27/12/2023
**' *உபாசனா* '*
_சித்தர்கள் உலகத்திற்கு கொடுத்த சக்திமிக்க வழிமுறைதான் உபாசனா. அவதாரங்கள் கூட உபாசனாவை கடைபிடித்துள்ளனர். அதைப் பற்றி இப்போது காண்போம்._
*உபாசனை என்றால் என்ன?*
இந்த சொல்லின் நேர் அர்த்தம் 'இறைவனுக்கு அருகாமையில்'.
(உண்மையான) குரு மூலமாக ஒரு சாதகன் ஒரு தெய்வத்தின் பீஜ மந்திரத்தை பெற்று அவர் கூறியபடி பயிற்சி செய்துவர அத்தெய்வத்தின் காட்சியை பெறுகிறான். அத்தெய்வம் அவனோடு பேசுகிறது. இதுதான் உபாசனை.
*உபாசனையை யார் செய்யலாம்? யார் செய்யக்கூடாது?*
சில உபாசனைகளை பத்து வயது சிறுவன் முதல் எந்த வயதினரும் செய்யலாம். (உதாரணம், தன்வந்திரி பகவான் உபாசனை.)
சில உபாசனைகள் ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் (உதாரணம், விஷ்ணு மோகினி உபாசனை)
*உபாசனா என்பது எப்போது உருவானது?*
வேத காலத்திலிருந்து உபாசனா முறை உள்ளது. வேதங்களில் அனேக தேவதைகளுக்கான யாகங்கள் பற்றிக் கூறப்படுகிறது. உபநிஷதங்களில் அனேக உபாசனைகளின் குறிப்புகள் உள்ளன.
*புத்தகங்களில் பல மந்திரங்கள் கூறப்படுகின்றன. அதை செய்யலாமா?*
மந்திரங்களுக்கு உயிர் கொடுப்பது குருவாக்குதான். குருவானவர் எந்த உபாசனையில் சித்திபெற்றிருக்கிறாரோ அந்த உபாசனையைத்தான் சீடனுக்கு தர முடியும். அதுவும் அந்த தெய்வத்தின் உத்தரவு பெற்றுத்தான் தர வேண்டும். 'மந்திரத்தில் சித்தி பெறுதல் மற்றும் அந்த தெய்வத்தின் உத்தரவு' இந்த இரண்டும் இல்லாமல் மந்திரத்தை பயன்படுத்துவது ஆபத்தாகக்கூட முடியும்.
*சித்தி பெறுதல் என்றால்?*
நீங்கள் உபாசனை செய்யும் தெய்வத்தின் தரிசனத்தை தியானத்தில் கண்டு பேசுவது ஒரு நிலை. அந்த தெய்வம் நேரில் வந்து நீங்கள் விழித்திருக்கும் நிலையில் தரிசனம் தருவது மற்றொரு நிலை. இந்த மாதிரி பல படிநிலைகள் இருக்கிறது. நீங்கள் சித்தி பெற்றீர்கள் என்றால் அந்த தெய்வம் முன் தோன்றி வரம் தரும். சித்தியிலும் மூன்று நிலைகள் உள்ளன.
*மந்திர பயிற்சி பெற்ற ஒருவர் மக்கள் நலனுக்காக மற்றவர்களுக்கு மந்திரத்தை தரலாமா?*
குரு அல்லது தெய்வத்தின் உத்தரவின்றி மந்திரத்தை தருவது ஆன்மிக வீழ்ச்சியாகும். அது மக்களுக்கு நல்லது செய்வதகாது.
அகத்தியர், திருமூலர் போன்ற மாபெரும் சித்தர்கள் நினைத்திருந்தால் எத்தனையோ கோடி பேருக்கு மந்திரங்களை கொடுத்திருக்க இயலுமே. ஏன் செய்யவில்லை.? மந்திர உபதேசம் ஒருவன் சிறிதளவாவது பிராப்தமுள்ளவனாக இருக்க வேண்டும்.
(இவ்விடம் இன்னொரு விசயத்தையும் கூறுகிறோம். சித்தியற்ற ஒருவர் மூலமாக பெற்றோ, புத்தகம் மூலமாக கற்றோ நீங்கள் மந்திரத்தை 48 நாட்கள் உருப்போடுவதைவிட உண்மையான குருவின் கடைக்கண் பார்வையை கணநேரம் பெறுவது உங்களுக்கு மேலான நன்மைகளை தரும்.)
*திருமூலர் போன்ற சித்தர்கள் பல மந்திரங்களை கூறியுள்ளனரே?*
ஆன்மிகப் பாதையில் இருக்கும் பல சூட்சுமங்களை வெளிப்படுத்தவே திருமூலர் போன்றோர் பல வழிமுறைகளை எழுதி வைத்தனர். ஆனால், அவற்றையெல்லாம் கற்றிட குரு வேண்டும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளனர்.
'குரு இல்லாத வித்தை பாழ்'
*உண்மையான குருவை எப்படி கண்டுபிடிப்பது?*
சீடன் தயாராக இருந்தால் குரு வருவார் என்பது விதி.
இந்த கலிகாலத்தின் அடையாளம் 'ஆன்மிகத்தில் போலிகள் தான்'.
போலி என்ற வார்த்தைக்கே 'போல் இருத்தல்' என்றுதானே அர்த்தம். எனவே, குருவாக நடிப்பவர்களை கண்டுபிடிப்பது மிகக்கடினமே.
ஒரே வழி 'உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்வதே. ஏனென்றால் தகுதி வாய்ந்தவர் குருவை அடைவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது.
இன்னொரு எளிய வழி உள்ளது. ஒன்று, குருவிடம் பயிற்சி பெற்றுவருபவர்களுக்கும் ஆன்மிக அனுபவம் ஏற்பட்டுள்ளதா? அவர்களில் யாராவது இறைதரிசனமும் யோகத்தில் சூட்சுமத்தை தொடர்பு கொள்ளும் ஆற்றலும் பெற்றுள்ளார்களா? என்று ஆராய்ந்து அறியுங்கள்.
*குருவின் தகுதிகள் என்னென்ன?*
குருவை ஒரு வரையறைக்குள் அடக்க, அடைக்க இயலாது. ஆனால், சில விசயங்களைக் கொண்டு அறியலாம். குரு இறைவனோடு பேசக்கூடியவராக இருப்பார். அவருக்கு சிவன் மற்றும் விஷ்ணுவின் பூர்ண ஆசியிருக்கும்.
உங்களின் முக்காலத்தையும் அறிந்தவராக இருப்பார்.
அவருடைய சாதகர்களும் தரிசனம் பெற்றவராக திகழ்வார்கள்.
*கடவுளை காண முடியாது உணர மட்டும்தான் முடியும் என்கிறார்களே?*
இறைவனை உணர்தல் என்பது ஆத்மாவிற்குள் உள்ள பரமாத்மாவை உணர்தல். கலத்தல். ஆனால், இறை தரிசனமும், ஆத்மதரிசனமும் இல்லாமல் அது சாத்தியமில்லை.
இதை புரிந்து கொள்ளவே நீங்கள் குருவை அடைந்திருந்தால்தான் முடியும்.
இறைவனை அடைய தனது வாழ்வையே அர்ப்பணிப்பவரே இறைவனை அடைந்து குருவாகிறார். குரு ஸ்தானம் சதாசிவன் தரும் பொறுப்பு.
சிலர் ஆரம்பத்தில் சிறப்பாக தியானிப்பர் சில நல்லுணர்வுகளைக்கூட பெறுவர். உடனே மற்றவர்களுக்கு போதிக்க நினைப்பர். அதாவது தான் குருவாகிவிட்டதாக நினைத்துக் கொள்வார்கள். அதனால் அவர்களின் ஆன்மிகம் தேங்கும். அவர்களால் இறைதரிசனம் பெற இயலாது.
இறை தரிசனம் பெறாத ஒருவர் 'இறைதரிசனம் குறித்து என்ன கூறமுடியும்.?
தத்துவவாதிகளால் ஒருபோதும் முக்தியை தரமுடியாது.
*முன்பு வாழ்ந்த மகான்களை குருவாக நினைக்கலாமா? பலனுண்டா?*
பொய்யான நபரை நீங்கள் பின்பற்றினால் கூட கடவுள் கருணையோடு உங்கள் நம்பிக்கைக்காக (உங்கள் கர்மவினைக்கேற்ப) சில அனுக்கிரங்களை செய்வார். அப்படியிருக்கையில், முன்பு வாழ்ந்த மகான்கள் தம்மை வணங்குவோருக்கு நன்மை செய்ய மாட்டார்களா என்ன? ஆனால், அவர்கள் கூட உலகியலில் சில நன்மைகளை செய்ய இயலுமே தவிர முக்திக்கு, ஆன்மிகத்திற்கு வாழும் குருவையே கைகாட்டுவார்கள்.
*சிவன் இராஜ யோகத்தில் எந்தமாதிரியான உபாசனைகளை வழங்குகிறீர்கள்?*
இங்கு எங்களுக்கு குரு பிரதிநிதியாக இருப்பவர் தாந்த்ரீகத்தில் தசமகாவித்யாவை முடித்த 'தவதாந்த்ரீக யோகி' பிரஜாபதி ரிஷியோகி ஆவார்.
(தசமகாவித்யாவை முடித்தவர்களுக்கு சகல தேவதா சித்திகளும் எளிதில் ஏற்படும்.)
அவரே உங்களுக்கு உங்கள் பக்குவத்திற்கு ஏற்ற தெய்வத்தின் உபாசனையை வழங்குவார். இப்போது, புதிய சாதகர்களுக்கு இப்போதைய காலச்சூழல் கருதி தன்வந்திரி உபாசனையை வழங்கிவருகிறோம்.
எங்களில் பலர் பிரத்யங்கிரா உபாசகராக உள்ளனர். சிலர் வராகி உபாசனை புரிகின்றனர். தாராதேவி, அனுமன், நாராயணர், காளிகாம்பாள் உபாசகர்களும் உண்டு. குலதெய்வ உபாசனைகள் பெற்று பலனடைந்தோர் பலர்.
குலதெய்வம் தெரியாதவர்கள் கூட உபாசனை பெற்று தனது குலதெய்வத்தை கண்டறிய முடியும்.
உண்மையான ஆன்மிக தாகம் கொண்ட பறவைகளின் வேடந்தாங்கல் சிவன் இராஜ யோகம்.
*நன்றி* ...
நன்றி...
-
அழைக்க; *பிரம்மநாதர்_8610696679*,
*கிருஷ்ணதாசன்_9361942790*