KS Bala Jothida Nilayam

KS Bala Jothida Nilayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KS Bala Jothida Nilayam, Mental Health Service, 3rd Street, Pattaianna nagar, Valayapettai Agraharam, Kumbakonam.
(2)

For perfect horoscope scheming for all type of good activities, marriage horoscope matching, solutions for all problems through horoscope, simple dhosa nivarthi steps are done through Bala jothidam technique at a nominal cost are done here.

கும்பகோணத்தில் எந்த கோயிலுக்கு சென்றால் என்னென்ன பலன்கள்...*கும்பகோணத்தை சுற்றினால்* வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் க...
15/04/2025

கும்பகோணத்தில் எந்த கோயிலுக்கு சென்றால் என்னென்ன பலன்கள்...

*கும்பகோணத்தை சுற்றினால்* வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

கோயில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம்தான்
தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அதுவும் கும்பகோணம்தான்.

இங்கு பல்வேறு விதமான கோயில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோயில்ல்கள் மிகவும் அதிகம்.

அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.

இதனால் தான் இது கோயில் நகரம் என்று கும்பகோணம் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் எந்த கோயிலுக்கு சென்றால் என்ன பலன் கிட்டும் என்பதை பார்ப்போம்

கும்பகோணம் திருக்கோயில்கள் "கருமுதல் சதாபிஷேகம்" வரை பலனடைய இந்த கோயில்களை மட்டும் வழிபட்டால் போதும்.

*1 கரு உருவாக* (புத்திரபாக்கியம்) - *கருவளர்ச்சேரி*.

*2 கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற*
*திருக்கருக்காவூர்*.

*3 நோயற்ற வாழ்வு* *பெறுவதற்கு* -

*வைத்தீஸ்வரன் கோயில்*.

*4 ஞானம் பெற* -

*சுவாமிமலை*

*5 கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு*

- *கூத்தனூர்*

*6 எடுத்த காரியம் வெற்றி மற்றும் மனதைரியம் கிடைக்க* -

*பட்டீஸ்வரம்*

*7 உயர் பதவியை அடைய* -

*கும்பகோணம் பிரம்மன் கோயில்*.

*8 செல்வம் பெறுவதற்கு*

- *ஒப்பிலியப்பன் கோயில்*.

*9 கடன் நிவர்த்தி பெற* -

*திருச்சேறை சரபரமேஸ்வரர்*

*10 இழந்த செல்வத்தை மீண்டும் பெற* -

*திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி*

*11 பெண்கள் ருது ஆவதற்கும்*,
*ருது பிரச்சினைகள் தீர* -

*கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை)*.

*12 திருமணத்தடைகள் நீங்க* -

*திருமணஞ்சேரி*

*13 நல்ல கணவனை அடைய* -

*கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை*.

*14 மனைவி, கணவன் ஒற்றுமை பெற* -
*திருச்சத்திமுற்றம்*
*15 குழந்தைபாக்கியத்திற்கு*.

*இரட்டை லிங்கேஸ்வரர். சென்னியமங்கலம். திப்பிராஜபுரம்*

*16 பில்லி சூனியம் செய்வினை நீக்க* -

*அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி*.

*17 கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய* -

*திருபுவனம் ஸ்ரீ சரபேஸ்வரர்*.

*18 பாவங்கள் அகல* -
*கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்*

*19 எம பயம் நீங்க*

- *ஸ்ரீ வாஞ்சியம்*.

*20 நீண்ட ஆயுள் பெற* -

*திருக்கடையூர்*

 #விசுவாசவசு தமிழ் புத்தாண்டு மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகளில் விசுவாசவசு ஆண்டு 39 வது ஆண்டு. இந்த தமிழ் புத்தாண்டு துலா...
14/04/2025

#விசுவாசவசு தமிழ் புத்தாண்டு

மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகளில் விசுவாசவசு ஆண்டு 39 வது ஆண்டு.

இந்த தமிழ் புத்தாண்டு துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது.

துலாமில் சுக்கிரன் வீடு, சூரியன் நீசம், சனி உச்சம் . மற்றும் ராகுவின் நட்சத்திரமான சுவாதி...

சுவாதி நட்சத்திரத்தில் பிறப்பதால் இந்த வருடம் முழுவதும் நரசிம்மர் வழிபாடு எல்லோருக்கும் மேன்மை தரும்.

துலாம் வீடு சுக்கிரன் வீடு மகாலட்சுமி தாயார் நரசிம்மர் கூட இருப்பார்கள். நரசிம்மருக்கு பின்புறம் சர்ப்பம் குடை பிடிப்பது போல எப்போதும் இருக்கும். சுவாதி ( ராகு ) நட்சத்திரம்.

சூரியன் நீசம் அதையும் ராசியாக இருக்கிறபடியால் கர்வத்தை குறைத்து எளிமையாக இருக்க வேண்டும். சனி உச்சமடையும் ராசியாக இருப்பதால் யாரையும் ஏமாற்றாமல், கடுமையாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்.

ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் துணை

உங்களுக்குத் தெரிந்த நரசிம்மர் கோயில்களை தெரிவிக்கவும்.

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

#ஜோதிடம் #சூரியன் #சனி #சுக்கிரன் #நரசிம்மர்

சித்திரை திருநாளை ஒட்டி, சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் காய், கனிகளை வைத்து செய்யப்பட்ட அலங்காரம் .
14/04/2025

சித்திரை திருநாளை ஒட்டி, சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் காய், கனிகளை வைத்து செய்யப்பட்ட அலங்காரம் .

*பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பு பதிவுகள்*பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று...
11/04/2025

*பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பு பதிவுகள்*

பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் ஒரு முக்கியமான திருவிழாவாகும். இது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெருவாரியாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் பல்வேறு புராணங்கள் மற்றும் சமயச் சடங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

*பங்குனி உத்திரத்தின் முக்கியத்துவம்*

*1. திருமணத்தின் நாள்*

இந்த நாளில் தெய்வீக தம்பதியர்களான சிவன் - பார்வதி (காளத்தீஸ்வரர் கோவிலில்), முருகன் - தெய்வானை (பழனி, திருச்செங்கோடு போன்ற முருகன் கோவில்களில்), ராமர் - சீதை (ராமேஸ்வரம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில்) ஆகியோரின் திருமணம் கொண்டாடப்படுகிறது. இது "தெய்வீக திருமணங்களின் நாள்" என்றும் அழைக்கப்படுகிறது.

*2. உத்திர நட்சத்திரத்தின் சிறப்பு*

உத்திரம் நட்சத்திரம் வெற்றி மற்றும் மங்களகரமான முடிவுகள் தருவதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் உத்திர நட்சத்திரத்திலும் இருக்கும் ஒரு அரிய நேரம்.

*3. திருவிழாக்கள்*

பல கோவில்களில் தேரோட்டம், பூமாலை அலங்காரம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பழனி, பாலாஜி (திருமலை), மதுரை மீனாட்சி கோவில், சாயனூர் (கேரளா) போன்ற ஆலயங்கள் முக்கியமானவை.

*புராணக் கதைகள்*

*1. முருகன் மற்றும் தெய்வானையின் திருமணம்*

புராணப்படி, முருகன் தெய்வானையை பங்குனி உத்திரத்தன்று மணந்தார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் திருச்செங்கோடு, பழனி போன்ற முருகன் கோவில்களில் விழா கொண்டாடப்படுகிறது.

*2. ராமர் மற்றும் சீதையின் திருமணம்*

இராமாயணத்தின்படி, ராமர் மற்றும் சீதையின் திருமணம் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடந்ததாகக் கூறப்படுகிறது.

*3. சிவன் - பார்வதி திருமணம்*

சிவபெருமான் பார்வதியை மணந்த நாளாகவும் இது கருதப்படுகிறது.

வாழ்க வளமுடன்

1960 ஆம் ஆண்டு ஒன்பது கிரகங்களும் ஒன்றாய் சேர்வதால் உலகிற்கு பெருங்கேடு வரும் எனப் பல ஆரூடங்கள் வந்தன.அப்போது கோள்களின் ...
11/04/2025

1960 ஆம் ஆண்டு ஒன்பது கிரகங்களும் ஒன்றாய் சேர்வதால் உலகிற்கு பெருங்கேடு வரும் எனப் பல ஆரூடங்கள் வந்தன.

அப்போது கோள்களின் துன்பம் விலக காஞ்சி மஹா ஸ்வாமிகள் "திரு ஞானசம்பந்தர் அருளிய "கோளறு பதிகம்" எல்லோரும் பாடுங்கள். எந்தத் துன்பமும் அணுகாது" என்று அருளினார்.

அப்போது தமிழகம் முழுவதும் கோளறு பதிகம் பாடப்பட்டது.

ஒரு துயரமும் ஏற்படாமல் அனைவரும் காப்பாற்றப்பட்டோம்.

அந் நேரத்தில் தான் நான் கூட கோளறு பதிகம் பாடி அப்படியே மனதில் பதிந்துவிட்டது.

நேற்று என் நண்பர் ஒருவர் குறிப்பிட்ட செய்தி இது தான். ஆஸ்திரேலியாவில் கொரானா பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரைக் கட்டிக்கொண்டு விட்டாராம். Sadistic pleasure. அவர் தாயார் என் நண்பரிடம் என்ன செய்வது என்று ஆஸ்திரேலியாவிலிருந்து திகைக்க கோளறு பதிகம் பாட அறிவுறுத்தினாராம்.

அந்த இளைஞரை 14 நாட்களில் மருத்துவ மனையில் சோதனைக்கு உட்படுத்தியபோது அவர் கோளறு பதிகமே பாடிக்கொண்டிருந்தாராம். 15 ஆம் நாளில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று வீட்டுக்கு அனுப்பினார்களாம்.

ஆகவே எல்லோரையும் கோளறு பதிகம் பாடும்படி வேண்டுகிறேன்.

தற்போது காஞ்சி மஹாஸ்வாமிகள் போல வழிகாட்டும் ஆன்மீகப் பெரியவர்கள் இல்லையே என்ற வருத்தம் மேலிடுகிறது.

மாட்டு பொங்கலை முன்னிட்டு 15.01.2025 அண்ணாமலையார் கோயில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது...ஓம் நந...
15/01/2025

மாட்டு பொங்கலை முன்னிட்டு 15.01.2025 அண்ணாமலையார் கோயில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது...

ஓம் நந்தீஸ்வராய
நமோ..நமஹ...

துன்பங்கள் விலக கடைபிடிக்கவேண்டியவை பற்றிய தகவல்கள்...*********************சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்து ...
15/01/2025

துன்பங்கள் விலக கடைபிடிக்க
வேண்டியவை பற்றிய தகவல்கள்...
********************

*சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்து கொடி மரத்திற்கு அருகில் நமஸ்காரம் செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வரவேண்டும். அதனால் நம்மை பின் தொடர்ந்து வரும் சிவகணங்கள் கோவிலில் தங்கி விடும் பிரச்சனை இல்லை.

* விஷ்ணு ஆலயத்திருக்கு இந்த விதி பொருந்தாது. பொதுவாக விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பிரகாரம் சுற்றும் போது, மகாலட்சுமி நம் கூடவே வருவதாக சொல்வார்கள். அதனால் கொடி மரத்தில் விழுந்து நமஸ்கரித்த உடனே வீட்டிற்கு வந்து விட வேண்டும். இல்லா விட்டால் நம்மோடு வந்த மகாலட்சுமி ஆலயத்திலேயே தங்கி விடுமாம்.

* கர்ப்பமான பெண்ணும் சரி, அவள் கணவனும் சரி, எந்த வேண்டுதலாக இருந்தாலும் குழந்தை பிறக்கும் வரை சிதறு தேங்காய் உடைக்க வேண்டாம்.

* மாலையில் பெண்கள் விளக்கேற்றி வைத்த பின் வெளியே செல்லக் கூடாது.

* எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அஷ்டமி, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை ஆகிய திதிகளில் குளிக்க கூடாது.

* உங்கள் ஜாதகத்தில் பாதக திசை நடந்தால், அல்லது ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி நடந்தால் அல்லது குரு 1 , 3 , 4 , 6 , 8 , 10 , 12 ம் இடங்களில் சஞ்சாரம் செய்தால், கிழக்கு நோக்கி தீப முகம் இருந்தால் கிரக தோஷங்களும், சகல பீடைகளும் விலகும்.

* அளவுக்கு அதிகமான கடன் தொல்லையா, வாரம் தோறும் வைத்தியர் வீட்டுக்கு போகிற மாதிரி நோய் தொல்லையா, பங்காளி பகையா எதுவாக இருந்தாலும் மேற்கு நோக்கிதீபம் ஏற்றினால் மாறும்.

* வாலிபம் கடந்தும் வரன் அமைய வில்லையா? கொள்ளும் எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடிய வில்லையா, வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் விலகும்.

* தெற்கு திசை நோக்கி தீப முகம் இருந்தால் தடைகள், தாமதங்கள், அபசகுனங்கள் , அமங்கலங்கள் ஏற்படும்.

* மனதில் அமைதி இல்லையா, எப்ப பார்த்தாலும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கா, ஏகாதசி விரதம் இருங்கோ சரியாகும்.

* தொட்டது எல்லாம் தோல்வியா? எந்த காரியத்தை தொட்டாலும் இழுபறியா. தடை, தாமதம், தள்ளிவைப்பு, அலைகழிப்பு என்று அல்லல் படுகிறிர்களா. மாத சிவராத்திரி விரதம் இருந்தால் மாறும்.

* எதிர் பாராத விபத்து, எதிரிகளால் ஆபத்து, நோய் தொல்லைகள் இவற்றில் இருந்து விடுபட சங்கடகர சதுர்த்தி விரதம் இருந்தால் சரியாகும்.

* வேலை வாய்ப்பில் பிரச்சசனை, வேலை இல்லாத பிரச்சனை என அன்றாடம் அல்லல் படுகிறவர்கள் சதுர்த்தி விரதம் இருந்தால் விலகும்.

* பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை கோளாறுகள் நீங்கவும், தீராத வியாதிகள் தீரவும் கிருத்திகை விரதம் இருப்பது சிறப்பு.

* வீட்டில் ஆஞ்சநேயர் படம் அல்லது சிலை இருந்தால் பூமாலைகள் பயன்படுத்த வேண்டாம். துளசி மாலை மட்டும் அணிவித்து வழிபட்டால் நல்லது.

* கோவிலின் பிரதான கதவுகள் முடி இருக்கும் போது, வெளியில் நின்று வணங்க கூடாது.

* கோவிலில் அணைந்த விளக்கை ஏற்றலாம், ஏற்றிய விளக்கை அணைக்க கூடாது.

* கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்த பிறகு குளிக்க கூடாது. வீட்டில் சிலை வைத்து வழிபடும் பழக்கம் இருந்தால், ஒரே சாமி சிலையை ஒன்றுக்கு மேல் வைத்து வழிபடகூடாது.

கோமாதா நம் குலமாதா இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்*பசுவும் புண்ணியங்களும்!!!!!**பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதா...
15/01/2025

கோமாதா நம் குலமாதா

இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

*பசுவும் புண்ணியங்களும்!!!!!*

*பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.*

*பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்*.

*பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.*

*பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

*பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

*`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.

*பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

*மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.

*ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

*உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

*கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும்.

*பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

*பசுக்களை பாதுகாக்காத நாடு, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகும் என்பது மகான்களின் கருத்து.

*புயல், மழை என, பல இயற்கை இடர்களை சந்திக்க காரணமே, பசுக்களை பாதுகாக்காததன் விளைவு தான்.

*இதை, 'கோ சம்ப்ரக்ஷணம்' என்று காஞ்சி மகாபெரியவர் குறிப்பிட்டு, 'நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்; அன்றாடம், சமைக்கும் போது வீணாகும் காய்கறி கழிவுகளை சேகரித்து, மாடுகளுக்கு கொடுங்கள்; பெருத்த புண்ணியம்...' என்கிறார்.

*வாயில்லா ஜீவன்களை ஆதரித்தால், நம் வாழ்வு மலரும். எதிர்கால சந்ததி, மகிழ்ச்சியுடன் வாழும். இதை மனதில் வைத்து, மாட்டுப்பொங்கலை, மகிழ்வுடன் கொண்டாடுவோம்!

*

தைப்பூசம் வரலாறு, விரத பலன்கள், மற்றும் விரத முறைகள் பற்றிய தகவல்கள்....பஞ்சபூதங்களும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த...
15/01/2025

தைப்பூசம் வரலாறு, விரத பலன்கள், மற்றும் விரத முறைகள் பற்றிய தகவல்கள்....

பஞ்சபூதங்களும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்து நாளாக தைப்பூசம் விளங்குகிறது. அதனால் இந்த நாளில் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஜோதிட ரீதியாக பூசம் நட்சத்திரம் என்பது சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரமாகும்.

முருகப் பெருமான் சிவ-சக்தி ஐக்கியமான ரூபமாக விளங்குவதால் தைப்பூசம் முருகனுக்குரிய வழிபாட்டு நாளாயிற்று.

*தைப்பூச பெருவிழா:*

முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று தைப்பூசம். தைப்பூசப் பெருவிழா பழனி தலத்திற்குரிய விழாவாக கருதப்பட்டாலும், உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி உள்ளிட்டவற்றை ஏந்தி வந்து முருகனை இந்த நாளில் வழிபடுவார்கள். தை மாதத்தில் வரும் பெளர்ணமியுடன், பூசம் நட்சத்திரம் இணையும் நாளை தைப்பூச நாளாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல புராண கதைகள் சொல்லப்படுவது உண்டு.

*தைப்பூசம் தோன்றிய வரலாறு:*

முனிவர்களுக்கு பலவிதமான துன்பங்களை கொடுத்து வந்த தாரகாசுரன் என்ற அசுரனை முருகப் பெருமான் இந்த நாளில் தான் வதம் செய்தார். முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்டதும், அன்னை பராசக்தியின் மொத்த சக்திகளையும் உள்ளடக்கிய சக்திவேலை வாங்கியதும் இதே நாளில் தான்.

முருகப் பெருமானுக்கு தான் அளித்த சாபத்தை நீக்குவதற்காக அவர் முன் தோன்றி பார்வதி தேவி காட்சி கொடுத்ததும் இதே தைப்பூச திருநாள் தான் என புராணங்கள் சொல்கின்றன. ஞான பண்டிதனான முருகப் பெருமான், தனது தந்தை ஈசனுக்கே பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசம் செய்ததும் இதே நாளில் தான்.

வள்ளியை திருமணம் செய்ததால் ஊடல் கொண்ட தெய்வாணையை சமாதானம் செய்து வள்ளி-தெய்வாணை சமேதராக முருகப் பெருமான் காட்சி தந்ததும் தைப்பூச நாளில் தான் என சொல்லப்படுகிறது.

*சிவனுக்குரிய நாளான தைப்பூசம்:*

தைப்பூச திருநாள் சிவன் மற்றும் பார்வதி தேவியுடனும் தொடர்புடைய நாளாக கருதப்படுகிறது. மார்கழி திருவாதிரையில் சிதம்பரத்தில் சிவ பெருமான் தனித்து நடனம் ஆடியதை கண்ட பார்வதிக்கு தானும் இதே போல் ஆனந்த தாண்டவம் நிகழ்த்த வேண்டும் என ஆசைப்பட்டு, பராசக்தி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடியது தைப்பூச நாளில் தான்.

சிதம்பரத்தில் சிவ - பார்வதி இருவரும் இணைந்து ஆனந்த நடனம் ஆடியதும் தைப்பூச திருநாளில் தான். முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழை கற்றுக் கொடுத்ததும் இதே தைப்பூசத் திருநாளில் தான் என சொல்லப்படுகிறது. தைப்பூச நாளில் தான் நீர் உருவானதாககவும், அதிலிருந்து உலக உயிர்கள் உருவானதாகவும் சொல்லப்படுகிறது.

*தைப்பூச விரத பலன்கள்:*

இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூசத் திருநாளில் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். குழந்தை வரம், திருமணம், ஆயுள், குடும்ப ஒற்றுமை ஆகியவை கிடைப்பதுடன், தைப்பூசதன்று முருகனுக்கு நடக்கும் பூஜை, அபிஷேகங்களை கண்டால் சகல பாவங்களும் நீங்கும்.

தோஷங்கள் நீங்கும், நினைத்த காரியங்கள் கைகூடும். தைப்பூச விரதம் இருக்கும் முருக பக்தர்கள் மார்கழி மாதத்திலேயே துவங்கி தொடர்ந்து 48 நாட்கள் இந்த விரதத்தை இருப்பார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு காவடி ஏந்தி, பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் உண்டு.

இந்த நாளில் முருகப் பெருமானை மட்டுமின்றி பார்வதி தேவியையும், சிவ பெருமானையும், குரு பகவானையும் வழிபடுவது அதிக சிறப்பு வாய்ந்ததாகும்.

*தைப்பூச விரத முறை:*

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் உள்ள முருக பெருமான் படத்திற்கு மலர்களால் அலங்கரித்து, விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்று மூன்று வேலையும் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும்.

முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். இது எதுவும் தெரியாதவர்கள் எளிமையாக "ஓம் சரவணபவ" என ஆறு எழுத்து மந்திரத்தை சொல்லி முருகனை வழிபட வேண்டும் மாலையில் கோவிலுக்கு சென்று முருக பெருமானை தரிசித்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

15/01/2025
🙏🙏🙏
15/01/2025

🙏🙏🙏

கண்ணேறு எனப்படும் கண் திருஷ்டி படாமல் இருக்க சில தகவல்கள்...கண் திருஷ்டியால் வறுமை, நோய் பாதிப்பு, சிறு சிறு பிரச்னைகள் ...
15/01/2025

கண்ணேறு எனப்படும் கண் திருஷ்டி படாமல் இருக்க சில தகவல்கள்...

கண் திருஷ்டியால் வறுமை, நோய் பாதிப்பு, சிறு சிறு பிரச்னைகள் அடிக்கடி தலை தூக்குவது, தடைகள், கைப்பொருள் இழப்பு, சண்டை சச்சரவு என ஏதாவது வந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். திருஷ்டி கழிக்க விசேஷங்கள், திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது என்பது சங்ககாலம் தொட்டே இருந்து வருகிறது. விசேஷங்களின்போது குலை தள்ளிய பூவுடன் இருக்கும் வாழை மரங்களை வாசலில் கட்டுவதும் திருஷ்டி தோஷங்களைப் போக்கும் குணம் வாழைக்கு உண்டு என்பதால்தான்.

* வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் குங்குமம், மஞ்சள் தடவி வைப்பதைப் பார்க்கலாம். மேலும், ஆகாச கருடன் எனும் ஒரு வகைக் கிழங்கை மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

* கல் உப்பை குளிக்கும் நீரில் கலந்து வாரம் ஒரு முறை குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, உடற்பிணி, சோம்பல் போன்றவை நீங்கும். அதுமட்டுமின்றி, வீட்டை துடைக்கும்போது சிறிதளவு கல் உப்பை நீரில் கலந்து சேர்த்து தரையை துடைத்து வர, கண் திருஷ்டி நீங்கும்.

* கருப்பு ஜீவராசிகளை ஆடு, கோழி போன்றவற்றை சில நாட்கள் வளர்த்து அதனை கோயிலுக்குக் கொடுக்கும் பழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது. இவை நம்முடைய தோஷங்களைப் போக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

* அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சாம்பிராணிப் பொடியுடன் வெண்கடுகு தூள், கருவேலம்பட்டைத் தூள் சேர்த்து தூபம் போடுவது திருஷ்டிகளைக் கழிக்க உதவும்.

* கண் திருஷ்டியைப் போக்க எலுமிச்சம் பழம், சிவப்பு மிளகாய் மற்றும் கரியை சேர்த்து நூலில் கோர்த்து வீட்டு வாசலில் கட்டி இருப்போம். இவற்றை அலுவலகம் மற்றும் கடைகளில் கூட கட்டலாம். இது மூடநம்பிக்கை இல்லை. இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் பல சடங்குகள் மற்றும் நடைமுறைகள் மருத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கட்டுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி உள்ளது. இவற்றை பருத்தி நூலில் கோர்ப்பதால் எலுமிச்சையின் சாறு மிளகாயுடன் சேர்ந்து பருத்தி நூல் வழியாக ஆவியாக வெளிப்படும். இதன் வாசனை காற்றில் கலக்கும்போது நமது சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.ஸ்ரீராமஜயம்

கண் திருஷ்டி படாமல் இருக்கவும், மற்றவர்களின் ஏக்கப் பார்வை, துஷ்டப் பார்வை, பொறாமை என எதுவாக இருந்தாலும் அதனை ஈர்க்கும் சக்தி எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய்க்கு உண்டு. அத்துடன் எலுமிச்சை மற்றும் மிளகாயின் வாசனை காரணமாக கொசுக்கள் மற்றும் ஈக்கள் வீட்டில் வராமல் தடுக்கப்படுவதால் நோய் தொற்றிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

* வாஸ்து சாஸ்திரத்தின்படி எலுமிச்சை மரம் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும். இவை தீய சக்திகளை உறிஞ்சி நல்ல சக்தியை பரப்பும் என்றும் கூறப்படுகிறது.

* பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வீட்டின் வாசலில் மாட்டி வைக்க நல்லது. மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு சிவப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டு வாசலில் மாட்டி வைக்கலாம்.

* மகாபலிபுரம் செல்லும் வழியில் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள உத்ஸவ மூர்த்திகளான பெருமாள், தாயார் இருவருக்கும் தாடையில் திருஷ்டி போட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இத்தலம் கல்யாண வரம் அருள்வதுடன் திருஷ்டி நீக்கும் தலமாகவும் கூறப்படுகிறது.

Address

3rd Street, Pattaianna Nagar, Valayapettai Agraharam
Kumbakonam
612001

Website

Alerts

Be the first to know and let us send you an email when KS Bala Jothida Nilayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram