இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா

  • Home
  • India
  • Karungalpatti
  • இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா

இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா இயற்கை உடன் மருத்துவ முறையில் சேர்ந்து செயல்படுவோம்
SATHEESH
� Reflexology, Yoga & Naturopathy � 8

06/04/2026

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால்
குளியலறையில் தண்ணீரை நேரடியாக தலைக்கு ஊற்றாமல்

முதலில் பாதத்திற்கு பின்பு உடலுக்கு இறுதியில் தலைக்கு நீரை ஊற்றுங்கள் வெப்பத்தின் தாக்கத்தால் மூளை சூடாக இருக்கும் அப்பொழுது சுடுதண்ணியோ குளிர்ந்த நீரோ படும் பொழுது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் மாரடைப்பு வலிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மேலே கூறியபடி குளிக்கவும்

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணெய் வயிற்றில் தொப்பில் பகுதியில் ஊறவைத்து
வந்தால் உடல் சூடு தணியும்

வெந்தயத்தை இரவில் உறவைத்து பகலில் அந்த நீருடன் சேர்த்து வெந்தயத்தை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்

குளிர் காலம் மழைக் காலங்களை விட அதிகமாக ஜலதோஷம் பிடிப்பதும்,, காய்ச்சல் கோடை காலத்தில் தான்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

என்பதை கருத்தில் கொண்டு குறைவான குளிர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்

அழகு பார்க்காமல் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதால் உடல் குளிர்ச்சி அடையும் கண் எரிச்சல் குறையும் கண்ணீர் நீர் கசிவு ஏற்படாது உடல் சூடும் தணியும்
கண் பார்வை தெளிவு படும்

தினமும் இரண்டு லிட்டருக்கு மேல் குடிநீர் குடிக்கவும் நின்று கொண்டு சாப்பிடவோ நீர் குடிப்பதோ கூடாது
குடித்தால் கிட்னி கல்லீரல் பாதிப்படையும் நாம் அருந்தும் நீரும் உண்ணும் உணவும் இரைப்பைக்கு செல்லாது மாற்றுப் பாதையில் கிட்னியை நோக்கி செல்லும் அதனால்தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் அமர்ந்து சாப்பிட சொல்வார்கள்

இளநீர்
தயிர் மோர்
பதனி
போன்று உடல் சூட்டை தணிக்க கூடிய நீர் ஆகாதாரங்களை எடுத்துக் கொள்வோம்

உயிர் கொள்ளியாகவும் உடலுக்கு கேன்சர் மற்றும் உடல் உறுப்புகளை அழிக்கும் ஆசிட்
கொக்கோகோலா
பெப்சி
செவன் அப்
மாஜா
மிராண்டா
போன்ற பல பெயர்களில் குளிர்சாதனப்பட்டியில் வைக்கப்பட்ட
நம் உயிரை அளிக்கக்கூடிய உயிர் கொல்லி ரசாயனங்களை குடிக்காதீர் அது அப்பொழுது தாகத்தை தணிக்கலாம் பின்பு வயிற்றில் உள்ள
குடல் கல்லீரல்
சிறுநீரக உறுப்புகளை அழித்து விடும்

இந்தக் கோடை காலத்தில் எந்த அளவுக்கு நீர் குடிக்கின்றோமோ நமது வாழ்நாள் அதிகரிக்கும்

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/Cof7WZhiEZk713ep8GZuRf?mode=gi_t

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

05/04/2026

*முக்கனிகளின் முதன்மையும் ஆயிர்வேதமும் முதன்மையான. சில தகவல்கள் இதோ...*

1.அத்திபழம் தினமும் மூன்று தண்ணீரில் இட்டு காலையில் வெறும் வயிற்றில் குடுப்பதாலும். தை இரவு பாலில் இரண்டு மூன்று இட்டு குடிப்பதாலும் உடல் சார்ந்த அனைத்தையும் சத்துகளுடனும் பலபடுத்துகிறது.

