08/05/2021
* வீட்டிலேயே ஆக்சிஜன் வைத்தியம் செய்வது எப்படி?
* கோவிட் வந்தால் மருத்துவமனை எப்போது தேவை.
* ரெம்டெசிவிர், டோக்லிசுமாப் எப்போது தேவை?
தமிழில் Dr. V. Hariharan, MBBS, MD, Coimbatore
1. பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியில் உங்கள் ஆக்சிஜன் அளவு 92-94 இருந்தால்: வீட்டில் இருக்கவும்; தொடர்ந்து SpO2 பார்க்கவும். மருத்துவமனை, ஸ்டிராய்ட் மருந்துகள், ரெம்தேசிவிர், டோக்லிசுமாப், ஆக்சிஜன், சிடி ஸ்கேன் ரத்த டெஸ்டுகள், வேண்டாம். வீட்டில் 10- 14 நாட்கள் தனிமையில் இருக்கவும்.
2. ஆக்சிஜன் அளவு 91% க்கு கீழ் இருந்தால்,
ஸ்டிராய்ட் மாத்திரை/ஊசி ஆரம்பிக்கலாம். Dexamethasone/ prednisolone/methylprednisolone எடுக்கலாம். இத்துடன் ரத்தம உறையாமல் இருக்க மாத்திரை எடுப்பவரை தவிர்த்து (aspirin/clopilet), மற்றவர் Dabigatran/ apixaban, rivaroxaban எடுக்கலாம்
3. ரெம்டெசிவிர் ஒரு சுமாரான மருந்து. கோவிட் கண்டுபிடித்த ஐந்து நாட்களுக்குள் எடுத்தால் மருத்துவமனையில் அட்மிஷனில் இருக்கும் நாட்களைக் குறைக்கலாமே தவிர ஆக்சிஜன் அளவுகளை மேம்படுத்தவோ, இறப்பைத் தடுக்கவோ முடியாது
4. டாக்லிசுமாப் எப்போது வேவை? மருத்துவமனையில் உங்களுக்கு 50% க்கு மேல் ஆக்சிஜன் தேவை எனும் போது உங்களை Bipap ள்ளது வென்டிலேட்டரில் வைத்திருப்பார்கள். அப்போது மட்டுமே தேவை. சும்மா தேவையில்லாமல் எடுத்தீர்கள் என்றால் ஃபங்கல் தொற்று நிமோனியா வரும்.
5. குப்புற படுங்கள். ஆக்சிஜன் அளவை அது அதிகரிக்கும்
6. மேலே உள்ள எல்லாவறையும் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? நீங்கள் பிழைப்பது ஆக்சிஜன் அளவு எப்படி உள்ளது என்பதைப் பொறுத்தே. சிடி ஸ்கேன் எடுத்தாலும் அது எப்படி இருந்தாலும் உங்களுக்கு தரப்படும் வைத்தியத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்கேன் சென்டருக்கு போய் கூட்டத்தில் தொற்றை வாங்காதீர்கள். தேவையில்லாமல் ஒரு ஸ்கேனும் வேண்டாம்.
7. வீட்டில் உங்களுக்கு ஆக்சிஜன் தந்து SpO2 நன்றாக இருந்தால் (>92), வேறு எங்கும் செல்லத்தேவையில்லை. நிமிடத்திற்கு மூன்று லிட்டர் ஆக்சிஜன் தந்தும் SpO2 முன்னேறவில்லை என்றால் மட்டுமே மருத்துவமனை ஆக்சிஜன் பெட் தேடவும்.
வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து வைத்தியம் செய்வது எப்படி?
1. SpoO2 92-94இருந்தால் ஆக்சிஜன் வேண்டாம். அதற்கு கீழ் இருந்தால், நிமிடம் ஒரு லிட்டர்/2 லிட்டர் என அளவை அட்ஜஸ்ட் செய்யவும்
2. அப்படி செய்தும் மூன்று நிமிடங்களில் SpO2 முன்னேறவில்லை எனில் மூன்று முதல் ஐந்து லிட்டர் செட்டிங் செய்யவும். SpO2 95/98/100 வரத்தேவையில்லை. ஆக்சிஜனை வீணாக்க வேண்டாம். 92-94 இருந்தாலே போதும்
3. எந்த ஆக்சிஜன் சிலிண்டர்/ கான்சென்ட்ரேட்டர் கருவியும் ஒன்று தான். தரத்தில் ஒரு வித்தியாசமும் இல்லை
Adapted from Dr. Ravi Chopra, Pulmonologist, AIIMS, Delh