13/10/2025
உலக விலங்குகள் தின சிறப்புரை
விலங்குகள் மீதான அன்பு, அக்கறை மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உலக விலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது
இதை முன்னிட்டு, கடந்த அக்டோபர் 4, 2025 சனிக்கிழமை அன்று ஸ்ரீ பார்வதி சர்க்கரை மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர். மணிவண்ணன் அவர்கள், பள்ளத்தூரில் இருக்கும் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி மாணவிகளிடையே சிறப்புரை ஆற்றினார். இந்தச் சிறப்பான நிகழ்வை ஏற்படுத்திக் கொடுத்த நிர்வாகத்தின் சமூகப் பொறுப்புணர்வை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.