இதை எப்படி பயன்படுத்துவது என இனி பார்ப்போம்.

முதலில் சுத்தமான பாலை எடுத்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அது ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பின்னர் வாழைப் பழத்தோலின் உள்பகுதியை எடுத்து முகத்தில் தேய்த்து, 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படிச் செய்வதால் சருமம் பொலிவு பெறும்.

இதேபோல் வாழைப்பழத்தோல், தேன் இரண்டையும் சேர்த்து குலைத்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பின் முகத்தை கழுவ வேண்டும். தினம் இப்படி ஒருமுறை செய்தால் முகப்பரு வரவே செய்யாது. சருமம் உரண்டு போகாமல் ஈரத்தன்மையுடன் இருக்கும்.

கற்றாழை இலையின் ஜெல்லுடன் வாழைப்பழத் தோலையும் சேர்த்து குழைத்து முகத்தில் தடவலாம். இதை அரைமணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இதுவும் முகப்பரு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வாழைப்பழத் தோலுடன், ரோஸ் வாட்டரை சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊறவைத்து கழுவினால் சருமம் புத்துயிர் பெறும்.

வாழைப்பழத் தூள், மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து ரெகுலராகவே முகத்தில் பூசலாம். இது முகப்பருவினால் வரும் வீக்கத்தை குறைக்கும். இதுபோன்ற கலவைகளை தொடர்ந்து முயற்சித்தால், முகப்பருவினால் ஏற்பட்ட தடங்களையும் கூட போக்கிவிட முடியும்.

நாம் தூக்கி வீசும் வாழைப்பழத் தோலுக்கு எவ்வளவு சக்தி பார்த்தீர்களா? அதுதான் இயற்கையின் அருமை!

01/02/2020

'கொரோனா'வுக்கு சித்தாவில் மருந்து?

'கொரோனா வைரஸ் பாதிப்புக்கான சிகிச்சை முறைகள் குறித்து, இணையதளத்தில் உலா வரும் தவறான தகவல்களை, பொதுமக்கள் நம்ப வேண்டாம்' என, சென்னையில் உள்ள, தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நிறுவனத்தின் இயக்குனர், மீனாகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எந்த காய்ச்சலாக இருந்தாலும், சித்த மருத்துவத்தில் உள்ள, 64 வகையான காய்ச்சல்களில் ஒன்றாகவே கருதப்படும். அந்த வகையில், கொரோனா வைரஸ் பாதிப்பை, 'ஐயஜூரம், சந்நிபாத ஜூரம்' என்று கணித்து சிகிச்சை அளிக்கலாம். அதன்படி, 'பிரம்மானந்த பைரவம், வசந்த குசுமாகரம், திரிதோடம்' என, மூன்று வகையான சித்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை, தினசரி இரண்டு நேரம், தேனில் கலந்து நோயாளிகளுக்கு கொடுக்கலாம். அதேபோல், 'விஷஜூர குடிநீர், கபஜூர குடிநீர், நொச்சி குடிநீர்' ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, நோய் பாதிக்கப் பட்டோருக்கு, தினமும், 30 மில்லி அளவில் கொடுக்கலாம். எனினும், இந்த மருந்துகளுக்குரிய, முறையான மருத்துவ அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வாழைப் பூ பலன்கள்வாழைப் பூ சாப்பிட்டு வந்தால் சீதபேதி மற்றும் இரத்த மூலம் அனைத்தும் குணமாகும்.
17/07/2019

வாழைப் பூ பலன்கள்

வாழைப் பூ சாப்பிட்டு வந்தால் சீதபேதி மற்றும் இரத்த மூலம் அனைத்தும் குணமாகும்.

27/03/2019

27.3.2019
உடலில் கட்டிகள் குணமாக.

சப்பாத்திகள்ளி பூக்கள் இலையை நசுக்கி கட்டியின் மீது கட்டு போட்டால் உடைந்து விடும்

24/03/2019

24.3.2018
மருத்துவ குறிப்பு🍓👇

தேமல் குணமாக
நாயுறுவி இலையுடன் . ஜாதிக்காயை வைத்து மை போல் அரைத்து தேமல் மீது தடவினால் மறையும்.

Address

Mettukadai
Erode

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddha marunthugal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category