மருந்தே உணவென்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் உணவையே மருந்தாக மாற்றி அதனோடு பாரம்பரிய மருத்துவத்தின் அணுகுமுறைகளை இணைத்து பல நோய்களை குணப்படுத்தி மக்களுக்கு சேவை செய்து வருகிறது கடையநல்லூர் அல்-ஷிபா ஆயுஷ் மருத்துவமனை. அல்-ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் முறையாக ஐந்தரை வருடம் மருத்துவம் படித்த அரசாங்க பதிவு பெற்ற ஆயுர்வேதம், யோகா யுனானி, சித்தா, (ம) ஹோமியோபதி போன்ற அனைத்து துறைகளையும் சார
்ந்த சிறந்த qualified மருத்துவர்களும் பஞ்சகர்ம சிகிச்சை (ம) யோகா பயின்ற qualified therapist களும் பணியாற்றுகிறார்கள். Ayush போன்ற அனைத்து வகையான பாரம்பரிய மருத்துவத்தையும் பயன்படுத்தி ஒவ்வொரு நோயினையும் பல்வேறு அணுகுமுறைகளோடு அணுகி சிறந்த சிகிச்சைகளை அளிப்பதுதான் அல்ஷிபா மருத்துவமனையின் சிறப்பம்சமாக நாம் சொல்லலாம்.
நாடி பார்த்து நோயின் தன்மையை துல்லியமாக கணித்து ,நாடி பரிட்சையில் சிறந்த அனுபவம் மிக்க மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளியின் நாடிகேற்ப சிகிச்சைகளையும் நாங்கள் வழங்குகிறோம். எங்களது அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாது நோயில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கும் ,ஆரோக்ய வாழ்வை தக்க வைத்து கொள்வதற்கும் தேவையான அறிவுரைகளையும் நாங்கள் வழங்குகிறோம். அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடனும் பாரம்பரிய சிகிச்சை தருகிற நமது மருத்துவமனை கடையநல்லூரில் மட்டுமல்லாது திருநெல்வேலி ,ராஜபாளையம் ,சென்னை ,தேனி போன்ற இடங்களிலும் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சைகள் மட்டுமல்லாமல் யோகா, வர்ம சிகிச்சை, அக்குபஞ்சர் போன்ற சிகிச்சைகளையும் நாங்கள் வழங்குகிறோம். எங்களது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் எல்லா கிளைகளிலும் நோயாளிகள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.