HealthTips

HealthTips health

 #தீக்காயம்_ஏற்பட்டால்_இந்த_தவறை_மட்டும்_பண்ணாதீங்க!  #பாதிப்பு_உறுதிபொதுவாகவே சமையலின் போதும், துணிகளை அயர்ன் செய்யும் ...
10/01/2026

#தீக்காயம்_ஏற்பட்டால்_இந்த_தவறை_மட்டும்_பண்ணாதீங்க!
#பாதிப்பு_உறுதி

பொதுவாகவே சமையலின் போதும், துணிகளை அயர்ன் செய்யும் போதும், ஏன் வெந்நீர் குளியலின் போதும் கூட தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கம்.

குறிப்பாக சமைக்கும்போது தெரியாமல் சூடான எண்ணெய் தெரித்துவிட்டாலோ, சுடு தண்ணீர் ஊற்றிக்கொண்டாலோ தீக்காயம் ஏற்பட்டு பெரும் அசௌகரியத்தை உண்டாக்கும்.

பெரிய பாதிப்பு என்றால் உடனடியான மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம். ஆனால் சிறிய தீக்காயங்கள் ஏற்படும் நேரங்களில் உடனே என்ன செய்வதென தெரியாது. இருப்பினும் உடனடியாக ஏதாவதொரு முதலுதவியை செய்ய வேண்டும் என பெரும்பாலானவர்கள் தவறான விடயங்களை செய்கின்றார்கள்.

அந்தவகையில், தீக்காயங்கள் ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யவே கூடாது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டியவை

தீக்காயம் பட்ட இடத்தில் எரிச்சலை குறைக்க நினைத்து அதில் ஐஸ்கட்டியை வைப்பது ஒருபோதும் செய்யவே கூடாது. இது பாதிக்கப்பட்ட இடத்தை மேலும் சிதைவடைய செய்யும். சாதாரண தண்ணீரில் சுமார் 20 நிமிடங்களுக்கு வைத்திருக்கலாம். இது ஒரு ஆறுதல் உணர்வை கொடுக்கும்.

தீக்காயம் தண்ணீர் சேர்ந்து கொப்புளங்களாக இருந்தால் அதை உடைப்பது அல்லது கிள்ளிவிடுவது போன்ற விடயங்களை செய்யவே கூடாது. அதுவாக குறையும் வரையில் காத்திருக்க வேண்டும். தானாக உடைந்தாலும் துடைத்துவிட்டு உரிய முறையில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

சிறிய காயமாக இருந்தால் ஆண்டி பயாட்டிக் மருந்துகளை எடுப்பது தேவையற்றது.தோலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களே அதை சரி செய்துவிடும். அதேபோல் பேண்டேஜ் போடுவதும் கூடாது இது காயத்தின் பாதிப்பை மேலும் மோசமடைய செய்யும்.

முக்கியமாக காயத்தின் மீது வெண்ணெய் தடவுவது, டூத்பேஸ்ட் வைப்பது போன்ற செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும். இது தீக்காயத்தின் பாதிப்பை மேலும் வலுவாக்கிவிடும். அதற்கு பதிலாக தீக்காயத்திற்கான ஆயின்மெண்ட் தடவலாம்.

தீக்காயத்தின் போது ஆடைகள் சில வேலை காயத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தால் அதனை உடனே அகற்றுவதற்கு முயற்சி செய்வது கூடாது. பொறுமையான கையாள வேண்டும். தீக்காயம் பட்டவுடன் காயம் ஏற்பட்ட இடத்தை உடனே துணியில் துடைத்துப்பது கூடாது.

பெரிய காயமாக இருந்தால் முதல் மூன்று நாட்களுக்கு சூரிய வெளிச்சம் படவே கூடாது. வீட்டில் சரிசெய்ய முடியாத காயங்களுக்கு அவசியம் உரிய முறையில் மருத்துவ சிகிச்சையளிப்பது அவசியம்.

இந்த நேரத்தில் தண்ணீர் குடிங்க!!
09/01/2026

இந்த நேரத்தில் தண்ணீர் குடிங்க!!

குளிர்கால உணவுகள்
08/01/2026

குளிர்கால உணவுகள்

05/01/2026

குளிர்பானங்களை அதிகம்
குடிப்பதால் ஏற்படுபவை

சகல தோல் நோய்களும் தீர.......வேங்கைப்பட்டை, வேப்பம்பட்டை, சந்தனம், மருதம்பட்டை, ஆவாரம்பூ, தாமரைப்பூ, செம்பருத்திப்பூ, மக...
05/01/2026

சகல தோல் நோய்களும் தீர.......

வேங்கைப்பட்டை, வேப்பம்பட்டை, சந்தனம், மருதம்பட்டை, ஆவாரம்பூ, தாமரைப்பூ, செம்பருத்திப்பூ, மகிழம்பூ, கடுக்காய்பூ, நெல்லிக்காய், தான்றிக்காய், கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயறு ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாகக் கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.....

இதனைப் பூசிக் குளித்துவர, படை, சொறி, படர்தாமரை, தேமல், கருந்தேமல், வெண்புள்ளி நோய், தொடை இடுக்குகளில், அக்குள் பகுதிகளில் உண்டாகும் படை நோய்கள், கட்டிகள் மற்றும் உலகையே அச்சுறுத்தும் தோல் சார்ந்த நோயான 'சோரியாஸிஸ்' போன்ற நோய்களுக்கு இதனை வெளி மருந்தாய்ப் பாவித்து வியத்தகு பலன் பெறலாம்....

🌿 வீட்டிலேயே வளர்க்கக்கூடிய மூலிகை செடிகள் 🌿சிறிய இடம் போதும்… ஆரோக்கியம் முழுமையாக கிடைக்கும்!🏡 வீட்டுத் தோட்டம் = குடு...
04/01/2026

🌿 வீட்டிலேயே வளர்க்கக்கூடிய
மூலிகை செடிகள் 🌿

சிறிய இடம் போதும்… ஆரோக்கியம் முழுமையாக கிடைக்கும்!

🏡 வீட்டுத் தோட்டம் = குடும்ப ஆரோக்கியம்
மருத்துவக் கடைக்கு ஓட வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு குட்டி குடம், சிறு கவனம்… போதும்!

🌱 அவசியம் வளர்க்க வேண்டிய மூலிகைகள்👇

🌿 துளசி
சளி, இருமல், காய்ச்சல் – எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் இயற்கை கவசம்.

🌿 கற்றாழை (Aloe Vera)
தோல் பிரச்சனைகள், வயிற்று எரிச்சல், முடி பராமரிப்பு – அனைத்திற்கும் உதவி.

🌿 புதினா
ஜீரணத்திற்கு நல்லது, வாய்வாசனை நீக்கும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

🌿 கருவேப்பிலை
இரத்தச் சோகை குறைப்பு, முடி வளர்ச்சி, சர்க்கரை கட்டுப்பாட்டில் உதவும்.

🌿 வெற்றிலை
இருமல், செரிமான கோளாறு, கிருமிநாசினி தன்மை கொண்டது.

🌿 கொத்தமல்லி
உடல் சூடு குறைக்கும், செரிமானத்தை மேம்படுத்தும்.
தினசரி சமையலில் சுவையும் ஆரோக்கியமும்!

🌿 லெமன் கிராஸ் (எலுமிச்சை புல்)
மன அழுத்தம் குறைக்கும், நச்சுகளை வெளியேற்ற உதவும்.
மூலிகை தேநீராக சிறந்தது.

🌿 வெந்தய கீரை
இரத்தச் சர்க்கரை கட்டுப்பாடு, ஜீரணம் மேம்பாடு.
பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

🌿 லாவண்டர் செடி
மன அமைதி, நல்ல தூக்கம், பதட்டம் குறைவு.
வீட்டில் இயற்கை நறுமணம் நிரம்பும்.

💚 ஏன் வீட்டிலேயே வளர்க்க வேண்டும்?
✔️ ரசாயனம் இல்லாதது
✔️ உடனடி பயன்பாடு
✔️ குழந்தைகளுக்கு இயற்கை அறிவு
✔️ செலவு குறைவு – பயன் அதிகம்

📌 இன்று ஒரு மூலிகை செடியை நட்டால்,
நாளை ஒரு நோயைத் தவிர்க்கலாம்! 🌱

04/01/2026

நாவல் பழத்தின் நன்மைகள்

இந்த நாவல் பழத்தின் உடைய நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டியது கட்டாயம் பல விதமான மருத்துவ குணங்களை இந்த நாவல் பழம் கொண்டுள்ளது.

தமிழகத்தில் அதிகம் விளையும் நேந்திரம் பழத்தை கேரள மக்கள் ஏன் விரும்பி உண்கின்றனர் தெரியுமா?நேந்திரப்பழம் கொஞ்சம் நல்ல வா...
03/01/2026

தமிழகத்தில் அதிகம் விளையும் நேந்திரம் பழத்தை கேரள மக்கள் ஏன் விரும்பி உண்கின்றனர் தெரியுமா?
நேந்திரப்பழம் கொஞ்சம் நல்ல வாசனையும், சுவையும் கொண்ட , அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பழமாகும். இந்த நேந்திரம் பழம் தமிழகத்தில் அதிகம் விளைந்தாலும் இதன் மகத்துவத்தை அதிகம் உணர்ந்த கேரள மக்கள் மட்டுமே இந்த பழத்தை அதிகளவில் விரும்பி உண்கின்றனர். நேந்திரம் பழத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
நேந்திரம் பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதனால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்க உதவுகிறது. நினைவு ஆற்றலை அதிகபடுத்துகிறது.
TB நோய் தாக்குதலுக்கு உண்டானவர்கள் தினசரி நேந்திரம் பழம் ஒன்றும், முட்டை ஒன்றும் தொடர்ந்து உண்டுவர இந்நோய் நீங்கி உடல் வலுபெறும்.
1 வயதிலிருந்து குழந்தைகளுக்கு நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை வேகவைத்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நல்ல உடல்வளர்சியும், ஊட்டச்த்தும் கிடைக்கும்.
நேந்திரம் பழம் உடற்பயிற்ச்சி செய்பவர்களுக்கு உகந்தது.
பழுத்த நேந்திரம் பழத்தையும், மிளகு தூளையும் கலந்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
நேந்திரம் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதய தசைகள் வலுவடையும். தினமும் நேந்திரப்பழத்தை சாப்பிட்டு வருவதனால் இதய நோயிலிருந்து விடுபடலாம். இதயம் சீராக செயல்படுவதற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நேந்திரம் பழத்தில் உள்ளன.
நேந்திரம் பழத்தில் உடல் சூட்டினைக் குறைத்து குளிர்ச்சியை அதிகப்படுத்தும் சத்துக்கள் இருக்கின்றன.
ஒல்லியானவர்கள் நேந்திரம் பழத்தை அவித்து சாப்பிடுவதனால் உடல் எடை நன்கு அதிகரிக்கும்.
நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்தும். நேந்திரம் பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.
நேந்திரம் பழத்தை தினசரி உண்டு வருவதனால் சருமத்தைப் பாதுகாப்பதுடன், சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும்.
நேந்திரம் பழம் நமது உடலுக்கு தேவையான பொட்டசியச் சத்தை அதிகம் கொண்டுள்ளது...

உடலில் இருக்கும் அழுக்கு, கொழுப்பு, சளியை கரைத்து👉 சூட்டை சமநிலைப்படுத்தும் 💚 கொள்ளு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு மு...
02/01/2026

உடலில் இருக்கும் அழுக்கு, கொழுப்பு, சளியை கரைத்து
👉 சூட்டை சமநிலைப்படுத்தும் 💚 கொள்ளு

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம்.
உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும்.

கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை

சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள

நச்சுத் தன்மைகளை எல்லாம்

எடுத்து விடும்.....

எளிய மருத்துவக் குறிப்புகள்......அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்ட...
01/01/2026

எளிய மருத்துவக் குறிப்புகள்......

அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.

சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் மோரில் உப்பு, கறிவேப்பிலை கலந்து, திரியும் வரை சுடவைத்து இரண்டு மூன்று முறை அருந்தினால் குணமாகும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் சிலருக்கு கண் பார்வை மசமசவென்று தெளிவில்லாமல் இருக்கும். இந்தப் பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை நன்கு பொங்கவிட்டு, அதில் ஐந்தாறு மிளகுகளைத் தட்டிப் போட்டுத் தலைக்குத் தேய்த்துக் கொள்வது நல்லது. இதனால் கண்பார்வை தீட்சண்யம் ஆவதுடன், ஒற்றைத் தலைவலி, நீர்பாரம் முதலிய பிரச்சனைகளும் வராது.

வயிற்றில் இரைச்சல் இருந்தால், கொதிக்கும் நீரில் கொஞ்சம் ஓமம் போட்டு மூடி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வடிகட்டி பாலையும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிற்று இரைச்சல் நின்றுவிடும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க குடற்பூச்சிகள் முழுவதும் அன்றே வெளிவந்துவிடும். இதற்கு கடும் பத்தியம் கிடையாது. குழந்தைகளின் வயதிற்கேற்ப அளவைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம்.

முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை! ஆனால் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.

வெந்தயம்! முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும்.

அல்லது மெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை அலம்பவும்.

எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.

சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும்.

ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும்.

வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்...

👍👍👍👍👍
01/01/2026

👍👍👍👍👍

🌿 உடம்பிலிருக்கும் நச்சை நீக்க லிம்ப் சிஸ்டத்தை சுத்தமாக வைத்திருக்க மிக முக்கியம்!நம் லிம்ப் சிஸ்டம் உடம்புல இருக்கும் ...
01/01/2026

🌿 உடம்பிலிருக்கும் நச்சை நீக்க லிம்ப் சிஸ்டத்தை சுத்தமாக வைத்திருக்க மிக முக்கியம்!

நம் லிம்ப் சிஸ்டம் உடம்புல இருக்கும் கூடுதல் நீர், இறந்து போன செல்கள் மற்றும் நச்சுகளை எடுத்துச் சென்று வெளியே தள்ளும் ஒரு “சுத்தம் செய்யும் மெஷின்” மாதிரி.

அது சரியாக வேலை செய்யலேன்னா உடம்பு வீக்கம், சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவை வரும்.

இதை சுத்தமாக வைப்பதற்கு தினமும் செய்யக்கூடிய 10 எளிய வழிகள் இதோ👇

---

1️⃣ Exercise – உடம்பை அசைஞ்சா லிம்ப் ஓடும்!

லிம்ப் சிஸ்டத்துக்கு ஹார்ட் மாதிரி பம்ப் கிடையாது.
நம்ம உடம்பு அசைஞ்சால்தான் லிம்ப் ஓடும்.

👉 காலை 20 நிமிஷம் நடை
👉 லைட் ஜாக்கிங்
👉 வீட்டிலேயே கார்டியோ

இது லிம்ப் சரியாக ஓட உதவும்.

---

2️⃣ தண்ணி நிறைய குடிங்க 💧

லிம்ப் நன்றாக ஓட தண்ணி ரொம்பவே முக்கியம்.
நாளைக்கு 2–3 லிட்டர் தண்ணி குடிங்க.
டிடாக்ஸ் டீ குடிச்சாலும் நல்லது.

---

3️⃣ ஆழமான மூச்சு விடுங்க 🌬️

Deep breathing பண்ணாலே
👉 லிம்ப் ஓடும்
👉 உடம்புக்கு oxygen அதிகம் சேரும்
5 நிமிஷம் போதும்!

---

4️⃣ Jumping – துள்ளினாலே போதும் 🦘

👉 2–3 நிமிஷம் ஜம்ப் ரோப்
அல்லது
👉 ட்ராம்போலின் ஜம்ப்
இது லிம்ப் மேல–கீழ சரி ஓட உதவும்.

---

5️⃣ லிம்ப் மசாஜ் 💆‍♀️💆‍♂️

மெதுவா கழுத்து, Jawline, காது பின்புறம் மசாஜ் பண்ணுங்க.
உடம்பு லைட்டா உணருவீங்க.

---

6️⃣ சிரிப்பு 😄

சிரிக்கும்போது
👉 ஆழ மூச்சு
👉 நச்சு வெளியேறுதல்
👉 மன அழுத்தம் குறைவு
எல்லாம் நடக்கும்.
நாளைக்கு 10 நிமிஷம் சிரிங்க!

---

7️⃣ Skin Brushing 🧖‍♀️

Natural bristle brush-ல மெதுவா ஸ்கினை பிரஷ் பண்ணுங்க.
Detox மற்றும் blood circulation நல்லா நடக்கும்.

---

8️⃣ வெந்நீர் – குளிர்ந்த நீர் குளியல் 🚿

Hot → Cold → Hot → Cold
2–3 முறை repeat பண்ணுங்க.
உடம்பு ரிலாக்ஸாகும், லிம்ப் ஓடும்!

---

9️⃣ காலை காலியான வயிற்றில் பழங்கள் 🍋🍎

எலுமிச்சை, ஆரஞ்சு, கிரேப்‌ப்ரூட் மாதிரி பழங்கள் டிடாக்ஸுக்கு செம்ம.
காலையிலே மட்டும் சாப்பிட்டா இன்னும் நல்ல பயன்.

---

🔟 Essential Oils 🌿

Peppermint / Ginger / Rosemary oil
👉 காது பின்னால்
👉 Jawline
👉 Collarbone
இங்க ஒரு சொட்டு தடவி மசாஜ் பண்ணுங்க.
Sensitive skin என்றால் தண்ணியோ carrier oil-ல dilute பண்ணுங்க.

---

🌟 முடிவு:

லிம்ப் சிஸ்டம் சுத்தமா இருந்தா
✔ உடம்பு லைட்டா இருக்கும்
✔ சோர்வு குறையும்
✔ Skin glow வரும்
✔ Immunity அதிகரிக்கும்

---

🌟 உடம்பு நச்சின்றி இருந்தா, வாழ்க்கையே லைட்டா இருக்கும்!

உங்க ஒரே SHARE–ஆல் ஒரே ஒரு நபருக்கும் இது பெரிய உதவியாய் இருக்கும்.
அதனாலே இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! 🙏💚🔥

Address

Madipakkam
60091

Alerts

Be the first to know and let us send you an email when HealthTips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram