04/02/2023
மாதா பிதா குரு தெய்வம்
காஞ்சி மகா பெரியவர் பாதம் சரணம்!
காலச்சக்கரத்துக்கு இரண்டாம் இடம் சுக்கிரனின் வீடாகும்.
சுக்கிரன் சிறியதொகை அல்லது ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு காரகத்துவம் வாய்ந்தவர்.
இரண்டாம் இடம் தனம், வாக்கு, குடும்பஸ்தானத்தை குறிக்கும்.
பொதுவாக இரண்டாம் இடம் நமது முகத்தில் வாயை குறிக்கும்.
எப்போதும் இன்சொல் பேசுபவரிடம், பணம் நடமாட்டம் நிச்சயம் வரும் என்பது உறுதி.
எப்போதும் இன்முகத்தோடு புன்னகைப்பவரிடம் பணம் நடமாட்டம் கண்டிப்பாக இருக்கும்.
நீங்கள் சிரிப்பது என்னால் உணர முடிகிறது. உங்களது சிரிப்பில் நானும் மகிழ்கிறேன்.
இரண்டாம் இடம் சிரிப்பு மட்டுமல்ல நமது குடும்பம் நமது நல்வாக்கும் கூட, எப்போதும் குடும்பத்தினரோடு அனுசரித்து செல்லுங்கள்.
எப்போதும் நல் வார்த்தைகளையும், நல்வாக்குகளையும் மட்டுமே சொல்வேன் என உறுதி கூறுங்கள்.
எப்போதும் இனிமையாக சிரியுங்கள், மற்றவர்களையும் மகிழ்வியுங்கள். அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பணம் நிச்சயம் உங்களுக்கு வரும் என்பது உறுதி.
இந்த எளிய பரிகாரத்தை புன்னகையோடு மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
பெரும் மகிழ்ச்சியுடன்,
சந்திரமௌலி
+91 9597648974
ஜோதிடர், காஞ்சிபுரம்.
"மகிழ்வித்து மகிழ்"