Thirumoolar YOGA Kendhra

Thirumoolar YOGA Kendhra This resource center contains useful information for you about the study and practice of yoga. Lear

ஆறு நாட்கள் இலவச யோகா பயிற்சி முகாம். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்...
24/12/2022

ஆறு நாட்கள் இலவச யோகா பயிற்சி முகாம். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்...

நாவல் பழத்தின் மருத்துவக் குணம்நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படு...
22/06/2019

நாவல் பழத்தின் மருத்துவக் குணம்

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

உளுந்து - மருத்துவப் பயன்கள்நோயின் பாதிப்பு நீங்க:கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் ...
16/06/2019

உளுந்து - மருத்துவப் பயன்கள்

நோயின் பாதிப்பு நீங்க:

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய:

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக:

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை:

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற:

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு:

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்:

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உடல் எடை குறைய சீரகத் தண்ணீர் குடியுங்கள்...!நாள்தோறும் சீரகத் தண்ணீர் குடித்தால், உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும்....
17/11/2018

உடல் எடை குறைய சீரகத் தண்ணீர் குடியுங்கள்...!

நாள்தோறும் சீரகத் தண்ணீர் குடித்தால், உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும்.

நாள்தோறும் சீரகத் தண்ணீர் குடித்தால், உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும்.

உடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவும்.

அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சீரகத்தில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

இங்கு சீரகத் தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சீரகத் தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும்.
ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து, தினமும் குடித்து வர வேண்டும்.

சீரக தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.

சீரகத் தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

நவீன வாழ்க்கை சூழலில் முறையற்ற உணவுப் பொருள் பழக்கம், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்கள் நம் உடலில் எளிதாக நுழைகின்றன. ஆனால் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.

தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

சீரகத் தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாகும்.

சீரகத் தண்ணீரின் மருத்துவ குணம் அறிந்த கேரளத்து மக்களின் அன்றாட குடிநீரே சீரகத் தண்ணீர் தான். இதன் மகத்துவம் அறிந்த நாமும் இன்றிலிருந்து சீரகத் தண்ணீர் குடிப்போம். சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக வாழ்வோம்.

   #மிளகுName:மிளகு (Black pepper) Botanical name:பைப்பர் நிக்ரம்( Piper nigrum) "பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் ...
25/10/2018

#மிளகு
Name:மிளகு (Black pepper)
Botanical name:பைப்பர் நிக்ரம்( Piper nigrum)

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது. உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல். மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது. நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது. உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.

In a 2002 study published in European Journal of Clinical Nutrition, researchers found that a third of an ounce of tamar...
08/09/2018

In a 2002 study published in European Journal of Clinical Nutrition, researchers found that a third of an ounce of tamarind fruit given to healthy boys for 18 days enhanced urinary excretion of fluoride – in amounts that researchers called “significant.” In a later study, tamarind again demonstrated its ability to clear the body of fluoride. Researchers first caused decreased fluoride elimination in a group of adolescent boys from a fluoride-endemic area by supplying them with defluorinated water. One group of boys was also given tamarind to eat for three weeks. The team noted that the tamarind group experienced additional excretion of fluoride as compared to the control group – demonstrating that tamarind could help to mobilize deposited fluoride from bone. °

Sources: http://www.naturallifeenergy.com/tamarind-fluoride-detox-clear-the-mind-and-pineal-gland/
-
https://www.naturalhealth365.com/tamarind-chronic-disease-2019.html °

 #சூரியநமஸ்காரம் (சூரிய வணக்கம்) வாழ்க்கைமுறை சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து விடுபட சில வழிமுறைகள்..சூர்ய நமஸ்காரம் – வி...
01/09/2018

#சூரியநமஸ்காரம் (சூரிய வணக்கம்)

வாழ்க்கைமுறை சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து விடுபட சில வழிமுறைகள்..

சூர்ய நமஸ்காரம் – விளக்கம்..

சூரிய நமஸ்காரம் என்பது சூரியனை வணங்குதல் என்று பொருள்.

இது பண்டைய காலம் முதலே, சூரியனை வழிபடுதல் முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆசனம், பிராணயாமம், மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைத்து பல்வேறு விதங்களில உடல் பயிற்சிகளின் எல்லைகளைக் கொண்ட ஒரு முழுமையான உடற்பயிற்சியாக சூர்ய நமஸ்காரம் உள்ளது.

சூர்ய நமஸ்காரம் பன்ணிரென்டு ஆசனங்கள் ஒருங்கிணைந்த ஆசன மூறை ஆகும்.

சூரிய நமஸ்காரம் சுவாசம், உடல் மற்றும் மனம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செய்யும் பயிற்சிமுறை.
சில காரணங்களால் உடல் பயிற்சியோ அல்லது யோகாவோ செய்ய முடியாதவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்வதன் மூலம் சிறந்த பலனை பெறுவர்.

