கிராமத்து மருத்துவம்

கிராமத்து மருத்துவம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கிராமத்து மருத்துவம், Madurai.

07/01/2025

*வாழை இலையும் பாம்பும் – நம் முன்னோர்கள் அறிந்துவைத்திருந்த ரகசியம் பற்றி தெரிந்து கொள்வோம்* .....

‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் வெகுபிரமாதம்’ என்று அனைத்து திருமணங்களிலும் வாழை இலையில், தமிழ் நாட்டில் விருந்து பரிமாறுகிறார்களே! அதற்கு ஏன் வாழைஇலையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று என்றாவது விருந்து சாப்பிடும் போது சிந்தித்திருக்கிறீர்களா?

அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம், வாழை இலை விருந்துக்கு சமைத்த உணவில் ஏதாவது நஞ்சு இருந்தால், அதை வாழை இலை நீக்கிவிடும்.

நம்பமுடியவில்லையா?
இன்றும் கிராமங்களில் பாம்பு கடித்தால் முதலுதவியாக வாழையின் மட்டையில் இருந்து சாறு பிழிந்துதான் தருவார்கள். அதன்அடிக் கிழங்கில் இருந்து சுரக்கும் நீரைத்தருவார்கள். அதற்காகத்தான் பெருவாரியாக மக்கள் கூடும் கோயில் திருவிழாக்கள், திருமணம், இன்னம் சொல்லப்போனால் சில பகுதியில் இறப்பு வீடுகளிலும் கூட முதலுதவி இருக்கவேண்டும் என்று தயாராக வாழையை மங்களகரம் என்று கூறி கட்டிவைப்பார்கள்.

😮😟😮😟😮

திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தார்கள் தொல் தமிழர்கள். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் முதலுதவிக்கு அவ்வாறு செய்து வைத்தார்கள். எத்தகைய அமங்கலமும் நடக்காமல் இருந்தால் அது மங்கலம் தானே! இவ்வாறு தொல் தமிழ் மக்கள் எதையும் அறிவியல் பூர்வமாகவே செய்திருக்கிறார்கள்.

வாழை இலையில் உண்பது நஞ்சு நீக்க மட்டும் இல்லாமல், நமது முன்னோர் உணவு பரிமாறுவதற்கு வாழை இலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அது பெரிதாக இருக்கிறது என்பது மட்டும் காரணம் அல்ல. வாழை இலையில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.

வாழை இலையில் இருக்கும் Polyphenol, செல்களில் உள்ள DNA-வை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.

😮😟😮😟😮

சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள Polyphenol சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.

=======

ஒரு அனுபவ செய்தி.....

*ஆயுள் அதிகரிக்க* அனைவரும் அந்தக் காலத்தில் வாழை இலையில் சாப்பிட்டு *நூறாண்டு* கடந்தும் வாழ்ந்து இருக்கிறார்கள்.

*வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது. அதனால் தான் சமீப காலம் வரை பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால் அதை வாழை இலையில் தான் கட்டித் தருவார்கள். இப்போது அந்தப்பழக்கம் அறவே இல்லை என்று கூறலாம்* .

======

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். தீக்காயங்களுக்கு ஆளானவர்களை வாழை இலையில்தான் படுக்க வைப்பார்கள். வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், விரைவாக காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது.

வாழை இலை சருமத்தில் ஒட்டாது மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்தாது என்பதால் தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அருமருந்து. தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாழை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

தீக்காயம், வெந்நீர்பட்டு ஏற்பட்ட காயம், கொதித்த சூடான எண்ணைய் பட்ட காயம் போன்றவற்றிற்கு வாழையின் குருத்து இலையை எடுத்து காயத்தின் மீது சுற்றி குருத்து இலையை கட்டாக போடலாம். மேலும் தீக்காயங்கள், சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களை வாழையிலையில் தேன் தடவி படுக்க வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு சில மணிநேரம் வாழையிலையில் தேன் தடவி படுக்க வைப்பதன் மூலம் விரைவாக தீக்காயங்களிலிருந்து குணம்பெறலாம்.

இயற்கை மருத்துவத்தில் வாழை இலை குளியல் சிறப்பானது, உடலில் குறைந்த ஆடைகளுடன் இருக்கவைத்து உடல் முழுவதும் வாழை இலை போர்த்து உடல் முழுவதும் கட்டிவிட்டு, மிதமான சூரிய வெப்பத்தில் சில மணி படுக்கவைத்துவிடுவார்கள். உடல் முழுவதும் தோலில் அடைபட்டிருக்கும் அனைத்து நுண்ணிய துவாரங்களை மீண்டும் திறக்க வைத்து, தோல் மூலமாகவும் நம்மை சுவாசிக்க வைக்கும்.

இது ஒரு சிறப்பான தமிழர் இயற்கை சிகிச்சை முறை
வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்பதோடு மட்டுமல்லாமல், சாப்பிட்டு முடித்த பின் வாழை இலை கால்நடைகளுக்கு உணவாகவோ, நிலத்துக்கு உரமாகவோ மாறிவிடுகிறது. அதாவது அது கழிவாக மிஞ்சுவதில்லை. வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்து பாகங்களுமே நமது வாழ்வியலோடு கலந்த பயன்பாடுகள் உள்ளவைதான்.

*இனியாவது* .....

குறைந்த பட்சம் சிறிய அளவிலான வாழை இலையை சாப்பிடப் பயன்படுத்தி ஆயுளை அதிகரிக்கச் செய்வோம்.

தலைமுறை சிறக்க தாம்பூலம் பழக்கத்தை ஆரம்பியுங்கள்.(வெற்றிலை பாக்கு போடும் பழக்கம்)அனைவருக்கும் .சொல்லுங்கள்*       மலட்டு...
04/01/2025

தலைமுறை சிறக்க தாம்பூலம் பழக்கத்தை ஆரம்பியுங்கள்.

(வெற்றிலை பாக்கு போடும் பழக்கம்)

அனைவருக்கும் .சொல்லுங்கள்* மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை,
சர்க்கரை வியாதி இல்லை,
இதய நோய்கள் இல்லை .....

#வெற்றிலை_பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்

சமீக காலமாக என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் இது.

தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் ....

கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை .....

முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை.

ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தி goருக்கிறான் தமிழன்.

கலாச்சாரச் சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.

வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)-களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

வாயில் கேன்சர் வந்திடும், பல்லு கரை போகவே போகாது, தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு",
எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,

பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.

வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது,

விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,

மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா, சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போமே...*🙏

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்'! - (பழமொழி)என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந...
18/10/2024

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்'! - (பழமொழி)என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை. முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை. இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார். இதைத்தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்று சொல்லி வைத்தார்கள். ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா..?

கிட்னியில் கல் எந்த அளவுகளில் இருந்தாலும் வலியில்லாமல் கல்லை கரைத்து சரி செய்து தருகிறோம் இடம் மதுரை தொடர்புக்கு 9751658...
02/10/2024

கிட்னியில் கல் எந்த அளவுகளில் இருந்தாலும் வலியில்லாமல் கல்லை கரைத்து சரி செய்து தருகிறோம் இடம் மதுரை தொடர்புக்கு 9751658785

03/09/2024

சர்க்கரை நோயால் ஆறாத குழிப்புண், கால் புண் பாதிப்பில்லாம குணமாக்க ,
சர்க்கரை நோயாளிகளுக்கு காயங்கள், கால் புண்கள், வெரிகோஸ் வெயினால் ஏற்படும் புண், குழிப்புண்கள் மோசமான உபாதையை உண்டு செய்யும். அலட்சியமாக இருந்தால் இவை உறுப்புகளை நீக்கும் அளவுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகளிடையே காயங்களை ஆற்ற தொடர்பு கொள்ள வேண்டிய எண்9751658785.இடம் மதுரை.

26/07/2024
25/04/2024

மூட்டு வலி வீக்கம்

எலும்பு தேய்மானம்

இடுப்பு எலும்பு வலி

தோள்பட்டை வலி

போன்ற நோய்கள் படிப்படியாகக் குணமாகும்
பிரண்டை_சூரணம்.


தேவையான அளவு பிரண்டை வாங்கி வந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் மோரில் ஊறப் போடவும்
மறுநாள் காலை மோரை வடித்து கொட்டி விட்டு பிரண்டை யை மட்டும் வெயிலில் காய வைக்கவும்
ஒவ்வொரு நாளும் புதிய மோர் பயன்படுத்தவும்
இவ்வாறு ஏழு நாட்கள் செய்த பின்
மோரில் ஊற வைக்காமல் பிரண்டையை மட்டும் நன்கு வெயிலில்
காய வைத்து நன்கு காய்ந்த பின்எடுத்து அரைத்துத் தூளாக எடுக்கவும்.

