
30/03/2024
இன்றைய வரலாறு :
ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம்.
பிரெஞ்சு ஆளுநரின் மொழிப் பெயர்ப்பாளராக இருந்தவரும், பன்மொழி புலமை பெற்றவருமான ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் 1709-ஆம் ஆண்டு மார்ச் 30-ல் பெரம்பூரில் பிறந்தவர். இவர் தனது பணிக்காலத்தில் 1736 முதல் 1761 வரை 25 ஆண்டுகள் எழுதிய நாட்குறிப்புகள், பிற்காலத்தில் வரலாற்று ஆவணமாகவும், இலக்கியமாகவும் போற்றப்பட்டது. இவருடைய நாட்குறிப்பில் அன்றைய அரசியல், கலாச்சாரம், நிர்வாகம், பிரெஞ்சுப் படையெடுப்பு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை, கப்பல் போக்குவரத்து, வாணிபம், பிரெஞ்சு அரசின் போர்த்தந்திரங்கள் மற்றும் அக்காலத்தின் நீதிவழங்கல் என பலவற்றை விவரித்து கூறியுள்ளார்.