"sucking") என்ற அரபி வார்த்தை hajm '(உறுஞ்சுதல்-Sucking) இருந்து பெறப்படுகிறது.
கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள்?
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; 'அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை' என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புகாரி - 5678)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், 'தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது' என வந்துள்ளது (புகாரி - 5680)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்."(புகாரி - 5694)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இஹ்ராம்' கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்." (புகாரி - 5695)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; ''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்." (புகாரி - 5699)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மிஃராஜ் பயணத்தின் போது மலக்குமார்களின் கூட்டங்களை கடக்கும் போது "ஒ முஹம்மத், ஹிஜாமா செய்யுங்கள்" என்று சொல்லப்படாமல் தவிர கடக்கவில்லை. (நூல்: திர்மிதி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும்.