07/04/2019
இது கதையல்ல உண்மை சம்பவம் , இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
32 வயது மதிக்கத்தக்க லதா என்ற பெண்மணி 12 வயதுடைய தனது மகன் ராகுலை என்னிடம் அழைத்து வந்தார். அவர் கூறியதாவது "சார், இவன் எனது மகன் ராகுல், ஏழாம் வகுப்பு படிக்கிறான். இவனுக்கு படிப்பில் சுத்தமாக உடன்பாடில்லை மேலும் பயங்கர குறும்பு செய்யவும் துவங்கியுள்ளான். அரையாண்டுத் தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண்களையே எடுத்துள்ளான், நான்காம் வகுப்புவரை நன்றாக படித்திருந்த இவன் இப்போது படிப்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை ". என மிக வருத்ததுடன் தெரிவித்தார்.
நான் ராகுலுடன் உரையாட துவங்கினேன். "ராகுல் எந்த வகுப்பில் படிக்குறீங்க" சற்றும் தாமதம் இல்லாமல் ஏழாம் வகுப்பு" என்று ஒற்றை வாக்கில் சொல்லி முடித்தான். " வெரி ஸ்மார்ட் " என அவனை ஊக்குவிக்கும் வகையில் சொல்லிவிட்டு எந்தப் பாடம் அதிகம் பிடிக்கும், பிடிக்காது ,பிடித்த ஆசிரியர் என பல கேள்விகளை கேட்டேன் எல்லாவற்றிற்கும் மிக எளிமையான முறையில் சிறிதும் தாமதம் இல்லாமல் பதில் அளித்தான் ராகுல்.
சில ஞாபக சக்தி பரிசோதனைகளை(கலர் மெமரி டெஸ்ட்) விளையாட்டு முறையில் செய்தேன். அதில் ராகுலுக்கு என்னை மிகப்பிடித்துவிட்டது.இப்போழுது ராகுல் நான் என்ன சொன்னாலும் கேட்கும் மனோநிலையில் வந்துவிட்டான். இந்த டெஸ்டில் ராகுலின் சில திறமைகளை நான் கவனித்தேன்.
பிறகு அவனை படுக்கையில் படுக்கவைத்து அவனது மனதை ஒருமுகப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கும்பொழுது தாயார் லதாவும் அவனது நடவடிக்கைகளை உற்று கவனித்து வந்தார். நான் ராகுலை கட்டளைகளின் மூலம் தளர்வு நிலைக்கு மிக எளிதில் கொண்டு சென்றுவிட்டேன் என்றாலும் ராகுலின் மனம் அமைதி அடையாமல் இருந்தது. இருந்தாலும் தளர்வு நிலையில் ஒய்வு பெற்றுகொண்டிருந்த ராகுலிடம் சில கட்டளைகள் அளித்தேன் "ராகுல் இன்று திங்கட்கிழமை இனி, வரும் வியாழன் அன்று என்னை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படி வரும்பொழுது நீங்கள் வெகுவிரைவில் ஹிப்னோடிச உறக்கத்தில் சென்றுவிடுவீர்கள்" என்று கட்டளை அளித்தேன்" சிறிதுநேரத்தில் ராகுலை எழுப்பி புன்னகையோடு அனுப்பிவைத்தேன்.
நிச்சயித்தபடி வியாழன் அன்று ராகுலும் தாயார் லதாவும் வந்தனர் , இன்று ராகுலுக்கு முழு ஹிப்னோடிச சிகிச்சை அளிக்கப்பட்டது ,இன்று மிக விரைவில் ராகுலின் மனம் ஒருநிலயடைந்தது, நான் கேட்கும் கேள்விக்கு ராகுல் ஹிப்னோடிச நிலையில் உறங்கியபடியே பதில் அளித்தான்.
