
30/08/2025
இந்த கிராமத்து இறைவா MKR நாடகம் தடைசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
முறைப்படி சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாலும் சம்பந்தப்பட்ட துறையினர் கவனிக்க வேண்டும்.
தமிழர் மற்றும் உலக அளவில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோக கலாச்சார சீர்கேட்டை ஆதரிக்கும் பேச்சுக்களை பேசுவதும், பாவனைகள் செய்வதும் இவர்கள் குழுவில் முக்கியமாக நடக்கிறது.
மற்றதும் கவனிக்க வேண்டும். பலவருடங்கள் பல கோடியில் எடுக்கும் படங்களுக்கு தனிக்கை உண்டு. ஒருநாள் கூத்துக்கு வரும் நபர்கள் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவது சட்ட அமைப்புக்கே அவமானம்.
இது குழந்தைகள் & மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு வழிவகுக்கும் மிகவும் அச்சுறுத்தல் தரும் செயல்.
மேலும், குறிப்பிட்ட சாதி துஸ்பிரயோகமும் நடக்கிறது. இந்திய சினிமா துறையில் பேசப்படாத கேவலம் கிராமங்களில் செய்கிறார்கள்.
அரசு கவனிக்க வேண்டும் என்று அக்கறையுடனும், இதை அரசியல் படுத்த விரும்பாமலும் கேட்டுக்கொள்கிறேன்.
- கஞ்சமலையார் எனும் ஏனாதி பூங்கதிர்வேல்,