Jai maharishi !!
******மகிழ்வுடன் வாழ்க!!******
Follow us on Twitter https://twitter.com/MahayogamF
Mahayogam YouTube channel
https://www.youtube.com/channel/UCQ9gHibLarhAwdacZE3GDMg மரணமில்லா பெருவாழ்வை அடைந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒளிதேகம் அடைந்த மகான்களின் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பயிற்சி முறைகள்....
இந்த மகா சித்த புருஷர்கள் வாழ்ந்ததர்கான ஆதாரங்கள் இலங்கை கதிர்காமதிலும்
, திருகேஷ்வரத்திலும்., இன்றும் உள்ளன.
அனைவரும் இந்த மரணத்தை வெல்லும் கலையை பயின்று "மகிழ்வுடன் வாழ்வோமாக"...
ஒளிதேகம்:
ஒளிதேகம் என்னும் மரணமில்லா பெருவாழ்வை அடைந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்துவம் பொருந்திய மண்ணுயிர் தொழும் மகான் மகாமகரிஷிக்கு இந்த பதிவு சமர்ப்பனம்..
இன்று உலகிலுள்ள அனைத்து நாகரீகங்களுக்கும் முன்னோடி இந்தியா என்பது அனைவரும் அறிந்த உண்மையே.அதன் ரகசியம் என்னவென்றால் அது ஆன்மீகம் என்றே சொல்லமுடியும்.இதை ஆணித்தரமாக இந்த உலகிற்கு முதன்முறையாக இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறியவர்,வீரத்துறவி, விவேகானந்தர் தான்.
மிகப்பெரிய ஆன்மீக மாற்றங்களை ஏற்படுத்திய சித்தர் பாரம்பரியம் குறிப்பாக ஒருங்கினைந்த தமிழ்நாட்டிலேயே (தற்பொழுது ஆந்திரா, கேரளா கர்நாடகா) தழைத்தோங்கியிருந்தது. அதன் தலைப்பெரும் தலைமகன்தான் முதல் மரனமில்லா பெருவாழ்வு என்ற இறவா பெருநிலையை எய்திய கந்தன் ஆவார்.
இன்று உலகில் 80 சதவீதமான மொழிகள் தமிழிலிருந்தே தோன்றியது என மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.அத்தகைய சிறப்புமிக்க தமிழின் கடவுள்தான் கந்தன்.அவரின் மிகப்பிரதானமான சீடர் நமது ஆதி குரு அகத்தியர் ஆவார்.தமிழின் இலக்கணத்தையும் புனிதத்தையும் உலகுக்கு உணர்த்தியவர்.
அகத்தியரின் ஆன்மீகம், மற்றும் உலக பணிகளில் அவருடன் நெருங்கியிருந்த பல சீடர்களில் மிக முக்கியமாக கருதப்படுபவர் மூலகுரு போகர் ஆவார். இந்தியா, சீனா, இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆன்மீகம் , மருத்துவம் போன்றவற்றை சிறப்புர செய்தவர்.இவர் தொட்டு சித்தர் பாரம்பரியம் என்பது முழுமையாக இம்மண்ணில் தழைத்தோங்கியது.
போகரின் குரு பாரம்பரியத்தில் அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் பிராதானமான நான்கு சீடர்கள் அவர் நிலைக்கு உயர்ந்திருந்தார்கள்.அதாவது ”மரணமில்லாப் பெருவாழ்வை” அடைந்தார்கள்.
அவர்கள் புலிப்பாணி சித்தர், இராமத்தேவர், மஹா அவதாரம் பாபாஜி மற்றும் நமது பரம குரு மஹாமகரிஷி ஆவார்.
இதில் புலிப்பாணி சித்தர் போகருடன் சீனப்பயணம் மேற்கொண்டு அங்கே லாவோட்-சூ, லீ-சுவாக மாபெரும் யோகத் தத்துவத்தை நிறுவினார்கள்.அடுத்து இராமத்தேவர்,யாகோபு முனிவர் என்ற பெயரில் அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு நமது பாரம்பரியத்தை நிலைநாட்டியவர்.அவரைத் தொடர்ந்து மஹா அவதாரம் பாபாஜி,அகத்தியரால் கிரியா யோகத்தின் உயர்நிலை தீட்சயை பெற்று வடஇந்தியாவிற்கு சென்று அங்கிருந்து தன் குரு பாரம்பரியத்தையும்,கிரியா யோகத்தின் மகிமையையும் அதன் மேன்மையையும் இந்த உலகிற்கு தன் சீடர்கள் மூலம் வழங்கி கொண்டிருப்பவர்.
இதில் போகருடனேயே வெகுகாலம் வாழ்ந்தவர் தான் நமது பரமகுரு முதலாம் மஹாமகரிஷி.அவரின் சீடர் இரண்டாம் மஹாமகரிஷி.அவரது இயற்பெயர் ராக அரவிந்த ரிஷி.இவர் ஆச்சாரமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்து ஆன்மீக ரகசியத்தை பாமரனுக்கும் உணர்த்திய மகான் ஸ்ரீ ராகவேந்திரர். மரணமில்லா பெருவாழ்வை அடைவதற்காக எடுத்த பிறப்பு. முதலாம் மஹாமகரிஷிக்கும் இரண்டாம் மஹாமகரிஷிக்கும் நூற்றாண்டுகால இடைவெளி உண்டு.நேரடி குரு சீடர் என்றில்லாமல் சூட்சுமத்தில் அமைந்திருந்தது.
அவரின் நேரடி சீடர்தான் சுமார் 320 ஆண்டுகளாக இறவா நிலையை அடைந்து இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்றாம் மஹாமகரிஷி. இவரின் இயர்பெயர் கூணாந்த வர்மா. இலங்கை,கதிர்காமம், யாழ்ப்பாணம், திரிகோணமலை,மன்னார், திருக்கேதீஸ்வரம் , பேசாலை போன்ற இடங்களில் ஆன்மீக அதிசயங்களை நிகழ்த்திய மஹாமகரிஷி இறுதியாக திருக்கேதீஸ்வரத்தில் சீர்மிகு சிவாலத்தின் அருகில் உள்ள ஆலமரத்தடியில்
கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள், மாலை 5.40 மணியளவில் சில சீடர்கள் முன்னிலையில் தன்னுடைய ஊன் உடலை ஒளி உடலாக மாற்றி சொரூப சமாதி நிலையை அடந்தார்.
டிசம்பர் 12ஆம் நாள் கார்த்திகை, பெளர்ணமி அன்று அரூப நிலையை அடைந்தார். நாம் அனைவரும் அறிந்த வகையில் வள்ளலார் அந்த நிலையை அதாவது மரணமில்லா பெருவாழ்வு அடந்தவர்களில் குறிப்பட்த்தக்கவராவார்.