P P Nandhi Peedam / P P நந்தி பீடம்

  • Home
  • India
  • Hosur
  • P P Nandhi Peedam / P P நந்தி பீடம்

P P Nandhi Peedam / P P நந்தி பீடம் ஜோதிடம், எண்கணிதம்,வாஸ்து, தாந்திரீக?

இன்று விநாயகர் சதுர்த்தி புராண கதை: கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்து மூஞ்சூறுவாக மாற்றிய பிள்ளையார்'மூஷிக வாகன மோதக ஹஸ்த' என்...
31/08/2022

இன்று
விநாயகர் சதுர்த்தி புராண கதை: கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்து மூஞ்சூறுவாக மாற்றிய பிள்ளையார்

'மூஷிக வாகன மோதக ஹஸ்த' என்று விநாயகரை போற்றி பாடுவார்கள். தேவர்களும் கடவுளர்களும் தங்களுக்கு என்று ஒரு வாகனத்தை வைத்திருப்பார்கள். முருகன் மயிலையும், சிவன் காளையையும், பெருமாள் கருடனையும், சக்தி சிங்கத்தையும் வாகனமாக வைத்திருக்க விநாயகர் மட்டும் குட்டியான மூஞ்சூறுவை வாகனமாக தேர்வு செய்தது ஏன் என்று பலரும் யோசிக்கலாம். பிள்ளையாருக்கு மூஞ்சூறு வாகனமானது பற்றியும் புராண கதை உள்ளது விநாயகர் சதுர்த்தி நாளில் அந்த சுவாரஸ்யமான தகவலைப் பார்க்கலாம்.

விநாயகரை வணங்கினால் என்னென்ன நன்மை தெரியுமா? | Ganesh Chaturthi
முழு முதற் கடவுளாக விளங்கும் விநாயகருக்கு இன்றைக்கு சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி ஏன் வந்தது என்பது பற்றியும் அவரது படைப்பு பற்றியும் புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ததால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்றும் விநாயகர் புராணம் சொல்கிறது.

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுவதால் இன்றைய தினம் வீடுகளில் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து விநாயகருக்கும் அலங்காரம் செய்து அவருக்கு அவல் பொரி, பழங்கள், மோதகம், கொழுக்கட்டை படையலிட்டு பலரது வீடுகளிலும் வணங்குகின்றனர்.

புராண கதையில் விநாயகர்
யானை முகமும், தலையில் இரு கொம்புகளும் உடைய கஜமுகாசுரன் என்ற அசுரன், அசுர குல குருவாகிய சுக்கிராச்சாரியாரின் போதனைப்படி, சிவபெருமானின் திருநாமத்தை சொல்லிக்கொண்டே பல ஆண்டுகள் காலம் கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான், அவன்முன் தோன்றி, என்ன வரம் என்று கேட்டார்.

அசுரனுக்கு வரம் கொடுத்த சிவன்
எந்த ஆயுதத்தாலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது. வஞ்சக எதிரிகளின் சூழ்ச்சியால் எனக்கு மரணம் நேரிட்டாலும், எனக்கு இன்னொரு பிறவி கிடைக்கக் கூடாது " என்று வரம் கேட்டான், கஜமுகாசுரன். சிவபெருமான் உடனே அவன் கேட்ட வரங்களை அளித்துவிட்டு மறைந்தார்.
அசுரன் கொடுத்த தண்டனை
வரம் பெற்ற அசுரன் சும்மா இருப்பானா? மதங்கமாபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி, அரசனாக ஆட்சி செய்தான். தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் அனைவரும் தன் முன்னால் நின்று, தினமும் மூன்று வேளைகள் ஆயிரத்தெட்டு முறை தோப்புக்கரணம் போட வேண்டுமென்று கட்டளையிட்டான். அவர்கள் வரிசையாக நின்று, தோப்புக்கரணம் போட்டே அயர்ந்து விழுந்தார்கள். அதைப் பார்த்துக் அசுரன் அகங்காரத்துடன் சிரித்தான்.

விநாயகரின் அசுர வதம்
அரக்கனின் கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள், பிள்ளையாரை வணங்கித் தம்மைக் காக்குமாறு வேண்டினார்கள்.
விநாயகரும், அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கஜமுகாசுரனுடன் போருக்குப் புறப்பட்டார். விநாயகப் பெருமானுக்கும், அசுரனுக்கும் இடையில் கடும் போர் மூண்டது. விநாயகர் தமது அம்புகளால் கஜமுகாசுரனின் படைகளையும், தேர், மற்றும் ஆயுதங்களையும் நொடியில் அழித்தார். ஆனால், அவரது ஆயுதங்களினால் அந்த அரக்கனைக் கொல்ல முடியவில்லை.

அசுரனை சம்ஹாரம் செய்த விநாயகர்
எந்த ஆயுதத்தாலும் அசுரனை அழிக்க முடியலையே என்று விநாயகர் யோசித்த போது சிவபெருமான் தனது மகனுக்காக குரல் கொடுத்தார். மகனே, கஜமுகாசூரனை எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. என்று சொல்லவே, சற்றும் யோசிக்காமல் தனது வலது தந்தத்தை ஒடித்து கஜமுகாசூரனை வதம் செய்தார். நிலைகுலைந்து வீழ்ந்த அரக்கன் மூஞ்சூறு போல மாறினான். அந்த மூஞ்சூறுவை தனது ஞானக்கண்ணால் பார்த்தார் பிள்ளையார். ஞானம் பெற்ற மூஞ்சூறு விநாயகரின் பாதங்களின் வீழ்ந்து வணங்கினான். அதனை தனது வாகனமாக்கிக் கொண்டார் விநாயகர்.

26/08/2022

மேஷ ராசி | சனி (வக்ர) பலாபலன்கள் | நன்மையும்/ தீமையும்! _peedam

19/08/2022

வெள்ளிக்கிழமை நாளில் | இந்த நட்சத்திரமாக இருந்தால் | எந்த சுப நிகழ்ச்சியும் செய்யக்கூடாது...

https://youtu.be/uwKNq3qjNeI
18/08/2022

https://youtu.be/uwKNq3qjNeI

꧁★۞ASTRO VASTHU / *அஸ்ட்ரோ வாஸ்து*۞★꧂꧁𝐀𝐒𝐓𝐑𝐎꧂ஜோதிடம், எண்கணிதம்,வாஸ்து, தாந்திரீகம் பரிகாரம் தொலைபேசி மற்றும் வாகன எண்,....

03/08/2022

காதல் திருமணம் | தினம் தினம் தற்கொலை எண்ணம்

03/08/2022

இல்லத்தில் வளத்தினை பெருக்கும் ஆடிப்பெருக்கு
ஆடி மாதத்திற்கென பல சிறப்புகள் உண்டு. அந்த வரிசையில் ஆடி 18ம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகையான ஆடிப்பெருக்கு மிக சிறப்பானது. இந்த நாளை ஆடி 18, ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம் எனவும் சொல்வது வழக்கம்

அம்பிகையின் மகிமையை எடுத்து சொல்லும் ஸ்ரீமத் தேவிபாகவதத்தில், எமனுடைய கோரைப்பற்கள் என உருவகப்படுத்தும் காலம் இரண்டு உண்டு. அதில் ஒன்று கடும் காற்றடித்து மழை கொட்டத் துவங்கும் காலமான தட்சிணாயண காலம். அடுத்தது, வெயில் வீசிக் கொளுத்தத் தொடங்கும் காலமான உத்தராயண காலம். வெயிலில்கூடத் தப்பிவிடலாம். ஆனால், மழைக்காலத்தில்?! அதுவும் புதுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, அந்தப் புது நீர் பல வகையான நோய்களை பரப்பும்.. அதன் காரணமாகவே தட்சிணாயண காலத் தொடக்கமான ஆடி மாதத்தில் அம்பிகைக்கு (காப்பவள் தாய்தானே!) விசேஷமான வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அதிலும் ஆடி 18 மிக விசேசமானது. அன்றைய தினம் அம்மனை வழிப்பட்டு குடும்ப நலனுக்கும், தாலி பாக்கியம் வேண்டியும் மாங்கல்ய சரடை மாற்றிக்கொள்வர்.