சூர்ய நமஸ்காரத்தில் உள்ள ஆசனங்கள் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது.

சூர்ய நமஸ்காரம்..

நம் முன்னோர்கள் நமக்கு தந்த ஒரு அற்புத பயிற்சி.
நாம் இயற்கையை விட்டு விலகி இருக்கும் இந்த நவீன காலத்தில் சூரிய நமஸ்காரம் நமது உடல்,மனம் போன்றவற்றினை நன்கு செலுமைப்படுத்த சூரியநமஸ்காரம் உதவுகிறது.

சூரிய நமஸ்காரம் செய்யும் முறை..

மேலே குறிப்பிட்ட பனிரெண்டு நிலைகள் செய்த பின்னர் சாதாரன நிலைக்கு வர வேண்டும்.

1.நமஸ்கார முத்திரை:

கால்களை ஒன்றாக வைத்தபடி நிற்கவும். கைகளை தலைக்கு மேல் தூக்கவும். கைகளை ஒன்றாக இணைத்து உங்களது மார்புக்கு நேராகக் கொண்டு வரவும். கைகளை வணங்குவது போல் கொண்டு வரவும். மீண்டும் கைகளை மேலாகத் தூக்கியபடி கீழே இறக்கவும்.மூச்சை வெளியிடுதல்

2.அர்த்த சக்ராசனம் செய்முறை:

மூச்சை உள் இழுத்தபடி, கைகளை மேலேத் தூக்கவும். கைகள் உங்கள் காதுகளை உராய்ந்தபடி இருக்க வேண்டும். மெதுவாக கைகளை பின்புறமாக வளைக்கவும். கைகளுக்கு இணையாக தலையும் கவிழ வேண்டும்.மூச்சை உள்ளிழுத்தல்..

3.பாதஹஸ்தாசனம் செய்முறை:

மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும். கைகளை கால்களுக்கு இணையாக தரையைத் தொடவும். தலை கால்களின் முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்க வேண்டும். இது அஸ்டபாதாசனம்மூச்சை வெளியிடுதல்..

4.அஸ்வ சஞ்சலன் ஆசனம் செய்முறை:

மூச்சை உள் இழுத்தபடி உங்களது வலது காலை பின்னோக்கி வைக்கவும். அதே சமயம் இரண்டு கைகளையும் இடது காலுக்கு இணையாக ஊன்றவும். தலையை மேல் நோக்கியவாறு பார்க்கவும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்கவும்.மூச்சை உள்ளிழுத்தல்..

5.சதுரங்க தண்டாசனம் செய்முறை:

மூச்சை வெளியே விட்டபடி பின்னோக்கி செலுத்திய வலது காலுக்கு இணையாக இடது காலையும் எடுத்துச் செல்லவும். கைகளை நன்கு நீட்டி ஊன்றவும். இடுப்புப் பகுதி நன்கு உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதாவது வளைவு தூண் போன்று உங்கள் உடல் அமைப்பு இருக்க வேண்டும்.மூச்சை வெளியிடுதல்..

6.அஷ்டாங்க நமஸ்காரம்செய்முறை:

மீண்டும் மூச்சை உள்ளிழுத்தபடி உடல் தரையில் படுமாறு வைக்கவும். கால்கள், முட்டி, கைகள், மார்பு மற்றும் நெற்றி ஆகியவை தரையை தொட வேண்டும். இடுப்புப் பகுதி மட்டும் சற்று உயர்ந்து இருக்க வேண்டும். இப்போது மூச்சை தற்காலிகமாக நிறுத்திவைக்கவேன்டும்தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்.

7.புஜங்காசனம் செய்முறை:

மூச்சை உள்ளிழுத்தபடி தலையை பின்புறமாக நீட்டவும். உங்கள் முதுகை எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு பின் பக்கமாக வளைக்கவும். இதைத்தான் புஜங்காசனம் என்று அழைப்பர்மூச்சை உள்ளிழுத்தல்.

8.அதோ முக சவனாசனம் செய்முறை:

மூச்சை வெளியே விட்டபடி, மெதுவாக கைகளை உயர்த்தவும். அதற்கேற்ப இடுப்பு மற்றும் தலையையும் உயர்த்தி மீண்டும் வளைவுத் தூண் அமைப்பை ஏற்படுத்தவும்மூச்சை வெளியிடுதல்

9.அஸ்வ சஞ்சலன் ஆசனம் செய்முறை:

மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தபடி, வலது காலை ஒரு அடிக்கு முன்னாடி முட்டியை மடக்கியபடி கொண்டு வந்து வைக்கவும். தலையை மேலாகத் தூக்கி கைகளை நேராக வைக்கவும்மூச்சை உள்ளிழுத்தல்.

