Agathiya Ligament Care Center

Agathiya Ligament Care Center Hi guys...
Here we are undertaking Special treatment for "LIGAMENT CARE,BONE FRACTURE & MUSCLE TEAR". We are treating WITHOUT operation 200% Results.

Scoliosis treatment....varma in Madurai
08/03/2022

Scoliosis treatment....varma in Madurai

Wrist fracture...
04/03/2022

Wrist fracture...

04/03/2022

Fire cupping done for back Pain and activities the organ...

19/03/2020

To take gymnastics classes for the kids

21/01/2019

*மருத்துவம் - வயிற்று நோய்கள்*

1). சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, திரிகடி அளவு பசு வெண்ணெயில் கலந்து உண்ண எரி குன்மம் தீரும்.

2). சீரகம், சுக்கு, மிளகு, கறியுப்பு இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி, திரிகடி அளவு எலுமிச்சம் பழச்சாற்றுடன் கொடுத்து வர வாயு, குன்மம் எனும் வயிற்றுவலி, பசியின்மை தீரும்.

3). வரிக்குமட்டிச் சாறு 1 லிட்டர் எடுத்து அதனுடன் சோற்றுப்பு 1/2 கிலோ கலந்து பிசறி வெயிலில் வைத்து நன்றாக உலர்த்தி எடுத்து, பின் நன்றாக வறுத்து எடுத்துப் பொடியாக்கி, மோர் அல்லது வெந்நீர் இவற்றில் ஏதாவது ஒன்றில் தினசரி இரண்டு வேளை கலந்து கொடுத்து வர வயிற்றுவலி, மலக்கட்டு, வாயு தீரும்.

4). 100 கிராம் கசகசாவைப் பாலில் அரைத்து சர்க்கரை சேர்த்து தினசரி காலை மாலை 4 நாட்கள் சாப்பிட்டு வர குன்மம், குடல்புண், வாயு, வேக்காடு, சீதபேதி, வாய் நாற்றம் ஆகியவை தீரும்.

5). வெள்ளாட்டுப் பால் 300 மில்லி, தேங்காய்ப் பால் 300 மில்லி, இந்துப்பு 8 கிராம், திப்பிலி 8 கிராம் - அனைத்தையும் கலந்து தினசரி 3 வேளை உட்கொண்டு வர, எரி குன்மம், சுவையின்மை, பசியின்மை, மாந்தம் தீரும்.

6). சுக்கு, மிளகு, பெருங்காயம், சீரகம், இந்துப்பு, உலர்ந்த ரோஜாப்பூ, இவற்றை நன்றாக சுத்தம் செய்து, சம அளவு எடுத்த தனித்தனியே பொடித்து ஒன்றாக ஒரு பாத்திரத்திலிட்டு, எலுமிச்சை சாறு மூழ்கும் அளவு விட்டு ஊறவைத்து, மறுநாள் அரைத்து உலர வைத்து, அதற்கு அடுத்த நாள் இஞ்சிச்சாறு விட்டரைத்து, சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக்கி, பசியின்மை, புளியேப்பம், உணவில் வெறுப்பு, செரியாமை போன்றவற்றிற்கு, இதில் 2 மாத்திரைகளை மென்று வெந்நீர் அருந்தி வர, மேற்கண்ட வியாதிகள் விலகும்.

7). இஞ்சி, புதினா, எலுமிச்சம் பழம் ஆகியவற்றின் சாறு, தேன் - இவை வகைக்கு 1/4 லிட்டர் எடுத்து காய்ச்சி 4-ல் ஒரு பாகமாக சுண்ட வைத்து, சூடு ஆறியபின் எடுத்து, காலை, மாலை 1/2 ஸ்பூன் வீதம் உண்டு வர வாயுக்களால் ஆன வயிற்று வலி உடனே நிற்கும்.

8). குழந்தைகளுக்கு பச்சை நிறமாக மலம் போவதை நிறுத்த மஞ்சளும் வேப்பந்தழையும் சேர்த்து அரைத்து, சிறு உருண்டையாக உருட்டி ஆசன வாயில் வைக்க வேண்டும்.

9). சிறுவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கு, சோம்பு, எலிப்புழுக்கை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, இளம் சூட்டுடன் அதை தொப்புளுக்குக் கீழே பூசி, அதன் மேல் முள்ளங்கி அல்லது வெற்றிலை வைய்துக் கட்டி விட வேண்டும். 1 1/2 நாழிகையில் மலம் வெளியேறி விடும்.

