Blessing Clinic

Blessing Clinic Blessing Clinic is a Herbal health care clinic providing good treatment for the needed. Its motto is HEALTH IS REAL WEALTH.

17/04/2024

பூ சூடுங்கள் – பெண்களே தினமும் பூ சூடுங்கள்

💎

பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்ற இக்கட்டுரையில் பூக்களின் பயன்கள், பூக்களை சூடும் கால அளவு, பூக்களை சூடும் முறை, பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பற்றி பார்க்கலாம்.

உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூக்களின் வகைகள் உள்ளன.

ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.

அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

➖பூக்களின் பயன்கள்

ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.

செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

மகிழம் பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.

வில்வப் பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.

சித்தகத்திப் பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

தாழம் பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

தாமரைப் பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

கனகாம்பரம் பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

தாழம் பூ, மகிழம் பூ, சந்தனப் பூ, ரோஜாப் பூ செண்பகப் பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

➖பூக்களைச் சூடும் கால அளவு

முல்லைப்பூ – 18 மணி நேரம்

அல்லிப்பூ – 3 நாள்கள் வரை

தாழம்பூ – 5 நாள்கள் வரை

ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை

மல்லிகைப்பூ – அரை நாள் வரை

செண்பகப்பூ – 15 நாள் வரை

சந்தனப்பூ – 1 நாள் மட்டும்

மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ – சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ – இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

➖பூக்களைச் சூடும் முறை

பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.

உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.

மணமுள்ள பூக்களை மணமில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.

ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.

மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.

மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.

முல்லைப் பூ, வில்வப் பூ ஆகியவற்றை குளித்த பின்பு சூடலாம்.

உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.

➖பூ சூடுங்கள் நன்மை பெறுங்கள்

பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.

இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு உதவுகிறது.

தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும்.

ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.

மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.

பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.

மனமாற்றத்துக்கு உதவுகிறது.

மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

ஆகவேதான் பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

03/04/2024
01/09/2023

Address

Vellachivillai, Villukuri
Kanyakumari
629180

Telephone

7502480890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blessing Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category