Nalam Virumbi

Nalam Virumbi Home made, healthy and instant food items at your reach!!!

07/11/2015

Hotel Nalam Virumbi Today Evening Special Combo

Mutton Kari Dosa +
Nattukozhi chettinadu gravy +
Boneless -------- Rs.299

Chicken Kari Dosa +
Mutton Masala Gravy +
Chicken 65 ------ Rs.299

Idli +
Dosa +
Cauliflower Masala Gravy ----Rs.66

Special Dosa +
Paneer Gravy +
Cauliflower 65 -----Rs.111

Chicken Rice +
Chicken Noodles +
Chilli Chicken Gravy -----Rs.199

27/09/2015

புற்றுநோயைத் தடுக்கும் திராட்சை!

திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சைப் பழத்தைப் பார்த்தால், திராட்சைக் கொத்து நுரையீரல் போலவும், அதில் உள்ள ஒவ்வொரு திராட்சையும் ஆல்வியோலி எனப்படும் நுண்காற்று அறைகள் போலவும் தோன்றும். ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைச் சுத்திகரித்து, சுவாசக் காற்றில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்து, ரத்த அணுக்களில் நிறைத்து அனுப்புகிறது நுரையீரல். இந்தச் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன், திராட்சைப் பழத்துக்கு உண்டு. நுரையீரலில் வரக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் திராட்சைக்கு உண்டு. கர்ப்பிணிகள் திராட்சையை 23-வது வாரத்தில் இருந்து சாப்பிட்டுவந்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். திராட்சையில் உள்ள ப்ரோஆந்தோசயனிடின் (Proanthocyanidin) ஆஸ்துமா பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும்.

திராட்சையில் உள்ள பாலிபீனால் நுரையீரல், வாய், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கணையம் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.

10/05/2015
10/05/2015

“KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC தற்போது போட்டு உடைத்து உள்ளது. இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா? வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் அனைத்தும் “இருபால் உயிரினமாகும்”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும்.

பின்னர் அதனை வெட்டி பார்சல் செய்கிறார்கள். ஒரு வகையான கழி எண்ணையைப் பயன்படுத்தியே KFC சிக்கனை பொரிக்கிறார்கள். அந்த எண்ணை தரமான எண்ணை கிடையாது. அதில் காலஸ்ரோல் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக கணப்படுகிறது. இவை எமது உடலில் சென்று ரத்த நாளத்தில் கலந்து அங்கே படிய ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவை படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனையே நாம் மாரடைப்பு என்று கூறுகிறோம்.
இந்த சிக்கினை விரும்பி உண்ணும் பெண் பிள்ளைகள், 12 வயதில் அல்லது 10 வயதில் கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். காரணம் என்னவென்றால் சிக்கனில் உள்ள அந்த நச்சுப் பதார்த்தம் தான் என்கிறார்கள். இது பெண் பிள்ளைகள் உடலில் கலந்து பூப்படைவை ஊக்குவிக்கிறது. இதனை உண்பவர்கள் அதிக உடல் எடையினால் பாதிக்க படுகிறார்கள். மேலும் மூளை செயல் திறன் குறைந்து, உணர்வு மண்டலம் பாதிப்படைகிறது.

இணையத்தில் படித்தது...

உங்கள் நலனில் உணவே மருந்து இயற்கை அங்காடி

ஒரு நாட்டுக்கோழி சாப்ஸ் வாங்கினால்=          ஒரு சோள தோசை                       +           ஒரு நாட்டுக்கோழி ஆம்லெட் இலவ...
10/05/2015

ஒரு நாட்டுக்கோழி சாப்ஸ் வாங்கினால்=
ஒரு சோள தோசை
+
ஒரு நாட்டுக்கோழி ஆம்லெட் இலவசம்..

ஒரு நாட்டுக்கோழி பிரியாணி வாங்கினால் ஒரு நாட்டுக்கோழி பிரியாணி இலவசம்...offer யை பயன்படுத்தி கொள்ளுங்கள்..
10/05/2015

ஒரு நாட்டுக்கோழி பிரியாணி வாங்கினால்
ஒரு நாட்டுக்கோழி பிரியாணி இலவசம்...
offer யை பயன்படுத்தி கொள்ளுங்கள்..

10/05/2015

ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி:

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
🐓ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது.😯
🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯
🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯
🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.
"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴
🐓பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟
🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇
🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕
🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😗
🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯
🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟
🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.
நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

 #குதிரைவாலி வெஜிடபிள் அடைதேவையானவை:மாவு அரைப்பதற்கு: குதிரை வாலி அரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், துவரம்பருப்பு - ...
10/05/2015

#குதிரைவாலி வெஜிடபிள் அடை
தேவையானவை:
மாவு அரைப்பதற்கு: குதிரை வாலி அரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், துவரம்பருப்பு - முக்கால் கப், உளுந்து, பாசிப்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மாவில் கலப்பதற்கு: கேரட் (சிறியது) - ஒன்று (துருவிக் கொள்ளவும்), துருவிய முட்டைகோஸ் - சிறிதளவு, குடமிளகாய் - பாதி அளவு (பொடியாக நறுக்கவும்), முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கேற்ப.
செய்முறை: அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை நான்கு மணி நேரம் ஒன்றாகவே ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின் அடை மாவில் கலப்பதற்கு, கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை தோசைக்கல்லில் ஊற்றி... சுற்றிலும் எண்ணெய் விட்டு அடைகளாக சுட்டு எடுக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னி தொட்டுக் கொள்ளலாம்.

 #பல தானிய கஞ்சி - மல்டி கிரைன் கஞ்சிதேவையானவை:கேழ்வரகு - கால் கிலோகொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா இரண்டு டேப...
10/05/2015

#பல தானிய கஞ்சி - மல்டி கிரைன் கஞ்சி
தேவையானவை:
கேழ்வரகு - கால் கிலோ
கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா இரண்டு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை, கம்பு - தலா நாலு டேபிள் ஸ்பூன்
முந்திரி, பாதாம் - தலா 10
ஏலக்காய் - 5
பார்லி - 4 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை தேவைக்கு ஏற்ப
செய்முறை:
கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும்.
முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
வெறுமன வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு ஆனால் காந்தாமல் வறுக்கவும்.
முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
முளை விட்ட தானியங்கள் மற்றும் வறுத்து வைத்தவற்றையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
கஞ்சி போட:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கட்டி இல்லாமல் இருக்கணும்.
பிறகு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும்.
இதனுடன் சர்க்கரை மற்றும் பால் கலந்து கொடுக்கவும்.
நல்லா பசி தாங்கும் .
குறிப்பு: 1 . அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கூட இதைக் கொடுக்கலாம்.
பெரியவர்களும் குடிக்கலாம்.
2 . வேண்டுமானால் கஞ்சி போடாமல் உருண்டை செய்யலாம். இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம்
3 . ஒருவேளை முளைவிட்ட தானியங்கள் நன்றாக காயவில்லை என்று நினைத்தீர்கள் என்றால் அவற்றையும் வறட்டு வாணலி இல் வறுத்துக்கொள்ளவும்.

10/05/2015

இயற்கை மருத்துவம் :-
******************************

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்
""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த
""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும்
""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும்
""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும்
""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும்
""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும்
""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும்
"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க
"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""துளசி.""

16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு
""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும்
""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும்
"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""

25) முகம் அழகுபெற
""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும்
"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும்
“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு”.

வெயிலுக்கு ஏற்ற பானகம்தேவையானவை: வெல்லம் - 200 கிராம், புளி - 50 கிராம், பொடித்த சுக்கு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூ...
10/05/2015

வெயிலுக்கு ஏற்ற பானகம்

தேவையானவை:

வெல்லம் - 200 கிராம், புளி - 50 கிராம், பொடித்த சுக்கு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய் - 2, புதினா இலைகள் - 5, எலுமிச்சைப்
பழம் - 1.

செய்முறை:

வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளியையும் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். வெல்லக் கரைசலுடன், புளித் தண்ணீரையும் சேர்த்து, சுக்குத் தூள், உப்பு, மஞ்சள் தூள், ஏலக்காய்த் தூள் அனைத்தையும் சரியான விகிதத்தில் கலக்கவும். பிறகு, அதில் எலுமிச்சைச் சாறு, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: உடலில் நீர் வறட்சியை சரி செய்யும். தேவையான நீர்ச் சத்தைக் கொடுத்து, வெயில் கால நோய்களிலிருந்து காக்கும். கோடைக்கு ஏற்ற பானம் இது.

Address

Thiruparankundram
Madurai

Telephone

+91 95977 77765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalam Virumbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nalam Virumbi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category