Madurai Foot Reflexology and Dorn Therapy Centre

Madurai Foot Reflexology and Dorn Therapy Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madurai Foot Reflexology and Dorn Therapy Centre, Medical and health, No. 9 B, Shyaam Illam, Thoppu, Behind Ramakrishna Medicals, Bykkara, Madurai.

28/12/2024

மாற்றம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. தனது மனதையே மாற்ற முடியாதவர்கள், எதை மாற்றப் போகிறார்கள்.
– பெர்னாட்ஷா.

பெரும்பாலான மாற்றங்கள் ஏதோ ஒரு ஏமாற்றத்திலிருந்து தான் தொடங்குகிறது.

சில நேரங்களில் மாற்றத்தின் அலைகளில்தான் நமது வாழ்வின் உண்மையான திசையைக் காண்கிறோம்.

மாற்றம் வேண்டும் என்றால், முயற்சியை மாற்றுங்கள் இல்லை, முயற்சியை கூட்டுங்கள் முடிவு தானாக மாறும்.
- (ப/பி)

🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽

23/12/2024

அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும்
ஒருவித பதற்றத்தோடேயே இருப்பார் எரிச்சலடைவார்.

ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்.

ஒருநாள் அவரது கணவர், "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" என்று அந்த பெண்ணிடம் கூறினார். அவரும் அமைதியாக சம்மதித்தார்.

மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான். அதற்கு அந்த பெண்ணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும். முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக.

மகள் ஓடி வந்து, "அம்மா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு. அதற்கு தாய், "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்.

குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துகளை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர்.

ஒருநாள் அந்த பெண்மணியே அணைவரையும் அழைத்து அமர வைத்து பின்வருமாறு கூறினார்:

"சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது.
அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு. என்னுடைய கோபம், என்னுடைய பதற்றம், என்னுடைய பயம், என்னுடைய மன அழுத்தம், என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை. அவை என் ஆரோக்கியத்தை கெடுத்து என் பிரச்சினைகளை தான் அதிகரிக்கும்.

என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே உங்களுக்கு என்னால் கொடுக்க முடியும். உங்களுக்கு தேவைப்பட்டால் என் அறிவுரைகளை நான் தருவேன்.
உங்களுக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன்.
ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.

ஏனெனில் என்னை சார்ந்து நீங்கள் இந்த பிறவியை எடுக்கவில்லை.
இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை.
உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்புக் கூறல் வேண்டும்.
உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் சந்தோசத்தை நீங்களே தேடுமளவுக்கு நீங்களும் எல்லா அறிவையும் பெற்றுள்ளீர்கள்.
ஆகவே தான் நான் அமைதியாகி விட்டேன்."

குடும்பமே வாயடைத்து போய் இருந்தது.

அன்றில் இருந்து அந்த குடும்பத்தில் ஒவ்வொருவரும் பொறுப்போடும் சிறப்போடும் செயல்படத் தொடங்கினர்.

நாமும் கூட இவ்வாறான வாழ்க்கையே வாழ்கிறோம்.

ஏழை நாட்டில் ஒரு சிலர் கையில் பணம் குவிந்து இருப்பது போல் பொறுப்புக்களும் ஒருவரிடமே குவிந்து கிடக்கின்றன.

குறிப்பாக பெண்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் மன அழுத்தம் அவர்களை நோயாளியாக்கி விடுகிறது.

நாம் அனைவரும் நம் பொறுப்பை நாமே பார்த்துக் கொண்டால் வாழ்வு இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் கூடும்.
படித்தது.

Address

No. 9 B, Shyaam Illam, Thoppu, Behind Ramakrishna Medicals, Bykkara
Madurai
625004

Telephone

+919840657166

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai Foot Reflexology and Dorn Therapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram