03/10/2014
வாஸ்தும்- ஜோதிடமும் (அனைவருக்கும் பொது)
எல்லா மதங்களிலும் சில ரகசியங்கள் காப்பாற்றப்டுகின்றன. அதனை நாம் உணர இயலாதபொழுது, விமர்ச்சனங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. அதுபோலவே வாஸ்து கலையும் - ஜோதிட விஞ்ஞானக் கலையும். பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகிய இயற்கை மனிதன் உட்பட அனைத்துப் படைப்புகளுக்கும் பொதுவானது, இன்றியமையாதது, உலகில் என்றும் நிலையானது.
மனித இன வளர்ச்சிக்காக சித்தர்களும், மாமுனிவர்களும், மகான்களும், தங்களது இறைஞானத்தால், வேதங்களிலும், புராணங்களிலும் ஆய கலைகள் அறுபத்தி நான்கையும் பற்றிக் குறிப்பிட்டுளள்ளார்கள். இக்கலைகளில் வாஸ்து கலையின் தனிச் சிறப்பு என்னவெனில், நம் வாழ்க்கைக்கு நன்மை அதிகரிக்கவும், எதிர்பாராத மாரடைப்பு, விபத்தில் அகாலமரணம் போன்ற தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும் மிக மிக எளிமையாக வழிவகை செய்யும் ஒரே கலை வாஸ்துவாகும்.