மருந்துழைச்செல்வார் - Siddha Nursing & Pharmacist

  • Home
  • India
  • Madurai
  • மருந்துழைச்செல்வார் - Siddha Nursing & Pharmacist

மருந்துழைச்செல்வார் - Siddha Nursing & Pharmacist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மருந்துழைச்செல்வார் - Siddha Nursing & Pharmacist, Medical and health, Madurai.

29/11/2020
சித்த மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பாலமாக விளங்குபவர்கள் "மருந்துழைச்செல்வார்" என்ற மருந்தாளுநர் மற்றும் செவிலிய...
29/11/2020

சித்த மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பாலமாக விளங்குபவர்கள் "மருந்துழைச்செல்வார்" என்ற மருந்தாளுநர் மற்றும் செவிலிய சிகிச்சையாளர்கள்.

நோயிற்கு தேவையான மருந்துகளை தயார் செய்து மருத்துவனின் ஆலோசனைப்படி நோயாளிகளுக்கு வழங்குவதுடன் நோய் தீர நோயாளிக்கு பக்கபலமாக இருப்பவர்கள் மருந்தாளுனர் மற்றும் செவிலிய சிகிச்சையாளர்கள். இவர்கள் ஒரு மருத்துவமனையின் தூண்கள் போன்றவர்கள்.

சித்த மருத்துவம் தற்போது பிரபலமாகி வருகிறது. சித்த புற மருத்துவ சிகிச்சைகள் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை உடனடியாக தயார் செய்து கொடுக்கவும், தைலங்கள் மூலிகைச் சாறு ஆகியவற்றை உடம்பில் போட்டு தேய்க்கவும் மருந்தாளுநர்கள் மற்றும் செவிலிய சிகிச்சையாளர்களுக்கு பல்வேறு உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர். இவர்கள் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மிக நெருக்கமாக இருந்து கவனிப்பு மேற்கொள்கின்றனர்.

தற்போது பல்வேறு சித்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தாங்களே பயிற்சி கொடுத்து அவர்களைப் பணிக்கு அமர்த்திக் கொள்கின்றனர். கல்லூரிகளில் படித்து வரும் மருந்தாளுநர்கள் மற்றும் செவிலிய சிகிச்சையாளர்கள் பெருமளவு பேர்கள் அரசு பணிக்கு சென்று விடுகின்றனர். திருநெல்வேலி சென்னை போன்ற மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் பயிற்சி செய்யும் சித்த மருத்துவர்களுக்கு கல்லூரிகளில் படித்த மருந்தாளுநர்கள் மற்றும் செவிலிய சிகிச்சையாளர்கள் பணிக்கு கிடைப்பதில்லை. இந்த இடைவெளியை நிரப்பவும், மருந்தாளுநர்கள் மற்றும் செவிலியர் சிகிச்சையாளர்களுக்கு உதவியாளராக பணி புரியவும் மருந்து மற்றும் செவிலிய உதவியாளர்களுக்கான பயிற்சி MSME அமைச்சகம் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இதன் இதன் மூலம் சித்த மருத்துவ மனைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட மருந்தக உதவியாளர்கள் மற்றும் செவிலிய உதவியாளர்கள் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெறுவர்.

சித்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் சங்கம் சார்பாக இந்த பயிற்சி நடத்தப்பட இருக்கிறது. இந்த பயிற்சியில் தேர்வு பெறும் சித்த மருந்தக உதவியாளர் மற்றும் செவிலியர் உதவியாளர்களுக்கு பயிற்சி முடிந்தவுடன் தமிழகத்திலுள்ள பல்வேறு சித்த மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். பயிற்சியில் சேர ஏற்கனவே சித்த மருத்துவமனைகளில் மருந்தகம் மற்றும் செவிலிய உதவியாளராக பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சியின் முடிவில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8667065048, 9003000251, 9994611056 மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Address

Madurai
625011

Telephone

+919994611056

Website

Alerts

Be the first to know and let us send you an email when மருந்துழைச்செல்வார் - Siddha Nursing & Pharmacist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to மருந்துழைச்செல்வார் - Siddha Nursing & Pharmacist:

Share