10. அடிக்கடி மலம் கழிந்தால், மாமரப் பட்டையை மோர் விட்டரைத்து, தொப்புளைச் சுற்றி பற்று போடவும்.

இதேபோல் நெல்லிக்காயை நெய்யில் அரைத்து தொப்புளைச் சுற்றி பூசலாம்.

[குறிப்பு: திரிகடி - மூன்று விரலளவு

மூலிகை சுத்தி:

சுக்கு: மேல் தோல் நீக்கி சுண்ண நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து உலர்த்தவும்.

பெருங்காயம்: பொரித்தெடுத்துக் கொள்ளவும்

மிளகு: (1) தண்ணீரில் ஒரு நாள் ஊற வைக்கவும். (2) சிறுதீயில் வாசனை கிளம்ப வறுத்தெடுக்கவும்.

கிராம்பு: மொட்டுப் போல் உள்ள பூவை எடுத்தெறியவும்.

திப்பிலி: சித்திரமூலக் கியாழத்தில் ½ நாள் ஊற வைத்து உலர்த்த சுத்தியாகும்]

உங்கள் ஆரோக்கியத்தில் எப்போதும் அக்கறையுள்ள...Agathiyar Ligament care centre, Madurai

25/06/2017

புதுவையை சுற்றி உள்ள சித்தர்கள் ஜீவசமாதி
புதுவையில் ஜீவசமாதி அடைந்து அருள் ஒளிவீசும் 41சித்தர்கள்
1 ஸ்ரீ தொள்ளகாது சுவாமிகள் , ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் புதுவை ,
2 . ஸ்ரீ மகான் படேசாஹிப் சுவாமிகள் சின்னபபுசமுதிரம் , கண்டமங்கலம்
3 .ஸ்ரீ சிதானந்த சுவாமிகள் கருவடிக்குப்பம் புதுவை
4 .ஸ்ரீ குரு அக்கா சுவாமிகள் வைத்திக்குப்பம் ,புதுவை .
5 ஸ்ரீ நாராயண பரதேசி சுவாமிகள் , வைத்திக்குப்பம், புதுவை .
6 ஸ்ரீ கம்பளி நான தேசிக சுவாமிகள் , தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை , புதுவை .
7 ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள், 3 வது குறுக்குத்தெரு , பிருந்தாவனம் , புதுவை .
8 ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள் , கராமணிகுப்பம், புதுவை
9 ஸ்ரீ சந்தானந்தா சுவாமிகள் சிருங்கேரிமடம் செரேதோப்பு எதிரே எல்லைபில்லைசாவடி புதுவை
10 .ஸ்ரீ சுப்ரமணிய அபிநவசசிதானந்தா சுவாமிகள் ,சிருங்கேரிமடம் செரதொப்பு எதிரே எல்லைபில்லைச்சாவடி , புதுவை .
11 ஸ்ரீ பெரியவர்களுக்கு பெரியவர் சுவாமிகள் தட்டஞ்ச்சாவடி, புதுவை
12 ஸ்ரீ வேதானந்த சுவாமிகள் ,திருவள்ளுவர்நகர், முத்தியால்பேட்டை புதுவை .
13 ஸ்ரீ சடையப்பர் சுவாமிகள் வழுதாவூர் சாலை ,ராணி மருத்துவமனை எதிரே , புதுவை
14 ஸ்ரீ மௌலனசாஹிப் சுவாமிகள் , முல்லா வீதி புதுவை .
15 ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் ,அம்பலத்தடையார் மடம்வீதி புதுவை .
16 .ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் தென்னஞ்சாலை ரோடு சுப்ப்ரயபிள்ளை சமுத்திரம் புதுவை . 17 ஸ்ரீ தேங்காய் சுவாமிகள் வில்லியனூர் புதுவை
18 ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் சுல்தான்பேட்டை வில்லியனூர் புதுவை .
19 ஸ்ரீ பவழக்கொடி சித்தர் சுவாமிகள் . சோம்பட்டு. திருக்கனூர் வழி புதுவை .
20 ஸ்ரீ ரங்கசாமி சித்தர் சுவாமிகள் சோம்பட்டு திருக்கனூர் வழி , புதுவை .
21 ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள் , பள்ளிதென்னல், புதுவை
22 .ஸ்ரீ குருசாமி அம்மாள் சுவாமி எ அரியூர் , புதுவை
23 ஸ்ரீ ல ஸ்ரீ அருள் சக்தி அன்னையீன் சித்தர் பீடம் , பிள்ளையர்குப்பம், கிருமாம்பாக்கம் , புதுவை
24 ஸ்ரீ ல ஸ்ரீ உலகநாத களரானந்த சுவாமிகள் சோரியங்குப்பம் பள்ளி பாகூர் ,புதுவை
25 ஸ்ரீ அப்பர் சுவாமிகள் எம்பலம். புதுவை .
26 ஸ்ரீ மகான் வண்ணரபரதேசி சுவாமிகள் ஒதியம் பட்டு புதுவை
27 ஸ்ரீ வியோமா சுவாமிகள் கன்னுவாபேட்டை, வில்லியனூர் புதுவை .
28 ஸ்ரீ கணபதி சுவாமிகள் , கருவடிக்குப்பம் , எடயஞ்சாவடி , புதுவை
29 ஸ்ரீ சிவபிரகாச சுவாமிகள் நல்லாத்தூர் எம்பலம், புதுவை .
30 ஸ்ரீ அழகர் சுவாமிகள், தென்னம்பாக்கம் புதுவை .
31 ஸ்ரீ கழுவெளி சித்தர் சுவாமிகள் , திருச்சிற்றம்பலம் இரும்பை .புதுவை
32 ஸ்ரீ சிவஞ்ன பாலய சித்தர் சுவாமிகள் , பொம்மையார் பாளையம் புதுவை .
33 ஸ்ரீ சிவஞ்ன பால சித்தர் சுவாமிகள் ,மைலம் முருகம் கோவிலுக்கு வலபுறம் ,.
34 ஸ்ரீ சுப்பராய பரதேசிஸ்வமிகள் , மைலம் (மூலவர் இருக்குமிடத்தில் ஜீவசமாதி)
35 ஸ்ரீ பகவந் சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர்.
36 .ஸ்ரீ தயானந்த சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர்.
37 ஸ்ரீ தேவராஜ் சுவாமிகள் , வன்னியனல்லூர் ,சூனம்பேடு
38 ஸ்ரீ சத்குரு நித்தியானந்த சுவாமிகள் கோழிப்பாக்கம் அன்னகிரமாம் அருகே பட்டாம்பாக்கம் 39 ஸ்ரீ கந்தசாமி சுவாமிகள் காரணப்பட்டு .
40 ஸ்ரீ லக்ஷ்மண சுவாமிகள் புத்துப்பட்டு காலாப்பட்டு
41 குண்டலினி சித்தர் திருவக்கரை திருக்கனூர் அருகில்
இந்த 41 சித்தர்களும் ஜீவசமாதி அடைந்து அருள் ஒழி வீசி கொண்டிருக்கிறார்கள் ....... இந்த சித்தர்களின் அருள் ஆசி பெற .... தரிசிக்க வருகைதாருங்கள் உள்ளம் தெளிவடையும்

