08/06/2025
நெருப்பை ஏற்றிவிட்டு அணைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை'' அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..
இது ஆபாசமான பதிவு அல்ல இரண்டு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்..
அஞ்சு நிமிஷமோ அரைமணிநேரமோ தான் "Sex"னு நினைச்சுட்டோ, தன்தேவையை முடிச்சிட்டோ தூங்குற ஆண்களுக்கு தெரிவதேயில்லை இதன்
விளைவுகளும், அழுத்தமும்.
சில ஆண்களை பொறுத்தமட்டும் அவங்களுக்காக மட்டும் தான் செக்ஸ்னு நினைப்பிருக்கும் போல, ஆனால் பெண்களை பொறுத்தமட்டும் அதுவொரு
நிறைவு, பரிபூரணம், ஆத்மதிருப்தி
இதைத்தான் எதிர்பார்ப்பாள். இதைக் கொடுக்க அவளுக்கு பரிபூரணமான அன்பை கொடுக்கும் ஒருவனால் மட்டுமே சாத்தியம்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான ஒரு விஷயம் தான் காமம், இதை கிடைக்காமல் இருப்பதைவிட , கிடைத்தும் நிறைவில்லாதது பெரும் ரணம். உறவு வைத்துக் கொள்ளும் இருவருக்கும் கிடைக்கும் சரியான நிறைவே நற்காமம் .
இது சரியா கிடைக்க, தன்னிடம் அன்பு காட்ட ஆளில்லாம , இந்த ஓடுற உலகத்துல தனியா கண்ணீர் சிந்திட்டு, நாலு சுவருக்குள்ள வாழுற நெறய பெண்கள் இருக்காங்க, யாருகிட்டையும் சொல்லவும் முடியாம தனக்குள்ளே போட்டு புதைச்சு அவங்க நாளடைவில் மனநோய்க்கே ஆளாகுற நிலமை வரும்.
தன்னோட ஆசைகள் எல்லாம் நடக்காம , வலித்து அழுது , ஆசைகள் தோற்ற பட்சம் கற்பனைல வாழ ஆரம்பிக்கிறாங்க, இதெல்லாம் எவ்வளவு கொடூரம் தெரியுமா? மனரீதியான பாதிப்பு தான் அவங்களுக்கு அதிகமாக வருகிறது
இதற்கடுத்தாலும் கோபப்படுவார்கள்.
#காதலிலும் சரி, காமத்திலும் சரி, அவளுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் கேட்டு பூர்த்தி செய்து விட்டாலே போதும் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்..
ஆண்களுக்கு மட்டும்தான் #காமம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் ஆனால் பெண்களுக்கு ஆண்களை விட காமம் அதிகமாக இருக்கும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள் நீங்க தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
அவங்க தேவை என்னனு கேட்டு ,
அன்புகாட்டி, கொஞ்சம் நேரம் ஒதுக்கி
இருங்க, கூட இருக்கவங்கள புரிஞ்சு நடந்துக்கிட்டாலே போதும் ங்க, வாழ்க்கைய சந்தோஷமா வாழலாம் .
படித்ததில் பிடித்தது