10.பாதஹஸ்தாசனம் செய்முறை:

வெளியே மூச்சை விட்டபடி, வலது காலுக்கு இணையாக இடது காலையும் மடக்கியபடி கொண்டு வரவும். தலை முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும்மூச்சை வெளியிடுதல்.

11.அர்த்த சக்ராசனம் செய்முறை:

மூச்சை உள்ளே இழுத்தபடி மெதுவாக கைகளை உயர்த்தவும். பின்புறமாக வளைந்து கைகளைப் பார்த்தபடி தலை இருக்க வேண்டும்மூச்சை உள்ளிழுத்தல்.

12.நமஸ்கார முத்திரை:

அட்டவணையில் முதலில் கூறிய பிராணமாசனம் நிலையில் மீண்டும் வணக்கம் செய்யும் நிலைக்கு வர வேண்டும்.மூச்சை வெளியிடுதல்

யார் செய்யலாம்?

சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம்.

ஆண்டு முழுவதும் செய்யலாம்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும்.

இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது.
சூரிய நமஸ்கரத்திற்குச் செலவொன்றுமில்லை.
பளுவான கருவிகள் எதுவும் தேவையில்லை.
வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் தான்.

எவ்வளவு நேரம் செய்யலாம்?

சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும்.

முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும்.
ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது.
போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையாக வரும்.

ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.பின் உங்களால் இயன்ற முறை செய்யலாம்.
ஆனால் அதிக வலிவுடனோ அல்லது மிகவும் சிரமப்பட்டு செய்வது மிகவும் தவறு.

கர்ப்பிணிகள் 3 மாதங்கள் வரை செய்யலாம்.
பிறகு நிறுத்தி விட வேண்டும்.

குழந்தை பிறந்த பின் தக்க ஆலோசனையுடன் சிறிது சிறிதாகப் பயிற்சியை அதிகரிக்க வேண்டும்.

எப்பொழுது செய்யவேண்டும்?

காலை நேரம் சிறந்தது.
முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம்.
சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும்.

அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும்.

தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும்.

வேண்டியதெல்லாம் ஒரு சிறு ஜமுக்காளமும் துண்டும் தான்.

எச்சரிக்கை..

முதுகுப் புறத்தில் பிரச்சினை இருந்தாலோ, இடுப்பு எலும்புப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு தெளிவான அறிவுரையைப் பெற வேண்டும்.

சூரிய நமஸ்காரத்தின் பயன்கள்..

இதயத்தை முடுக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது.

இது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.
இதயத் துடிப்பைச் சமன் செய்யும்.
கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.

சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது.
கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கி கசக்கிப் பிடித்து விடுவது போன்று மசாஜ் செய்யப்படுகின்றன.

மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடுகிறது.
பசியின்மை பறந்தோடுகின்றன.
சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன.
நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது.
இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது.

ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.

சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது.
இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
பிற உயிரணுக்களைக் காட்டிலும் நரம்பு உயிரணுக்கள் மிக மிக தாமதமாகவே விழிப்புற்று உயிராற்றல் பெறுகின்றன.

இருப்பினும் இடையறாத முறையான பயிற்சியாலும் சலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுக நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க அளவில் வலுவடைகின்றன.

சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது.

அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.

தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது.
சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும்.

ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும்.
நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார்.

வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம்.
தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஓங்கும்.

சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன.

குறிப்பாக கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், தொடை, கெண்டைக்கால், கணுக்கால் முதலிய பகுதிகளில் தசைகள் பயிற்சியால் உரம் பெறுகின்றன.

கொழுப்பால் வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறையும்.
தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே சரியாக மலம் (கழிவுப் பொருட்கள்) வெளியேறுவதால் உடலில் விரும்பத் தகாத துர்நாற்றம் ஏற்படுவதில்லை.

சூரிய நமஸ்காரத்தில் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் அது எந்த விளையாட்டுப் பயிற்சி வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.
இளமை, நலம், அழகு மூன்றும் ஒருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தைக் கொடுக்க வல்லது.

யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

About
22/08/2018

About

22/08/2018

RELIEVE YOUR Sciatica Pain NATURALLY

Sciatica nerve is the longest nerve in the back of our body originating from hips region. The compression of the nerve causes scintilating pain in the lower back, which radiates till the foot.

When we do yoga poses as shown in the pic, it decompresses the nerve and gives relief from pain.

Do the asanas in the following order, preferably for 20 breaths. The asanas where one side of body is shown then 20 breaths, each side of the body.