24/06/2017

இராமக்ருஷ்ணர் பரமஹம்சர்
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

தக்ஷிணேஸ்வரத்தில் பிராமணிக்கு ராமகிருஷ்ணரின் போக்கு பிடிபட்டு விட்டது. ''ஆஹா, இவர் ஒரு சிறந்த ஆத்ம ஞானியாக அல்லவோ இருக்கிறார். இவரே ஒரு குட்டி கிருஷ்ணன்'' என்று புரிந்து கொண்டு அவருக்கு தாயாக இருந்தாள். உலகுக்கு அவர் ஒரு ஆன்மீக வழிகாட்டி என்று தெரிந்தது. சைதன்யர் போன்ற ஒரு அவதாரம் அல்லவா ராமகிருஷ்ணர்?''என்று மதுரபாபுவிடம் சொன்னபோது பாபுவுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது.

ப்ராமணி மதுர பாபுவை சந்தித்து ஒருநாள் ''நீங்கள் ஒரு வித்வத் சபையை கூட்டுங்கள். ராமகிருஷ்ணர் அவர்களை சந்திக்கட்டும். அவர் சக்தி அப்போது புரியும்'' என்றாள் . நட மந்திர் எனும் காளி கோவில் மண்டபத்தில் ஒரு மகாநாடு ஏற்பாடாயிற்று.

வைஷ்ணவ சரண் எனும் வைஷ்ணவ சபையின் தலைவர் அநேக பண்டிதர்களோடு வந்தார். அவர்களுக்கு இடையே ராமகிருஷ்ணர் ஒரு சாதாரண ஒன்றுமறியாத குழந்தை போல் தானுண்டு தனது காளி நினைவுடன் சமாதி நிலையை அவ்வப்போது அடைந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே அறியாமல் இருந்தார்.

