ஜோதிடம் ஆன்மீகம் -LNSS

ஜோதிடம் ஆன்மீகம் -LNSS Jothidam Anmeegam - LNSS is striving to reveal the secret behind how the movement of celestial bodies affect human birth & life cycle.

How can one achieve salvation by following the given astrological predictions and by visiting our Ancient Hindu Temples.

20/09/2022

Happy birthday Rani mai
தீர்க்க சுமங்கலி பவ:

13/08/2021

ராகு தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என நம் புராதனமான நூல்களில் கூறப்பட்டுள்ள விபரம்:-
ராகு பரிகாரம் :-
1) திருநாகேஸ்வரம் சென்று ராகுவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்து தரிசித்து, தீபம் ஏற்றி விட்டு வரவேண்டும்.
ராகு தனது இரு தேவியருடன் தரிசனம் அளிக்கும் திவ்விய தலம் இது.

2) வீட்டில் கூடுதலாக ஒரு தீபம் ஏற்றி ராகு துதியை 108 தடவை கூறி ராகு படத்தை வழங்கிவரும்.

3) மிகக் கடுமையான ராகு தோஷத்திற்கு ஆதிஷேசனின் அவதாரமான ஸ்ரீமத் ராமானுஜர் ஜீவவிக்கிரமாக எழுந்தருளி உள்ள ஸ்ரீபெரும்புதூர் சென்று நெய் தீபம் ஏற்றி தரிசித்துவிட்டு வரவேண்டும்.
திருவாதிரை நட்சத்திரத்தன்று தரிசிப்பது விஷேசம்.

ஜாதகப்படி
புத்திர தோஷம்.,
சயன தோஷம் .,
களத்திரதோஷம் .,
மாங்கல்ய தோஷம்.,
கால சர்ப்ப தோஷம்
இருப்பவர்கள் ராகு ப்ரீதி செய்து கொள்வது அத்தியாவசியம் ஆகும்..,

பெண்களைப் பொருத்தவரை ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷத்திற்கு பரிகாரமாக சுமங்கலிப் பிரார்த்தனை செய்து கொள்வது அவசியமாகும்.

எப்போதுமே ராகு காலத்தில் செய்யும் காரியங்கள் எல்லாம் பிரச்சனையில் தான் முடியும் என்றோ .,அல்லது ராகு காலத்தில் பிரயாணம் செய்தால் ஆபத்து வரும் என்றோ நமது புராதன நூல்களில் கூறப்படவில்லை.,
தொடரும் lnss
வணக்கம்
மிகப் புராதனமான நூல்களிலிருந்து நமக்கு அளித்தவர். திரு AMR
KUMUDAM Jodiam..,

12/08/2021

பஞ்சாங்கம் தினமும் படிப்பதால் ஏற்படும் பலன்கள்.
தினமும்
கிழமை தீர்க்காயுள்
திதியால் லட்சுமி கடாட்சம்
நட்சத்திரம் பாவ நிவர்த்தி
யோகத்தால் நோயற்ற வாழ்வு
காரணத்தால் காரிய சித்தி உண்டாகும்

ஆகவே தினமும் பஞ்சாங்கம் படிக்கவும்.
தொடரும்., lnss

12/08/2021

கடுமையான புத்திர தோஷம் உள்ளவர்கள் லக்ன 5 மிட தோஷம். மற்றும் சயன ஸ்தான தோஷம் 12 மிட தோஷம் . கடுமையாக உள்ளவர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய முக்கியமான ஸ்தலம் மஹா புருஷர்கள் கூறப்பட்டுள்ள ஸ்தலம். காசி அல்லது ஹரித்துவார் அல்லது திரிவேணி சென்று ஸ்நானம் செய்து விட்டு வந்தால் தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் ஏற்படும்.
கங்கா ஸ்நானம் செய்துவிட்டு வந்த பின் தினமும் சுந்தர காண்டம் படித்து வரவும்.
சயன தோஷம் கடுமையாக இருப்பவர்கள் வளர்பிறையில் மட்டுமே சேர்ந்திருப்பது நல்லது தொடரும் ., lnss

12/08/2021

உயிர் பயம் உள்ள கடுமையான கிரக நிலைக்கு ஒரே பரிகாரம் :-
ஸ்ரீவாஞ்சியம் என்ற திருத்தலத்திற்கு சென்று ( மயிலாடு துறையிலிருந்து
5 kg.தொலைவில் உள்ளது). அங்கு எழுந்தருளி அருள் பாலிக்கும்
ஸ்ரீ வாஞ்சி நாத ஸ்வாமிக்கும், அம்பிகைக்கு ,எமதர்மராஜருக்கும். , அபிஷேகம் செய்வித்து நெய்தீபம் ஏற்றிவிட்டு வரவும்.,
உடல் உபாதை குறையும். தொடரும் lnss.

கடன் தொல்லை அதிகமாக இருப்பவர்கள் கடன் தொல்லை நீங்க:-ஒரு முறை திருவாரூர் சென்று அங்கு ஸ்ரீதியாகேசன் சந்நிதியில் எழுந்தருள...
12/08/2021

கடன் தொல்லை அதிகமாக இருப்பவர்கள் கடன் தொல்லை நீங்க:-
ஒரு முறை திருவாரூர் சென்று அங்கு
ஸ்ரீதியாகேசன் சந்நிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ ருண விமோசன லிங்கேஸ்வரரைத் தரிசித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.

கடன் உபாதைகளிலிருந்து விடுவிப்பதற்காகவே விசேஷ சக்தி வாய்ந்த யந்திரங்கள் இத்திருச் சந்நதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அந்த திருத்தத்திற்கு சென்று வந்தால் படிப்படியாக கடன் தொல்லை நீங்கும்.
Lnss தொடரும்.

09/08/2021

விதவையாகும் தோஷம்:-
---------------‐----------------------------
பெண் ஜாதகம்
----------------------------
ராசி:-
---------
மகர லக்னம் .,
லக்கினத்தில் சனி .,
2 ல் ராகு .,
6 ல் மிதுனம் சந்திரன்
7 ல் கடகம் செவ்வாய் .,
8 ல் குரு சுக்கிரன்.,
10 ல் சூரியன்., 11 ல் மாந்தி .

அம்சம்:-
--------------

கடக லக்னம்:-
------------------------
3 கன்னியில் மாந்தி
4 ல் குரு சுக்கிரன் கேது.,
5 சூரியன்
8 ல் சனி செவ்வாய்.
9 ல் சந்திரன் புதன்
10 ல் ராகு. உள்ளன. ,
பெண் ஜாதகப்படி:-
லக்னம் மற்றும் சந்திரனுக்கு 2 ல் அசுப கிரகம் இருப்பதாலும்
செவ்வாய் 7 ல் நீசமாக இருப்பதாலும். ,
சனியும்., செவ்வாயும் .,
பரஸ்பர 7 × 7 ல் இருப்பதாலும்.,
நவாம்சத்தில் ஒன்றாக இருப்பதாலும்., 8 ல் குரு,சுக்கிரன் கிரக யுத்தத்தில் இருப்பதாலும்., மத்ய வைதவ்ய தோஷம் உண்டு.
சனி தசை /ராகு புத்தி/ சனி அந்தரத்தில் விதவையானாள்.
Lnss தொடரும்

பல கால அனுபவ ஜோதிடர்களால் நன்கு உணர்ந்து கூறப்பட்ட ஜோதிட கணிப்புகள்.
அநேக ஜாதகங்களில் கண்ட உண்மை. Lnss

09/08/2021

இளமையில் விதவை ஏன்?
பெண் ஜாதகம்
விருச்சிக லக்னம்
2 ல் மாந்தி
4 கும்பத்தில் கேது.,
6 ல் செவ்வாய்.,
7 ல் ரிஷபத்தில் சனி குரு
8 ல் சந்திரன் .,
10 ல் ராகு .,
11 ல் சூரியன் புதன்
12ல்., சுக்கிரன்.,

விதிமுறை:-
ஜாதக பொருத்தம் பார்க்கும் போது இந்தப் பெண்ணுக்கு கழுத்தில் எத்தனை நாளைக்குத் தாலி நிலைக்கும் என்பதை முதலில் பார்க்க வேண்டும்

விதி:- ஸ்திரி ஜாதகத்தில் லக்னத்திற்கு 2 லோ., சந்திரனுக்கு 2 லோ., அசுபர்களான சனி .,செவ்வாய் ., கேது., ராகு., மாந்தி., இருந்தால் அதற்கு மத்ய வைத்ய தோஷம்னு பேறு.

இந்தப் பெண் ஜாதகத்தில் லக்ன 2 ல் மாந்தி . சந்திரனுக்கு 2 ம் வீட்டை சனியும் செவ்வாயும் பார்க்கின்றனர்.இவர்கள் பார்த்தாலும் அல்லது இருந்தாலும் கூட தோஷம் ஏற்பட்டுவிடும்.இதற்கு மத்ய வைதவ்ய தோஷம் அதாவது இளமையில் விதவை ஏற்படும்.

விதி 2 :-
7 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் லக்னத்திலிருந்தோ 7 , ம் வீட்டிலிருந்தோ 6 8 12 ம் வீட்டிலிருந்தால் தோஷம் ஏற்படும்.

ஜாதகப்படி லக்ன 7 ம் அதிபதி சுக்கிரன் 7 ம் பாவத்திற்கு 6 லும் லக்கினத்திற்கு 12 லும் இருப்பதால் தோஷம் ஏற்படுகிறது.

விதி 3:-
சந்திரன் இந்த ஜாதகப்படி பாதகாதிபதி அவன் மாங்கல்ய ஸ்தானமான 8 ல் இருக்கிறான். அத்துடன் தேய்பிறை பலவீனமான சந்திரன்.

விதி4:-

மாங்கல்ய ஸ்தான அதிபதி (8 ம் அதிபதி) லக்கினத்திலிருந்தோ .,
7 ம் அதிபதிக்கோ , காரகன் சுக்கிரனுக்கோ 6 8 12 ல் இருந்தால் வைத்திய தோஷம் ஏற்படும்..,

ஜாதகப்படி 8 ம் அதிபதியான புதன் .,7 ம் அதிபதியும் காரகன் சுக்கிரனுக்கு 12 , ல் இருப்பதால் மத்ய வைதவ்ய தோஷம் ஏற்படுகிறது.

விதி 5:-

எந்த பெண் ஜாதகத்தில்
சனி × சுக்கிரன்
சனி× சந்திரன்
சுக்கிரனும் × சந்திரனும்
6×8 ஆகவோ ., 2×12 ஆகவோ இருந்தால் மண வாழ்வு சிறக்காது.,

ஜாதகப்படி சனிக்கு × சுக்கிரன் = 6×8 ஆக உள்ளது.

புதன் தசை / ராகு புத்தியில் விதவையானால்.
புதனுக்கு 27 வது நட்சத்திரம் கண்டாந்த தோஷம் உண்டு.

2 ம் வீட்டில் ராகு, கேது, மாந்தி இருந்தால் அந்த பெண்ணுக்கு 12 வருடம் தான் தாலி நிலைக்கும்.

சுபர் பார்வை சேர்க்கை இருந்தால் பலன் மாறு படும். Lnss
தொடரும்.

08/08/2021

திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் தொடர்ச்சியாக
பெண் ஜாதகம்:-
கடக லக்னம் லக்னத்தில் புதன் கேது.,
5 ல் விருச்சிகத்தில் குரு வக் 7 ல் செவ்வாய் ( வக்) ராகு.,9 ல் சந்திரன் 11 ல் சனி 12ல் சுக்கிரன் சூரியன்.

ஆயுள் தீர்க்கம்:-
மன நிலை அறிய சந்திரன் புதன் ஆராய வேண்டும்.
கடக லக்னாதிபதியான சந்திரன் 9 ல் குரு வீட்டில் ., மேலும் குரு பார்வையில் உள்ளது.மேலும் எந்த அசுபரும் பார்க்க வில்லை.

புதன் கடகலக்னத்தில் கேதுவுடன் இருப்பதால் சிறிது பாதிப்பு உள்ளது.
குரு செவ்வாய் சனி பார்வை ஏற்படுகின்றது.மூவரின் பார்வையில் பாதிப்புயில்லை.
காரணம் செவ்வாய் உச்ச வீட்டாலிருந்தும்.,சனியின் பார்வை 11 ம் வீட்டிலிருந்து பார்ப்பதாலும்., குரு பார்வை பெற்ற சனியால் பாதிப்பில்லை.
சந்திரன் புதன் நல்ல நிலையில் இருப்பதால் இருவர் மனம் உடல் நிலை நன்றாக இருக்கிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவு உள்ளதா?
லக்ன 7 ம் அதிபதி சனி 11 ல் இருந்து குரு பார்வை பெறுகிறது.காரகன் சுக்கிரன் 12 ல் வர்க்கத்து சூரியனுடன் உள்ளது தொலைவில் இருப்பதால் அஸ்தமனம் ஏற்படவில்லை.சூரியனால் சுக்கிரனுக்கு மிதமான பாதிப்பு மட்டுமே.,

தோஷம் பரிசீலனை.,

ஆண் :-
லக்கினத்திலிருந்து .,
1 ல் ராகு .; 7 ல் ; 8 ல் செவ்வாய் 12 ல் சனி

சந்திரனிலிருந்து:-

2 ல் சூரியன் 4 ல் செவ்வாய் 8 ல் சனி வக்.

