27/06/2019
மனநல மாத்திரைகள் போடுவதால் உடல் எடை கூடுமா?
சில மாத்திரைகள் போடும் போது அதற்கும் வாய்ப்புண்டு. மனச்சிதைவு நோய் உள்ள சிலருக்கு வேலை செய்வதில் எந்த விருப்பமும் இருக்காது. அவர்கள் வேலை செய்யாமல் பகல் நேரத்தில் அதிகமாக படுத்து தூங்குவார்கள்.அதன் காரணமாகவும் உடல் எடை கூடலாம்.
உடல் எடை கூடும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். அவர்கள் மாத்திரையின் அளவை குறைப்பார்கள் .... அல்லது வேறு மாத்திரை பரிந்துரைப்பார்கள் ....... சில உடற்பயிற்சிகள் செய்ய வலியுறுத்தலாம்......
மருந்துகள் மாற்றுவது, மருந்துகள் அளவை குறைப்பது, மற்றும் உடற்பயிற்சிகள் செய்வது ........ இது போல பல செயல்பாடுகளின் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.
இதையெல்லாம் செய்யாது மாத்திரைகளை நிறுத்தினால், நோயின் தன்மை இன்னும் தீவிரமாகலாம்.