12/10/2024
சித்தர்கள் கண்ட தத்துவங்கள் 96
---------------------------------------------------------------
ஆன்மீக பாதையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு மனிதனும் அறியவேண்டிய முதல் விடயம் இந்த 96 தத்துவங்களும்....
இதனை நீங்கள் திரும்ப திரும்ப படித்துப் புரிந்து கொண்டாலே போதும். யோகநிலையில் வெற்றி கிட்டும் என்பது உறுதி......
தத்துவங்கள் 96....என்பதை யோகநிலையில் பயணிப்பவர்கள் அறிந்திருக்கவேண்டும். அதனை அறிந்து செயல்படாதவர்களை பற்றி சித்தர் கொங்கணர் கீழ்கண்டவாறு சொல்கிறார்.....
கொங்கணர் உணர்ச்சி மயமான பாடல்களால் உள்ளத்தை நெகிழ வைக்கும் தன்மை கொண்டவர். கொங்குநாட்டை சார்ந்தவர் ஆகையால் இவர் கொங்கணவர் என்ற பெயர் பெற்றார்...
தானென் தத்துவத்தை யறிந்தானாகில்
தவசியவ னறியாட்டால் சங்மாண்டி
வானென்ற வத்துவித மறிந்தானாசான்
வகையறியான் குரூவல்ல மாடுமேய்க்கி
கானென்ற சரக்குமறை யறிந்தோன்வாதி
காணாட்டால் வாதியல்ல கழதையோகி
யூனென்ற பெண்ணாசை விட்டோன்யோகி
வோகோகோ விடாவிட்டா லுலுத்தநாயே....
......என்று தனது தத்துவிளக்கத்தில் குறியுள்ளார்.....
இதன் விளக்கம்;
"அதாவது தத்துவங்களை அறிந்தவன் தவசியாவான்.
அறியாதவன் வேஷதாரியே... அத்தத்துவத்தை அறிந்து உணர்ந்தவனே குருவாக முடியும். இல்லையேல் குருவாக முடியாது. சரக்கு முறையை அறிந்தவனே வாதியாான். இல்லையேன், அவன் கழுதைக்கு சமமாவான். பெண்ணாசையை விட்டவனே யோகியாவான். அதனை விடாதவன் தெருநாய்க்கு சமமாவான்."
என்று கூறுக்கின்றார். எனவே தத்துவங்களை தெளிவாக தெரிந்து கொண்டு ஞானபாதையில் முன்னேறி செல்லுங்கள். என் திருமந்திர வகுப்பு மாணவர்களே என்கிறேன்......
இந்த உலகம் இறைவனின் படைப்பு என்பது தான் சித்தர்களின் கொள்கை. சிவன்தான் முதலாவது சி்த்தன். சீவனே சிவன் என்பதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் கண்டவர்களே சித்தர்கள்.
ஆதியாகிய கடவுள் முதலில் பஞ்ச பூதங்களைத் தோற்றுவித்தான். பல உலகங்களை படைத்தான். எண்ணற்ற தேவர்களைப் படைத்தான். எல்லாவற்றையும் அவனே தாங்கி நின்றான். ஒரு மனிதனி்ன் ஆயுட்காலம் அவன் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்கள் அவன் கர்மாவால் சுமக்க வேண்டிய நோய்.
எல்லாவற்றையும் விட அவன் எப்படிப்பட்ட வாழ்க்கையை அடையவேண்டும் என்பதையும் தாயின் கருவிலேயே இறைவன் அமைத்து விடுக்கின்றான்.
சிலர் தாம் முன் செய்த வினையை நம்பாதவர், விதியை நம்பாதவர், பாவ புண்ணியத்தை நம்பாதவர்கள் அவ்வப்போது ஏற்படும் ஆசைகளுக்கு ஏற்ப வாழ்வதே வாழ்க்கையென நினைப்பவர்கள் ஒரு போதும் என் குரு திருமூலர் பெருமான் கூறும் இந்த உண்மைகளை ஒரு போதும் உணரமுடியாது....
அதாவது வாழ்கைக்கு அப்பால் ஏதே ஒன்று உள்ளது என்பதை அறிவதால் உண்டாகும் பீதி இந்த உடலை ஞானியர் சரீரம் என்று கூறுவர். இந்த சரீரம் எட்டுவகையான கயிற்றால் முறுக்கப்பட்டுள்ளது.
அவை சுவை, ஔி, ஊறு, ஓசை, நாற்றம், மனம், புத்தி, அகங்காரம் என்பவையாகும்.
இதில் சுவை, ஔி, ஊறு, ஒசை, நாற்றம் இவை ஐந்தும் ஐம்புலன்களால் அறியத்தக்கவை.
மனம், புத்தி, அகங்காரம்
என்பவை சீவனின் அந்தக் கரணத்திலிருந்து தோன்றுபவை.
இவையோடு தச வாயுக்களும் கருவிலேயே அமைந்து விடுக்கின்றன. அவைகள் பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன். தனஞ்செயன் என்பன..... இந்த பத்து வாவுக்களுடன் விகாரங்கள் என்று சொல்லகூடிய எட்டுவகை... அவை காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பை, அகங்காரம் என்பவை.....
இத்துடன் ஒன்பது வாயில்களான கண் இரண்டு, காது இரண்டு, நாசித் தவாரம் இரண்டு, வாய்ஒன்று, நீர்த் துளை ஒன்று, மலத்துவாரம் ஒன்று. இந்த ஒன்பதும் கருவிலேயே அமைந்து விடுக்கின்றன.
இவைகள் தவிர குண்டலியாகிய நாகமும் பனிரெண்டு விரற்கடை செல்லும் பிராணன் என்ற குதிரையும் உள்ளன. இந்நிலையில் கரு வளர்ச்சி பெறும்போது, மாயை என்ற நினைவு உண்டாகின்றது. அப்போது சுத்த ஞானமாக இருக்கின்ற துரியம் உடைக்கப்பட்டு தர்மம், ஞானம், வைராக்கியம், ஐஸ்வரியம், அதர்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைஸ்வரியம் என்ற காமியங்களான குணங்கள் எட்டு உண்டாகின்றன.
அப்போது சூக்சுமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்ற வாக்குகள் நான்கும் உண்டாகின்றன..
இந்த உடலுக்குள் முக்குணங்கள் என்ற பஞ்சேந்திரியங்களும், காமியங்கள் எட்டும், வாயுக்கள் பத்தும் எவ்வாறு வந்து புகுந்தன என்பது விளங்காத புதிர்...
இந்த உடலை தோற்றுவித்து அதற்குள் உயிரையும் தோற்றுவித்து, அந்த உடலில் ஒன்பது வாயில்களையும் வைத்து, சிரசில் ஆயிரம் இதழ்த் தாமரையை வைத்து அங்கே ஜோதியையும் அமைத்த இறைவனை திருமூலர் வாழ்த்துகின்றார்.
உடல் தத்துவத்துடன் இறைத் தத்துவத்தையும் இனைத்தே சித்தர்கள் பாடியுள்ளனர். இந்த உடலை மட்டுமே நினைப்பவன் மனம் போனபடி சுகங்களை அனுபவிப்பதற்காக மானம் கெட்டு, மதிக்கெட்டு, அறநெறிவிட்டு அல்லாதவைகளை தொட்டு அழிந்து போவான் என்பதால் திருமந்திரம் ஒவ்வொரு படியிலும் இறைவனை நினைவூட்டுக்கொண்டே வருக்கின்றது.
ஆதாரங்கள் ஆறு, பூதங்கள் ஐந்து. இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. பஞ்ச பூதங்களுக்கு அப்பால் எதுவும் இல்லை என்பதே உண்மை. இந்த பஞ்சபூதங்களுக்கு உரிய இடங்களையும், அவற்கான தெய்வங்களையும் இந்த உடலிலேயே காணலாம். என்பதுதான் சித்தர்களின் நெறி. இதுவே சித்தர்களின் உடல் தத்துவம் எனலாம்.
இப்படிப்பட்ட இந்த உடலை அழியாத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதே இவர்களது அடிப்படை கொள்கையின் மேலேயே சித்த மருத்துவத்தையும் கூறினார்கள். அதனால் உடல் தத்துவத்தில் பஞ்ச பூதங்களின் பங்கு என்ன என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
சரி; இந்த பஞ்சபூத தத்துவத்தை அறிந்துக்கொள்ள வேண்டுமாயின் ஆறாதாரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கிடக்கின்றன. எனவே ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள முடியாது.
இந்த ஆறாதாரங்களைப் பற்றி அறிய முற்படும்போது முதலில் குண்டலினியைப் பற்றி தெரிந்து கொண்டே ஆகவேண்டும்.
எண் சான் உடம்பில் சிரசே பிரதானம். எல்லாவற்றையும் உணரும் ஆற்றல் கொண்ட மூளை கபால ஓட்டிற்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளது.
கை கால்கள், செயல் உறுப்புகள் மனிதன் செய்யவேண்டிய அனைத்து செயல்களையும் அவை செய்கின்றன. உடலில் உள்ள நடுபகுதி இடுப்பின் அடிபாகம் முதல் கழுத்து வரையுள்ள இப்பகுதியே உடல் உயிருடன் இருப்பதற்கான உறுதுணையாகிறது. உணவை உட்கொண்டு உடலை வளர்க்கிறது. காற்றை உட்கொண்டு உயிரை வளர்க்கிறது. உடம்பில் உயிரை உணர்வற்கான ஞானத்தை பெருக்கும் யோக தண்டாகவும் இது விளங்குகின்றது.
மூச்சுப்பைகள், இதயம், உணவுக்குழாய்கள், கணையம், வயிறு, சிறுகுடல், பெருகுடல், எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் முதுகெலும்பு,விலா எலும்புக்கூடு அடிப்பகுதியில் தொடை எலும்புகளோடு இணையும் எலும்புப் பகுதிகள் நரம்பு இரத்தகுழாய்கள் என எல்லா நரம்புகளும் முதுகுதண்டு வழியாகவே மூளையை அடைக்கின்றது. இவை தவிர இந்த முதுகு தண்டு ஆறாதாரங்களுக்கும் அடையாளம் காட்டும் யோக தண்டமாகவும் விளங்குகிறது.
என் குரு திருமூலர் பெருமான் இறைவனைப்பற்றி கூறும்பொழுது, மலத்துவாரதிற்கு இரண்டு விரற்கடை மேலேயும் சிறுநீர் துவாரத்திற்கு கீழேயும் இறைவன் உள்ளான். அவன் அங்கே குண்டலினி வடிவில் சுருண்டு படுத்து கிடக்கிறான். அவனை காண வேண்டுமானால் எல்லோராலும் முடியாது. அவனைக் காட்டிக் கொடுப்பதற்க்கும் எல்லோராலும் முடியாது. சிறந்த குருவால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட குருவை அடைந்தால் அவர் உபதேசத்தால் மட்டுமே நீ அறிந்து கொள்ள முடியும் என்று தனது பாடல் மூலம் விளக்கியுள்ளர்.
இப்போது இறைவன் எங்கே உள்ளான் என்பதை அவர் காட்டிவிட்டார். யோகத்தை பற்றி பேசும் நூல்கள் எல்லாமே குண்டலினி சக்தியை பற்றி தான் பேசுகின்றன. அது ஒரு பாம்பு போன்று சுருண்டுகிடக்கின்றன என்று கூறுகின்றார்கள். முதுகுத் தண்டின் அடிப்பாகம் அது உடம்புக்கு ஆதாரமான அடிப்பாகம். நாம் எதையும் ஆரம்பிக்கும்போது அடியிலிருந்து தான் ஆரம்பிப்பது வழக்கம். மேலும் எல்லா நரம்புகளும் முதுகுதண்டின் வழியாகவே மூளையைச் சென்று அடையவேண்டும். இந்த முதுகெலும்பு என்பது ஒரே எலும்பல்ல. மோதிரங்களை போன்று வளையங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட ஒரு கோர்வை.
அந்த எலும்புகளை அடுக்கும் போது நடுவில் ஏற்படும் துளையின் வழியாகவே நரம்புகள் செல்கின்றன. எல்லா நரம்புகளும் கழுத்துக்கு பின்புறம் உள்ள பிடரியில் இணைக்கப்பட்டு மூளைக்கு செல்கிறது. இந்த நரம்புகள் அனைத்தும் மூளையின் கட்டளைப்படி இயங்குபவை. நமது நரம்பு மண்டலத்தின் கட்டுபாட்டு அறை மூளையாகும்.
யோகப்பயிற்சியில் ஈடுபடுகின்றவர்கள் அடிப்பகுதியில் உள்ள குண்டலினி சக்தியை படிப்படியாக மேலே எழுப்பி சிரசில் உள்ள சஹஸ்ராரத்தி்ல் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்.
இதில் ஆதாரங்களை யோகிகள் இன்ன இடத்தில் உள்ளது என்பதை சுட்டிகாட்டியுள்ளார்கள்.
உரைத்ந பார் நவ்வும் உதகத்தில் மவ்வும்
வரைத்த தீ சியும் வாயும் வகாரமும்
உரைத்தவான் யவ்வும் எழுதி ஓங்காரம்
நிரைத் தெழுந்நவ் வுடன் நின்றன நாடியே
என்று என்குரு திருமூலர் கூறுகின்றார்......
நிலம்............."ந"
நீர்..................."ம"
நெருப்பு..................."சி"
காற்று............."வ"
வான்................."ய"
இத்துடன் ஓங்காரம் சேர்த்துக் கொள்ள
வேண்டும். இந்த ஓங்காரமாகிய குண்டலினியை எழுப்ப, பஞ்ச பூதங்களை ஆதார சக்கரங்களின் மூலம் சகஸ்ராரத்தை எட்டிபிடிக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.
திருமூலர் பெருமானின் வழியில்,
கால்களில் "ந"காரமும்,
வயிற்றில்......"ம"காரமும்,
நெஞ்சில்..........."சி"காரமும்,
கழுத்துக்கு முன்புறம்...."வ"காரமும்,
நெற்றியில்......."ய"காரமும்
என பஞ்சபூதங்கள் விளங்குகின்றன.
மேலும் நாம் செவியின் மூலம் ஒலியும், உடம்பின் மூலம் தொடு உணர்வையும், கண்களின் மூலம் தோற்றங்களையும், நீரின் மூலம் சுவையையும், மூக்கின் மூலம் வாசனையையும் நாம் உணர்கிறோம்.
மூலாதாரம் அதற்கு பத்து விரக்கடை துாரத்தில் சுவாதிட்டாணம், உந்தியில்....மணிபூரகம்,
மார்பில்....அநாகதம், கழுத்தில் .....விசுத்தி,
நெற்றியில்....ஆக்கினை என ஆறு ஆதாரங்களை பற்றி என்குரு திருமூலர் கூறுகிறார்.
அடுத்த பாடல் அந்தந்த ஆதாரங்களில் விளங்கம் கடவுள்களை குறிப்பிடுகிறது....
மூலாதாரத்தில்..............கணபதி
சுவாதிட்டானத்தில்..........பிரம்மா
உந்தியில்...............விஷ்ணு
மார்ப்பில் ...............ருத்திரன்
வாயுவில்.............. மகேஸ்வரன்
ஆகாயம்...........சதாசிவன்.
மண்ணும் + நீரும் சேர்ந்தால் உடல்.
விண்ணும் + வாயுவும் சேர்ந்தால் உயிர்.
இவற்றுடன் நெருப்பும் சேர்ந்து கலந்து தண்மையான நெருப்பாக சிகாரம் அமர்கிறது.
சிகாரம்....வகாரம்...யகாரம்...சேரும்பது சிவனும் சக்தியும் கலந்த ஆன்மாவாகிறது.
வேதத்தில் படைத்தல், காத்தல், அழித்தல். சித்தர் நெறியில் இவற்றுடன் மாயையும் அனுக்ரகமும் சேர்ந்து கொள்கிறது.
"சிவ சிவா வென்றாற் றிரு நடமாகும்
சிவ சிவாவென்றாற் சீவனும் முத்தியாம்
சிவ.சிவா வென்றாற் சீவனும் சித்தியாம்
சிவ சிவா வாசி சிவசிவந் தானே"
ஐந்து பூதங்களாவன;
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்.
பிருதிவி என்பது மண்
அப்பு என்பது நீர்
தேயு என்பது தீ
வாயு என்பது காற்று
ஆகாயம் என்பது ஓசை
மண் - பொன்னிறம்
நீர் - படிக நிறம்
தீ - சிவப்பு
வாயு - கருப்பு
ஆகாயம் - கார்மேகம் புகை போன்ற நிறம்.
இதுவே பஞ்சபூதங்களின் நிறம் ஆகும்.
பிருதிவிக்கு தேவன் பிரம்மா. இது சுவாதிட்டானம் என்ற ஆதாரத்தில் இவர் தனது தேவியுடன் அமர்ந்திருப்பார்.
இது மூலாதாரத்தின் அருகில் உள்ளது. இதற்கு ஆறு இதழ்கள் இதன் பீஜம்:ந இதன் கூறாக மனித உடலில் விளங்குபவை எலும்பு, தோல், தசை, நரம்பு, மயிர் என்பன..........
நீருக்கு தெய்வம் விஷ்ணு. அவருக்குறிய ஆதாரம் உந்தி. ஸ்தானத்திக்கு மணிபூரகம்.
இந்த மணிபூரகம் சிறிய பிறைகளைப் போன்ற பத்து இதழ்களை கொண்டவை. இதன் பீஜம்:ம. இதன் கூறுகள் மனித உடலில் உள்ள இரத்தம், சீழ், மூளை, மச்சை என்பவை.
தீ இதன் தெய்வம் ருத்ரன். இவருடைய ஆதாரம் அநாகதம். இது முக்கோண வடிவம். சுற்றிலும் பன்னிரண்டு இதழ்கள் காணப்படும் இதன் பீஜம்:சி ஆகும். இதன் கூறுகள் தூக்கம், போகம், பயம், சோகம் என்பவை.
அடுத்தது விசுத்தி. இது கழுத்தின்
முன்பக்கம் இருப்பிடமாக கொண்டது. இது பதினாறு இதழ்களும் அறுகோண சக்கரமும் உடையது. இது வாயுவின் இருப்பிடம் ஆகும். இதன் பீஜம்:வ ஆகும். இதன் கூறு கிடத்தல், நிற்றல், ஓடல், ஆடல், இருத்தல் போன்றவைகளாம். அதாவது. வாயு ஒரு இடத்தில் இருக்குமாறு ஓடிக்கொண்டு தானே இருக்கும்.
சித்தர்களின் குரல் நண்பர்களே, இந்த ஐம்பூதங்களின் தன்மையை திருமூலர் பெருமான் எவ்வளவு அற்புதமாக விளக்கியுள்ளார். பார்த்தீர்களா....
ஆக்ஞா சக்கரம் இரண்டிதழ்களோடு கூடிய வளையம். இதனுள் சதாசிவனும் அன்னை மனோன்மணியும் வீற்றிருப்பார்கள். இதன் பீஜம்:ய. இது ஆகாய ஸ்தானமாகும். இதன் கூறாக காமக் குரோத லோப மோக மத மாச்சாரியம் என்னும் இயல்புகளை கூறுவர்.
இவைகளை பற்றி நிலையாக எதையும் சுட்டிக் காட்ட முடியாது என்ன காரணத்தால், இவை தோன்றின எனவும் இதனை தெளிவுப்படுத்தவும் முடியாது. இது ஒரு வெட்டவெளி வின்னைப்போன்று இவ்வியல்புகளுக்கு உருவம் இல்லாமல் அமையும் ஒரு அபூர்வசக்திகள் எனகொள்ளலாம்.
தசநாடிகள்:-
----------------------
சித்தர்கள் பத்து நாடிகளைப்பற்றி கூறுகின்றார்கள். உதாரணமாக சித்த மருத்துவர்கள் நோயின் தன்மையை அறிய நாடி பிடித்து பார்ப்பார்கள். அவர்கள் மூன்று நாடிகளை சொல்வார்கள் அதாவது;
வாதநாடி, பித்தநாடி, சிலேத்துமநாடி என்று பார்ப்பார்கள். இதன் விபரத்தை சொல்கிறேன்.
வாதம் வாயுவாலும், பித்தம் வெப்பத்தாலும், சிலேத்துவம் நீரினாலும் உண்டாக்கின்றன. நமது உடலில் வாதம், பித்தம், சிலேத்துவம் இவை மூன்றும் குறையாமலும் கூடாமலும் இருக்கும் காலத்தில் உடலில் எந்த நோயும் வராது. அதில் ஒன்று குறைந்து ஒன்று கூடினால் உடலில் நோயின் தாக்குதல் அதிகமாகும்.
அதாவது...வாதத்தில் வாதம்,
பித்தத்தில் பித்தம்,
சிலேத்துமம் என்னும் வாதத்தில் வாதபித்தம்.
வாதத்தில் பித்த பித்தம் வாதத்தில் சிலேத்துவ பித்தம்... இப்படி ஒவ்வொன்றாய் பார்த்து வைத்தியர்கள் நோயை கண்டுபிடித்து விடுவார்கள்.
இதற்கு மிகவும் பொறுமையும் நீண்டகால பயிற்சியும் தேவை.
இதில் சித்தர்கள் என்ன செய்தார்கள் என்றால் இந்த உடலை ஒரு உலர்ந்த குடுவை போலாக்கி அதனுள் நடக்கும் செயல்களை ஔி கண்களால் நோக்கி இந்த தச நாடிகளின் செயல் முறைகளை உணர்ந்து உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள். இது உடலை அறுத்து பார்க்கும் மருத்துவத்தால் கூட முடியாது. அறுத்து பார்பவர்களுக்கு ஒரு பிணம் வேண்டும். எப்போது பிணமாகி விட்டதோ அதில் உயிர் இயக்கத்தை காணமுடியாது.
மனித உடல் என்பது, ஒருஇயந்திரம் அல்ல அதாவது இயந்திரத்தில் ஓடும் கருவிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் மனித உடலில் உள்ள ஒவ்வொரு அணுவுக்கும் உயிர் இருக்கின்றது. சித்தர்கள் தம் உடலை தாமே ஆராய்ந்து தான் பல உண்மைகளை கூறியிருக்கின்றார்கள். இது நம்மால் முடியுமா...?
எனவே நீங்களும் சித்தர் நெறியில் இருந்து யோகலையை பயின்று பாருங்கள் முடியுமா... முடியாதா என்பது உங்களுக்கே தெரியும்.
நாடிகளின் வகைகள்;
வாதத்தின் கூறாகவுள்ள தச நாடிகள் மூன்று. இவைகள் மூன்றும் வாயுகளின் வழியில் செல்லும் பாதைகளாகும்.
பித்தத்தின் கூறாக உள்ளவை நான்கு. இவை வெப்பத்தை துணையாக கொன்டு செயல்படுபவை.
சிலேத்துமத்தின் கூறாக உள்ளவை மூன்று. இவை நீரின் துணையால் இயங்கபவை.
ஆக, இந்த பத்து நாடிகளும் தச நாடிகள் ஆகும். இதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் தான், தச நாடிகளுக்கும், தச வாயுக்களுக்கும் உள்ள வேறுபாடு அப்போது தான் விளங்கும்.
இதை யூகிமுனிவர் ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளார்......
"சிறந்த இடை பிங்கலையும் சுழினையோடு
சிறப்பான காந்தாரி யத்திச் சிங்கூவையாம்
பிறந்த அலம் பூரூடனொடு குகுதன்றானூம்
பேரான சங்கினியும் வயிரவன்றான்
திறந்தவிவை பத்துந்தான் நாடியாகம்
திரிமூன்று நாளையினி லொடுங்கும்பாரு
மறந்ந இடை பிங்கலையும் சுழினை. மூன்றும்
வாதத்திலொடுக்கமென வகக்கலாம்"
பத்து நாடிகள் என்பவை....
இடங்கலை, பிங்கலை, சுழிமுனை என்பவற்றோடு,
காந்தாரி, அத்தி, சிங்கவை, அலம்புருடன், குகுதன், சங்கினி, வயிரவன், என பத்து நாடிகளாம்.
இதில் இடங்கலை, பிங்கலை, சுழிமுனை இவை மூன்றும் வாதத்தில் ஒடுங்கும் இயல்புடையவையாகும்.
இந்த நாடிகளின் பணியும் அவை எப்படி செயல்படுகின்றது என்ற விவரத்தையும் பார்ப்போம்.....
இடைகலை, பிங்கலை என்ற இரண்டு நாடிகளும் உடம்பில் பின் அடிப்பாகமாகிய மூலத்திலிருந்து கிளம்பி சுழிமுனையோடு கூடி நெற்றிக்கு ஏறி சிரசு வரை சென்று முட்டி, அவை உகார வளைவில் திரும்பி வரும். வழி நாசி, நடுப்புருவம், நெற்றி ஆகிய இடங்களை தொட்டுக்கொண்டு மீண்டும் மூலத்தில் சேருகின்றது.
அடுத்து,கந்தாரி என்ற நாடி உந்தி கமலத்தில் இருந்து கிளம்பி நரம்புகள் ஏழுக்கும் உருவமாகி மேலே சென்று சிரசில் மூட்டி மீண்டும் கண்டத்தில் புகுந்து நாவின் அடியில் வந்த அமர்ந்து விடுக்கின்றது.
அடுத்து அத்தி, சிங்குவை என்பன இரண்டும் மூலத்தின் மேற்பகுதியில் இருந்து கிளம்பி மேலே ஏறி இரண்டு செவிகளில் உள்ள காதுகளை தொட்டுக்கொண்டு நரம்புகளில் எல்லாம் துடிப்புகளை உண்டாக்கிக் இரண்டு கண்களில் வந்து நிற்கும்.
அடுத்து அலம்புருடன், வயிரவனும் என்ற இரண்டு நாடிகளும் அடிமூலம் பற்றி மேலே ஏறி இரண்டு கன்னங்களிலும் வந்து நிற்கும்.
அடுத்து சங்கினியும் குகுதனம் என்ற நாடிகள் நாபித் தனத்தில் தோன்றி குதம் வரையில் ஓடிக்கொண்டுயிருக்கும்.
இப்படி யூகி மாமுனிவர் நாடிக்களைப்பற்றி கூறும் இந்த செய்திகள் வியப்பாகவும் விந்தையாகவும உள்ளது. இப்படியும் இருக்குமா என்ற ஐயப்பாடு சிலருக்கு உணடாகலாம். அவை தேவையில்லை. அதாவது இதை நாம் இன்னும் உணரவில்லை தெரிந்துகொள்ள பல வழியிருந்தும் நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிக்க வில்லை. பல நூற்றுக்கணக்கான சித்தர்கள் நூல்கள் இருந்தும் நாம் அதனை படிக்கவில்லை. இது மேல்நாட்டு மருத்தவ படிப்புக்கு இது அவசியம் அற்றது. நமக்கு பலருக்கு அன்றடா வாழ்க்கையே ஒரு சுமையாக போய்விட்டதனால் பெரும்பாலானவர்கள் படித்து உணர வேண்டிய இந்த அருமையான நூல்களை விட்டு விட்டு; துணுக்குகளையும் குட்டி கதைகளையும், பால் உணர்வு கதைகளையும் படித்து பொழுது போக்குவதில் ஈடுபட்டுவிட்டனர்.
சுருக்கமாக.....நாடிகள் பத்தில் காந்தாரி என்ற நாடி உந்தியைப் பற்றிக் கொண்டும், சங்கினி, குகுதன் என்ற நாடிகள் உந்தியை இருப்பிடமாக கொண்டு செயல்படுகின்றன. மற்றவைகள் எல்லாம் மூலாதாரமாகிய குதத்தில் இருந்தே அதற்கு மேல் அல்லது கீழ்ப்புறமிருந்தோ தோன்றி செயல்படுகின்றன. இவ்வளவு தான் நாடிகளின் ரகசியம்.
தச வாயுக்கள்:-
---------------------------
பத்து விதமான வாயுக்கள் முறையே;
பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்ற பத்து விதமான வாயு நாடிகளைப் பற்றி அடுத்து சொல்கிறேன்....
சித்தர்கள் இந்த உடலில் பத்து விதமான வாயுக்கள் இந்த நாடிகளில் இயங்குகின்றன என கூறுகின்றார்கள். உடலுக்குள் காற்று எங்கே இருக்கின்றது? அது நடமாடும் பாதை எங்கே? என்று எனது மாணவர்களுக்கு கேள்விகள் எழும். ஆனால் மூச்சு காற்று மட்டும் தானே உள்ளது. வேறு ஒன்றும் இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு ஒன்று மூச்சு காற்றை அவர் மறுக்க முடியாது, அதற்கான கருவிகள் உடலில் உள்ளதா இல்லை அந்த காற்றின் செயல்பாட்டை நாம் உணரலாம். அப்படியானால் வாயுக்கள் எங்கே....?
சாப்பிட்ட பின் சிலர் ஏப்பம் விடுவார்கள். அதற்கு பெயர் அபானவாயு. சரி இவை எப்படி உண்டாகின்றன என்றால் நாம் சாப்பிடும் போது கொஞ்சம் காற்றையும் சேர்த்து விழுங்கி விடுவதால், அது தான் ஏப்பமாகவும் அபான வாயுவாகவும் வெளிப்படுகிறது.
மருத்துவ துறையில் இதனைப்பற்றி எந்த ஆய்வும் இல்லை. இது அவர்களுக்கே புரியாத புதிர் அப்படி எந்த வாய்வும் இல்லை என்பார்கள். ஆனால் இந்த பத்து வாயுக்களையும் பகுத்து உணர்வதும் அவற்றின் செயலை அறிவதும் மருத்துவத்திற்கு மட்டுமன்றி யோக, ஞான நெறிகளுக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
இந்த பத்து நாடிகளையும், பத்து வாயுக்களையும் பகுத்துணர்ந்து இனம் காட்டிய நமது முன்னோர்களாகிய சித்தர்களின் செயல்பாடுகள் மிகவும் அற்புதம். இன்று யாராவது ஒருவர் இதுவரை நாம் வெளியிடும் மூச்சு காற்றை கணக்கிட்டு சொன்னவர்கள் உண்டா இல்லையே... ஆனால் நமது சித்தர் திருமூலர் அவைகளை துள்ளியமாக கணக்கிட்டு, அதன்மூலம் நமது ஆயுள் காலத்தை நீட்டிக்க உரிய வழிகளை எல்லாம் சொன்னார். ஆனால் அதை தான் நம்மால் புரிந்து செயல்படுத்த முடியாமல் கண்டதை பேசியும், குதர்க்கம் செய்தும் வாழ்நாளை குறைத்துக் கொண்டுள்ளோம்.
சித்தர்கள் அருமையான மூச்சின் புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளார்கள். எப்படி ஒரு நாளைக்கு நாம் விடும் இருபத்தோராயிரத்து அறுநூறு மூச்சில் பதினாலாயிரத்தி நாநூறு மூச்சு மூலாதாரத்தில் ஒடுங்கும். இஞ்சிய ஏழாயிரத்து இருநூறு மூச்சு வெளியில் போய்விடும். வெளியே செல்லும் காற்று பாழ். அதாவது எதற்க்கும் உதவாதவையாகும் என்று கூறுக்கி்ன்றார்கள்.
இப்படி உடலில் வாத பித்த கபங்களால் ஏற்பட்ட மலங்களையும் அதிகமான கொழுப்பு அதிகமான மாவு பொருள் முதலியவற்றால் தேங்கிய மலங்களையும் போக்கி உடலை ஓடுபோல ஆக்கி, அதனுள் தானே தன் ஆத்மாவை செலுத்தி குவிவிளக்கால் பகுதி பகுதியாக ஆய்வு நடத்துவதுபோல் நடத்தி உடலில் உள்ள ஒவ்வொரு நாடியின் செயலையும் கண்டறிந்தவர்கள் நமது சித்த பெருமக்கள். இதனை சாதாரணமானவர்களுக்கு சொன்னால் புரியாது.
அவர்களுக்கு சொல்லி விளங்க வைக்கவும் முடியாது. அதுபேன்ற நபர்கள் அவர்களாகவே தங்களுடைய உடல்களில் தங்களுக்கு ஏற்படும் உணர்வுகளையும் கட்டுஐlப்பாடுகளையும் மீறி நடைபெறும் செயல்களை உணர்ந்து ஆராயத் தொடங்கினால் மட்டுமே அவர்களால் உணரமுடியும். அதற்கு நீண்டகாலம் ஆகும்.
அதற்கான பொறுமையும் அதன் உண்மையை ஒப்புக்கொள்ள துணிவும் வேண்டும். இப்படி காலத்தையும் நேரத்தையும் விணாடிக்காமல் அத்தனையும் தெளிவாக நமது சித்தர்கள் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். மூவாயிரம் ஆண்டுகளாக நம்மால் பயன்படுத்திக் கொள்ளாமல் பாழ்பட்டுகிடக்கின்றன. நம்மில் பலர் சித்தர்கள் என்ற போர்வையில் சித்தர் நூல்களில் கொண்ட விஷங்களை தன் நலன்களுக்கு பயன்படுத்திக் கொண்டர்கள். எஞ்சியவை பயனற்று கிடக்கின்றன. சித்தர் நூல் வைத்தியமுறை அனைத்தும் காசாக்கப்பட்டன. ஆனால் ஞானமார்க்கம் பணம் சேர்க்கும் மார்க்கம் இல்லாமயால் இதனை கைக்கொள்பவர்கள் மிகவும் குறைவே..
பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன், இந்த வாயுக்களின் பெயராம்.....
பிராணன்:
இவை மூலாதாரத்தில் தோன்றி "ஓம்" என்னும் பிரணவத்தின் முதல் எழுத்தை பிடித்துக்கொள்ளும். மூச்சு காற்று உள் செல்லும் போது பன்னிரெண்டு அங்குலம் மேலே எழும்பி எட்டு அங்குலம் பின் வாங்கி மீதியுள்ள நான்கு அங்குலங்களை வெளியில் செலுத்தும்.
இதன் குணம் மிகவும் நல்லகுணம். உடல் நலத்தை தரும். இதன் நிறம் நீலவர்ணம் உடையது. இதன் தேவதை சந்திரன். நாம் உண்ணும் பற்பல பண்டங்களையும் ஜீரணிக்கும் தன்மையுள்ளது. மூச்சு காற்றை உள்வாங்கி வெளிவிடும் சிறப்பான பணியாகும். பலன் மூச்சு காற்றை அடக்கினால் நாம் வாழும் நாள் கூடும். நீங்களும் முறையான குருவின் மூலம் பயிற்சி செய்து பாருங்கள். பலன் கிடைக்கும்.
அபானன்:
இது மூலாதாரத்திற்கு மேலேயுள்ள சுவாதிட்டானம் என்ற பிரம்மன் குடியிருக்கும் ஆதாரத்தில் உற்பத்தியாகி கீழ்நோக்கி செல்லும். இதன் முக்கிய வேலை மலசலத்தை வெளியே தள்ளுவது இதன் வேலை.
இதன் நிறம் பச்சை ஆசனத்தை சுருக்கி வைப்பதும் அன்னாசரத்தை ஒன்று திரட்டி வைப்பது இதன் வேலையாகும்.
இதன் தேவதை வரதராஜன்.
வியானன்:
இது நாடி நரம்புகளில் தசைகளை நீட்டுவது மடக்குவதும் பரிச உணர்ச்சியை உண்டாக்குவதுடன் நாம் உட்கொண்ட உணவின் சாரத்தை அங்கங்கே நிரவச்செய்து உடலை வளர்க்கும் காப்பாற்றும். இதன் நிறம் கருப்பு. இதனுடைய தெய்வம் யமன். சுருக்கமாக சொன்னால் உச்சி முதல் உள்ளங்கால்வரை வியாபி்த்துள்ளது வியானன் என்ற வாயுவே ஆகும்.
உடலில் அதிகப்படியான வேலைகளை இவைதான் செய்கின்றன. உணவின் சாரத்தை தேவையான இடங்களுக்கு இதன் மூலமே இயக்கப்படுகின்றன. குறிப்பாக உணவின் சாரம் உடலை வளர்க்கின்றன. பிராண வாயு உயிரை வளர்க்கின்றன. தசைகளி்ல் உள்ள கரியமல வாயு வெளியேறி இரத்தத்தில் கிடைக்கும் பிராண வாயு தசைகளுக்கு கிடைப்பதால் தசைகள் புதிய வலுப்பெறுகின்றது. தனது உழைப்பின் மூலம் இழந்த சக்தியை இது மீண்டும் ஈடு செய்கின்றது.
உதானன்:
அதாவது நாம் உண்ணும் உணவை வேகமாக ஓடிபோய் விடாமல் தடுத்து அதை நன்றாக கலக்கி குழம்புபோல் ஆக்கிவைத்து விடும். இது மின்னல் போன்ற நிறம் உடையது. இதன் தெய்வம் அக்னி. உடலில் உள்ள குடல் இயக்கம் இந்த உதானன் என்ற வாயுகாற்றால் இயங்குகின்றன. இவை ஓயாமல் சுருங்கி விரிந்துக் கொண்டேயிருக்கும். சுருக்கமாக சொன்னால் இதனை மாவு அறைக்கும் இயந்திரத்திற்கு ஒப்பிடலாம்.
சமானன்:
இதன் வேலை உடலில் உள்ள வாயுக்கள் மிகுதியாகமலும் குறையாமலும் பார்த்துக் கொள்ளும். தண்ணீர் உணவு மற்று அறுசுவை உணவுகள் இவைகளை உடல் முழுவதும் எடுத்து சென்று பரவச்செய்யும்.
இதன் நிறம் புஷ்பராகம் போன்றது. இதன் தெய்வம் சூரியன்.
நாகன்:
இது சகல கலைகளையும் உணர வைக்கும். கண் சிமிட்டல், உரோ மங்களை அசைக்க செய்யும் விழித்தல், மூடுதல். இதன் நிறம் பொன்நிறம். இதன் தெய்வம் ஆதிசேடன்.
கூர்மன்:
இது கண் இமைகளை படபடவென்று கொட்டிக்கொள்ளச் செய்யும். கொட்டாவி விட வைக்கும். வாயை திறக்கும் மூடும் கண்களை இமைக்க செய்து கண்ணீரை பெருக்குவதும் கூட இதன் வேலைதான். இதன் தெய்வம் விஷ்ணு. நிறம் வெளுப்பு.
கிருதரன்:
இது நாவல் நீர் ஊற வைக்கும் நாசி. நீர் ஒழுகுதல், தும்பல், இருமல், கடுமையான பசி உண்டாக்குதல்.
இதன் நிறம் சிவப்பு. தெய்வம் சிவன்.
தேவத்தன்:
இது மாயையின் கணத்தை உண்டாக்க கூடியது. கண்களை உலாவ வைப்பது, கோபத்தை உணடாக்குவது, பிறருடன் சண்டை போட வைத்தல், பிறரை தாக்குதல், ஆவேசமாக பேசுதல் போன்ற கெட்ட செயலை செய்ய துண்டும். இதன் தெய்வம் தேவந்திரன். நிறம் வர்ண படிகநிறம்.
தனஞ்செயன்:
இது மூக்கின் நின்று தடிக்கும் கன்னத்தில் இருந்து பேர் எரிச்சலை உண்டாகும். இறந்து போன உடம்பில் உள்ள வாயுக்ளெல்லாம் வெளியேற்றிய பிறகும் மூன்றாம் நாளில் சிரசைப் பிளந்து கொண்டு கபாலம் வழியாக இந்த வாயு வெளியேறும். இதன் நிறம் நீலம். இதன் தெய்வம் தன்வந்தரி.
வாயுக்கள் பத்தின் பணி என்ன என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டது. இத்துடன் உடலில் ஐந்து வகையான நிணநீர்கள் உள்ளன. அவற்றின் பணிகளையும் பின் ஐந்து வகையான கோசங்கள் அதன் பின்னரே. ஆறு ஆதாரங்களில் மூச்சு காற்று இயங்கும் விதம் என்று படிப்படியாக தெரிந்து கொண்டால் தான் தியான பயிற்சி ஏற்புடையதாக இருக்கும் என்பதை அறியுங்கள்...
ஐந்து வகை நிணநீர்கள்:
------------------------------------------------
அமவசையம், பருவசையம்,
மலவசையம், சலவசையம், சுக்லவசையம், என்பவானம் இவை உடலில் எங்கு உள்ளது என்பதை பார்போம்...
அமவசையம்: இது உடலில் அன்னமும் தண்ணீரும் சேருந்திருக்கும் இடத்தில் இந்த நிணநீர் தன் பணியை செய்கிறது.
பருவசையம்: அன்னமும் தண்ணிரும் சேர்ந்திருக்கும் போது அன்னத்தையும் தண்ணீரையும் தனி தனியாக பிரியும் இடத்தில் இருந்து பணி செய்யும்.
மலவசையம்: இது உடலுக்கு தேவையற்றதை நீக்கும் இடத்தில் இருந்து பணியை செய்யும்.
சல வசையம்: உடலுக்கு தேவையற்ற நீர் வெளியேறித் அவை தேங்கும் இடத்தில் இருந்து பணிசெய்யும்.
சுக்கில வசையம்: என்பது அறிந்தவையே....
ஐந்து கோசங்கள்:
----------------------------------
அன்னமயகோஷம், பிராணமயகோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம் என்பவை.
அன்னமய கோஷம் நமது தேகத்துடன் சம்மந்தம் உடையது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற அங்கங்களையுடையது. ஆமென்ற ஐம் பொறியில் மண்ணி்ன் கூறாம்.
"அன்னமய கோசத்தி லபபணைத்தால
ஊம்மென்ற வூணுண்டாம பிராணமயகேிசம
உந்தியதிற் றேயுவந்தால் புத்தியுண்டாம்
மாமென்ற மனோமயமாங் கோசமாகும்
வாயுவிதில் வந்தடைந்தால் விகாரமுண்டாம்
நாமென்ற ஞானமய கோசப்பேராம்
நலத்தவா தம்வந்தால் சுகமுண்டாம்"
- "யூகிமுனிவர் தத்துவஞானம்" நூலில் கூறுகின்றார்.
எனவே இவை மண்ணின் கூறாம் இதனோடு நீர் கலந்தால் பிராணமய கோஷமாகும்.
மனோமயகோஷம் உந்தியிலிருந்து வெப்பம் வந்து கலந்தல்.
விஞ்ஞானமய கோஷம் அதனோடு வாயு வந்து கலந்தால் குணபேதங்கள் எற்பட்டு ஞானம் உண்டாகுமாம்.
பிருதவி மண் வெறும் மண்ணாக இருக்கும் பொழுது இது எதையும் ஏற்றுக்கொள்வதில்லை, மண்ணோடு நீர் கலக்கும் பொழுது அதில் ஈரப
பசை உண்டாகிறது. அது பிற பொருளை ஏற்றுக் கொள்ளவும், அதன் பயனை வெளிப்படு்த்தவும் தயராகி விடுகிறது. அப்போது அதற்கு உயிர்ப்பு உண்டாகி விடுகிறது. அப்போது உணவை உண்ணவும், உணவை உண்டாக்கவும் திறன் பெற்றதாய்ப் பிராணமய கோஷமாகிறது.
அதனோடு, உந்தியில் இருந்து கிளம்பும் நெருப்பு தீ வந்து சேர்ந்தவுடன் புத்தி உண்டாகிறது. மனோமய கோஷமாகிறது. அதில் வாயுவும் வந்து சேரும் பொழுது அசைவுகள் உண்டாகின்றன. அப்போது உடலில்
விகாரங்கள் உணர்ச்சி இவற்றில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அப்போது விஞ்ஞானமய கோஷம் என்ற பெயரை அடைகிறது. அப்போது வாயு சலனமற்று நிற்கும் போது சுகம் உண்டாகிறது.
நிலம், நீர், நெருப்பு, காற்று, இந்த நான்கு தத்துவங்களோடு ஆகாய தத்துவம் கலந்தால் ஆனந்த மய கோஷமாகும். இந்த ஐந்தும் உடலுடன் இணைப்புகொண்டவை.
அன்பர்களே இதனை ஒரு இரண்டு தடவை மீண்டும் மீண்டும் படித்தீர்கள் ஆனால் பொருள் விளங்கும்.
ஆறு ஆதாரங்கள்:
-----------------------------------
சித்த பெருமான் கோரக்கர் தனது நூலில் கீழ் கண்டவாறு கூறுக்கின்றார்...
"உள்ளே இருக்கும் மூலங்களுக்கான ஆத