11/12/2022
மதர் சிறப்பு பள்ளி மாணவர்கள் வெற்றி
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . இவ்விழாவிற்கு திரு .மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மான்புமிகு திரு. பெரிய கருப்பன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறையாற்றி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.கதிர்வேல் அவர்களும் உடன் இருந்தனர். மாநில அளவிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்ற மதர் சிறப்பு பள்ளி மாணவன் S.ஆசிஷ் க்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் திரு. பெரிய கருப்பன் அவர்களால் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது. மேலும் சிவகங்கை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் *உருளைக்கிழங்கு சேகரித்தல்* இரண்டாம் பரிசு K.S.அருண் கிஷோர், *பந்து எறிதல் 15 வயதிற்கு மேற்பட்டவர் பிரிவில்* இரண்டாம் பரிசு S.ஆசிஸ் *பந்து எறிதல்* ஆண்கள் பிரிவு முதல் பரிசு S. பாலச்சந்திரன், இரண்டாம் பரிசு S. கவின் பிரகாஷ் மூன்றாம் பரிசு M. மணிகண்டன் பெண்கள் பிரிவில் முதல் பரிசு M.சுபிக்ஷா லாவண்யா இரண்டாம் பரிசு S. நேஹா மூன்றாம் பரிசு S. ஹேமா ஸ்ரீ *பந்து எறிதல் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள்* முதல் பரிசு C. ரோகித் சாய், இரண்டாம் பரிசு G. சந்திப், மூன்றாம் பரிசு D.சரண்ராஜ் ஆகிய மாணவர்களுக்கு திரு. மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ் அவர்கள் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார் . விழாவை சிறப்பிக்கும் வகையில் மதர் சிறப்பு பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரதநாட்டியம் ,சிலம்பம், மௌனம் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர் . கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட M.சுபிக்ஷா லாவண்யா , S.பாலச்சந்திரன், G.சந்தீப் ,S.ஆசிஷ், k.S.அருண் கிஷோர் M.மணிகண்டன், ஆகிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.மேலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியமைக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மான்புமிகு திரு. பெரிய கருப்பன் அவர்களால் ஆசிரியர் S.இளமாறன் மற்றும் ஆசிரியை M.விசாலாட்சி மற்றும் R.சித்ரா அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .மதர் சிறப்பு பள்ளியின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை பாராட்டும் விதமாக மதர் சிறப்பு பள்ளி நிர்வாக இயக்குனர் திரு. அருண்குமார் அவர்களுக்கு விருது வழங்கி இவ்விழா இனிதே நிறைவுற்றது.