Siddhar Mooligai - சித்தர் மூலிகை

Siddhar Mooligai - சித்தர் மூலிகை Siddhar mooligai.com is a initiative of Mr.Siva from Kattali,
Who is an able and self-trained researcher in the Ayurveda Medicine Field.

Through This Website he intendeds to spread awareness about Indian Siddha & ayurvedha eminence. இறைத்து உண்பவனே இறைவன்
ஆசைகளை அடக்கியவனே ஆண்டவன்
தேவைகளை குறைத்து கொள்பவனே தேவன்
பிற உயிர் காப்பவனே பிரிம்மன்
பிறன் மங்கை நாடாதவனே பிறை சூடன்
ஆதாரங்களை அறிந்து கொண்டவன் சிவனாமே

28/09/2025
கருங்காலி (karungali plant)-9597892185
28/09/2025

கருங்காலி (karungali plant)-
9597892185

கருங்காலி கோல்
21/09/2022

கருங்காலி கோல்

பாலா
21/09/2022

பாலா

கருங்காலி விநாயகர்
21/09/2022

கருங்காலி விநாயகர்

கருங்காலி (காளி அம்மன்)
21/09/2022

கருங்காலி (காளி அம்மன்)

Karungali (கருங்காலி மணி)
21/09/2022

Karungali (கருங்காலி மணி)

ஒரு ஊரில், ஒரு ராஜா.......!ஒரு குட்டி நாட்டிற்கு ஒரு சட்டமிருந்தது.அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நாட்டிற்கு ராஜாவாக...
15/02/2021

ஒரு ஊரில், ஒரு ராஜா.......!

ஒரு குட்டி நாட்டிற்கு ஒரு சட்டமிருந்தது.

அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நாட்டிற்கு ராஜாவாக வரமுடியும்.
ஆனால்,

அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே!

ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது.
வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே!

மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்.

இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது.
இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.

ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.

இருப்பினும் ஒரு சிலர் எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு.

அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு...

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும்.
அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான்.

மக்கள் வாயைப் பிளந்தனர. ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான்.

''மன்னன் செல்லும் படகா இது!
பெரிய படகைக் கொண்டு வாருங்கள்!
நான் நின்று கொண்டா செல்வது!சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன!

சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே!

காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை.

அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான. படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான்.

''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா!
நான் என்ன செய்தேன் தெரியுமா?

ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்;
இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர்.

இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது.

இந்த 1000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்!

வாழப் போகின்றேன்!
அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்!

உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

மக்களிடையே அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது!

அந்நாட்டு சட்டம் மன்னனின் சுறுசுறுப்பினால் உபயோகமற்றுப் போய்விட்டது!

இப்போது அந்த மன்னனே ஆற்றின் இரு கரைகளையும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆள்கிறான்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று: ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு: அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது.

சிந்தனை கதைஒரு இளைஞன், ஒரு ஜென் குருவிடம் வந்தான். அவன்ஐயாஎனக்கு உலகம் சலித்து போய்விட்டது. உங்களிடம் சீடனாய் சேர விரும்...
15/02/2021

சிந்தனை கதை

ஒரு இளைஞன், ஒரு ஜென் குருவிடம் வந்தான். அவன்ஐயா
எனக்கு உலகம் சலித்து போய்விட்டது. உங்களிடம் சீடனாய் சேர விரும்புகிறேன்
என கேட்டான்.

குரு
எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்க்கு ஆர்வத்துடன் ஆழமாக எதிலாவது
ஈடுபட்டதுண்டா
என கேட்டார்.

இளைஞன் சிந்தித்து விட்டு ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். எனக் கூறினான்.

குரு; நீ காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஓரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். சதுரங்க அட்டை கொண்டு வரப் பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார்.

குரு, அவரை பார்த்து துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப் நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன் என்றவர்
அவனிடம் திரும்பி, இதோ பார், இது வாழ்வா சாவா என்பதற்க்கான
போட்டி
நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டி விடுவேன்
என்பதை நினைவில் கொள் என்றார்.

போட்டி தொடங்கியது.
இளைஞனுக்கு முழு உடலும் நடுங்கியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா?

துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அதுபோல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்.

ஆனால் இளைஞன் அதில் முழ்கிய ஓரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது.

அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். பனிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது. போட்டியில் தோற்று அவருடைய தலை வெட்டப்படுமே
என்பதை
நினைத்ததுமே
அவர்பால் அவனுக்கு அன்பு ஏற்பட்டது. இந்த கருணையை உணர்ந்த அந்த கணமே அவனுக்கு, தெரியாத கதவுகள் திறந்தன. பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை. ஆனால் இந்த துறவி கொலை செய்யப் பட்டால் அழகான ஓன்று அழிந்துவிடும். ஆனால் நான் பயனற்றவன். துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான்.

அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர், இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள். எனக் கூறினார்
குரு
மகனே நீ வெற்றி பெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார்.

இதுதான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீ மற்றவருக்காக
பிரதிபலனின்றி உன்னை தியாகம் செய்யும் பொழுது
நீ கருணை உடையவனாகிறாய்.

அன்பு எப்போதும் கருணை மயமானது.

அவை உனது இருப்பின் ஓரு இயல்பாகட்டும்.

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔.                     *கர்ம வினை !*.   🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔.      உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் ...
15/02/2021

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔. *கர்ம வினை !*.
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔.

உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.

ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக*
*அமைவது* ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.

அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.
சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.

சிலருக்கு நல்லது செய்கிறோம்.
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.
இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"*
எனப்படுகிறது.
*சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது.
சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது.

சிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.*

சிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன.

கனவில் கூட காண முடியாத பல *ஆச்சர்யங்கள்* நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.

*இதற்கெல்லாம்* என்ன *காரணம் ?*

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

*நாமே* நம் தாயை, *தந்தையை,*
*சகோதர* சகோதரிகளை, *நண்பர்களை,* *மனைவியை,* *கணவனை,* *பிள்ளைகளை,* *தேர்ந்தெடுப்பதில்லை.*

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும்
*தானே* நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது.

முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .

ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்.

அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில்
#வேறு_பார்வையில் தோன்றுவர்.

எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது.

அது என்ன ?
*சமன்* செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும்
*கர்ம* கதிகளின்
*எச்சங்களே* அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ?

இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய *"கர்ம வினை"* தான் .

இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம்.
அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.

அந்தக் கூட்டின் பெயரே *"சஞ்சித கர்மா"* எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே *'பிராரப்தக் கர்மா'* எனப்படுகிறது.

இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்
நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம்
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்.

இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

இது தவிர *'ஆகாம்ய கர்மா'* என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது.
யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.

அவரவர்கள் செய்வினையின்
பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும்
வாழ்க்கை அமையும் .

துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே.

இதைத் தான் _"தீதும் நன்றும் பிறர் தர வாரா"_
என நம் மதம் போதிக்கிறது.

நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு
நாம் மட்டுமே பொறுப்பு.

அப்படி என்றால்
*ஆகாமி கர்மா* நம்முடைய கையிலேயே இருக்கிறது.

இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது.

நீ செய்யும் நற்செயல்களையும், வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால்,

நீ என்ன செய்யப் போகிறாய் ?

எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ?

எது போன்ற வாழ்க்கைத் தடத்தை
ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது
உனக்குப் புலப்படும்.

இதை போதிப்பது தான் *"ஆன்மீகம்"*

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.

பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும்
தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது.

ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.

அதேபோல பெரும் பணக்காரர்களையும் *'துக்கங்கள்*' விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic-
ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை
உண்ண முடியாது.

பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.

'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'


நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச்
செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்._

நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே_ பலனாகப் பெறுகிறோம்.

எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை._

நமக்கு நடக்கும் நடக்கப்போகும்_ *நல்லதை* யாராலும் *கெடுக்க* முடியாது. அதேபோல் *தீமையையும்*
*கொடுக்க* முடியாது.

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔.

Address

Kaveripakkam
632508

Alerts

Be the first to know and let us send you an email when Siddhar Mooligai - சித்தர் மூலிகை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Siddhar Mooligai - சித்தர் மூலிகை:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram