Dharushifa Unani & Siddha Hospital

Dharushifa Unani & Siddha Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dharushifa Unani & Siddha Hospital, Hospital, Madurai.

Dharushifa Unani and Siddha Hospital is a traditional hospital.The purpose of this page is
To rise Medical awareness among the people,
To inform people about the specialties and Medical practices of our hospital

07/08/2025

உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட உள் காயத்திற்கு தீர்வு:

31 வயதுடைய இளைஞர் மதுரை, திருநகரில் இயங்கி வரும் எங்களது தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனைக்கு கழுத்து வலி சிகிச்சைக்காக வந்தார்கள். ஒரு வருடத்திற்கு முன் Gym ல் பளு தூக்கும் உடற்பயிற்சி (Weight Lifting)செய்யும் பொழுது கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அதற்காக சரியான சிகிச்சை செய்யாமல் விட்டதினால் படிப்படியாக கழுத்தில் உள்ள வலி மேல் முதுகு, தோள்பட்டை, கைவரை பரவி இருந்தது. கடுமையான வலி ஏற்பட்டு 10 நாட்களாக சரியாக தூங்க முடியாமல் சிரமப்படும் நிலையில் இருந்தார்கள்.

அவர்களை பரிசோதனை(Inspection)செய்து பின் சிகிச்சையை ஆரம்பித்தோம்.

சிகிச்சையின் முதல் நாள் கழுத்து, மேல் முதுகு,தோள்பட்டை மற்றும் கை பகுதியில் லேசாக ஆயில் மசாஜ் (Oil Massage) & ட்ரை கப்பிங் தெரபி (Dry Cupping Therapy) கொடுத்தோம். இதன் மூலமாக அங்குள்ள தசைளின் வீக்கம் மற்றும் இறுக்கம் குறைந்து ரத்த ஓட்டம் சீராகிறது. வலி குறைகிறது

கழுத்து,மேல் முதுகு, தோள்பட்டை, கை பகுதியில் மூலிகை பொடி கொண்டு ஒற்றடம் (Thakmeed)கொடுக்கப்பட்டது.

இறைவனின் அருளால் மூன்றாம் நாள் வரும் பொழுது ஒரு வருடமாக இருந்த கழுத்து வலி 80 சதவீதம் குறைந்து விட்டதாக கூறினார்கள்.

உடற்பயிற்சியினால் ஏற்படும் உள் காயம் மற்றும் நமது மருத்துவமனையில் கொடுக்கப்படும் சிகிச்சை முறைகளை பற்றிய விவரங்களை காணொளியாக பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்... தேவை உடையவர்களுக்கு பலன் அளிக்கக்கூடும்.

எங்களது முகவரி:

Dr.J.Ershad,B.U.M.S.,
Dr.A.Rasheetha Banu,B.S.M.S.,
Dharushifa Unani & Siddha Hospital,
35, Kamarajar Street,
5th Stop, Thirunagar,
Madurai 625006
மேலும் தொடர்புக்கு
9597009899






&siddhahospital

24/07/2025

முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு பின் மறுவாழ்வு சிகிச்சை.

45 வயதுடைய இமாம் ஒருவர் மதுரை, திருநகரில் இயங்கி வரும் எங்களது தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்கள். அவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன் விபத்து ஏற்பட்டு முதுகெலும்பில் முறிவு (Fracture)ஆனதால் Spinal Surgery செய்தனர். அதன்பின் 6 மாதத்திற்கு பின் நமது மருத்துவமனைக்கு வந்தார்கள்.

ஓரளவுக்கு ஒரு ஆள் துணையுடன் நடக்கும் நிலையில் இருந்தார்கள். நீண்ட நேரம் உட்காரும் பொழுது முதுகு பக்கவாட்டு பகுதியில் வலி இருக்கும் நிலையிலும், நடக்கும் பொழுதும், படி ஏறும் பொழுதும் முழங்கால் வலி இருக்கும் நிலையிலும் வந்தார்கள். வீட்டுக்குள்ளே நடப்பதற்கும் ஒரு ஆள் துணையுடன் நடக்கும் நிலையில் இருந்தார்கள். அன்றாட வேலைகள் செய்வதற்கும் பலவீனமாகவும் இருந்தார்கள்.மேலும் முன்னேற்றம் அடைவதற்காக நம்முடைய மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள்.

அறுவை சிகிச்சைக்கு பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான மறுவாழ்வு (Rehabilitation) சிகிச்சையை ஆரம்பித்தோம்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் முதுகு,இரண்டு கால்களின் முன் பகுதி மற்றும் பின் பகுதிகளில் லேசாக ஆயில் மசாஜ் (Oil Massage) & ட்ரை கப்பிங் தெரபி (Dry Cupping Therapy) கொடுத்தோம். மூலிகை பொடி கொண்டு Hot fomentation (Thakmeed)ஒற்றடம் கொடுத்தோம். இதன் மூலமாக அங்குள்ள தசைளின் வீக்கம் மற்றும் இறுக்கம் குறைந்து ரத்த ஓட்டம் சீராகிறது.

தசைகள் ,எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்திற்கு வலுவூட்டவும், பொதுவான உடல் பலவீனத்தை நீக்கவும் (General Weakness)உள் மருந்துகள் கொடுக்கப்பட்டது.

இறைவனின் அருளால் 1 மாத சிகிச்சை முடித்த பின் அவர்களுக்கு முதுகிலும், முழங்காலிலும் இருந்த வலி இல்லை. நிற்கும்போதும் நடக்கும் போதும் இருந்த உடல் பலவீனம் குறைந்து நிற்பதில், நடப்பதில் நல்ல முன்னேற்றம் அடைந்தார்கள். ஒரு ஆளின் துணை இல்லாமல் நன்றாக நடக்க முடிந்தது. அவர்களுக்கு மூன்றில் இருந்து ஆறு மாதத்திற்கு சிகிச்சை தொடர அறிவுரை செய்யப்பட்டுள்ளது

சிகிச்சைக்கு முன் மற்றும் பின் நிலை மற்றும் அவர்களுடைய Feedback காணொளியாக பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்... தேவை உடையவர்களுக்கு பலன் அளிக்கக்கூடும்.

எங்களது முகவரி:

Dr.J.Ershad,B.U.M.S.,
Dr.A.Rasheetha Banu,B.S.M.S.,
Dharushifa Unani & Siddha Hospital,
35, Kamarajar Street,
5th Stop, Thirunagar,
Madurai 625006
மேலும் தொடர்புக்கு
9597009899







&siddhahospital

12/07/2025

முழங்கால் வலிக்கு தீர்வு வேண்டுமா?

68 வயதுடைய ஒரு பெண் மதுரை, திருநகரில் இயங்கி வரும் எங்களது தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனைக்கு வலது முழங்கால் வலி சிகிச்சைக்காக வந்தார்கள். 10 நாட்களுக்கு முன் ரயில் நிலையத்தில் படி ஏறும் பொழுது தடுமாறியதன் (Slip )காரணமாக கடுமையான வலி ஏற்பட்டு நிற்கவோ, நடக்கவோ, சம்மணம் போட்டு உட்காரவோ சிரமப்படும் நிலையில் இருந்தார்கள்.

அவர்களை பரிசோதனை(Inspection)செய்து முழங்காலில் உள்ள தசை நாரில் ஏற்பட்டுள்ள காயம்(Knee Sprain)என தீர்மானித்து (Diagnosis) சிகிச்சையை ஆரம்பித்தோம்.

வலது முழங்கால் மற்றும் தொடை பகுதியில் லேசாக ஆயில் மசாஜ் (Oil Massage) & ட்ரை கப்பிங் தெரபி (Dry Cupping Therapy)இரண்டு முறை கொடுத்தோம். இதன் மூலமாக அங்குள்ள தசைளின் வீக்கம் மற்றும் இறுக்கம் குறைந்து ரத்த ஓட்டம் சீராகிறது.

முழங்காலை சுற்றி மூலிகை பொடி கொண்டு (Zimad) பற்று போட்டோம். இதன் மூலமாக தசை நார்களில் ஏற்பட்டுள்ள காயம் குறைந்து வலியும் வீக்கமும் குறைகிறது.

முழங்காலில் ஏற்பட்டுள்ள வலி, வீக்கம் குறைவதற்கும், தசை நார்களில் ஏற்பட்டுள்ள காயம் ஆறுவதற்கும் யுனானி உள் மருந்துகள் கொடுக்கப்பட்டது.

இறைவனின் அருளால் 3 நாட்கள் சிகிச்சை முடித்த பின் அவர்களுக்கு முழங்காலில் இருந்த வலி, வீக்கம் இல்லை. நிற்பதில் நடப்பதில் சம்மணம் போட்டு உட்காருவதில் நல்ல முன்னேற்றம் அடைந்தார்கள்.

சிகிச்சைக்கு முன் மற்றும் பின் நிலை மற்றும் அவர்களுடைய Feedback காணொளியாக பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்... தேவை உடையவர்களுக்கு பலன் அளிக்கக்கூடும்.

எங்களது முகவரி:

Dr.J.Ershad,B.U.M.S.,
Dr.A.Rasheetha Banu,B.S.M.S.,
Dharushifa Unani & Siddha Hospital,
35, Kamarajar Street,
5th Stop, Thirunagar,
Madurai 625006
மேலும் தொடர்புக்கு
9597009899






₹dharushifaunani&Siddha hospital

06/07/2025

8 ஆண்டுகள் இருந்த முழங்கால் வலிக்கு தீர்வு கிடைக்குமா?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுலத்தூரை சேர்ந்த 60 வயதுடைய பெண் மதுரை, திருநகரில் இயங்கி வரும் எங்களது தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனைக்கு முழங்கால் வலி சிகிச்சைக்காக வந்தார்கள்.

எந்நேரமும் முழங்கால் வலி, நடக்கும்போது சிரமம்,தரையில் சம்மணம் கால் போட்டு உட்கார முடியாத நிலை போன்ற பல சிரமங்களை கூறினார்கள்.

அவர்களை பரிசோதனை(Inspection) செய்துவிட்டு சிகிச்சையை ஆரம்பித்தோம்.

இரண்டு முழங்கால் மற்றும் தொடை பகுதிகளில் 45 நிமிடங்கள் பெண் தெரபிஸ்ட் மூலமாக ஆயில் மசாஜ் (Oil Massage) & ட்ரை கப்பிங் தெரபி (Dry Cupping) மற்றும் ஒற்றடம் (Thakmeed-Hot Fomentation) கொடுத்தோம்.

புற சிகிச்சை (Regimenal Therapy) ஆரம்பிப்பதற்கு முன்பும் பின்பும் அவர்களை நடக்க வைத்து பார்த்தோம். 45 நிமிட புற சிகிச்சை முடிந்த உடனேயே அவர்களின் நடையில் நல்ல மாற்றத்தை பார்த்தோம். மேலும் வாரம் 2 முறை புற சிகிச்சை (Regimenal Therapy)செய்து கொள்ளவும், 3 மாதங்கள் உள் மருந்து எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளோம்.

சிகிச்சைக்கு பின் அவர்களுடைய Feedback காணொளியாக பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்... தேவை உடையவர்களுக்கு பலன் அளிக்கக்கூடும்.

எங்களது முகவரி:

Dr.J.Ershad,B.U.M.S.,
Dr.A.Rasheetha Banu,B.S.M.S.,
Dharushifa Unani & Siddha Hospital,
35, Kamarajar Street,
5th Stop, Thirunagar,
Madurai 625006
மேலும் தொடர்புக்கு
9597009899




jointpaintreatment

dharushifaunani&Siddha hospital

27/06/2025

ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் 47 வயதுடைய பெண் மதுரை, திருநகரில் இயங்கி வரும் எங்களது தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனைக்கு இடது தோள்பட்டை மற்றும் கை வலி சிகிச்சைக்காக வந்தார்கள். வீட்டு வேலைகள் செய்யவோ, பாத்திரங்கள் கழுவவோ, துணி துவைக்கவோ முடியாத நிலையில் இருந்தார்கள்.

அவர்களை பரிசோதனை(Inspection)செய்து கழுத்து தசைகளின் இறுக்கம்(Cervical muscle Spasm)என தீர்மானித்து (Diagnosis) சிகிச்சையை ஆரம்பித்தோம்.

கழுத்து,மேல் முதுகு,இடது தோள்பட்டை மற்றும் கை பகுதிகளில் ஆயில் மசாஜ் & ட்ரை கப்பிங் தெரபி இரண்டு முறை கொடுத்தோம். இதன் மூலமாக அங்குள்ள தசைளின் வீக்கம் மற்றும் இறுக்கம் குறைந்து நரம்பின் மீதான அழுத்தம் குறைகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது.

கழுத்து மட்டும் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள வலி, வீக்கம் குறைவதற்கும், நரம்புகளுக்கு வலு சேர்ப்பதற்கும் 10 நாட்கள் யுனானி உள் மருந்துகள் கொடுக்கப்பட்டது.

இறைவனின் அருளால் 10 நாட்கள் சிகிச்சை முடித்த பின் அவர்களுக்கு கழுத்து, தோள்பட்டை மற்றும் கையில் இருந்த வலி இல்லை.எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்ல முறையில் வீட்டு வேலைகள் செய்வதாகவும், வேலைக்கு செல்வதாகவும் கூறினார்கள்.

சிகிச்சைக்கு பின் அவர்களுடைய Feedback காணொளியாக பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்... தேவை உடையவர்களுக்கு பலன் அளிக்கக்கூடும்.

எங்களது முகவரி:

Dr.J.Ershad,B.U.M.S.,
Dr.A.Rasheetha Banu,B.S.M.S.,
Dharushifa Unani & Siddha Hospital,
35, Kamarajar Street,
5th Stop, Thirunagar,
Madurai 625006
மேலும் தொடர்புக்கு
9597009899






21/06/2025

அலுவலகத்தில் டைப்பிஸ்ட் ஆக வேலை செய்யும் 44 வயது பெண் மதுரை, திருநகரில் இயங்கி வரும் எங்களது தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனைக்கு வலது மணிக்கட்டில் வலி, கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல்களில் வலி, மதமதப்பு, கூச்சம், எரிச்சல் மற்றும் கை விரல்களின் நுனிகளில் கருப்பு நிற மாற்றம், குளிர்ந்த தன்மை போன்ற பிரச்சினைகளுடன் சிகிச்சைக்காக வந்தார்கள்.

அவர்களுக்கு Doppler Scan செய்து விரல்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் சரியாக உள்ளதை உறுதி செய்தோம்.அவர்களை பரிசோதனை(Inspection)செய்து Carpal Tunnel Syndrome என தீர்மானித்து (Diagnosis) சிகிச்சையை ஆரம்பித்தோம்.

மணிக்கட்டு மற்றும் விரல்களில் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்ட (Analgesic and Anti inflammatory)மூலிகை பொடி கொண்டு Zimad என்று சொல்லக்கூடிய பற்று போட்டோம். ஆயில் மசாஜ் & ட்ரை கப்பிங் தெரபி கொடுத்தோம். இதன் மூலமாக மணிக்கட்டில் உள்ள தசை நாண்களின் (Tendons)வீக்கம் குறைந்து (Median Nerve)நரம்பின் மீதான அழுத்தம் குறைகிறது.

மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள வலி, வீக்கம் குறைவதற்கும், நரம்புகளுக்கு வலு சேர்ப்பதற்கும் 20 நாட்கள் யுனானி உள் மருந்துகள் கொடுக்கப்பட்டது.

சிகிச்சை காலத்தில் ஓய்வும் ,மணிக்கட்டு பட்டை (Wrist Brace) பயன்படுத்துமாறும் அறிவுரை செய்யப்பட்டது.

இறைவனின் அருளால் 20 நாட்கள் சிகிச்சை முடித்த பின் அவர்களுக்கு மணிக்கட்டு வலி, விரல்கள் இருந்த வலி இல்லை. விரல்களின் மதமதப்பு எரிச்சல் கூச்சம் எதுவும் இல்லை. எந்த பிரச்சினையும் இல்லாமல் வேலையை நல்ல முறையில் செய்வதாக கூறினார்கள்.

சிகிச்சைக்கு முன் மற்றும் பின் உள்ள நிலைகளை காணொளியாக பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்... தேவை உடையவர்களுக்கு பலன் அளிக்கக்கூடும்.

எங்களது முகவரி:

Dr.J.Ershad,B.U.M.S.,
Dharushifa Unani & Siddha Hospital,
35, Kamarajar Street,
5th Stop, Thirunagar,
Madurai 625006
மேலும் தொடர்புக்கு
9597009899





16/06/2025

55 வயது பெண் மதுரை, திருநகரில் இயங்கி வரும் எங்களது தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனைக்கு நீண்ட நாட்களாக முழங்கால் வலி ,வீக்கம், நடப்பதில் சிரமம், படி ஏறுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளுடன் சிகிச்சைக்காக வந்தார்கள்.X-ray,Scan report எதுவும் வைத்திருக்கவில்லை.

அவர்களை பரிசோதனை(Inspection)செய்துவிட்டு பிரச்சினைகளின் அடிப்படையில் Wajaul Rukba -knee Osteoarthritis என்று தீர்மானித்து (Diagnosis) சிகிச்சையை ஆரம்பித்தோம்.இரண்டு தொடைகள் மற்றும் முழங்கால்களின் முன்பக்கம் பின்பக்கமும் ஆயில் மசாஜ் (Oil Massage, டிரை கப்பிங் தெரபி(Dry Cupping Therapy)மற்றும் மூலிகை பொடி ஒற்றடம் (Thakmeed)பெண் தெரபிஸ்ட் (Female Therapist)மூலம் 2 முறை செய்யப்பட்டது.

இதன் மூலமாக தொடைகள் மற்றும் முழங்காலை சுற்றியுள்ள தசைகளின் இறுக்கம் குறைகிறது.. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மருத்துவ குணம் கொண்ட எண்ணெயை கொண்டு மசாஜ் செய்வதால் உள் வீக்கம், வலி குறைந்து தசைகளுக்கும் நரம்புகளுக்கும் வலு சேர்கிறது.

வலி, வீக்கம் குறைவதற்கும், எலும்பு மூட்டு தேய்மானத்தை குறைப்பதற்கும், எலும்பு மற்றும் சவ்வுகளுக்கு வலு சேர்ப்பதற்கும் முதலில் 10 நாட்களுக்கும் அடுத்து 15 நாட்களுக்கும் யுனானி உள் மருந்துகள் கொடுக்கப்பட்டது.

இறைவனின் அருளால் 25 நாட்கள் மருந்து முடிந்த பின் 09.06.2025 அன்று சிகிச்சையை தொடர்வதற்காக எங்கள் மருத்துவமனைக்கு வந்தார்கள். இரண்டு முழங்கால்களிலும் வலி, வீக்கம் குறைந்துள்ளது. நடப்பதில் ஏற்படும் சிரமமும், படியேறும் போது ஏற்படும் சிரமமும் குறைந்துள்ளது. மேலும் முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது..

சிகிச்சை பெறுபவரின் அனுமதியுடன் சிகிச்சைக்கு முன் மற்றும் சிகிச்சைக்கு பின் எடுத்த காணொளியை பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள். இறைவன் நாடினால் யாருக்காவது பலன் கிடைக்கும்.

எங்களது முகவரி:

Dr.J.Ershad,B.U.M.S.,
Dharushifa Unani & Siddha Hospital,
35, Kamarajar Street,
5th Stop, Thirunagar,
Madurai 625006
மேலும் தொடர்புக்கு
9597009899




13 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 3, 2011 அன்று நான் யுனானி மருத்துவப் பட்டம் பெற்ற நாள் அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் இது....
06/11/2024

13 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 3, 2011 அன்று நான் யுனானி மருத்துவப் பட்டம் பெற்ற நாள் அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

The Tamilnadu Dr.M.G.R.Medical Universityன் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் படித்து முடித்த பல்வேறு மருத்துவத் துறைகளைச் சார்ந்த (Modern Medicine ,Dental,Unani,Siddha,Ayurveda,Homeopathy)ஆயிரக்கணக்கான மருத்துவர்களில் ஒருவனாக யுனானி மருத்துவப் பட்டம் B.U.M.S. (Bachelor of Unani Medicine & Surgery)பெற்றேன்.

சென்னை பல்கலைக்கழகத்தின் பிரம்மாண்டமான உள்ளரங்கில் அன்றைய முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மற்றும் கவர்னர் திரு.ரோசையா அவர்கள் முன்னிலையில் அனைவருக்கும் மருத்துவ பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் (2005-2011) ஐந்தரை ஆண்டுகள் யுனானி மருத்துவக் கல்வி பெற்றேன். பட்டம் பெற்ற அன்றிலிருந்து இன்று வரை 13 ஆண்டுகள் எனது சொந்த ஊரான மதுரை மாவட்டம் விளாச்சேரி, திருநகர் பகுதியில் தாருஷ் ஷிஃபா யுனானி மருத்துவமனை நடத்தி வருகிறேன்.

மதுரை மற்றும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த, நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு இறைவனின் அருளால் யுனானி மருத்துவத்தின் மூலம் சிறந்த தீர்வை அளித்து வருகிறேன்.

எனது இந்த மருத்துவப் பணியை மனநிறையுடன் செய்து வருகிறேன்.

அன்புடன்,

Dr.J.Ershad,B.U.M.S.,
Dharushifa Unani & Siddha Hospital, 35 ,Kamarajar Street, 5th Bus Stop, Thirunagar, Madurai 6.
Contact No 9597009899

29/10/2024

பக்க விளைவுகள் இல்லாமல் வலியை குறைக்க கூடிய மூலிகை மருந்து வேண்டுமா?

மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட பல பேர் பக்கவிளைவுகளுக்கு பயந்து பெரும்பாலும் வலி மருந்துகளை பயன்படுத்துவதில்லை. பக்கவிளைவுகள் இல்லாமல் வலியை குறைக்கக்கூடிய எத்தனையோ மருந்துகள் மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

யுனானி மருத்துவத்திலும் அவ்வாறு வலியையும், வீக்கத்தையும் குறைக்கக்கூடிய பல மருந்துகள் உண்டு. அதில் ஒரு மருந்து சுரஞ்சான் சீரின். இந்த மூலிகை மருந்து தனி மருந்தாகவோ அல்லது ஹப்பே சுரஞ்சான் , மாஜூன் சுரஞ்சான் என்ற கூட்டு மருந்தாகவோ யுனானி மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.

இந்த மருந்து Osteoarthritis என்று சொல்லக்கூடிய எலும்பு மூட்டு தேய்மானத்தில் வலியை குறைப்பதாகவும், இளம் வயதினருக்கு வரக்கூடிய Rheumatoid Arthritis ல் வலியையும் ,வீக்கத்தையும் குறைப்பதாகவும், Gouty Arthritis ல் Uric Acid அளவை குறைத்து வலியை குறைப்பதாகவும் பல்வேறு Clinical Studies மூலமாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மூட்டுவலியால் பாதிக்கப் பட்டுள்ள நீங்கள் அருகில் உள்ள யுனானி மருத்துவரின் ஆலோசனை மூலம் அக மருத்துவம் (Internal Medicine) மற்றும் புற மருத்துவம் (Regimental Therapy)மூலம் சிறந்த வலி நிவாரணம் பெறலாம்..

அனைத்து வகையான எலும்பு மூட்டு வலிகளுக்கும் எங்கள் மருத்துவமனையில் சிறந்த தீர்வை அளித்து வருகிறோம்.

Unani & Siddha Hospital

மருத்துவமனை முகவரி:

Dr.J. இர்ஷாத்,BUMS.,
தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனை,
35, காமராஜர் தெரு,
5வது பஸ் நிறுத்தம்,
திருநகர்,மதுரை 625006..
முன்பதிவிற்கு
9597009899

16/10/2024

புகைப்பழக்கம் முதுகு வலிக்கு காரணம் ஆகுமா?

ஆமாங்க. பல்வேறு மருத்துவ ஆய்வு முடிவுகள் மூலமாக இதை பல ஆண்டுகளுக்கு முன்பே நிரூபணம் பண்ணி இருக்காங்க.

பொதுவாக புகைப்பழக்கம் நுரையீரல் மற்றும் இதய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எல்லோருக்கும் தெரியும். அது தவிர நமது உடலின் பல்வேறு உறுப்புகளிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒரு முக்கிய பிரச்சினை தான் எலும்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்துவது.

சிகரெட் பயன்படுத்தும்போது வரக்கூடிய நிக்கோட்டின் (Nicotine)என்ற வேதிப்பொருள் நமது உடம்பில் சென்று ரத்த குழாய்களில் சுருக்கம் (Vasoconstriction) ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இதனால் முதுகுத் தண்டு எலும்புகளுக்கு செல்லக்கூடிய இரத்த குழாய்களில் குறைபாடு ஏற்பட்டு இரண்டு முதுகெலும்புக்கு இடையில் உள்ள சவ்விலே (InterVertebral Disc)பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இளம் வயதிலேயே Degenerative Disc Disease ஏற்பட்டு கடுமையான முதுகு வலி ,கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மேலும் புகைப்பழக்கத்தை தொடர்வதால் Disc Bulging/ Disc Herniation போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு கீழ் முதுகில் ஏற்படும் வலி, கால் முழுவதிற்கும் பரவுகிறது.

இது தவிர Osteoporosis என்று சொல்லக்கூடிய எலும்பு மூட்டுகளின் வலுத்தன்மயை குறைக்கின்றது. நமது உடலில் இயல்பாகவே தாதுக்களையும் வைட்டமின்களை உறிஞ்சும் தன்மை (Absorption Ability) உள்ளது.அதில் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக வைட்டமின் டி,கால்சியம் போன்ற சத்து குறைபாடு ஏற்பட்டு முதுகு வலி, மூட்டு வலி ஏற்படுகின்றது.

எனவே உடனடியாகவோ அல்லது படிப்படியாகவோ புகைப்பழக்கத்தை நிறுத்தி உடல் நலத்தைக் காப்போம்.


Unani & Siddha Hospital

அன்புடன்,
Dr.J.இர்ஷாத்,BUMS.,
யுனானி மருத்துவர்,
தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனை, 35, காமராஜர் தெரு,5வது பஸ் ஸ்டாப், திருநகர், மதுரை 6
தொடர்புக்கு:
9597009899

இன்றைக்கு நிறைய பேருடைய Nature of Job அதிகமாக Bike  ஓட்டும் விதமாக இருக்கிறது.ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் நக...
08/10/2024

இன்றைக்கு நிறைய பேருடைய Nature of Job அதிகமாக Bike ஓட்டும் விதமாக இருக்கிறது.ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் நகரங்களுக்கு உள்ளேயே (City) Bike ஓட்டுகிறார்கள்.

அவர்களில் 85% பேர் கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகளில் கஷ்டப்படுகிறார்கள்.

வலி இல்லாமல் பைக் ஓட்டுவதற்கு 10 Bike Riding Sitting Positions பற்றி இந்த காணொளியில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. முழுமையாக பார்த்து பயன் பெறுங்கள்.

பைக் ஓட்டுவதால் ஏற்படும் கழுத்து வலி ,முதுகு வலி ,தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு எங்களுடைய மருத்துவமனையில் யுனானி மருந்துகளுடன் Oil massage,Dry Cupping Therapy மூலமாக முழுமையான தீர்வு அளிக்கப்படுகிறது...

பெண் நோயாளிகளுக்கு பெண் மருத்துவர் மற்றும் Therapist மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது...

​ ​ ​
# ​ ​ ​ ​

Dharushifa Unani & Siddha Hospital,
No 35, Kamarajar Street,
5th Bus Stop, Thirunagar,
Madurai 625006..
For appointment:9597009899

https://youtu.be/2Wg6bZwZktg?si=LXSFnUrrFCo6WY9a

பைக் ஓட்டுவதால் ஏற்படும் கழுத்து வலி ,முதுகு வலி ,தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு எங்களுடைய மருத்துவமனையி....

24/06/2024

மதுரை மடீட்சியாவில் கடந்த ஜூன் 21 ,22, 23 ஆகிய மூன்று நாட்கள் AYUSH 2024 7வது பாரம்பரிய மருத்துவ கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. மூன்று நாட்களும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் ஹோமியோபதி மருத்துவ நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினார்கள்.

அஸ்வகந்தா மூலிகையின் மருத்துவ பயன்பாடு, பயிரிடுதல், பதப்படுத்துதல், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி செய்வது பற்றி முழுமையான விளக்கங்களை மருத்துவ நிபுணர்களைக் கொண்டு மிகவும் தெளிவாக விளக்கப்பட்டது. மேலும் வீட்டுத்தோட்டம், சமையலறையில் சித்த மருத்துவம் பற்றி பல மருத்துவ நிபுணர்கள் சிறப்பு உரையாற்றினார்கள்.

இதை தவிர சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவக் கல்லூரி இளங்கலை, முதுகலை படிப்பு மாணவர்களுக்கு ஆய்வுக் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கியது சிறப்புக்குரியது.300க் கும் மேற்பட்ட மூலிகைகளின் கண்காட்சி நடத்தப்பட்டது.

70-க்கும் மேற்பட்ட அரங்குகளில் சித்தா, ஆயுர்வேதா ,யுனானி மருந்து நிறுவனங்கள், அது சார்ந்த தொழில் நிறுவனங்கள், சித்தா,ஆயுர்வேதா, யுனானி மருத்துவமனைகள் இடம் பெற்றன. மேலும் சித்தா ஆயுர்வேதா , யுனானி இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம்களின் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர்.

தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனை சார்பாக Dr.J.Ershad,B.U.M.S., மற்றும் Dr.Rasheetha Banu,B.S.M.S., கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் மற்றும் புற மருத்துவ சிகிச்சைகள் (Massage Therapy ,Dry Cupping Therapy)அளித்தனர். இந்த வாய்ப்பை அளித்த கண்காட்சித் தலைவர் திரு. ராஜமுருகன் அவர்களுக்கும் துணைத் தலைவர் டாக்டர் ஜெ. ஜெய வெங்கடேஷ்,MD,PhD அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இக்கண்காட்சி சிறப்பாக நடத்திய மடீட்சியா தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
Dr.J.Ershad,BUMS.,
யுனானி சிறப்பு மருத்துவர்,
தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனை, திருநகர், மதுரை.

Address

Madurai
625006

Telephone

+919962086374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharushifa Unani & Siddha Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dharushifa Unani & Siddha Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category