28/10/2021
கோவையில் Nov 28 ஆம் தேதி.....
தமிழ்நாடு பாரம்பரிய வர்ம வைத்தியர்கள்
சங்கம் (பதிவு எண்:- 78/2021) நடத்தும் நிகழ்வு..
மாண்புமிகு சுகாதாரத்துறைஅமைச்சரிடம் முன் வைத்த 10-அம்ச கோரிக்கைகள் குறித்த விளக்க
கூட்டமும்,
மாநிலதலைவர்;
வர்மசிகாமணி. புளியரை,திரு. C.முருகேசன் ஆசான் அவர்களின்,
புதிய மாணவர்களுக்கான நேரடி அறிமுக வர்ம பயிற்சி வகுப்பும் நடைபெறும்.
10-அம்ச கோரிக்கைகள் ஒரு சில;
1)பாரம்பரிய வர்ம வைத்தியர்களை திறனாய்வு செய்து தகுதி தேர்வு அடிப்படையில் TNPVVS சங்கத்துடன் இணைந்து வர்மம் சார்ந்த ஒர் சான்றிதழை தமிழக அரசின் மூலமாக வழங்கவும்,
2)அனைத்து தமிழகஅரசு மருத்துவ மனைகளிலும் வர்ம வைத்தியம் மற்றும்
எலும்பு ஒடிவு முறிவு என்று ஒரு துறையை ஒதுக்கி,அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கவும்,
3)தமிழக விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் Msc varma வைக் கொண்டு வரவும்,
4) வர்மக்கலைக்கென்று தனியாக ஓர் கல்லூரி மற்றும் தனியாக ஒரு வாரியம் உருவாக்கவும்...
இதுபோல் அனைத்து பாரம்பரிய வர்ம வைத்தியர்களுக்கும் பயன்பெறும் வகையில், முன்வைத்த,
10 அம்ச கோரிக்கைகளை
குரு பாரம்பரியம் பரம்பரை வைத்தியர்கள் முன்னிலையில்
28/11/2021 அன்று கூட்டத்தில் விளக்கபடும்.
அனைத்து பாரம்பரிய வர்ம வைத்தியர்களும் கோவையில் ஒன்றுகூடுவோம். ஒன்றிணைப்போம்.
இச்சங்கமானது தமிழகத்தில்
நம் ஆசான் அவர்களால் உருவாக்கப்பட்டு அனைத்து வர்ம வைத்தியர்களையும் ஒன்றினைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது போன்ற, கொள்கைகளை ஆசானின் கட்டளையோடு TNPVVS சங்கம் மூலமாக செயல்படுத்தபடும்.
மேலும்
அன்றைய பயிற்சி வகுப்பு விபரம்
கோவை வாழ் மக்கள் மற்றும்
பாரம்பரிய வைத்தியர்கள்
மாற்று மருத்துவம் பார்க்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பயன்படும் நோக்கில் அமைக்கப்பட்டு
தற்போதுள்ள வாழ்வியல் முறையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும்
இந்த வர்ம பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில்,
21 வயது முதல் 85 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலரும் இந்த வர்ம பயிற்சியைக் கற்றுக் கொள்ளலாம்
இப்பயிற்சியில் கலந்து கொண்டு உங்கள் வீட்டிலுள்ள அனைவருக்கும் வரும் பொதுவான வலிகள், மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும்
இடுப்பு வலி, முழங்கால் வலி, தலைவலி,
ஆஸ்துமா,
சர்க்கரை நோய், Bp(ஹார்ட் அட்டாக்கிற்க்கு first aid)
மிக முக்கியமாக தற்போது நம் நாட்டின் பெறும் பிரச்சனையாக உள்ளது குழந்தைபேரிண்மை. ஆசானால் கற்றுத் தரப்படும் இப்பயிற்சியினை முறையே தம்பதிகள்இருவரும்
தொடர்ச்சியாக செய்து வந்தால்
ஆண், பெண்,
மலட்டுத் தன்மை நீங்கி
சுகமாக செலவின்றி குழந்தைப் பேறு பெற்றுக் கொள்ளலாம்.
மேலும்,
அனைத்து விதமான ஆரம்பகட்ட வியாதிகளுக்கும், வலிகளுக்கும் வர்மசிகிச்சை செய்முறை விளக்கத்துடன் நேரடியாக ஆசான் வாயிலாக கற்றுத்தரப்படும்.
பயிற்சி கட்டணம்:
ரூபாய்; 800
(மதிய உணவு உட்பட)
மறைக்கப்பட்ட வர்ம கலையின் உச்சம் தொட்ட வர்ம சிகாமணி புளியறை திரு.முருகேசன் ஆசானின்
பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவரும்
தமிழ்நாடு பாரம்பரிய வர்ம வைத்தியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கான
ஆவணங்கள் :-
1)ஆதர்கார்டு ஜெராக்ஸ் -2
(தற்போதுள்ள முகவரியில் ஆதர்கார்டு இருக்கவேண்டும்)
2) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4
3) ₹1000 (ஆயுள் கால
உறுப்பினர் கட்டணம்)
4) நீங்கள் வர்மம் பயின்ற ஆசானிடம் வாங்கிய சான்றிதழ்
வர்மாணிகளின் ஒற்றுமையே!
வர்ம கலையின் வெற்றி!
வரலாறு படைப்போம்.... ஆசானின் தலைமையில் ஒன்றிணைவோம்....
வென்று மகிழ்வோம்...
நாள்:- 28/11/2021
நேரம்:- காலை 9 To மாலை 5 மணிவரை
இடம்:- திவ்யோதயா ஹால்
Opp road to Railway station
சேரன் டவர்ஸ் பின்புறம்
முன் பதிவிற்கு:-
செ.ஜெயபாலன். 9655496600.
மேலும் தொடர்புக்கு:-
இரா.சிவக்குமார்
மாநில செயலாளர்.
தழிழ்நாடு பாரம்பரிய வர்ம வைத்தியர்கள் சங்கம்.
(பதிவுஎண்:-78/2021)-மதுரை.
9566520482. /0452-3551619