'' அடடா, இந்த மாதிரி கடவுளோடு ஒருமித்த மனோ நிலை மிகவும் சிறந்த மகான்கள் மட்டுமே அனுபவிப்பது, கடவுளின் கடாக்ஷம் பரிபூர்ணமாக இருப்பவர்களுக்கு தான் இது சித்தியாகும். ராமகிருஷ்ணர் இளம் வயதிலேயே ஒரு மஹா பெரிய ஞானி '' என்றார் வைஷ்ணவசரன்.

''மதுர பாபு, இவர் சொல்வது ஆச்சரியமாகவும் திருப்தியாகவும் இருக்கிறது. நல்லவேளை எல்லோரையும் போல் இவரும் என்னை ஒரு பைத்தியம் என்று சொல்லவில்லை'' என்று சிரித்தார் ராமகிருஷ்ணர்.

சிறிது நாளில் இன்னொரு மகா பண்டிதர் கௌரி என்பவர் வந்து ராமகிருஷ்ணரை சந்தித்தபோது ' மதுர பாபு, வைஷ்ணவ சரண் சொன்னது கொஞ்சம் தான். ராமகிருஷ்ணர் ஒரு ஆன்ம சக்தி நிறைந்த சுரங்கம். அவதாரம் என்பது எப்போதாவது உருவாவது தானே. இவர் சதா சர்வகாலமும் ஆன்ம ஒளி வீசுபவர்'' என்கிறார்.

''ஆஹா, நல்ல வேடிக்கை. என்னிடம் அப்படி என்ன கண்டீர்கள்?'' என்கிறார் ராமகிருஷ்ணர்.

''நான் சொல்லவில்லை. என் இதயம் பேசுகிறது. நீங்கள் ஒரு வரப்பிரசாதம். உங்களைபோன்றவர்களை பற்றி சாஸ்திரங்கள் நிறைய சொல்கிறது.எவரிடம் வேண்டுமானாலும் இது பற்றி நான் வாதாட முடியும்''

''நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு விளங்கவில்லை. எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது மட்டுமே எனக்கு தெரியும் ''

இரு சிஷ்யர்கள் அவரைப் பற்றி இதேபோல் அவரை ஒரு அவதாரமாக புகழ்ந்தபோது ராமகிருஷ்ணர் ''அவர்களுக்கு வேறே வேலை இல்லை. அப்படித்தான் ஏதாவது சொல்வார்கள். ஒருவர் நாடக நடிகர், மற்றவர் ஒரு மருத்துவர். அவதாரங்களை பற்றி என்ன பேசமுடியும். நான் ஒரு மாணவன். தினமும் ஏதாவது கற்பவன்' என்று அங்கிருந்து நகர்ந்தார்.

இதுவரை தனது மனதில் தோன்றிய வழிபாடோடு இருந்தவர் பிராமணியை குருவாக ஏற்று, தந்த்ர சாஸ்திரம், ஆத்ம தத்துவம் எல்லாம் அறிந்துகொண்டார்.

தானே சத் சித்தானந்த ஸ்வரூபமாக இருந்தும் சத்யம், ஆன்மநிலை போன்றவை எளிதாக அவரால் அவளிடமிருந்து அறியமுடிந்தது.

தந்த்ர சாஸ்திரம் உலக வாழ்க்கையின் இன்பம் துய்ப்பவனுக்கு அதில் கடவுளைக் காண உதவுகிறது. சில ரகசிய வழிபாடுகளை போதிக்கிறது. புலன்களை அதில் வசியப்படுத்துகிறது. ,மாயை தெளிவித்து இந்த பிரபஞ்சமே சக்தி-சிவ ஸ்வரூபம் என அறிவிக்கிறது. படிப்படியாக மனித சக்தி வலுப்படுகிறது. பெண்ணை அன்னையாக, காளியாக, பாவிக்கும் சக்தி அளிக்கிறது.

ராமகிருஷ்ணர் பஞ்சவடியில் வில்வ மரத்தடியில் தியானத்தில் வழக்கம்போல் ஈடுபட்டார். தந்த்ர சாஸ்திரத்தின் 64 விதிகளும் அவரது கட்டுப்பாட்டுக்குள் எளிதில் வந்தது. சகஜமாக சமாதி நிலை சித்தியாயிற்று. எங்கும் எதிலும் பரிபூரணானந்தம் தெரிந்தது.

Address

Surya Nagar
Madurai
625005

Telephone

+917406198426

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agathiya Ligament Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Agathiya Ligament Care Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram