15/04/2023
👨👦🌲 *தினதியானம்* 🌲👨👦
*******************
(15.04.2023 )
*தலைப்பு* :
--------------
👉 *தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, நம் இருதயத்தில்❤️ வரையப்படும் படத்தின்📝 விளைவு- இயேசுவைப் போல் நாம் மாறுதல்👈*
(Sons & Daughters of God)
🔥 *இன்றைக்கான வசனம்* 🔥
*ஆதியாகமம் 1:26.*
🌹🌹🌹🌹🌹🌹
📯📯 *பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக* ; ......
📯📯
*கிறிஸ்துவுக்குள் பிரியமான நீதிமான்களே!*
தேவன் மனிதனை சிருஷ்டிக்கும் போது, " *நமது சாயலாகவும், நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை🧍 உண்டாக்குவோமாக* " என்று சொல்லி உண்டாக்கினார். *தேவன் தம் மனதில் கொண்டிருந்த மனிதனைப்🧍 பற்றிய சிருஷ்டிப்பின் நோக்கத்தை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது* . " *சாயல்* " என்றால் " *பிரதிபிம்பம்* ". "ரூபம்" என்றால் " *ஒரே மாதிரியான🧑🤝🧑 தோற்றம்"* . இந்த வசனத்தில் வரும் முதல் வார்த்தை " *சாயல்* " என்பதே. ஆகவே, தேவன் *மனிதனுக்கு முதலில் ஒரு பிரதிபிம்பத்தைத் தருகிறார். அதைத் தொடர்ந்து தோற்றம் வருகிறது.*
*கடவுளுடைய வார்த்தை நமக்கு எதற்காக கொடுக்கப்பட்டது?*
*அவருடைய வார்த்தையைக் கேட்டு கேட்டு👂, அதை நம்பி, நம்பி நம்மைக் குறித்த ஒரு படம்🖌️, நம்மை குறித்த ஒரு காட்சி, நம் இருதயத்தில்🧡 வைக்கப்படுவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது* . இந்தப்படம் நம் இருதயத்திற்குள்ளே 💛உருவான பின்பே, அதைப் போலவே, ஒரே மாதிரியான தோற்றம் வந்துவிடுகிறது. அநேகருக்குப் பிரச்சினை என்னவென்றால், தாங்கள் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்; அதற்காக தங்களுடைய புறத்தோற்றத்தை🙄 மாற்றிக் கொள்கிறார்கள்; ஆனால், இயேசு எப்படிப்பட்டவர் என்பதைக் குறித்த ஒரு படத்தை✍️ தங்களுக்குள் உருவாக்க தவறிவிடுகிறார்கள்.
*எப்பொழுது நாம் இயேசுவை போல் இருக்க முடியும்?*
*தேவனுடைய வார்த்தைகளை எடுத்து, அதைப் பேசி பேசி🗣️ இருதயத்தில்💚 ஒரு படத்தை உண்டாக்கும் போது ,அந்தப் படம் பூரணமடையும் போது ,அவரைப் போலவே நாம் இருக்க முடிகிறது* .
ஒரு ஓவியன்🧑🎨 ஒரு படத்தை வரையும்போது பார்த்திருப்பீர்கள்! முதலில் அங்குமிங்குமாக ஓரத்தில் சில கோடுகளை (outline) போடுவான்; அப்போது அவன் வரைய இருப்பது இயற்கை காட்சியா?🌌 மிருகமா?🐎 மனிதனா?🧍 என்று ஒன்றுமே நமக்குத் தெரியாது; பின்பு, அந்தக் கோடுகளுக் குள்ளே இன்னும் சிறிது வரையும் போது, இவன் ஏதோ ஒரு மனிதரை🧍 வரையப் போகிறான் என்று ஓரளவிற்கு புரியும். அந்தப் படத்தை அவன் வரைந்து வரைந்து பூரணப்படுத்தும் போது, படம் மிகத் தெளிவாக நமக்குத் தெரியும்; அடடே! இந்த ஓவியத்தில் இருப்பது அவரா இது?... என்று ஆச்சரியப்பட்டு பார்ப்போம்.
*இதேபோலத்தான் கடவுளுடைய வார்த்தையை, சத்தியங்களை நாம் முதலில் கேட்கும் போது👂, அந்த ஓவியன் ஆரம்பத்தில் வரை கோடு போன்றே தெளிவில்லாமல் தோன்றும்* ; ஆனால், *இப்படிப்பட்ட சத்தியங்களை நாம் தொடர்ந்து கேட்டு கேட்டு விசுவாச வார்த்தைகளைப் பேசி🗣️ பேசி நம் இருதயத்திற்குள்💙 நாம் யார் என்ற ஒரு படம் பூரணமாக வந்துவிடும்.* போகப்போக கிறிஸ்துவின் சாயலில் படைக்கப்பட்ட நாம், யார்? என்பதை நாம் காண ஆரம்பிப்போம்; *இப்படி ஒரு படம் நம் உள்ளத்திற்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாக வரையப்பட்டு, அந்தப்படம் பூரணம் அடையும் போது "இயேசுவைப் போலவே இருப்பதில் நமக்கு எந்த கஷ்டமும் இல்லை."* ஏனென்றால், அவருடைய சாயல் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; அநேகருக்கு அவர்களைப் பற்றி அவர்களது இருதயத்தில்💜 உள்ள படம் தெளிவில்லாமல் சரியாக வரையப்படாமல் இருக்கிறது.
*மோசே, " நான் பார்வோனுக்குத் தேவன்" என்ற ஒரு படத்தை கர்த்தர் சொல்லிய வார்த்தையின் மூலமாக தனக்குள் வரைந்தான்.* *அதனால், அவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முடிந்தது. தாவீது "யுத்தம் கர்த்தருடையது" என்ற படத்தை இருதயத்தில் வைத்ததால், கோலியாத்தை எளிதில் வீழ்த்த முடிந்தது.* *கிதியோன் "பராக்கிரமசாலியே" என்று கர்த்தர் அவனைக் குறித்துச் சொன்ன வார்த்தையில் இருந்து, தனக்குள் ஒரு படத்தை வரைந்ததால், ஒரு பலத்த சேனையின் மீது ஜெயம் எடுத்தான்.*
*கர்த்தருடைய வார்த்தையிலிருந்து பிரசங்கிக்கப்படும் சத்தியங்களைக் கேட்டு கேட்டு, நம் இருதயத்திலே🤎 நம்மைக் குறித்த ஒரு படத்தை தெளிவாக வரைய வேண்டும்.* அந்தப் படத்தில் இருந்து, " *நாம் தேவனுடைய சாயலின் படியும், ரூபத்தின் படியும் உண்டாக்கப்பட்டவர்கள்* என்பதைப் பார்க்க வேண்டும். அந்தப் படத்திலிருந்து, நாம் *கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரர் என்பதையும், நாம் ராஜரீக ஆசிரியர் கூட்டம் என்பதையும், நாம் ஆளப்பிறந்த ராஜா என்பதையும், பாவத்திற்கு மரித்தவர்கள் என்பதையும், அவருடைய தழும்புகளால் சுகமானோம் என்பதையும், கிறிஸ்துவுக்குள் நாம் ஐசுவரியவான்கள் என்பதையும்* பார்க்க வேண்டும். நமக்குள் நாம் வரையும் அந்தப்படம் தான், " *நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம், குடும்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் நம்மை வெற்றிகரமாக நடத்தி செல்ல வல்லதாக இருக்கிறது".*
கர்த்தராகிய இயேசு தாமே இந்த செய்தி மூலமாக உங்களை ஆசீர்வதித்து உங்களோடு கூட பேசுவாராக! ஆமென்!
*ஜெபம்*
*******
அன்பும் இரக்கமும் உள்ள நல்ல தகப்பனே! *நாம் தேவனுடைய சாயலின் படியும், ரூபத்தின் படியும் உண்டாக்கப்பட்டவர்கள் என்பதை நம் இருதயத்தில் வரைந்து அதை அனுதினமும் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தீரே,* உமக்கு நன்றி செலுத்துகிறோம்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென்!
இந்த செய்தி மூலமாக நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு இருப்பீர்கள் என்றால், உங்கள் அன்பின் காணிக்கை விதைகள🌾 தாராளமாக இந்த ஊழியத்திலே விதைக்கலாம்.🌴*
*விதைக்க வேண்டிய வங்கி கணக்கு எண்:*
*K. ராஜேஷ் ஜோஷ்வா,*
*State bank of India* ,
*Account Number:* *30166815977* ,
*IFS code:* *SBIN0000931*
* *Phonepe: 8248817935*
🤲 *ஜெப உதவிக்கு* : 🤲
*பாஸ்டர். K.ராஜேஷ் ஜோஸ்வா* ,
*கிறிஸ்துவுக்குள் சரீர மீட்பு ஊழியங்கள்.*
**திருமங்கலம்* ,
* *மதுரை மாவட்டம்* . - 625706
📱: ~*8248817935*
whatsapp: *8807661230*~