
15/11/2024
💐குறுந்தொட்டி எண்ணெய்.
🎯அகத்தியர்
தீரும் நோய்கள் :
• வற்மம் தீரும் வீச்சுடனே
• வலிஇழுப்பு நடுக்கு வாதம்
• சிரசதிலே விறையல் விக்கல்
• மூச்சுடனே நடுநடுக்கம் அடைப்பு
• முட்டுநடுக்கம்
🌺
குடங்கியே வறுமத்தாலே எடுத்த ரோகம் குறுந்தொட்டி எண்ணெய் ஒன்று கூறக்கேளாய் தொடங்கியே குறுந்தொட்டி தளதளக்க சொல்லரிய நறுநன்றி இசங்கன் வேரும் அடங்கலுமே வகைவகைக்கு பலந்தானப்பா அப்பனே இருகுறுணி எட்டிலொன்றாக்கி நடுங்கியே கோவையொடு முசுமுசுக்கை நாயகமே விவைவகை சாறுநாழி.
சாறுடனே கடைமருந்து சொல்லக்கேளாய் சாதிக்காய் அதிமதுரம் கொட்டம் ஏலம் வாறுடனே தேவதாரம் இனிய சீரகம் மாயக்காய் குறசாணி கிறாம்பு மூலம் கூறுடனே வகைவகைக்கு களஞ்சுமூன்று குணமான நல்லெண்ணை படிதான் இரண்டு கூறுகின்ற சாறுதனை உகந்து காய்ச்சி மெழுகு பருவத்தில் வடித்துத் தேய்த்தால்.
காய்ச்சியே நன்றாக வடித்துத் தேய்க்க கருதியே வெந்நீர்விட வற்மம் தீரும் வீச்சுடனே வலிஇழுப்பு நடுக்கு வாதம் மேலான சிரசதிலே விறையல் விக்கல் மூச்சுடனே நடுநடுக்கம் அடைப்பு முட்டுநடுக்கம் மோதுகின்ற நோய்களெல்லாம் முடிந்தே போகும் ஆச்சரியம் குறுந்தொட்டி எண்ணையப்பா அகஸ்தீஸ்பர முனிவருடைய பாடல்தானே.
🌹
வைத்தியர்கள் செய்து மக்கள் பயனடைய வழங்கலாம்/ வழங்கி வருகிறார்கள்.
மற்றவர்கள் தேர்ந்த குருமூலமாக ஒரு முறை பயின்று பின்னர் சுயமாக செய்யலாம்.
ஒருநாள், மூன்று நாள் பயிற்சி வகுப்புகளை தேவையெனில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
🌾
பயிற்சி வகுப்புகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
திரு. செந்தில் குமார்,
+919944651920
ஆனந்தா கம்யூன் ஆசிரமம்,
குமாரகோயில், கன்னியாகுமரி.
🌷வாழும்போதே பராபர தொடர்பை ஏற்படுத்தி நீங்கள் விரும்புவதை பெற்றுக்கொண்டு/ அடைந்து வாழ வாழ்த்துக்கள்
பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும் கலையறிந்தவர்கள் ஆனந்தமாக வாழ்கின்றனர்.
#சத்சித்ஆனந்தம் #யோகம் #ஞானம்
#மெய்ஞானகுரு #தியானம்
#சித்தவைத்தியம்
#வைத்தியம்.