பொங்கி வரும் நீரினால் ஆற்றிலிருக்கும் கழிவுகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு, ஆறு சுத்தமாகும். அதுப்போல், மனதிலிருக்கும் அழுக்குகள் நீங்கவும், வாழ்க்கையிலிருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி, குடும்ப நலனுக்காக அனைவரும் வேண்டிக்கொள்ளும் நாளே இந்த ஆடிப்பெருக்கு.

புதிதாக திருமணமாகும் மணப்பெண் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இருபுறமும் லட்சுமிக்க்காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பதுதான் தாலி பெருக்குதல் வைபவம். முதன்முதலில் மஞ்சள்கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும்போது மங்களகரமான தாலியுடன், லட்சுமிக்காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும். அந்த நாளில் நதிக்கரைகள், கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் மரபு இருந்துள்ளது. புதிய திருமண தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலிக்கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்.

இன்றைய தினம் ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்காகும். இன்றைய தினம் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். அட்சைய திருதியை விட இன்று சிறப்பான நாளாகும்.

02/08/2022

புதுமனை கட்டிய பிறகு வாஸ்து குறைபாட்டினால் தொட்டதெல்லாம் தோல்வி

01/08/2022

புது வீடு புது மனை வாங்குபவர்கள் காண வேண்டிய காணொளி

https://youtu.be/g0ZUBvutEBI
16/07/2022

https://youtu.be/g0ZUBvutEBI

கொங்கணர் சித்தர் அற்புதங்கள்கதை 1:கொங்கணர் அடிப்படையில் ஒரு இளவரசர் கொங்குநாட்டில் மகராஜன் எனும் மன்னனின் ஒர.....

10/07/2022

பல வருடமாக செய்வினை பாதிப்பு உள்ளவரா ?

தலைவலி, தலைபாரம், ஒற்றைதலைவலி

வயிற்று வலி,வயிறுஉப்புசம் செரிமானமை இன்மை

பசி எடுக்காமை, கை கால்வலி, உடல் முழுவதும் வலி

உடல் முழுவதும் குண்டூசி குத்துவது போல் இருப்பது

கைகால் வீக்கம்,தூக்கமின்மை

படபடப்பு பயம், எதற்கு எடுத்தாலும் கோபப்படுதல்

கணவன் மனைவி பிரச்சினை

உற்றார் உறவினரிடம் சண்டை சச்சரவு

திருமணம் ஆகாமல் இருப்பது

வீட்டிலும் உடலிலும் துர்நாற்றம் வருவது

அடிக்கடி நோய்வாய்ப்படுவது

அடிக்கடி விபத்து ஏற்படுவது

வேலையில்லாமல் தவிப்பது

எந்த தொழில் செய்தாலும் தோல்வி அடைவது

கடன் உபாதை ஏற்படுவது

ஜோதிடம், எண்கணிதம்,வாஸ்து, தாந்திரீகம் பரிகாரம் தொலைபேசி மற்றும் வாகன எண்,சாஸ்திரம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அணுகவும்
ஜோதிடர் திரு. P P பத்மநாபன் AR
தொடர்பு எண் :8884649988

05/07/2022

உச்சம் பெற்ற கிரகம் உங்களை உயர்த்துமா.? தாழ்த்துமா .?

ஜோதிடம், எண்கணிதம்,வாஸ்து, தாந்திரீகம் பரிகாரம் தொலைபேசி மற்றும் வாகன எண்,சாஸ்திரம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அணுகவும்
ஜோதிடர் திரு. P P பத்மநாபன் AR
தொடர்பு எண் :8884649988

05/07/2022

Address

Hosur

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 10am - 1pm

Telephone

+918884649988

Website

Alerts

Be the first to know and let us send you an email when P P Nandhi Peedam / P P நந்தி பீடம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to P P Nandhi Peedam / P P நந்தி பீடம்:

Share