1. Sasank Asana.
2. Bhujang Asana
3. Ardha Salabh Asana (do both legs).
4. Naukasana
5. Dhanurasana.
6. Janusirs Asana (do both sides).
7. Paschimottan Asana.

Take your medical practitioner's advice also.

(Please share the post, as it may help some one needy. Thank You).

வெந்தய டீ.....வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்பட...
18/03/2018

வெந்தய டீ.....

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…


அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.



நன்மை 1

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 2

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை 3

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை 4

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

நன்மை 5

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.



நன்மை 6

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை 7

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை 8

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை 9

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை 10

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை 11

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை 12

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை 13

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை 14

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.



நன்மை 15

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை 16

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை 17

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை 18

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை 19

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை 20

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

 #முடக்கத்தான்  #கீரையின்  #பயன்கள்:- முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இல...
14/03/2018

#முடக்கத்தான் #கீரையின் #பயன்கள்:-



முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்ட¡கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்ட¡ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு
அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பா கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

முடக்கத்தான் இலை

தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம்

2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.

இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதார‌ண‌த் தோசைமாவுடன் (ஒரு பெரிய‌ கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால், க‌ச‌ப்பு சிறிதும் தெரியாது.

நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: வாரம் ஒருமுறை முடக்கற்றான் இரசம்
வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு,
வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ்
கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர்
விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம்
வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம்
தயாரிக்க வேண்டும்.

மலம் சரிவரபோக ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை வெள்ளைப் பூண்டுபற்களில் ஐந்து நசுக்கி இதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகைஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டுஅடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டிவிடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால்

ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம்
சாதம்மட்டும் சாப்பிடலாம்.
மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்ப்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி
வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.
மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு,
பாஸ்பரம் படிவங்கள்தான் பாரிச வாயு எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடமஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துவரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும்.கருகருவென முடி வளர தொடங்கும்

இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும் .

நன்றி ‌: உணவே மருந்து.

05/03/2018

THE BLOOD TYPE DIET CHART!!!

Inflammation is your body’s response to injury, infection, allergies, stress or chronic disease. A certain level of inflammation is necessary and helpful, in order for your body to overcome these conditions. Problems arise when the inflammation becomes excessive or continues for too long.

Chronic inflammation greatly contributes to fatigue, pain, low mood and an inability to lose weight. The symptoms of a great variety of health conditions are aggravated by excessive inflammation. It is also thought that long term high levels of inflammation in your body speed up the aging process and increase your risk of heart attacks, strokes and cancer. Inflammation basically causes wear and tear inside your body; it wears your body out more quickly.

The best way to reduce inflammation is to remove or reduce the cause of the problem – for example, treat the infection, or remove the allergens or stress that are creating inflammatory chemicals.

Another way to overcome excess inflammation is to eat foods with natural anti-inflammatory actions. Think of these foods as a wet blanket over a fire.

Your blood type diet is the restoration of your natural genetic rhythm. Your blood type diet works because you are able to follow a clear, logical, scientifically researched plan based on your cellular profile.

Each food groups are divided into three categories: Highly beneficial (food that acts like Medicine), Foods allowed (food that are no harm to the blood type) and Foods not allowed (food that acts like a Poison).

Coconut oil

Coconut oil has enormous benefits to your immune system and digestive system. It is also quite a heat stable fat, meaning it tolerates high temperature cooking well and does not become oxidized and damaged like most vegetable oils.

Coconut oil is rich in medium chain fatty acids, particularly lauric acid, which is very easy to digest and your liver uses it easily for energy. The good fats in coconut oil have antimicrobial properties, and help to promote a healthy balance of good microbes in your digestive tract. Coconut oil is also very satiating; including some in your diet regularly can help to greatly reduce sugar and carbohydrate cravings.

Avocados

Avocados are also full of healthy fats. In this case the fats are primarily monounsaturated. Monounsaturated fats do not raise inflammation in the body like some omega 6 rich polyunsaturated fats can. They are also beneficial for the health of your arteries, and help maintain healthy blood pressure. Putting some avocado in your salad for lunch can help you feel full for longer, therefore not feel the need to snack on candy in the afternoons.

Oily fish

Can you spot the common theme? Many of the best anti-inflammatory foods are high in fat. Most natural fats are highly anti-inflammatory, whereas processed vegetables oils high in omega 6 fats are often pro-inflammatory.

Address

Kancheepuram
631502

Opening Hours

Monday 5am - 8am
6pm - 8pm
Tuesday 5am - 8am
6am - 8am
Wednesday 5am - 8am
6pm - 8pm
Thursday 5am - 8am
6pm - 8pm
Friday 5am - 8am
6pm - 8pm
Saturday 5am - 8am
6pm - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thirumoolar YOGA Kendhra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram