Family Health Tips

Family Health Tips This page can provide all health tips to all....

14/04/2022

🔴 LIVE : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண பிரம்மோற்சவம்chithirai thiruvizha 2022 | chithirai thiruvila live | chithirai thiruvizha madurai 2022 | c...

20/03/2022

🍆🥕 *"காய்கறி" குறள்.*

*"தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண்."*

🍅🌰🥑🥝🍈🍇🥦

*"எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர் எலும்புக்கு வலு சேர்க்குமே."*

🍓🍒🥑🥝🥥🥦🌶

*"வெங்காயம் இல்லாச் சாம்பார் எஞ்ஞான்றும் தங்காதே நாவில் ருசி."*

🍅🥒🍄🌶🥒🥥🍉

*"பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே புடலங்காய் போற்றிச் சுவை."*

🍄🌶🍊🍉🥥🥦

*"தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத்தான்."*

🍄🥦🥒🍏🍍🥕🌶

*"வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண்."*

🍄🥑🍉🍈🍇🌶

*"வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு."*

🍅🍌🍄🥒🌶🍎

*"கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில பித்தருக்குச் சமமெனக்கொள்."*

🌽🌰🍄🥝🥥🍈🍇

*"பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்."*

🍅🍌🍋🍊🍉🥝🥦

*:காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய்நொடியில் வீழ்ந்து கெடும்."*

🥥🍈🍉🍄🥦🥒🌶

*"முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் மற்றோரெல்லாம் வெறுங்கையில் முழம் போடுவர்."*

🍑🍅🌰🥝🥥🍉🍌

*"காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள கரிசலாங் கண்ணியைச் சேர்."*

🌽🍍🍊🍉🥝🥒🥦

*"இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில் கரும்பைப் போய் விரும்பிச்சுவை."*

🌰🥔🍒🍑🍐🍏🥦

*"உரிக்க உரிக்கத் தோல்தான் வெங்காயம் என்றாலும் செரிக்குமோ உண்ணவிடில்."*

🥔🍓🍐🥥🍎🍍🥦

*"பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்."*

🍅🍋🍌🍍🍆🥦🥒

*"பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார் சோகத்தில் சேர்ந்து விழும்."*

🍊🍉🥥🥝🥒🌶

*"வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் ஒருதுண்டு சேர்த்துச்சமை"*

🍍🍐🍓🍇🥦🥒

*"வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய் தாழ்வேனெவே எண்ணு பவர்."*

🍓🥦🌶🥥🍏🍉

*"கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் தேரை வாழ்ந்த கதை"*

🍋🍊🍉🍈🍆🍄

*"பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் பீட்ரூட்டை உணவில் சமை."*

🍑🍐🍎🌽🥕🌶

*"கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம் சத்தே எனவே சரியாய் உணர்."*

🍅🍍🍉🍈🍇🥦

*"கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர் சொறி பிடித்தோடுவார் காண்."*

🥕🍒🍑🍐🍏

*"பொன்னிற மேனி வேண்டுமெனில் நீ அந்த பொன்னாங் கண்ணியைச் சேர்."*

🍉🍒🍋🍌🍍🥑

*"கண் இருந்தும் குருடரே காசினியில் காய்கறியை உண்ணாதவர்."*

🙏🍄🥔🍒🍊🍏🥦🙏

https://youtu.be/qeK2BnGMZN8
15/02/2022

https://youtu.be/qeK2BnGMZN8

அழகான மதுரையில்... அழகான மின் விளக்கு... விரைவில் முழு பாலம்மும் மின் விளக்கு போடப்படும்...

https://youtu.be/uwVcC77nrCU
30/01/2022

https://youtu.be/uwVcC77nrCU

அரசின் நேரடி ஆதார் சென்டர்----------------சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள வசந்தம் ஹோட்டல்...

08/01/2022
08/01/2022

13/09/2021

 #மதுரையின்_சிறப்பு

இன்று மாலை ஒரு சிறப்பான புகைப்படம், இந்த புகைப்படம் புடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க...🙏🙏🙏

Magic Guava - அற்புத கொய்யா !!பேலியோ உணவுமுறையில் உடல் எடை குறைப்பின் போது உண்ணக்கூடியதாக தரப்படும் ஒரே பழம் கொய்யா.நம் ...
07/09/2021

Magic Guava - அற்புத கொய்யா !!

பேலியோ உணவுமுறையில் உடல் எடை குறைப்பின் போது உண்ணக்கூடியதாக தரப்படும் ஒரே பழம் கொய்யா.

நம் மக்களில் பலர் கொய்யாக்காயை சுத்தமாக வாங்குவது இல்லை.

நோயுற்ற உறவினர்களை காண செல்லும் போது கூட ஆப்பிள், ஆரஞ்சு தான் வாங்குவோமே தவிர கொய்யா வாங்குவது இல்லை.

ஆனால், கொய்யாவில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

இன்றைய தேதியில் ஒருகிலோ கொய்யா - 65 ரூபாய்

ஒரு கிலோ ஆப்பிள் - 150 ரூபாய்

கிட்டத்தட்ட ஆப்பிளை விட பாதிவிலையில் கிடைக்கும் கொய்யாவில் ஆப்பிளை விட நன்மைகள் உள்ளது என கூறினால் நம்ப முடிகிறதா?

ஆம், இரண்டு பழங்களையும் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

100 கிராம் ஆப்பிளில்

15 கிராம் மாவுச்சத்து
0.3 கிராம் புரதம் உள்ளது.

100 கிராம் கொய்யாவில்

13 கிராம் மாவுச்சத்து
2.5 கிராம் புரதம் உள்ளது.

மேலும், ஆப்பிளில்

விட்டமின் C - 7% = 4.5 IU
விட்டமின் A - 1% = 54 IU உள்ளது.

இதுவே, கொய்யாவில்

விட்டமின் C - 380% = 228.3mg
விட்டமின் A - 12% = 624 mg உள்ளது.

இப்படி மினரல், விட்டமின் அளவுகளை கொண்டு கணக்கிட்டால் ஆப்பிளை விட பன்மடங்கு உயர்ந்தது கொய்யா.

மேலும், கொய்யாவில் ரத்த சர்க்கரையை ஏற்றும் அளவான Glyceminc Index வெறும் 32%. ஆப்பிள், ஆரஞ்சு, மா, வாழை, போன்ற பல பழங்களை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு. இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு அதிக அளவில் தூண்டப்படாது. உடல் எடையும் கூடாது.

ஆரோக்கியமாகவும், உடல் எடை குறைக்கவும் நினைக்கும் நபர்கள் தினசரி ஒரு கொய்யாவை உட்கொள்ளுங்கள்.

கொய்யா எனும் அற்புதம் !!

நன்றி..!! ♥️

Address

7/712 Theni Main Road
Madurai
625514

Website

Alerts

Be the first to know and let us send you an email when Family Health Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram