06/10/2020
உணவு தொழிலில் உள்ளவர்கள் கவனிக்கவேண்டிய மிகமுக்கிய அம்சம்:
உணவு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், பெரிய உணவகங்கள், சிறிய உணவகங்கள், மளிகைக் கடைகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், வீடுகள் சார்ந்த உணவு தொழில்களை செய்பவர்கள், பால் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள், உணவு உற்பத்தி செய்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இணையம் வழியிலான விற்பனையாளர்கள் போன்ற உணவு வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ள பல்வேறு உணவு தொடர்பான வணிகங்கள் அனைத்தும் இந்த FSSAI–ல் பதிவு செய்யப்பட வேண்டும்.
யார் இந்த FSSAI & FOOD SAFETY MITRA ?
உணவு பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பான அனைத்து பணிகளையும் செய்து முடிப்பதற்கு பல்வேறு துறைகளுக்கு செல்வதற்கு பதிலாக ஒற்றைச் சாளர முறையில் தீர்வு காண்பதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் ஆணையம் (FSSAI) உணவு பாதுகாப்பு நண்பர்கள் (FOOD SAFETY MITRA) மூலமாக இந்த வேலையை எளிதாகுகிறது.
இந்தியாவில் எந்தவொரு உணவு தொடர்பான வணிகத்தையும் தொடங்குவதற்கு முன் இந்த FSSAI உரிமம் பெறுதல் அல்லது FSSAI-ல் பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
FSSAI உரிமம் பெற வேண்டியவர்கள் யார் யார்?
இணையத்தின் வாயிலாக அல்லது நேரடியாக உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், உற்பத்தி செய்பவர்கள், பேக்கிங் செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், ஏற்றுமதி செய்பவர்கள், இறக்குமதி செய்பவர்கள், சேமித்து வைபவர்கள் ஆகிய உணவு உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து நுகர்வோர்களிடம் சென்றடையும் வரையிலான அனைத்து பணிகளையும் கையாளுபவர்கள்.
மேலும் பிஸ்கட் போன்ற தயார்நிலை உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், பால், பால்சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லும் போக்குவரத்து நிறுவனங்கள், ஊறுகாய், உலர் பழங்கள் தயாரிப்பவர்கள், பொருட்களை சேமித்து வைக்கும் களஞ்சியங்கள் மற்றும் கிடங்குகள் மற்றும் உணவகங்கள் ஆகியன.
The only Authorized Food Safety Mitra in Karaikal region:
Mohamed Sharif
Food Safety Service Center,
20, Kamarajar Salai,
Near PRTC Depot
Karaikal - 609602
Mobile : 8925054561
Website: https://food-safety-service-centre.business.site/