அப்போது ராகுலின் விளையாட்டு அதிகமாக காரணம் அறியமுடிந்தது. ராகுலின் தந்தை ரவி, மிக கோபகுணமுடையவர். அவர் ராகுலை சிறுவயது முதலே மிக ஸ்ட்ரிக்டாக வளர்த்துவந்தார் பள்ளிக்கூடம் முடிந்ததும் ராகுல் வீடிற்கு வருவான் பின்னர் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதியில்லை, மகனின் படிப்பு மட்டும்தான் ரவிக்கு குறிக்கோள் மகனுக்கு மற்ற பிள்ளைகளுடன் விளயாட வேண்டுமென்று விருப்பம் . ராகுல் மூன்றாம் வகுப்பு எட்டும் வரை இதுதான் அவஸ்தை அவனது கனவுகள் மனதுக்குள்ளேயே அடக்கிக்கொண்டான். அப்பாவிடம் விளையாடக்கூட பயந்தான் ராகுல். இந்த நிலையில் அவருக்கு துபாயில் ஒருவேலை சரியாக அவர் துபாய் கிளம்பிவிட்டார். ராகுலுக்கு அப்பா தன்னைவிட்டுப் பிரிந்த துக்கத்தை விட சந்தோஷம்தான் அதிகமாக இருந்தது.
அப்பா இல்லாததால் அம்மாவை ஏமாற்றிவிட்டு வெளியே சென்று விளையாட கற்றுக்கொண்டான் ராகுல் .
இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த லதா திகைத்துப்போனார்.
நான் ராகுலுக்கு மிகசிறந்த சில ஹிப்னோ கட்டளைகளை கொடுத்தேன் அதில் சில மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன் :-
1. ராகுல், உன் தந்தை மிக நல்லவர் ,அவர் உனது நன்மைக்காகவே உன்னை ஸ்ட்ரிக்டாக வளர்கிறார்.
2. ராகுல், உன் தந்தை ஒரு கூலித்தொழிலாளி, அவரைபோன்று உன் எதிர்காலம் ஆகிவிடக்கூடாது என நினைக்கிறார் ஆகவே எல்லாம் உன் நன்மைக்கே அவர் செயல்படுகிறார்.
3. உன் தந்தை மிக நல்லவர் உன்மீது அதிக அன்புகொண்டவர்.
4. உனக்கு விளையாட்டு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது கல்வி.
5. நீ படிப்பில் சிறந்தவன் ,எல்லா பாடங்களும் உனக்கு எளிமையாக உள்ளது.
6. ஆசிரியர் பாடம் நடத்தும்பொழுது உன் மனம் சிதறாமல் ஆசிரியர் சொல்லித்தரும் பாடம் உடனுக்குடன் உன் மனதில் பதிந்து விடுகிறது
7. நீ படிப்பில் முழு கவனம் செலுத்துகிறாய், நீ படித்தது உன் மனதில் நன்றாக ஒரு புகைப்படம்போல பதிந்துவிட்டது
8. தேர்வின்போது நீ படித்த கேள்வி பதில்கள் புகைப்படம்போல உன் கண்முன்னால் தோன்றுகிறது.
9. உன் ஞாபக சக்தி மென்மேலும் அதிகமாகியுள்ளன, அதனால் நீ எல்லா தேர்விலும் முதல் மதிப்பெண் எடுப்பாய்.
என்றும் மேலும் சில கட்டளைகளையும் பலமுறை கூறி அவனுடைய ஆழ்மனதில் நன்றாக பதியவைத்துவிட்டேன். இப்படியாக மூன்று சிட்டிங்க்ஸ் சிகிச்சை ராகுலுக்கு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை ராகுல் வரும்போதும் ராகுலிடம் பல மாற்றங்கள் தெரிவதாக லதா கூறினார்.
மூன்றாம் இடைத்தேர்வில் ராகுல் அதிக மதிப்பெண்கள் எடுத்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் வகுப்பிலேயே முதல் மாணவனாக திகழ்ந்தார் என்று லதா அவர்கள் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு தெரிவித்தார்.
HEALER MOHAMED OYSAL, D.ACU,
MEDGREEN MEDICAL CENTER,
PAPPANAICKENPALAYAM,
COIMBATORE
7907372229, 04224348188.
நீங்களும் ஹிப்னோடிசம் கற்றுக்கொள்ளலாம், மிக சிறந்த டெக்னிக்குகள் கற்றுத்தரப்படும். கல்வித்தகுதி தேவையில்லை, வயது வரம்பு கிடையாது. இந்த கோர்ஸ் முடித்தால் நீங்களும் ஹிப்னோடிசம் செய்யலாம். மற்றவர்களுக்கும் உங்களுக்கு நீங்களே செய்து மனதை தளரவிடாமல் வாழ்கையில் வெற்றி அடையலாம். அழைக்கவும்:- 7907372229