
01/02/2025
#வர்ம_மருத்துவம்_1
வர்மம் என்ற சொல்லுக்கு உயிர் - ஆற்றல் பற்றிய அறிவியல் எனப்பொருள்.
இது 5000 ஆண்டு பழமை வாய்ந்த மருத்துவ முறையாகும்.
லெமுரியா கண்டம் எனப்படும் குமரிக் கண்டத்தில் தோன்றிய முதல் மருத்துவமாகும்,
ஆதலால் வர்மமே மருத்துவ முறைகளுக்கு முன்னோடியாக உள்ளது எனக்கூறலாம்.
ஏனெனில் லெமுரியா கண்டத்திலேயே முதல் உயிர் தோன்றியதாக அறிவியலாளர்கள் சான்று பகர்கின்றனர்.
லெமுரியர்கள் எனும் தமிழர்கள் நாகரீகத்தின் உச்சத்திருந்த காலக்கட்டத்தில் கடற்கோளால் லெமுரியா எனும் குமரிக்கண்டம் அழிந்து மீதமுள்ள துணிக்கையான புதுக்குமரி மண்ணில் விட்டுச்செல்லப்பட்ட மருத்துவமே வர்ம மருத்துவமாகும்.
வர்ம மருத்துவ அறிவியல் தமிழ் மொழியிலேயே தோன்றியது.
வர்ம மருத்துவமே மிகப்பழமை வாய்ந்த இந்திய முறை மருத்துவமாகும்.
இது ஆதிசித்தன் சிவனால் தோன்றுவிக்கப்பட்டு, அகத்தியர் மற்றும் போகர் போன்ற சித்தர்களால் வளர்க்கப்பட்டடு,
பின்னர் பல தமிழ் சான்றோர்களால் மருத்துவமாக கையாளப்பட்டுவந்ததுள்ளது. இவர்களெல்லாம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்த லெமுரிய வழித்தோன்றல்களாக வந்த தமிழர்களாவர்.
தமிழ் பாரம்பரிய மருத்துவமான வர்ம மருத்துவத்தை தமிழர்கள் மருத்துவமாக மட்டுமன்றி, தற்காப்புக் கலையாகவும் பயன்படுத்தினர்
மனிதன் தாவர, வேதியியல் மற்றும் விலங்கின சரக்குகளை மருத்துவத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்த காலத்துக்கு முன்னதாகவே, கை விரல்களால் பரிகாரம் தேடிக் கொண்ட ‘கை-மருத்துவம்’வர்மமேயாகும்.
வர்ம மருத்துவமே மிகப்பழமை வாய்ந்த மருத்துவம் எனக்கூற நமக்கு இதைப்போன்ற பல காரணங்கள் உண்டு.
காலப்போக்கில் வர்மமருத்துவமும் பல மூ,கை,தாது,சீவக மருந்துகளை தன்னகத்தே ஏற்றுக்கொண்டு, தனக்கே உரித்தான உறுதியான பல அடிப்படைக் கொள்கைகளையும் தன்னகத்தே ஏற்படுத்திக் கொண்டது.
பின்னாட்களில் பல அக மற்றும் புற மருந்துகளை தனதாக்கி "வர்ம முறை மருத்துவம்" எனத்தனித்துவமாக வளர்ந்துள்ளது.
இந்திய முறை மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதா மருத்துவங்களை காட்டிலும் காலத்தால் தொன்மையானதாகையால் இதுவே முதல் "இந்திய மருத்துவம்"எனக் கணிக்க இடமுண்டு.
மனித உடலில் 108 அழுத்துமிடங்கள் அல்லது வர்மங்கள் உள்ளன
அவைகளை முதலில்
தெரிந்துகொள்வோம் பிறகு மற்றதை படிப்படியாக தெரிந்துகொள்வோம்.
மனித உடல் பகுதியில்,
25 வர்மங்கள் தலை முதல் கழுத்து வரை உள்ளது.
45 வர்மங்கள் கழுத்து முதல் தொப்பூழ் வரை உள்ளது.
9 வர்மங்கள் தொப்பூழ் முதல் கை வரை.
14 வர்மங்கள் கைகளில் உள்ளது.
15 வர்மங்கள் கால்களில் உள்ளதென்று
சித்த வைத்தியம் குறிப்பிடுகிறது:
சரி இதில் வர்மங்கள் செயற்பாடுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
64 வாத வர்மங்களும்
24 பித்த வர்மங்களும்
6 கப வர்மங்களும்
6 உள் வர்மங்களும்
8 தட்டு வர்மங்களும் உண்டு இதை பற்றி வரும் பதிவுகளில்
தெளிவாக எழுதுகிறேன்,
பொதுவாக வர்மம் 96 தத்துவ கோட்பாட்டின் படி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றது,
மனித உடலின் உள்ள உயர்நிலை ஓட்டங்கள் சந்திக்கும் பாகங்களில் எண்ணெய் தேய்த்து தடவிக்கொடுத்தும் நீவிவிட்டும் நரம்புகள், எலும்புகள், தமணிகள் ஆகியவைகளை அழுத்தி சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவத்தின் மூலம் நோய்கள் குணமாகிறது.
இவ்வாறு செய்யும் போது உடல் சமநிலைப்பட்டு நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட வைக்கும் இந்த முறை வர்மமுறை என்பார்கள்
பாதிக்கப்பட்ட பாகங்களின் மீது மூலிகை மருந்து போடுதல், ஒத்தடம் கொடுத்தல், பற்றுப்போடுதல் போன்றவை கையாளப்படும்
மனித உடலில் உயர்நிலை ஓட்டம் உள்ள பகுதியை வர்மக்கலம் என்பார்கள்
அது
தசை, தமணி, நரம்பு,எலும்புசந்திகள் ஆகிய இடங்கள் உயர்நிலையாகும்
அதாவது பிராணன் எனும் வாயு இருக்கும் இடங்கள் ஆகும்
ஒரு மனித உடலில் 108 வர்ம புள்ளிகள் உள்ளது
அதை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில்
12.வர்மங்களை படு வர்மங்கள் என்றும்,
96. வர்மங்களை கொடுவர்மங்கள் என்றும்,
இதிலும் 8வர்மங்களை தட்டு வர்மங்களாக பிரிக்கப்படுகிறது.
கை'கால் ஆகிய இடங்களில் 44.வர்மங்களும்,
தலையில் மட்டும் 23வர்மங்களும்,
நெஞ்சு மற்றும் முதுகு பகுதியில் 33வர்மங்களும்
ஆக மொத்தம் 108 வர்மங்கள்
என நம் உடலில் இருக்கின்றது.
http://archti.wixsite.com/archti
https://chat.whatsapp.com/FdDmGVinnVdKLOJdrhpdLq
Welcome to the Ayushpathy Research Centre & Healthcare Training Institute Our Institute located in Kattupakkam, Chennai. Ayuspathy Research Center & Healthcare Training Institute (ARCHTI) offers Diploma & Master Diploma programs for individuals interested in pursuing , Acupuncture, Varmam,Bio-Energy...