
19/11/2023
நேரலை பார்த்த
ஐந்து கோடி இந்தியர்களும்
இந்தியா வெல்லும் என்று நம்பினோம்..
முதல் முறையாக
இந்திய வீரர்களின்
கண்களில் எல்லாம்
தோல்வி பயத்தை பார்த்தோம்..
35 ஆவது ஓவர் வரை
இந்திய நம்பிக்கை இம்மியவும் குறையவில்லை..
மைதானத்தில்
ரொசோரியா மாலையை வைத்து பிரார்த்தித்தார்கள். நானும் ஏதேனும் ஒரு தேவதை மைதானத்தில் சிறகடிப்பாள் என எதிர்பார்த்தேன்...
அந்த வீரன்
கடைசியில் தோற்றுவிட்டான்
வரலாற்றில் இனி அவன் பெயர் இருக்காது. அவன் கண்களில்
கோப்பையின் ஏக்கத்தை பார்த்தேன்..
சூரியன் உதிக்காத
இங்கிலாந்தின் அடிமை
நாடுகளே இல்லை என்பார்கள்.
ஆனால் ஏகாதிபத்தியத்தை எட்டியுதைத்த காந்திய நாட்டில்
அந்த வீரனின் கண்ணீர்
ரெண்டு சொட்டு சிந்தியது..
இந்த நாடு காத்திருந்தது
அந்த வீரன் கனவு
கோப்பையோடு வருவானென்று..
இந்த நாட்டு மக்கள் கண்கள்
நிச்சயம் பணிந்திருக்கும் இல்லை அழுதிருக்கும். வெறும் கையோடு அந்த வீரன் புறப்படுகிறான். ஆனாலும் இந்த மக்கள் அவனுக்கு ரோஜா பூக்களையே தருகிறார்கள்..
நம்புங்கள் மக்களே
இந்த வீரன் தோற்கவில்லை
துடிக்க துடிக்க போராடினான்.
எதிரிகளே கொண்டாடிய
வீரன் அவன்..
நம்புங்கள் மக்களே
ரோஹித் ஷர்மாவை விடவும்
உங்கள் நம்பிக்கைக்கு
ஆகச்சிறந்த ஒருவன் இன்னொரு நாள் வருவான்..
ஒரு நாள்
நிச்சயம் விடியும்..
#கிரிக்கெட்