The Healing Home

The Healing Home Holistic Natural Health

03/08/2025

நம்பினால் நாளை உண்டு...👍🏼
இறைவனின் ஆசிர்வாதமும் எப்போதும் உங்களுடன் உண்டு.🙏🏼😊

If you believe, there is a tomorrow... 👍🏼
God’s blessings will always be with you. 🙏🏼😊

02/08/2025

அனைவரையும் உளமார பாராட்டுங்கள்....
உங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படும்.

Appreciate everyone wholeheartedly...
Great changes will happen in your life.

01/08/2025

சுவாசமே நமது குரு

Breath is our Guru

31/07/2025

"அமைதி"
இறைவனின் சொரூபம்....

"Peace" is the true essence of God.

29/07/2025

"இறைவனிடம் சரணாகதி என்பதே வாழ்வின் அர்த்தமுள்ள தொடக்கம்"

"True life begins with surrender to God."

12/09/2024

ஒரு வலி மிகுந்த நாட்கள் ஒவ்வொரு மனுஷனுக்கும் வரும்.....

அந்த காலகட்டம் நெருப்பு துண்டை உள்ளங் கையில் அழுத்தி பிடிச்சிட்டு வாழற ஃபீல் வரும்..

நிச்சயம் வரும்.....வராமா இருக்காது..
அந்த சூழல்ல ஒன்னு புரிஞ்சிக்கோங்க..

'எப்படி வாழனும்னு தெரியாம வாழ்ந்துருப்பீங்க..
பகட்டு வாழ்க்கை வாழ்ந்திருப்பீங்க.
எப்படி வாழனும்னு கத்து கொடுக்க வந்தது தான் இந்த வலி மிகுந்த காலம்.

நிறைய பட்டுருப்பீங்க.
வலியை கூட வெளிய சொல்ல முடியாத அளவுக்கு வலியை தாங்கி முழுங்கி சுமந்து அவ்வளவு அனுபவிச்சு பட்டுருப்பீங்க..
ஒவ்வொரு ஆட்களையும் புரிஞ்சிக்கற வசதி வந்திருக்கும் இந்த காலத்துல..

இனி இந்த
போலி வாழ்க்கை
போலி மனுஷங்க
போலி நட்புங்க
போலி வசதி
போலி வறட்டு கௌரவம்
போலி இமேஜ்
போலி பகட்டு வாழ்வு இல்லாம 'உங்களுக்குனு' ஒரு நல்ல வாழ்க்கையை நல்லா வாழ்வீங்க..
சூப்பரான வாழ்க்கை வாழ்வீங்க...

இறைவன் எப்போதும் உங்க கூட தான் இருக்காரு....🙏🏼😊

12/08/2024

*ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை ஒன்பது வரிகளில் புரிந்து கொள்ளுங்கள்:*

1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... **"கௌரவர்கள்"**

2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... **"கர்ணன்"**

3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு லட்சியம் செய்யாதீர்கள்... **"அஸ்வத்தாமா"**

4. “அறமற்ற அநியாயக்காரர்களிடம் பணிந்து ஏற்க வேண்டும்” போன்ற இதுபோன்ற வாக்குறுதிகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள்... **"பீஷ்ம பிதாமஹர்"**

5. செல்வம், பதவி, அதிகாரம் மற்றும் தவறு செய்பவர்களின் ஆதரவு ஆகியவற்றின் துஷ்பிரயோகம் இறுதியில் மொத்த அழிவுக்கு வழிவகுக்கிறது... **"துரியோதனன்"**

6. ஒரு குருடனிடம் அதிகாரக் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்காதீர்கள், அதாவது சுயநலம், செல்வம், பெருமை, அறிவு, பற்று அல்லது காமத்தால் குருடனாக இருப்பவர், அது அழிவுக்கு வழிவகுக்கும்... **"திரிதராஷ்டிரன்"**

7. அறிவுடன் ஞானமும் இறைவன் துணையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்... **"அர்ஜுனா"**

8. வஞ்சகம் உங்களை எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் வெற்றிக்கு அழைத்துச் செல்லாது... **"சகுனி"**

9. நீங்கள் நெறிமுறைகள், நீதி மற்றும் கடமையை வெற்றிகரமாக நிலைநிறுத்தினால், உலகில் எந்த சக்தியும் உங்களைத் தீங்கு செய்யாது... **"யுதிஷ்டிரர்"**

இந்த கட்டுரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும், எனவே இதை எந்த மாற்றமும் இல்லாமல் பகிரவும்.
*"சர்வே பவந்து சுகினா - ஸர்வே சந்து நிராமயஹ்."*

21/06/2024

*✍️ உணவுக்கு முன்னும், பின்னும் 💦தண்ணீர் குடிப்பது.. நல்லதா...! கெட்டதா...!!*
📡 🙏 💐


*✍️ தண்ணீர்..!!*

💧நம்மில் பெரும்பாலானோருக்கு உணவு உண்பதற்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். அதிலும் ஒரு சிலருக்கு உணவு உண்ணும்போது இடையிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். இவ்வாறு உணவு உண்ணும்போது தண்ணீர் குடிப்பது நல்லதா?.. கெட்டதா?... என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

*தண்ணீர் குடித்தல்:*

💧உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.