காரகன் சுக்கிரனிலிருந்து :-
2 ல் சூரியன் 4 ல் செவ்வாய் 8 , ல் சனி ( வக்,).

பெண்:-
லக்னத்திலிருந்து:-

1 ல் கேது 7 ல் ராகு .,செவ்வாய் வக்
12 ல் சூரியன்

சந்திரனிலிருந்து:-
4 ல் சூரியன்

சுக்கிரனிலிருந்து:-
2 ல் கேது 8 ல் ராகு செவ்வாய் வக் 12 ல் சனி

தோஷம் சமம்:-
ஆண் லக்ன 8 ,ல் செவ்வாய்
பெண் சுக்கிரனிலிருந்து 8 ல் செவ்வாய் வக் இரண்டும் சமம்

ஆண் :-
சந்திரனிலிருந்து 4 ல் செவ்வாய்:-
பெண்
லக்னத்திலிருந்து:- 7 ல் செவ்வாய் சமன் செய்கிறது.

ஆண் பெண் ராகு கேது சமம்.,

ஆண்:- சந்திரனிலிருந்து 2 ல் சூரியன்.,8 ல் சனி.,
பெண் சுக்கிரனிலிருந்து 2 8 ல் ராகு கேது சமன் செய்கிறது.

முக்கியமாக செவ்வாய் சனி ராகு இருவர் ஜாதகத்திலும் சமன் ஆக வேண்டும்..,

பத்து பொருத்தம்
பெண் ரேவதி
ஆண் மகம்
முக்கியமான பொருத்தம் இருப்பதால்
ஜாதக பொருத்தம் உண்டு என முடிவு செய்யலாம்.,
இவ்வாறு தோஷ சாம்யம் சரி பார்க்க வேண்டும்.

பொதுவாக லக்கினத்திலிருந்து மட்டும் பார்க்காமல் சந்திரன்,சுக்கிரனிலிருந்தும் பார்த்தால் எந்த பிரச்சனையும் வராது ., lnss
வணக்கம்.
தொடரும்.,

08/08/2021

இந்தியாவின் பிரபலமான ஜோதிடரான பெங்களுர் B.V.RAMAN.அவர்களின் மகள் Gayatri Devi Vasudev அவர்களின் திருமணப்பொருத்தம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்ற கணிப்பு முறையின் படி.,

முதலில் பார்க்க வேண்டியது:-

இருவருக்கும்

1) ஆயுள் தீர்க்கமும்
2) மன நலம் ,புரிந்த கொள்ளும் தன்மை.,
அனுசரித்து போகும் குணம்.,கொடூரமான மனநிலை. உள்ளதா.,
3) ஒன்றுக்கு மேற்பட்ட திருமண அமைப்பு உள்ளதா.,
4) சமமான தோஷம் உள்ளதா என அறிய வேண்டும்.,
பின் பத்து பொருத்தம் பார்த்து திருமணம் நிச்சயிக்க வேண்டும்.

ஆண் ஜாதகம்:-
மேஷ லக்னம்,லக்னத்தில் ராகு.,
5 ல் சிம்மம் சந்திரன்,குரு,சுக்கிரன்,
6 ல் சூரியன் 7 ல் புதன் கேது.,
8 )ல் செவ்வாய் 12 ல் சனி (R).,

ஆயுள் தீர்க்கம்.,

மன நிலை மன கொடூரம் இல்லை.
இதற்கு சந்திரன்., புதன் நிலை அறிய வேண்டும்.,
சந்திரன் சுபரான குரு சுக்கிரனுடன் சிம்மத்தில் உள்ளார்.தீய கிரக பார்வையில்லை. ஆகவே மனநிலை நன்றாக உள்ளது.
அடுத்து புதன்
லக்ன 7 ல் துலாமில் கேதுவுடன் புதன்.லேசான பாதிப்பு உண்டு.
மேலும் புதன் சூரியன் செவ்வாய்க்கு நடுவில் இருந்தாலும் பாதிப்பில்லை.
காரணம் செவ்வாய் லக்னாதிபதி., சூரியன் பூர்வ புண்ணியாதிபதி..,
மேலும் சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால் புதன் தோஷம் மட்டுப்படுத்துகிறது.,

ஒன்றுக்கு மேற்பட்ட திருமண அமைப்பு
பற்றி ஆராய வேண்டும்.,

மேஷ லக்கினம்., 7 ம் அதிபதியான சுக்கிரன் 5 ல் சந்திரன் மற்றும் குருவுடன் நல்ல நிலையில் உள்ளார்.,
6 ம் அதிபதி 7 ல் இருந்தாலும் பாதிப்பில்லை.,
காரணம் காரகர் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால்.,எந்த பாதிப்பும் ஏற்படாது.

சந்திர ராசியிலிருந்து 1 ம் அதிபதியான சூரியன்,மற்றும் 7 அதிபதி சனி 7×7 ல் இருந்தாலும் .,சந்திரனுக்கு 7 மிடத்தை குரு பார்ப்பதால் மற்ற தோஷம் நிவர்த்தி ஆகிவிடும்.,lnss தொடரும்

06/08/2021

விதி:- எந்த ஒரு பெண் ஜாதகமானாலும், எந்த லக்னமானாலும்,லக்ன 8 ல் செவ்வாய் ,சனி ,சூரியன் ,கேது போன்ற கிரகம் இருந்தால் கர்ப்ப பையில் பிரச்னை , குறைபாடு இருந்தே தீரும்.

சனி :- கருவுக்கு காரகன் ஆவதால் 8 ல் சனி இருந்தால் கர்ப்பக் கோளாறு ஏற்படாது.ஆனால் ஜலக்கிரகமாவதால் நீர்க்குடத்தில் பிரச்னை ஏற்படும்.,பிரசவ குறைபாடு ஏற்படும்.
Lnss தொடரும்.

06/08/2021

ஆயுள் ஒரு ஆய்வு:-
விருச்சிக லக்னம்,லக்னத்தில் செவ்வாய்,
2 ல் சுக்கிரன் ராகு,
3 மகரத்தில் சூரியன் புதன் குரு 7 ல் சனி, 8 ல் கன்னியில் கேது,மற்றும் 12ல்,சந்திரன் மாந்தி,உள்ளனர்.

8 மிடம், 8 ம் அதிபதி,மற்றும் காரகன் சனி,இவை ஆயுள் பாவ சம்பந்தமாகும். ஜாதகப்படி 8 ம் அதிபதி புதன் 8 க்கு 8 மிடமான 3 ல் இருப்பது பலம்.
2 ம் அதிபதி மாரகஸ்தான அதிபதியான குரு 3ல் நீசம் பெற்று 8 ம் அதிபதியான புதனுடன்.,
அத்துடன் லக்ன 10 ம் அதிபதியான கர்ம ஸ்தான அதிபதியாகிய சூரியனுடன்.,
ஆகவே கர்ம வினையின் காரணமாக ஒரு பாதிப்பு ஏற்படும்.
சூரியன்மற்றும் புதன்திசைகளில் மார்கம் ஏற்படுமா?
மாரக ஸ்தான அதிபதி 7 ம் அதிபதியான சுக்ரன் 7 க்கு 8 ல் இருப்பதால் மாரகத்தன்மை குறைவு என்றாலும் ,லக்ன 2 மிடமான மாரக ஸ்தானத்தில் இருப்பதால் மாரகத்தன்மை ஏற்படுகிறது. இத்துடன் ராகு இருப்பதுவும் தோஷம்.
காரகன் சனி 7 ல் இருந்து லக்னம் லக்னாதிபதியும் பார்ப்பதால் ஆயுள் பலம் ஏற்படுகிறது.

இருப்பு தசை ராகு,அடுத்த தசை குரு தசை ,குரு மாரக ஸ்தான அதிபதியாகி நீசம் பெற்று பல வீனம் பெறுவதால் பாலாரிஷ்டம் தன்தசையில் ஏற்படாது.

அடுத்து சனி தசை சனி லக்ன 7 ல் நின்று அவர் நின்ற ஸ்தான அதிபதியான சுக்ரன் சனிக்கு
8 ல் இருப்பதால் சனிக்கு பலவீனம் ஏற்படுவதால் ,சனிதசையில் மாரகம் ஏற்படாது ஆனால் மாரகத்திற்கு சமமான கண்டம் கொடுக்கும்.

சனி லக்னம் லக்னாதிபதியைப்
பார்ப்பதால் கொண்டு வந்த ஆயுள் தீர்க்கம்.
Lnss
தொடரும்.

Address

Madurai

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 6am - 9pm

Telephone

+919994496029

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜோதிடம் ஆன்மீகம் -LNSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ஜோதிடம் ஆன்மீகம் -LNSS:

Share