
30/07/2024
வய நாடு நிலச்சரிவு ஒரு பெரும் துயர்.
மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க மாதவ காட்கில் குழு ஒரு அறிக்கையை சுமார் 11 வருடத்திற்கு முன் சமர்ப்பித்து நன்கு வாங்கி கட்டி கொண்டார், பின் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின் அவரது அறிக்கை பெரும் பேசும் பொருள் ஆனது. அவரது அறிக்கை முட்டாள்தனம், 1600 கிலோ மீட்டர் நீளமுள்ள மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் அவர் பயணிக்க வில்லை, 140000 கிலோமீட்டர் பரப்பை அவர் அறிந்திருக்க வில்லை என்று சொல்லி விரட்டியது கேரள அரசியல் வியாதிகள்.
நம்ம ஆளுங்க தான் வேற மாதிரி ஆச்சே.
என்ஜினீயர் காய்ச்சல் வந்தா டாக்டரா மாறுவதும் வீடு கட்டும் போது டாக்டர் என்ஜினீயரா மாறுவதும் ஒன்னும் புதுசு இல்லையே...
அதிக படிப்பறிவு கொண்ட கேரள மாநிலம் கூட மாதவ காட்கில் மற்றும் கஸ்துரி ரங்கன் குழுவின் அறிக்கையை எதிர்த்தது ஏன் என்பது தான் புரிய வில்லை. Biodiversity, nature 0reservation பற்றி ஏன் யோசிக்க வில்லை, நம்ம ஆளுங்க சேட்டன்ஸ் விட இந்த விஷயத்துல ரொம்ப மோசம்.
மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க அவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளை கண்டிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து சில விதிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தினர், தெர்மல் பிளாண்ட் அமைத்தல், குவாரி அமைத்தல், டீகாபி எஸ்டேட் அமைத்தல், மைனிங் அனுமதி மறுப்பு , ஒரு முறை செய்யும் விவசாய பயிர் தடை, உயரமான கட்டிடங்களை தடை செய்தல், புதிய குடியிருப்பு தவிர்த்தல், என்று ஒரு பட்டியல், இல்லையெனில் பல விளைவுகள் நேரிடும் என்றும் குறிப்பிட்டனர், மாதவ காட்கில்லை அடித்து துறதாத குறையாக விரட்டினர் கடவுளின் தேசத்தினர், ஏன் எனில் அவர் 67 சதவிகிதம் பகுதியை பாதுகாக்க சொன்னார். அப்புறம் எப்புடி தான் சம்பாதிக்க முடியும்.
சுதாரித்து கொண்ட கஸ்தூரி ரங்கன் 37 சதவிகிதம் பகுதியை ESA என்று அறிவித்தார் அதாவது ecologicaly sensitive area என்று. அவரையும் துரத்தினர் நம் கேரள அரசியல் சேட்டன்ஸ். தேயிலை மற்றும் காபி எஸ்டேட் இயற்கையை அழித்து உருவாக்க படுபவை என்ற உண்மையை நாசூக்காக சொன்னார். மேலும் மண்ணின் ஸ்திர தன்மை போகும் என்பதை விளக்கினார்.
இயற்கையை விஞ்சிய சக்தி இங்கு எதுவும் இல்லை என்பதை கேரளாவுக்கு நன்கு உணர்த்தி விட்டது.
வயநாடு சோகம் சற்று பெரிய பேரிடர், உயிரிழப்பு எண்ணிக்கை நிச்சயமாக நீங்கள் எதிர் பார்ப்பதை விட அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது. கடவுள் தான் காப்பத்தனும்.