02/10/2025
" #கெட்டவன்_கெட்டி_டில்_கிட்டிடும்_ராஜயோக"-த்தை அனுபவிக்கும் உச்ச நடிகர் / தற்போதைய அரசியல் தலைவர் #விஜய்-யின் ஜாதக அமைப்பு.
தற்போது, அரசியல் களத்தில் அதிகம் முக்கியத்துவம் செலுத்தும் நபராக திகழ்ந்துவரும் உச்ச நடிகருமான, அரசியல் தலைவருமான "திரு விஜய்" அவர்கள் ஜாதக ஆய்வு.
இணையதளங்களில் பதிவு பெற்றுள்ள ஜாதக கட்டங்கள் முரண்பாடாக தென்படக்கூடியதாகவே திகழ்கிறது. ஏனெனில் அதில் தோராயமாக நேரத்தை எடுத்து அன்றைய தேதிக்கு லக்னமாக கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விஜயின் செயல்பாடுகள் கடக லக்னமோ.. கன்னி லக்னமோ அவரது செயல்பாடுகளில் வெளிப்படவில்லை.
திரு விஜய் அவர்கள் தனது, அரசியல் பயணத்தில் இளைஞரது மனதுகளிலும், இல்லத்து பெண்களின் மனதிலும், சின்னஞ்சிறுசு வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவரது கூட்டங்கள் அனைத்தும் ராணுவ கூட்டங்கள் போல வழிநடத்தும் நிகழ்வை காட்டக் கூடியதாகவே அமையப்பெறுகிறது.
ஆகவே இவரது லக்னம் #விருச்சகலக்னம் (செவ்வாயின் ஆதிக்கம்)
இவரது ராசி #கடகராசி (சந்திரனின் ஆதிக்கம்.)
இவரது நட்சத்திரம் : பூசம் - 2 (சனியின் ஆதிக்கம்.)
இவரது ஜாதக அமைப்பில் உள்ள கிரகநிலை அமைப்புகள்.
விருச்சிக லக்னம் - அதில் ராகு உச்சம்.
4-ல் குரு, (கேந்திரத்தில்)
7-ல் சுக்ரன் (காரகோ_பாவநாஸ்தி) மற்றும் கேது நீசம்.
8-ல், சூரியன், சனி (அஸ்தங்கம்) புதன் (ஆட்சி, அஸ்தங்க + வக்ரம்)
9-ல் ஆட்சி சந்திரன், நீச்ச செவ்வாய்.
இவரது, பிறப்பு திசையே லக்னத்திற்கு முரண்பாடான திசையில் ஆரம்பம்.
அஸ்தங்க #சனி திசை - 11 வருடம்.
அஸ்தங்க வக்ர #புதன் திசை - 17 வருடம்.
நீச்ச #கேது திசை - 7 வருடம்.
காரகோ பாவ நாஸ்தி அடைந்த #சுக்கிர திசை - 16 கடந்து பயணிக்கிறார்.
நடப்பு வயது : 51 வயது.
நடப்பு திசா/புத்தி/அந்தரம் : #சுக்ர திசை / #புதன் புத்தி / #புதன் அந்தரம்.
தசா புத்தி இயக்கக் கூடிய பாவகம் : 10,8,7,12,1,11
தற்போது அட்டமாதிபதி புதனின் அந்தரம் : 14-12-2025 வரை நடப்பில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து லக்னாதிபதியான #செவ்வாய் ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை #அஸ்தங்கம் அடைந்து மறைய போகிறார்.
இந்த அஸ்தங்க காலம், இவரது அரசியல் பலத்தை அதிகப்படுத்துவதும், எதிரிகளின் சூழ்ச்சிகள் வெளிச்சமாக வெளிப்படுவதும், இவரது பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கும் அதிக வாய்ப்பினை ஏற்படுத்தி தரும்.
மக்கள் மனதில் இன்னும் இடம் பிடிக்க அதிக வாய்ப்பினை ஏற்படுத்தி தரும். இவர் ஜாதகப்படி அரசியல் பிரவேசம் என்பது இக்காலகட்டம் முதல் மிகவும் ஏறு முகமாகவும், பிரகாச வாய்ப்பினையும் ஏற்படுத்தும்.
அடுத்து வரும் சூரிய திசை 8-ல் இருந்து திசை இயக்கம்.
அடுத்து வரும் சந்திர திசை செவ்வாயோடு இணைந்த 9-ல் இருந்து திசை இயக்கம்.
ஆகவே இவரது பிறப்பு முதல் தற்போது வரை. கிரகங்கள் பலவீனமடைந்து தசாக்கள் நடந்து கொண்டு வருகிறது வரும் திசைகளும் பலம் இழந்து வர போகிறது.
ஆகவே, இவரது ஜாதகம் சுபத்துவ அமைப்பை விட, கிரகங்களின் வலு குறைவு இவரது ஜாதகத்திற்கு யோகத்தை வெளிப்படுத்தக் கூடியதாக அமைகிறது.
லக்னாதிபதி பாக்கியத்தில் செவ்வாய் நீச்சம் என்பதால்,
செவ்வாய் எவ்வபோது வலு குறைகிறரோ அவ்வப்போது இவர் நிரந்தர மற்றும் அசைக்க முடியாத வெற்றியினை பெறுவார்.
ஆகவே இந்த பதிவு அரசியல் சார்ந்த பதிவு அல்ல, தனிநபர் ஆதாயம் செலுத்தக்கூடிய பதிவாகவும் அல்ல. முழுக்க முழுக்க ஜோதிட ஆய்விற்காகவும் மட்டுமே... பதிவு செய்யப்படுகிறது. இவரது ஜாதகம் அமைப்பு ஜோதிட விதிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பை காட்டக்கூடிய நிலை உள்ள ஜாதகம்.
#ஶ்ரீ_குமராயி_ஆன்லைன்_ஜோதிடம் - காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம்.
#ஜோதிடர் : Dr.B.சதாசிவன் SMP B.COM D.A
Contact Number : +916381453432
மேலும், ஜோதிட கருத்துக்களை விரும்பக் கூடியவர்கள் எனது "Whatsapp Group" ல் இணைந்து கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து "Arattai" மற்றும் "Telegram" - Channel இணைந்து கொள்ளலாம்.
Whatsapp Group's
✴️ Group - 1 : https://chat.whatsapp.com/ISjtxicB8b51tn4Af4wJtn?mode=ems_copy_t
✴️ Group - 2 : https://chat.whatsapp.com/IxKFbfbfIFi0jNfiM3nRHX?mode=ems_copy_t
✴️ Group - 3 : https://chat.whatsapp.com/EQktWZYX9zaAUzpGnG5pTT?mode=ems_copy_t
_________________________________________
✴️ Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va6WSOtC1Fu8gjHLfA0J
✴️ Arattai App (அரட்டை) Channel : https://aratt.ai/
✴️ Telegram Channel : https://t.me/srikumarayionlinejothidam
நன்றி !
வாழ்க வளமுடன் ‼️