2. சுக்குத் தூள்
தேவையான அளவு சுக்கு எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து தூள் செய்து கொள்ளவும்

3. நாட்டு சர்க்கரை கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளவும்.

சுத்தி செய்த
சுக்குத் தூள்
நாட்டு சர்க்கரை
ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்துக் கலந்து ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து

நாள்_தோறும்_காலை இரவு_குடித்து_வர……

மூட்டு வலி வீக்கம்

எலும்பு தேய்மானம்

இடுப்பு எலும்பு வலி

தோள்பட்டை வலி

போன்ற நோய்கள் படிப்படியாகக் குணமாகும்.

வருமானம் தருகின்ற உணவுகளில்செரிமானம் தராதபுரோட்டாவுக்கே முதலிடம்!சிலர்பரோட்டோ என்பர்சிலர்புரோட்டா என்பர்இதில் எது சரியென...
17/04/2024

வருமானம் தருகின்ற
உணவுகளில்
செரிமானம் தராத
புரோட்டாவுக்கே முதலிடம்!

சிலர்
பரோட்டோ என்பர்
சிலர்
புரோட்டா என்பர்
இதில்
எது சரியென்று தெரியாது
ஆனால்
இவ்வுணவே
சரியில்லை என்பதுதான்
உண்மை!

இது
பண்டை காலத்து உணவல்ல...
அண்டை நாட்டு உணவு!

வயிற்றை நிரப்பி
வாழ்நாளை குறைக்கும்!

சுண்டி இழுக்கும்
அண்டிப் போகாதே!

இப்போதெல்லாம்
எமதர்மன்
மாடுமீது வராமல்
மைதா
மாவுமீது வருகிறான்...
எச்சரிக்கை...!

Blood urea, creatinine எந்த அளவுகளில் இருந்தாலும் எளிதில் சரி செய்து விடலாம்  தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபே...
15/04/2024

Blood urea, creatinine எந்த அளவுகளில் இருந்தாலும் எளிதில் சரி செய்து விடலாம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9751658785....

சிறுநீரக நோய் தொடக்க நிலையில் இது எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. சிறுநீரக பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுகிறதென்றால் தொடக்கத்திலே அதன் அறிகுறி எதையும் அவரால் உணரமுடியாது. குழந்தைகளுக்கு கிரியாட்டினின் அளவு 2.0 மில்லி கிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி?

கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் பிரச்சினைகள் குறையும். தவறினால் நாளடைவில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்து விடும்.
தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். சிறுநீரை அடக்கி வந்தால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.


சிறுநீரகத்தின் பணிகள்

உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருள்களையும் வெளியேற்றுகிறது. நாம் சாப்பிடுகின்ற மருந்து, மாத்திரைகளில் நச்சுகள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது. நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால்தான். தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150, 180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்திச் செய்கிறது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீர் பிரிவது குறையும். பசி குறையும். வாந்தி வரும். தூக்கம் குறையும். கடுமையான சோர்வு, உடலில் அரிப்பு, முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றுவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். சிறுநீரகம் செயலிழந்து விட்டால் மருத்துவச் சிகிச்சை மட்டும் போதாது.'டயாலிசிஸ்' என்கிற ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டியதும் வரும்.

15/04/2024

வந்தது வந்தது கோடிசனம்..
வைகை நதிக்கரை பத்தலையே ..!!

11/04/2024

"அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு ஏதுக்கு"

"மடிப்புள்ளைக் காரிக்கு மல்லிகைப்பூ எதுக்கு ?"

"மல்லிகைப்பூ மார்லே பட்டா மழலைக்கு பாலேது ?"
-----------
பூ வச்சிக்கறது, பொட்டு வச்சிக்கறது, கை, கால், காது, மூக்கு, தலை, மற்றும் கழுத்திலே நகைப் போட்டுக்கறது - இதெல்லாம் பெண்களுக்கு உரிய நளினமான, மிடுக்கான, பிடித்த, பிரியமான பழக்கங்கள்.

அதிலும்...

விதவிதமாக, தலையில் பூ வச்சிக்கறது என்பது அவங்களுக்கு ரொம்ப பிடிஅச்சு சமாச்சாரம்.

சரி. இருக்கட்டும்.

அந்த காலத்துலே அடுப்படி'னாலே, கரி புடிச்சி, வெப்ப மயமாக இருக்கும்.

ஒரு தடவை சமைக்கறதுக்கு, அடுப்படிக்கு போனாங்க'னா கண்ணிலே தண்ணி, மற்றும் உடம்பெல்லாம் வியர்வையோட தான் வெளியே வருவாங்க.

அப்படி இருக்கையிலே,

அடுப்படிக்கு போறதுக்கு முன்னாடி, சீவி சிங்காரிச்சிக்கிட்டு, தலை நிறைய பூ வச்சிக்கிட்டு போனாக்க, போட்டுக்கிட்ட மேக்கப் என்னாகும் ?

குறிப்பாக ...

வச்சிக்கிட்ட அம்புட்டுப் பூவும் என்னாகும் ?

வாடி, வதங்கி, சருகாகிப் போகும்தானே ?

படி அளவுப் பூவை வாங்கி, அதை நூலிலேக் கோர்த்து தலையிலே மணக்க, மணக்க வச்சிக்கிட்டு ...

அடுப்படியிலே போயி ஊதி, ஊதி நெருப்பை தகிக்க விட்டு, சமையல் செஞ்சி, முடிச்சிட்டு, வெளியே வரப்போ...

தலையிலே வச்சிருந்த பூவெல்லாம் வாடி வதங்கி போயி கெடக்கும்.

அதுக்கு மாறாக ...

அடுப்பு வேலையெல்லாம் முடிஞ்ச பிறகு, பூ அணிந்துக் கொண்டு, அழகான மலர்போல பெண்கள் மலர்ச்சியாக இருந்தாக்க ...

யாரு வேணாம்'னு சொல்லப் போறாங்க ?

"அடுப்பு ஊதும் பெண்களுக்கு, படிப் பூ எதுக்கு (தலையிலே) ?!!"

"மடிப்புள்ளைக் காரிக்கு மல்லிகைப்பூ எதுக்கு ?"

கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்தாச்சி ... இந்த சமயத்துல ...

யாரை மயக்கறத்துக் கோசரம் மல்லிகைப் பூவை தலையில வச்சிக்கிட்டு மினிக்கிகிட்டு போறே ? - என்பது அர்த்தமாகிறதா ?

உண்மையான அர்த்தம் என்ன ? ...

மடிப்புள்ளைக்காரி'னா ... வெகு சமீபத்தில் பிள்ளைப் பெற்றவள்.

மல்லியப் பூவானது,

பாலைக் கொறைச்சி உட்டுடும்.

அப்புறம் கொழந்தைக்கு பால் கொறைஞ்சிப் போயிடிச்சி'னு சொல்லக் கூடாது.

அதனால், பிள்ளைக்கு பால் தரும் பருவத்தில் மல்லிகைப் பூவை தவிர்.

இன்னொரு பழமொழி.

"மல்லிகைப்பூ மார்லே பட்டா மழலைக்கு பாலேது ?"

இது சம்மந்தமா வைத்தியர் சொல்லுவார் ...

"வடிச்ச கஞ்சியை மட்டும் உப்பு போட்டுக் கொடு."

"தாகம் குறையற அளவுக்கு கொஞ்சமாக தண்ணீர் கொடு."

"வலியை பொறுத்துக் கொள்ள சொல்.

"நெருங்கிய தோழியை அழைத்து அவளின் மார்பை வருடி பாலைக் கறந்து விடச் சொல்."

"மல்லிகைப் பூ நிறைய வாங்கி வந்து அவள் மார்பில் கட்டச் சொல்."

"மார்பில் வைத்துக் கட்டிய மல்லிகைக்கு மேல், இரவிக்கையை போட்டுக்கச் சொல்."

"இரவில் மல்லிகையை எடுத்து விட்டு ...

தனலில் காட்டிய ஊமத்தை இலையை வைத்து கட்டச் சொல்."

"வாட்டிய ஊமத்தை போக்கிடும் பால்கட்டை"

எதற்காக இந்த ஏற்பாடு எல்லாம் ?

சில சமயம் வானம் இடிந்து, தலையில் விழுவது போன்ற துயரம் வந்து சேர்ந்து விடும்.

எப்படி ?

நேற்றுவரை, பிறக்கப் போகும் குழந்தையை எதிர்நோக்கி ...

மகிழ்ச்சியுடன் காத்திருந்த நிலையில் ...

இன்று?

குழந்தை இறந்தே பிறந்தது !

ஆனால், தாயின்
உடலில், பிறந்த குழந்தைக்கு ஊட்டுவதற்கு ஏதுவாக, பால் சுரக்க ஆரம்பித்து விட்டது.

என் செய்ய?

பாலை நிறுத்த முடியலை.

குழந்தை இல்லாத தால், அதற்காக ஊறுகின்ற பாலானது, குடிக்க ஆளில்லாமல் ....

தங்கி நின்ற பாலினால், பால்கட்டு ஏற்பட்டு, வலி உயிரை வாட்டுகிறது.

பிள்ளைப் பெற்ற அயற்சி உடலைப் புரட்டிப் போடுகிறது.

இறந்த பிள்ளையை நினைத்து மன உளைச்சல் ஏற்படுகிறது.

உற்றாருக்கு சோகம்.

பெற்றோருக்கு ?

சொல்லொண்ணா துயரம்.

இதை அனுபவித்தாருக்கு தெரியும் ... எவ்வளவு வேதனை'னு.

மேலே சொன்ன துயரத்திற்கு மருந்துதான் ...

"மல்லிகைப் பூ மார்லே பட்டால் மழலைக்கு பாலேது ? "

இன்னொரு பழமொழி.

"உப்பு உண்பதே தப்பு"

உடலில் சமச்சீராக உப்பு உள்ளது. வெளியிலிருந்து உட்செல்லும் உப்பானது, ஒரு சில இடங்களில் உப்புநீர்த் தேக்கத்தை ஏற்படுத்தும்.

எந்த உடல் பகுதியில், உப்புத்தன்மை அதிகம் உள்ள நீர்மம் உள்ளதோ ...

அது இருக்கும், இடம் நோக்கி ...

நம் உடல் திசுக்களிலிருந்து நிணநீர்க் கசிந்து சென்று, உப்பைச் சமச்சீர் செய்து விடுவது இயற்கை.

அதுக்காகத்தான்...

மருந்து எடுத்துக்கும் போது, உப்பில்லா பத்தியம் இருக்கச் சொல்றது.

எதுக்காக'னா ...

மருந்து உள்ளே வரும்போது அதை கிரகிக்கும் பொறுப்புலே இருக்கற திசு நீர்,

மருந்தை கிரகிக்கறதுக்கு போகாமல்,

உப்பை சமச்சீர் படுத்தறதை நோக்கி போயிட்டு இருந்திச்சி'னா ...

மருந்தோட வினையானது, உடலில் செயல்படுத்திக் கொள்ள, காலதாமதம் ஆகிப் போகும்'லே ? அதனாலத்தான்.

எப்போதுமே உப்பு கொஞ்சம் கொறைச்சலாவே எடுத்துக்கணும்.

மற்றபடி ...

ஓலைச்சுவடி படிச்சிருக்கீங்களா?

அதுலேயும் ...

மருத்துவ குறிப்புகளை தெரிவிக்கும் ஓலைச் சுவடிகளைப் பாத்து இருக்கீங்களா ?

எப்படி ஆரம்பிக்கும் ?

"பாரப்பா"

"கேளப்பா"

"காணப்பா"

"ஆமப்பா"

"சொல்லுவேன் மானுடர்க்கு"

"சாற்றுவேன் நானுனக்கு"

இப்புடித்தானே ஆரம்பிக்கும் ?

பாரப்பா, கேளப்பா'னு ஆரம்பிச்சி என்னாத்தை சொல்லுவாங்க ?

மருந்தைப் பற்றி !

மருந்து'னா என்னாது ?

நல்லா போயிட்டிருந்த ஒடம்பு ...

திங்க கூடாததை தின்னோ, செய்யக் கூடாததை செஞ்சோ ... கெட்டு போனவுடன் ...

உடனே, உடனே உடம்பை சொஸ்தம் பண்ணிக்கரத்துக் கோசரம் ... அவசர அவசரமா டாக்டர்கிட்டே போயி, அவதி அவதியா சில-பலதை உள்ளேத் தள்ளி வைக்கிற வஸ்துக்கு பேரு மருந்து !

இதுதானே இப்போதைக்கு ... மருந்துக்கு நாம கத்து வச்சிருக்கற அர்த்தம் ?

ஆனால் முன்னோர்க் குறிப்பிடும் மருந்து என்பதன் அர்த்தம் ... நோய் வரும்போது மட்டும் அதன் தேவையை உணர்வதல்ல: தினத்துக்கும் அனுசரிப்பது.

உடல், உள நோய்களைத் தீர்ப்பதும், நோய் வராதிருக்க உதவுவதும், உரிய வயது வரும் முன்னரே மரணம் வருவதை தடுப்பதற்கும், உள்ள பொருட்கள் எதுவோ ... அதுவே மருந்து !

"மறுப்பதுடல் நோய் மருந்தெனலாகும்
மறுப்பதுள நோய் மருந்தெனச்சாலும்
மறுப்பதினி நோய் வராதிருக்க
மறுப்பது சாவை மருந்தெனலாமே"

- எண்ணாயிரம்.

இந்த அர்த்தத்துல பாத்தாக்க, நாம தெனத்துக்கும் மருந்து எடுத்துக்கணும்.

இப்போ எடுத்துக்கற மருந்துகள் எல்லாம், உணவு வகையைச் சார்ந்தது. உணவுதான் இப்போதுள்ள மருந்துகள் யாவும்.

பின்னே, உண்மையான மருந்து'னா என்னாது ?

பாஷாணங்கள் !

கெந்திபாஷாணம், கற்பாஷாணம், கவுரிபாஷாணம், ஆகுபாஷாணம், முட்பாஷாணம், குதிரைப்பற்பாஷாணம், காய்ச்சற்பாஷாணம் மற்றும் பல ...

பாஷணங்களே மருந்துகள்.

பாஷாணம்'ங்கறது விஷம் !

உணவு வகைகள் RNA (Ribonucleic Acid) வரைக்கும் சென்று செயல்புரிவன.

பாஷாண வகைகள் DNA (deoxyribonucleic acid) வரைக்கும் சென்று செயல்புரிவன.

பழனிக்கு மொட்டை அடிச்சிக்கிட்டு போறது எதுக்காக என்றால் ...

பழனியில் உள்ள முருகனின் சிலை நவபாஷாணத்தால் செய்யப் பட்டுள்ளது. அதில் அபிஷேகம் செய்யப் பட்ட சந்தனத்தை, மொட்டைத் தலையில் பூசிக் கொண்டால், அது சர்வ ரோக நிவாரணியாக செயல்படும்.

இன்று அந்த நிலை அங்கில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

போகட்டும்.

மருந்துங்கறது ... உணவு வகையைப் போலவே, சிரமம் இல்லாமல் ஜீரணிக்கப்பட வேண்டும்; கிரகிக்கப் பட வேண்டும்.

உடல் இயக்கத்திற்குத் தக்கவாறு மெல்ல, மெல்ல நோயை நீக்கி செம்மைப் படுத்த வேண்டும். செடி வளர்வதைப் போல மெல்ல மெல்ல நடைபெற வேண்டிய இயற்கை செயல் - நோய் நீக்கம் என்பது.

திடீர் புரட்சி செய்வது உடம்புக்கு உகந்தது அல்ல.

ஒரு மாத்திரையைப் போட்ட உடனே வலி சரியாப் போச்சி'னு டம்பம் அடிச்சிக்கிட்டு திரிஞ்சோம்'னா என்னா அர்த்தம் ?

தலைவலி போயிடிச்சி; திருகுவலி வந்துடிச்சி'னு அர்த்தம்.

" ... தலைவலிக்கொரு மாத்திரேய், தடிமனுக்கொரு மாத்திரேய், தவறிப் போயி போட்டுக்கிட்டா ... தர்மலோக யாத்திரேய் ! ..."

வேறு வேறு உறுப்புகளை நாளாவட்டத்தில் கெடுத்துவிட நாமே வழிவகை செய்துவிடக் கூடாது.

ஒரு மருந்து, ஒரு உறுப்புக்கு மருந்தாக செயல்பட்டால்,

இன்னொரு உறுப்புக்கு நஞ்சாக செயல்படவே செய்யும்.

அந்த நஞ்சை முறிச்சி வெளியே அனுப்பிடணும்.

நச்சுமுறி (Detoxicating)

நம் அன்றாட வாழ்வியலின் செயல்பாடுகளால் உடலில் உருவாகும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் ...

மற்றும் ...

நம் அன்றாட செயல்பாடுகளில் தவிர்க்க முடியாததும், நாம் அன்றாடம் செய்து வருவதுமான நடவடிக்கைகளில் உருவாகுவதான நச்சுகளை நீக்குவதற்கு ...

நஞ்சுமுறி அவசியம்.

அது மட்டுமல்ல ...

உடலை நல்ல ஒரு வாகனமாக, கடத்தியாக, வளைந்து கொடுப்பதற்கு உகந்ததாக மாற்றுவதற்கு ...

வழக்கமாக சில வஸ்துகளை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த வஸ்துக்களில் ஜெயநீர், முப்பூ மற்றும் இலகு கற்ப வஸ்துக்கள் கலந்து இருந்தால்,

அந்த வஸ்துவின் குணத்தில் வீரியம் மிகுந்து, உடலுக்கு உரம் சேர்க்கின்றது.

அதற்கானது, ஏழு கூட்டு உட்களிகள்.

முதல் உட்களி:

பல்துலக்குதல்: பல்லுக்கு அடியில் ஈறு பகுதியிலிருந்து பிரிந்து செல்லும் நரம்புக் கூட்டங்கள் ... மூளைக்கும், முகத்தின் பிற பகுதிகளுக்கும் செல்கிறது.

சொல்லப் போனால், இரண்டு கடைவாய்ப் பற்களில் சிறிது லாவகமாக அசைவு கொடுத்தால் ... ஆக்ஞா சக்கரத்தின் உணர்வை உணர முடியும் !

ஆகவே பல்லின் மகிமையானது, கடித்து தின்பதோடு நின்று விடுவதாக கருதிவிடக் கூடாது.

முதல் உட்களி என்பது, காலையில் பல் துலக்குவதற்கான வஸ்து இது. கடற் சங்குடன் வேறு சில பொருட்களை இட்டுச் செய்யப் படுவதானது.

ஆள்காட்டிவிரல் மற்றும் பெரு விரல் கொண்டு, முறையாக பல் துலக்கினால், பல்லின் கீழ் உள்ள நரம்புத் தொடர்பானது ... மலஜலம் கழிக்கும் பகுதியை உந்தச் செய்து ... அந்த செயல்பாட்டை இலகு ஆக்குகிறது.

இரண்டாம் உட்களி :

இரவில் எடுத்துக் கொள்ள வேண்டியது இது. காலை 5 மணிக்கு எழுப்பி விட்டு, மலம் கழிப்பதற்கு வழியனுப்பும் மருந்து.

அழுக்குகள்/ நச்சுகள் தினமும் வெளியேற்றப் படல் அவசியம்.

மூன்றாம் உட்களி:

வாரம் ஒருமுறை கபாலத்தை சுத்தம் செய்து கொள்வது அவசியம்.

ஒரு நாசி வழியே நசிய நீர்மத்தை உட் செலுத்தி, மறு நாசித் துவாரத்தின் வழியே வெளியேறச் செய்வதே, கபால சுத்தி செய்வது என்பது.

நான்காம் உட்களி:

காலைமுதல் மாலைவரை உழைத்து, பின்னர் ஓய்வு எடுக்கப் போகும் வேளையில் கண்ணில் இடும் வஸ்து ஒன்று உண்டு. அது கண்ணில் உள்ள தூசுகளை அகற்றுவதோடு கண்சோர்வைப் போக்குகிறது ... காற்றுவழி வரும் நச்சுக்களை மூக்கினில் படியாமல் அகற்றிவிடுவதற்கும், முழு விழிப்புணர்வோடு வேலை செய்ய பயன்படுத்திய மூளை, தன் இயல்புக்கு திரும்பி ... ஓய்வு பெறுவதற்கு உகந்ததாக, இந்த பதங்கம் உதவி செய்விக்கிறது.

ஐந்தாம் உட்களி:

இரவு உணவுக்கு பின் அரை மணிநேரம் கழித்து ஒரு எளிய மூலிகை - பிரபஞ்ச கற்ப உப்பு மற்றும் அரிய அரிசியில் செய்த பானம் ஒன்று உண்டு.

அது ஆழ்நிலைத் தூக்கத்துக்கு இட்டுச் செல்லும். இரவில், இடையிடையே விழிப்புத் தொந்தரவு ஏற்படுவதை இது தவிர்க்கும்.

ஆறாம் உட்களி :

காலை எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவதை ஊக்கப் படுத்துவதோடு, அன்றாடம் இடைஇடையே அருந்தும் தண்ணீரில் கலந்து குடிப்பதற்கு உகந்த வஸ்து ஒன்று உண்டு. அது மூலிகையின் உயிர்மையாகிய பச்சையத்தை பிரித்தெடுத்து முப்பூ சேர்த்த கலப்பு. இது நச்சு வெளியேற்றலுக்கு உபயோகப் படுகிறது.

ஏழாம் உட்களி:

நச்சுக்களை வெளியேற்ற முனையும் போது ...

சில நல்ல சத்துக்களும் அதனுடன் வெளியேறக் கூடும். அதை தவிர்க்க இயலாது.

அவ்வாறு நச்சுடன் நட்பு கொண்டு வெளியேறக் கூடிய நல் உரம் மிகுந்த பொருட்கள் எவை என்று கண்டு பிடிக்க முடியாதது அல்ல.

அந்த நல் உரம் மிகுந்த உயிர்சத்தை மீண்டும் உடலில் ஊற்றெடுக்க வைக்க ஒரு சரோவிரேஷணம் உண்டு.

இந்த ஏழாங்கூட்டு உட்களி என்கின்ற ...

ஏழு தனித்தனியான களங்குகளை ஒரு சிறு பெட்டியிலிட்டு தினசரி பயன் பாட்டுக்கு எடுத்துக் கொள்வது என்பது...

உடல் இயங்குவதனால் ஏற்படும், ஆற்றல் இழப்பை சரி செய்வதற்கும், வெளிப்புற நச்சுகள் உடலில் சேர்வதை அகற்றுவதற்கும் உறு துணையானது.

மற்றபடி,

சில பழக்கங்களை வழக்கப் படுத்திக் கொள்வது - மிக அவசியம்.

"சூரியனைப் பார்க்க எழுபவன் சுறுசுறுப்புக் காரன்; சூரியன் பார்க்க எழுபவன் நோய்நொடிக்காரன் "

வேலை இருந்தாலும், இல்லாட்டியும் அதிகாலையில் எழுவது திடகாத்திரமான உடலுக்கு ஆணிவேர்.

விழித்துவிட்ட பின்னர் படுத்தே இருப்பது ... நம் உடக்கு நாமே மூட்டிக் கொள்ளும் தீ போன்றது.

காலையில் எழுந்தவுடன் நீர் அருந்தும் பழக்கத்துக்கு ஆட்படுத்திக் கொண்டால் ... தேகம் ஒருவித பளபளப்பு பெறுவதோடு, பழுதில்லா புது இயந்திரம் போல தங்குதடையின்றி
இயங்கும்.

அதன் காரணமாக, உள்ளம், மலர்ச்சி மற்றும் குதுகலம் பெறல் போன்றவை துளிர்ப்பதை நுட்பமாக உணரமுடியும்.

காலை சூரியனொளி காது துவாரம், தொப்பூள் மற்றும் கண் ஆகிய பிரதேசங்களில் ஊடுருவச் செய்ய வேண்டும்.

The Amiable Aid Foundation has developed an ideal destination for health and wellness tourism in Tamilnadu, the sacred land of the Tamil Siddhars. The campaign is called GITGIOH!

04/04/2024

நோய் நொடி இல்லாமல் வாழணும் என்பது பழமொழி. அதில நோய் தெரியும் அதென்ன நொடி? விளக்கம் ப்ளீஸ்...

நோய் வந்தால் நொடித்து போவீர்கள். அதனால நோய் இல்லாத வாழ்க்கை வேணும்.

நோய் நொடி என்பதில் அது நொடி இல்ல... "நாடி". அதாவது, "நோய் நாடி இல்லாமல் வாழனும்"ன்னு சொல்லுற அர்த்தம்.

நாடி என்றால் Pulse என்று பொருள். நம்ம சித்த மருத்துவத்தில் நாடி பிடித்து பார்த்தே அது நோய் நாடியா அல்லது நோயற்ற நாடியா என்று சொல்லிவிடுவார்கள் வைத்தியர்கள்.

அதைதான் "நோய் நாடி" இல்லாமல் வாழணும்ன்னு சொல்லி இருக்காங்க.

Address

Madurai

Telephone

9751658785

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிராமத்து மருத்துவம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram