06/01/2023
❤️💐🙏அனைவருக்கும் முதலில் புத்தாண்டு வாழ்த்துகளும் வணக்கங்களும் .கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கியின் சார்பாக 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 1812 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டு ஏழை ,எளிய மற்றும் மலைவாழ் மக்களின் பிரசவத்திற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் பயன்படுத்தியிருக்கிறோம்.ஏறத்தாழ 2500 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிற போற்றுதலுக்குரிய உண்மையான ஹீரோக்களாகிய எங்களின் அனைத்து இரத்தக்கொடையாளர்களுக்கும் இந்த நேரத்தில் அன்பும் நன்றியும் பாராட்டுகளும்.எங்களுக்கு தொடர்ந்து முகாம்கள் ஏற்பாடு செய்து தரும் அனைத்துக் கல்லூரிகள்,அனைத்து அமைப்புகள்,அரசியல் கட்சிகள்,இரத்தம் தேவை என தொலைபேசியில் அழைத்தாலோ, வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்த அடுத்த அரை மணி நேரத்திலோ அழைப்பில் வந்து இரத்ததானம் செய்யும் தனிப்பட்ட இரத்தக்கொடையாளர்கள் என ஒவ்வொருவரையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்வதில் பெருமை கொள்கிறோம்...இந்த 2023 ஆம் ஆண்டிலும் இதே ஒத்துழைப்பை நல்கி உயிர்காக்கும் உன்னதப்பணியில் எங்களோடு கைகோர்த்துப் பயணித்திடுவீர்....🩸🩸🩸