2.வாழைப்பழம்:
தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

3.முகம் வழுவழுப்பாக இருக்க:
கசகசாவை பசு தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.

4.இரத்த சோகையை போக்க: காய்ந்த திராட்சை தனசிரி தண்ணீரில் இட்டு குடிக்கலாம். சத்து நிறைந்தது, பீர்க்கன்காய் வேர் கசாயம் செய்து சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

5.கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:
தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

6.குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

7.உடல் சக்தி பெற:
இரவு உணவாக வாழைப்பழம் 2,அத்திபழம் 3று தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

8.வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

9.சுகப்பிரவசமாக: ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும். 10. உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

11.காதில் சீழ்வடிதல் குணமாக:
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

12.நெஞ்சுவலி குணமாக:
அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது. 13. சிலந்தி கடிக்கு மருந்து: தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

14.சீதபேதி குணமாக: புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.

15.வயிற்று நோய் குணமாக:
சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும். 16. காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

17.நுரையீரல் குணமாக:
நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

18.பேதி குணமாக: மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

19.வாதநோய் குணமாக:
குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

20.மலச்சிக்கல் சரியாக:
அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
https://chat.whatsapp.com/Cof7WZhiEZk713ep8GZuRf?mode=gi_t
21.மேகரோகம் குணமாக:
ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

22.நீரழிவு நோய் குணமாக:
மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

23.இரத்த பேதியை குணப்படுத்த:
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

24.மூட்டுவலி குணமாக:
அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

25.நரம்பு தளர்ச்சி நீங்க:
தினசரி 3 பேரிச்சம்பழம்.கடுக்காய் பொடி, மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

26.பற்கள் உறுதியாக இருக்க: மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

27.சேற்றுபுண் குணமாக:
காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.

28.மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த:
வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

29.வயிற்றுவலி குணமாக:
குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

30.வயிற்று பூச்சிகள் ஒழிய:
வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.

31.மலச்சிக்கல் தீர:
பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

32.குழந்தைகளுக்கு கண் சூடுதனிய:
நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

33.இரத்தத்தை சுத்தப்படுத்த: கேரட் ஒன்று ஒரு ஆப்பிள்,இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.

34.கக்குவான் இருமல் குணமாக:
நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.

35.இரத்தம் உறைதல் குணமாக:
நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

36.சொறி சிரங்கு குணமாக:
கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.

37.சளி மூக்கடைப்பு தீர:
கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

38.தலைவலி குணமாக:
குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

39.இரத்த கொதிப்பு குணமாக:
அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.

40.கண்வலி வராமல் தடுக்க:
எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.

41.தொண்டை கரகரப்பு நீங்க:துளசி இலை, கருப்புர வள்ளி ,ஓமவள்ளி இலை,அதிமதுரம்,திப்பிலி மூன்றையும் கஷாயம் செய்து குடிக்கலாம் ..பூவரசன் வேர் பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

42.குடல்புண் குணமாக:
மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தேங்காய் பால்களில் சிறிது கடுக்காய் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

43.கால்பித்த வெடிப்பு: அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.

44.இரத்தம் சுத்தமாக:
தினசரி இலந்தை நாவப்பழம் உணவில் பீட்ரூட் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்.

45.முடிவளர்வதற்கு: கறிவேப்பிலை செம்பருத்தி நெல்லிகாய் அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமூடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும்.

46.செருப்புக்கடி குணமாக:
தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.

47.கருப்பு முடியாக மாற்ற:
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

48.தொழுநோய் குணமாக:
கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.

49.பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக:
ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.

50.சதை போடுவது குறைக்க:
வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.

51.தூக்கம் வர:
ஆரஞ்சு பழசாறுடன் தேன் கலந்து குடிக்கலாம், அல்லது பாலில் தேன் பனங்கற்கண்டு கலந்தும் குடிக்கலாம்..
வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும். தூக்கம் வரும்.

52.உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற:
உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சாப்பிட்டு வர துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.

53.கண்கள் குளிர்ச்சி:
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

54.வாந்தியை நிறுத்த: துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.

55.பித்த வாந்தியை நிறுத்த:-
1 நெல்லிகாய், கொத்தமல்லீ ஒரு கை பிடி இஞ்சி நெல்லிகாய் அளவுக்கு கல் உப்பு, மூன்றையும் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்...

வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

56. வயிற்று கடுப்பு நீங்க:
அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

57.மந்தம் அஜீரணம் குணமாக:
கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். சோற்றுடன் 1 கரண்டி பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும்.

58.சிறு நீர் எரிச்சல் குணமாக:
அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

59.வாய் நாற்றம் போக:
நெல்லி, முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.

60.சர்க்கரை வியாதி நீங்க:
கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

61.தோல் வளம் பெற:
ஆலமரத்து பட்டைகளை, அல்லது பதிமுக பட்டை, பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோலும் வளம்பெறும்.

62.வரட்டு இருமல் தனிய:
எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

63.கருப்பை கோளாறு நீங்க:
அரசஇலை கொழுந்து 10 – 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை.

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/Cof7WZhiEZk713ep8GZuRf?mode=gi_t

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

23/03/2026

*பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”* என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
https://chat.whatsapp.com/Cof7WZhiEZk713ep8GZuRf?mode=gi_t
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/Cof7WZhiEZk713ep8GZuRf?mode=gi_t

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

21/03/2026

🌿 முகப்பருவைப் போக்க எளிய வீட்டு வைத்தியம் 🌿

முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் அது முக அழகை பாதிக்கும். ஆரம்பத்திலேயே சரியான பராமரிப்பு செய்தால் எளிதாக கட்டுப்படுத்தலாம் 😊

🏡 இயற்கை வைத்தியங்கள்:
https://chat.whatsapp.com/Cof7WZhiEZk713ep8GZuRf?mode=gi_t
✅ கற்றாழை – கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவினால் பருக்கள் குறையும்
✅ தேன் – பருக்கள் மீது 1–2 துளி தேன் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்
✅ ஆப்பிள் + தேன் – அரைத்த ஆப்பிளில் சிறிது தேன் சேர்த்து முகத்தில் பூசலாம்
✅ வேப்பிலை – அரைத்து 15 நிமிடம் வைத்து கழுவினால் பருக்கள் குறையும்
✅ சந்தனம் + பன்னீர் – தழும்புகளை குறைக்க உதவும்
✅ மஞ்சள் + தயிர் – முகப்பருக்களை கட்டுப்படுத்தும்

🥗 சாப்பிட வேண்டியவை:

🥔 சர்க்கரை வள்ளிக்கிழங்கு
💧 தினமும் 3–4 லிட்டர் தண்ணீர்
🍋 எலுமிச்சை ஜூஸ்
🍉 தர்பூசணி
🥥 தென்னை நீர்

🚫 தவிர்க்க வேண்டியவை:

❌ அதிக எண்ணெய் உணவு
❌ கார உணவு
❌ கடல் உணவு
❌ ஜங்க் உணவு

🧼 வாழ்க்கை முறை:

🧺 உடைகள், துணிகள், தலையணை, படுக்கை – எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்
🫒 இரவில் ஒலிவ் ஆயில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும்
🥚 முட்டை வெள்ளை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவவும்
💦 அடிக்கடி முகத்தை சுத்தமாக கழுவவும்
🥒 வெள்ளரிக்காய் துண்டுகளை முகத்தில் வைத்து குளிர்ச்சி பெறலாம்

✨ இயற்கை முறைகளை தொடர்ந்து செய்தால் முகம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் ✨

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/Cof7WZhiEZk713ep8GZuRf?mode=gi_t

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

20/03/2026

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:
**--------
1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/GBQtn5J19lxCaXtEgdINT4?mode=gi_t

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

*அறு சுவைகள்* (இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு) மற்றும் அவற்றின் *உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற...
19/03/2026

*அறு சுவைகள்* (இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு) மற்றும் அவற்றின் *உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான பயன்களை* விளக்குகிறது:
# # # 1. இனிப்பு (Sweet)
- *பயன்*:
- தசைகள் வளர்ச்சி பெற உதவும்.
- மன அமைதியை ஊக்குவிக்கும்.
- *உணவுகள்*:
- கரும்பு, காரட், பீட்ரூட், அரிசி, வெல்லம், கோதுமை, பரங்கிக்காய்.
# # # 2. புளிப்பு (Sour)
- *பயன்*:
- தேவைப்படும் கொழுப்பை தரும்.
- சுவை உணர்வுகளை தூண்டும்.
- *உணவுகள்*:
- எலுமிச்சை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய்.
# # # 3. உவர்ப்பு (Salty)
- *பயன்*:
- உடலில் நீர் சுரக்க உதவும்.
- சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
- *உணவுகள்*:
- உப்பு, பூசணி, முருங்கை, சர்க்கரை, பீட்ரூட்.
https://chat.whatsapp.com/C55cioIgDsa1yenaMU1khi?mode=gi_t
# # # 4. கார்ப்பு (Spicy)
- *பயன்*:
- எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்.
- ஜீரண சக்தியை மேம்படுத்தும்.
- *உணவுகள்*:
- மிளகு, கறி மசாலா, மஞ்சள், மிளகாய், பூண்டு.
# # # 5. கசப்பு (Bitter)
- *பயன்*:
- நரம்புகளை வலுப்படுத்தும்.
- உடலின் நச்சு பொருட்களை அகற்றும்.
- *உணவுகள்*:
- பாகற்காய், சுண்டைக்காய், வெந்தயம், கத்தரிக்காய், எள், வெப்பம்.
# # # 6. துவர்ப்பு (Astringent)
- *பயன்*:
- இரத்தத்தை சுத்தமாக்கும்.
- உடலின் வெப்பத்தை குறைக்கும்.
- *உணவுகள்*:
- மாதுளை, வாழைக்காய், மா, நெல்லிக்காய், அத்திக்காய், அவரை.
# # # முக்கியம்
அறு சுவைகளும் *உடலின் சமநிலையை* பாதுகாக்க முக்கியம். ஒவ்வொரு சுவையும் தனித்தனியாக *ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைகள்* கொண்டுள்ளது. 🥗

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/C55cioIgDsa1yenaMU1khi?mode=gi_t

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

WhatsApp Group Invite

*மகளிருக்கான மாதவிடாய் சூழ்ச்சிக் கால உணவு முறையை* விளக்குகிறது. இது மாதவிடாய் காலத்தில் *உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை* ...
18/03/2026

*மகளிருக்கான மாதவிடாய் சூழ்ச்சிக் கால உணவு முறையை* விளக்குகிறது. இது மாதவிடாய் காலத்தில் *உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை* மேம்படுத்த உதவும்.

# கால கட்டங்களின் அடிப்படையில் உணவு வழிகாட்டுதல்
# 1 முதல் 5 நாட்கள் (மாதவிடாய் தொடக்கம்):
- *எள்* (எள் உருக்கை, எள் இலைப் படை):
- உடல் வெப்பத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும்.
- *Phyto Estrogen* அளவுகளை மேம்படுத்தி, பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

# 6 முதல் 14 நாட்கள் (மாதவிடாய்க்குப் பிறகு):
- *உளுந்து* (உளுந்து கஞ்சி, உளுந்து அடை):
- உடலுக்கு சக்தி சேர்க்கும்.
- எலும்பு வலிமையை அதிகரிக்கவும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் *இடுப்பு வலி மற்றும் தசை வலிகளை* தணிக்கவும் உதவும்.

# # # # 15 முதல் 28 நாட்கள் (மாதவிடாய் முடிவுக்கு முன்னதாக):
- *வெந்தயம்* (வெந்தயக் கஞ்சி, வெந்தயக் குழம்பு):
- *ஹார்மோன்களின் சமநிலையை* சீராக வைத்துக்கொண்டு, *Hormonal Imbalance* ஏற்படாமல் காக்கும்.
- உடலின் *சீர்குலைவுகளை தணிக்கவும்*, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

# # # முக்கிய குறிப்புகள்
- இந்த உணவுகள் *சக்தி*, *வலிமை*, மற்றும் *ஆரோக்கியத்தை* மேம்படுத்த உதவுகின்றன.
- மாதவிடாய் சூழ்ச்சியில் *சீரான உணவுகள் மற்றும் ஓய்வு* அவசியம்.

இது பெண்களின் *மாதவிடாய் ஆரோக்கியத்தை பாதுகாக்க* ஒரு பயனுள்ள வழிகாட்டுதலாகும்.

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/DlCloYSXqXO6cGC71pnEym?mode=gi_t

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

WhatsApp Group Invite

*உடல் வலிகள் வர காரணம்**"உடம்பை வில்லாக வளைப்பவனுக்கு நோய் அம்பாகக் கூட வராது"*இதையேதான் சித்த மருத்துவமும் யோகக் கலையும...
18/03/2026

*உடல் வலிகள் வர காரணம்*

*"உடம்பை வில்லாக வளைப்பவனுக்கு நோய் அம்பாகக் கூட வராது"*

இதையேதான் சித்த மருத்துவமும் யோகக் கலையும் ஆழமாக வலியுறுத்துகின்றன.

உடலில் வலி ஏற்படுவதற்கு இரத்த
ஓட்டத் தடை (Blood Circulation) ஒரு
முக்கிய காரணம் என்றாலும்,
அதனுடன் தொடர்புடைய மேலும்
சில காரணங்களையும் நாம்
கவனிக்க வேண்டும்:

1. இரத்த ஓட்டம் மற்றும் பிராண சக்தி

வயதாகும்போது தமனிகள் (Arteries) சற்று கடினமடையலாம். இதனால் தசை நார்களுக்குச் செல்ல வேண்டிய இரத்தம் குறையும்போது, அங்கு தேக்கநிலை உருவாகி வலி ஏற்படுகிறது. திருமூலர் போன்ற சித்தர்கள் இதை "நாடி சுத்தி" இல்லாமையே நோய்க்கு காரணம் என்கிறார்கள். ரத்தம் பாயும் இடங்களில் "பிராண சக்தி" (Oxygen) தடையின்றி சென்றால் வலி இருக்காது.

2. மூட்டுகளில் உயவுப்பொருள் குறைதல் (Synovial Fluid)

இயந்திரத்திற்கு எப்படி எண்ணெய் தேவையோ, அதுபோல நம் மூட்டுகளுக்கு 'சினோவியல்' திரவம் தேவை. அசைவுகள் குறையும்போது இந்த
திரவம் காய்ந்துபோய், எலும்புகள் ஒன்றோடொன்று உராய்ந்து வலியை உண்டாக்குகின்றன.

3. தசைப்பிடிப்பு (Stiffness)

பயன்படுத்தாத இரும்பு துருப்பிடிப்பது போல, நாம் அதிகம் அசைக்காத தசைகள் இறுகிப்போகும் (Atrophy). இது நரம்புகளை அழுத்தி வலியைத் தரும்.
https://chat.whatsapp.com/DlCloYSXqXO6cGC71pnEym?mode=gi_t
இதற்கான தீர்வு:
தினமும் stretching செய்வதன்
நன்மைகள் தினமும் உடலை நீட்டி
மடக்குவது (Stretching/Asanas) ஒரு
அற்புதமான தடுப்பு மருந்து:

* தேக்கத்தை நீக்குகிறது: தசைகளை நீட்டும்போது, அங்குள்ள அசுத்த இரத்தம் வெளியேறி, புதிய சுத்தமான இரத்தம் பாய வழிவகை செய்கிறது.

* நெகிழ்வுத்தன்மை (Flexibility): தசைநார்களை (Ligaments) இளமையாக வைத்திருப்பதால், திடீர் சரிவு அல்லது சுளுக்கு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

* நரம்பு மண்டலம்: முதுகுத்தண்டையும் கை கால்களையும் நீட்டி மடக்கும்போது நரம்புகள் புத்துயிர் பெறுகின்றன.

ஒரு சிறிய யோசனை:

தினமும் அதிகாலையில் "சூரிய நமஸ்காரம்" அல்லது எளிய "பவனமுக்தாசனம்" (மூட்டுகளுக்கான பயிற்சி) செய்வது உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலை என்றும் இளமையாக வைத்திருக்க உதவும்.

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்" - திருமூலர் வாக்குப்படி,
உடலை வளைத்து நெகிழ்த்தி வைத்திருப்பது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் அடிப்படை.

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/DlCloYSXqXO6cGC71pnEym?mode=gi_t

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

WhatsApp Group Invite

16/03/2026

சளித் தொல்லை நீங்க!

குப்பைமேணி இலையுடன் நாட்டு வெங்காயத்தை அரைத்துச் சாறெடுத்து காய்ச்சிக் குடித்தால் சளித்தொல்லை நீங்கி உடனே உடல் நலம் பெறும்.

இண்டிலை, தூதுவலை, சுக்கு, திப்பிலி இவற்றை இடித்து சாறெடுத்து வடிகட்டி காய்ச்சிப் பருக பறந்தோடிவிடும் இருமல் நோய்.

ஊமத்தம் பூவை காயவைத்துக் கொளுத்தி, அதில்வரும் புகையை முகர்ந்தால் எப்படிப்பட்ட இருமலும் நின்றுவிடும்.

எளிதில் ஜீரணமாக:-

ஓமவள்ளி இலையில் கசாயம் எடுத்து காலை வேளையில் மூன்று ஸ்பூன் கொடுத்து வந்தால் குழந்தைக்கு நன்றாக ஜீரணமாகும்.

விக்கல் விரைந்தோட:-

எட்டு திப்பிலியும், பத்துச் சீரகமும் தூள் செய்து தேனில் கலந்து உண்ண விக்கல் விரைந்தோடும்.

மூலக்கடுப்பு நீங்க:-

நெல்லி, முள்ளி, வெந்தயம் இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி தயிர் கலந்து சாப்பிட்டால் மூலக்கடுப்பு குணமாகும்...

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/H92OtITF6rvDYIP9uCZaGk?mode=gi_t

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

16/03/2026

மனித உடலின் அதிசய இயந்திரமாக விளங்கும் உறுப்பாகத் தோன்றி, நம்மை நாம் ஆள வைக்கும் அற்புதமான சக்தி — மூளை.
இது எண்ணும், எண்ணவைக்கும், நினைக்கும், கற்பிக்கும் மையம்.
ஆனால், நாம் தான் அந்த மூளையை தினசரி மெல்ல மெல்ல குறைத்து

நம் அன்றாட தவறான பழக்கங்கள் தான், அந்த நுண்ணிய ஆன்மீக இயக்கத்தின் சக்தியை சுருக்கி சோர்வாக்குகின்றன.
அவை என்னவென்று பார்ப்போம்:

---

1. காலை உணவை தவிர்ப்பது – வெறும் வயிற்றால் வெறுமையடைந்த மூளை

காலை உணவு என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் அடிப்படை எரிபொருள்.
இதனை தவிர்ப்பது, மூளையின் செயல்பாடுகளைத் தடுக்கும் ஓர் எதிரி.
சர்க்கரையின் அளவு குறைய, நம் எண்ணம் மந்தமாகிறது.

---

2. அதிக உணவு – அறிவின் ரத்தநாடியை அடைக்கும் பழக்கம்

மிகை உணவு, ரத்த நாளங்களை இறுக்கி, மூளைக்குச் செல்லும் சத்துக்களைத் தடை செய்கிறது.
அறிவுப் பெருக்காக வேண்டிய உணவு, அறிவை மங்கச் செய்கிறது!

---

3. புகைப்பழக்கம் – நுண்மையையும் நினைவையும் நாசமாக்கும் புகை

புகை, நம் மூளையை சுருக்கி, அல்ஸைமர்ஸ் போன்ற நினைவழிய வியாதிகளை அழைத்துவரும்.
ஒவ்வொரு புகையும், அறிவின் வேரை மெதுவாகக் கொளுத்துகிறது.

---

4. சர்க்கரையின் மோகம் – அறிவின் இனிமையை அழிக்கும் கசப்பு

நிறைய சர்க்கரை உணவுகள், புரதத்தைக் கட்டுப்படுத்தி, மூளையின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
இனிப்பில் மறைந்திருக்கும் இளைக்க முடியாத இழப்பு!

---

5. மாசுக்காற்று – மூளை மூச்சுத் திணறும் நிலையாக்கும்

மாசு நிறைந்த காற்று, மூளைக்கு தேவையான ஆக்ஸிஜனை குறைக்கிறது.
ஆக்ஸிஜன் இல்லாத மூளை, ஓய்வில்லா ஊழிக்குள் தள்ளப்படும்.

---

6. தூக்கமின்மை – ஓயாமல் ஒடைக்கப்படும் அறிவின் ஓடம்

நல்ல தூக்கம் என்பது மூளையின் ஓய்வூட்டும் பூஜை நேரம்.
தூக்கத்தை ஒதுக்கும் பழக்கம், நினைவு, செறிவு, ஒருமை என அனைத்தையும் பறிக்கும்.

---

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது – சுவாசத்தில் குறையும் சக்தி

தலையை போர்வையால் மூடுவது, நமக்கே தெரியாமல் கரியமிலவாயுவை சுவாசிக்க வைக்கிறது.
அதனால் ஆக்ஸிஜன் குறைவாகி, மூளையின் புத்திசாலித்தனமும் குறைகிறது.

---

8. நோயில் மூளை வேலை – நிவாரண நேரத்தில் நிலைகுலைவு

உடல்நலம் பாதிக்கப்பட்டபோது மூளையையும் வேலைக்குத் தள்ளுவது,
இரட்டை சுமையை ஏற்படுத்தி மூளை மெலிய வைக்கிறது.

---

9. சிந்திக்காமை – செயலற்ற மூளை சுருங்கும்

மூளையை சிந்தனையால் வேலைக்குத் தூண்டும் பழக்கம்,
அதில் புதிய நரம்பு இணைப்புகளை உருவாக்குகிறது.
சிந்தனையில்லாத நிலை, செயலற்ற நிலையைக் கூட்டும்.

---

10. பேசாமல் இருப்பது – அழகிய அணைப்பை அணைக்கும் அமைதி

உணர்வுகளை பகிராமல், வார்த்தைகளை அடக்கி வைப்பது,
மனதை மட்டும் அல்ல, மூளையையும் தன் சுழற்சியில் சுருக்குகிறது.
பேச்சு என்பது மூளையின்

மூளையின் நலன் என்பது, நம் பழக்கங்களில் ஒளிந்திருக்கும்.
சிறு சீர்மாறுகள் தான், வீணாகும் வல்லமையை மீட்டெடுக்கும்

11. நமது கை, கால்களின் அசைவுகளை உணர்ந்து புரிந்து அசைப்பது.

நமது ஒவ்வொரு கை கால் அசைவுகளை நாம் புரிந்து உணர்ந்து வீரக் கலையின் மூலம் பயிற்சி செய்தால் நமது மூளை நல்ல சிந்தனையுடன் தெளிவான செயலாற்றலுடன் விலங்கும்


அற்புதமான மூளை,
அழிவில்லா ஆற்றலுடன், ஒளிரச்செய்யும்!

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/H92OtITF6rvDYIP9uCZaGk?mode=gi_t

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

Address

Karungalpatti
629157

Website

Alerts

Be the first to know and let us send you an email when இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category