💧ஆனால் உணவு உண்பதற்கு முன்பு அதிக தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு குடிப்பதால் வயிறு நிரம்பிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் போதுமான அளவு உணவு உண்ண முடியாது.

💧உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லது.

💧உணவு உண்ணும்போது இடையிலும் தண்ணீர் குடிக்கக் கூடாது. விக்கிக் கொள்கிறது அதனால்தான் தண்ணீர் குடிக்கிறோம் என்றும் சிலர் கூறுவதுண்டு. இவ்வாறு விக்கிக் கொள்கிறது என்றால் நாம் சாப்பிடும் முறை தவறு என்றுதான் அர்த்தம்..

💧சாப்பிடும்போது நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும்போது விக்கல் எடுக்காது. அதை மீறியும் விக்கல் வந்தால் கொஞ்சமாக தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.

💧மேலும் நம்மில் சிலருக்கு உணவு உண்ட பின் அதிக அளவு தண்ணீரை குடிக்கும் பழக்கம் இருக்கும். இவ்வாறு குடிப்பதும் தவறுதான்.

💧மருத்துவ அறிக்கையின்படி உண்ட உணவு ஜீரணமாவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமாவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் சுரக்கும். எனவே, உணவு உண்ணும்போது தேவையில்லாமல் தண்ணீர் குடித்தால் அமிலத்தின் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.

💧இது தொடர்ச்சியாக தொடரும்போது உடல் பருமன் பிரச்சனை, செரிமான பிரச்சனை, வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும்.

💧உணவு உண்ட 45-60 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது.

📡 💪 🙏 💐 💪

21/06/2024

*✍️ தண்ணீரின் அவசியம்... 👉பல நோய்களை தவிர்க்கலாம்...!!*
📡 🙏 💐

*📡 தண்ணீரின் முக்கியத்துவம்..!!*

💦தண்ணீர் நிறைய குடிப்பது உடலுக்கு நல்லது என்று தெரியும். ஆனால் போதிய நேரமில்லை, தாகம் எடுக்கவில்லை என ஏதாவது சாக்கு போக்கு சொல்கிறோம். நம் உடலில் ஏற்படும் நிறைய பிரச்சனைகளுக்கு போதிய அளவு நீர்ச்சத்து இல்லாமல் இருப்பதுதான் காரணமாகும்.

💦உடலுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

💦தினமும் கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் அல்லது 8 கப் தண்ணீர் குடிப்பது அவசியம்.

💦சிலர் தாகம் எடுக்கும் பொழுதும், சாப்பிட்ட பின்பும் தண்ணீர் குடிப்பதே தன் உடலுக்கு போதுமானது என்று கருதுகின்றனர். அது அப்படி இல்லை. குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடித்து வந்தாலே தண்ணீர் குறைபாடு சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.

💦வீடு, அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி என எங்கு இருந்தாலும் தண்ணீர் பாட்டில் நமது அருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஞாபக மறதியால் தண்ணீர் குடிக்காமல் இருப்பதை தவிர்க்கலாம்.

💦சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கப் தண்ணீர் குடிப்பதால், பசி சற்று குறைந்து காணப்படும். எனவே அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.

💦அதிகம் தண்ணீர் குடிப்பதற்கு முன் தண்ணீரின் சுத்தத்தை புரிந்து கொள்வது அவசியம்.

💦நாம் தினமும் 8 மணி நேரம் வேலை பார்க்கிறோம் என்று வைத்துக்கொண்டால், வேலையின் நடுவே ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் தண்ணீர் அருந்துவதை பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

💦நாள் முழுவதும் அடிக்கடி தண்ணீர் அருந்தி கொண்டே இருப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு ஒருமுறை அதிகமாக தண்ணீர் எடுப்பதை வழக்கமாக வைத்துக் கொள்வது நம் உடலின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்துவிடும்.

💦காய்கறிகள் மற்றும் பழங்களில் நீர்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. அவைகளை சாப்பிடுவதனால் உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்க முடியும்.

💦காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நம் சுவாச புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கும். இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.

💦தண்ணீர் குடிப்பது உடல்நலத்தை பாதுகாக்கும் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் அருகில் தண்ணீரை வைத்துக் கொண்டு அடிக்கடி குடித்து வருவதைப் பழக்கமாக வைத்துக் கொண்டால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

📡 💪 🙏 💐 👍

05/06/2024
30/04/2024

சோதனைக்கும் வேதனைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

சோதனை என்பது இறைவனால் கொடுக்கப்படுவது. அதன் இறுதியில் இன்பமும் அமைதியும் மட்டுமே இருக்கும்.

வேதனைகள் என்பது நமது கற்பனைகள் மூலம் மனதளவில் பெருக்கி கொள்ளும் கஷ்டங்கள்.

உனக்கு வரும் கஷ்டங்கள் அனைத்தையும் சோதனையாக எடுத்துக்கொள். வாழ்வு இனிமையாக அமையும்.

இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு.

Address

Karaikudi
630002

Telephone

+919150576680

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Healing Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Healing Home:

Share